குறள்
குறிப்பறிதல்.
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
பொருள்
அயலார் போல் அன்பில்லாமல் கடுஞ்சொல் சொன்னாலும் உள்ளத்தில் கோபமில்லதவர் சொல் விரைவிலேயே வெட்ட வெளிச்சமாகி விடும்.
ஸ்ரீ – 9
சற்று பொறுத்து வந்த சஞ்சீவ்,ரோஸ்லின் ஒருவரை,ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஏனேனில் வழக்கமாக ஸ்ரீராம் இருக்கும் இடம் எந்த சூழலிலும் இறுக்கம் இல்லாமல்
இருக்கும் ஒரு புன்னகையாவது இருக்கும் இன்று மூவர் முகமும் இவ்வளவு இறுகி
இருப்பது இருவரையும் குழப்பியது.
அதை ஒதுக்கிய இருவரும் வாங்கி வந்த ஜுஸை மூவருக்கும் தர ஸ்ரீராம் எனக்கு வேண்டாம் சஞ்சீவ் நான் காபி
சாப்பிட்டுக்குறேன் நீங்க சாப்பிடுங்க என மறுக்க.
சஞ்சீவ் விளையாடாதீங்க சார் மேம்காக பிளட்லாம் குடுத்து இருக்கீங்க சும்மா சாப்பிடுங்க சார் நாங்க ஃபுல்லா சாப்பிட்டு தான் வந்தோம் அதான் லேட் என்றான் சிரித்தபடியே.
சஞ்சீவ் சொன்னதை கேட்ட ஸ்ரீபிரியா ஒரு நொடி அதிர்ந்தவள் பின் மெல்ல ராம்
சார் நீங்களா எனக்கு பிளட் குடுத்தீங்க? எனக்கு ஒன்னும் ரேர் பிளட் குருப் இல்லையே நார்மலாவே கிடைக்குமே நன்றி சார் அதோட சாரி உங்ககிட்ட கொஞ்சம் குரலை உயர்த்திடேன் என சொல்ல.
ஸ்ரீராம் விடு பிரியா பிளட் கிடைக்கும்
தான் ஆனா நம்ம பிளட் குரூப் இன்னிக்கு இங்க ஸ்டாக் இல்லை ஒரு அவசர
விபத்து கேஸ்ல தீர்ந்துட்டு பிளட் பேங்கில் இருந்து வரவைக்கறதா சொன்னாங்க
அதான் ஏன் டைம் வேஸ்ட்னு நானே குடுத்தேன்
அதோட உன் மேல தப்பு ஒன்னும்
இல்லை நான் தான் உனக்கு பிடிக்காததை பேசி உன்னை டென்ஷன் பண்ணிட்டேன்
இனிமே உன்னை நான் எதுவும் கேட்க மாட்டேன் நீ ஜுஸ் குடி என்றான் அமைதியாக.
ஸ்ரீபிரியா முகம் ஒரு நொடி வாட அதை ஸ்ரீராம் கவனித்து மனதினுள் குறித்துக் கொண்டான்.
ஸ்ரீபிரியா சரி சார் நீங்களும் ஜுஸ் சாப்பிடுங்க என கூறி அமைதியானாள்.
ரோஸ்லின் ஏதோ கால் பேச வேளியே சென்று வந்தாள் அவளை அழைத்த பிரியா தன்னை ரெஸ்ட் ரூம் கூட்டிபோக சென்னாள் ரோஸ்லின் மெல்ல பிரியாவை கை பற்றி எழுப்பி அமர வைத்து தாங்கி இறக்க
ஸ்ரீபிரியா பிடிமானம் நழுவி நிலை தவறி
விழப்போக அருகில் இருந்த ஸ்ரீராம் சுதாரித்தவன் பிரியாவை விழாமல் அனைத்து பிடித்தான் ஒரு நொடியானாலும் அழுந்த பற்றி பின் விடுவித்தாலும் ஸ்ரீபிரியாவின் ஒரு கையை விடாமல் உடன் வர
ஸ்ரீபிரியா சார் பரவாயில்லை ரோஸ்லின்
தான் இருக்காளே என சிறிய குரலில் கூற
ஸ்ரீராம் தப்பு ஒன்னும் இல்லை பிரியா நோயாளியில் ஆண்,பெண் பாகுபாடு இல்லை நீ இப்போ ஒரு குழந்தை போல தான் நானும் ஒரு பக்கம் பிடிச்சுக்குறேன் நீ போய்ட்டு வா டோர் லாக் செய்ய வேண்டாம்
ரோஸ்லின் வெளியே லாக் செய்துக்குவா என கூறி திரும்பி நின்று கொண்டான்.
பின் ஸ்ரீராம்,ரோஸ்லின் உதவியோடு திரும்பவும் தன் இடத்துக்கு வந்தவள் இரவு வெகு நேரம் ஏதோ யோசனையாக தூங்காமல் இருந்தாள் நள்ளிரவு தாண்டியே உறங்கினாள்.
இதுவே தொடர்ந்தது இதை அஜய் கவனித்து வந்தான் ஆனால் எதையும் கேட்காமல் அமைதியாகவே இருந்து கொண்டான்.
அன்று அஜய் டிஸ்சர்ஜ் ஆகி ஸ்ரீராம் உடன்
புறப்படும் முன் ஸ்ரீபிரியாவிடம் வந்த அஜய் பிரியா எந்த உதவினாலும் தயங்காம
கேளும்மா ஒரு சகோதரனா தான் சொல்றேன் டேக் கேர் என கூறி புறப்பட்டான்.
காரில் போகும் போது அஜய் தான் கவனித்ததை ராமிடம் கூற ஸ்ரீராம் அப்படி என்ன தான்டா அவளுக்கு பிரச்சனை சொன்னா என்ன? தூக்கத்துக்கு மாத்திரை சாப்பிட்டு அதையும் மீறி யோசிக்குற அளவுக்கு என ஆத்திரப்பட.
அஜய் நீ ஏன் ராம் அவ விஷயத்துல இவ்வளவு தீவிரமா இருக்க என நண்பண் முகம் பார்த்து கேட்க
ஒரு நொடி தயங்கிய ஸ்ரீராம் காரை சாலை ஓரமாக நிறுத்தியவன் தெரியலைடா ஆனா அவ கஷ்டபடறது எனக்கு கஷ்டமா இருக்கு என உண்மையை மறைக்காமல் கூற.
அஜய் அப்படினா நீ ஸ்ரீபிரியாவை விரும்புரியா? என அழுத்தமாக கேட்க
ஸ்ரீராம் நண்பண் கைப்பற்றி தெரியலை அஜய் ஆனா அவ பயப்படுறது, வருத்தப்படுறதுனு எதையோ தனக்குள்ளையே வச்சு குமையறதுனு தன்னையே வதைச்சுகறதை எல்லாம் என்னால பார்க்க முடியலை பழைய சிரிச்ச முகமா,அதிகாரமா, திமிரா அந்த போல்டான ஸ்ரீபிரியாவை திரும்ப பார்க்கனும்னு தோனுது தப்பாடா? என நண்பனையே கேட்க.
அஜய் மெல்ல முறுவலித்தவன் அட அறிவாளி ஐ.பி.எஸ் ஆபிசர் அது தாண்டா நேசம் அவ வருத்தம் உன்னை பாதிக்குதுல அவ கஷ்டம் உன்னை தூங்கவிடலைனா அது தான் ராம் உன்மையான அன்பு ஸ்ரீபிரியா சரியாகி வரட்டும் மத்ததை அப்புறமா பார்த்துக்கலாம்
நீ ஃபர்ஸ்ட் பிரியாகிட்ட சட்டுசட்டுனு கோபப்படுறதை விடு அவளுக்கே தெரியாம நாம அவளுக்கு துணையா இருப்போம் சரியா? வா புறப்படலாம் என சிரித்தான் நண்பண் தோள்த்தட்டி.
ஸ்ரீராமும் சிரித்தபடியே தேங்கஸ்டா அஜய் நிஜமா ஒன்னும் புரியாம தான் இருந்த்தேன் இப்போ நீ சொல்லி தான் எனக்கே புரியுது என்றான் மகிழ்ச்சியோடு
அஜய் எனக்கே தேங்கஸ் சொல்லுறியா நீ காலை உடைச்சுடுவேன் உன் சந்தோஷம் தானே எனக்கும் வேணும் ஆனா ஒன்னு எதாவது கேட்டு அவளை இங்க
இருந்தும் பேக் பன்னிடாத இன்னொரு விஷயம் ராம் அவ உன்னை விரும்பனுமே?
என்றான் சந்தேகமாக.
ஸ்ரீராம் சிரித்தபடியே அதெல்லாம் அவ மனசுகுள்ள நான் இருக்கேன்னு தான் தோனுது காரணம் இருக்கு உன்கிட்ட கொஞ்சமாவது சிரிக்குறா இயல்பா பேசுறா ஆனா என்கிட்ட வேனும்னே விலகி,விலகி போறா அவ மனசு அவளுக்கே புரியுது ஏனோ என்னையும் விலக்கி தானும் விலகுறா
அதோட பிரியா அந்த நிலையில் யாரா இருந்தாலும் காப்பாத்தி இருப்பா ஆனா இப்போலாம் உணர்ச்சியே காட்டாத அவ கண்கள் என்னை காப்பாத்தினப்போ துடிச்சுது உங்களுக்கு ஒன்னும் ஆகலையேனு கேட்டுகிட்டே தான் மயக்கமானா அப்போ என்னை பார்த்த பார்வையில் அவ்வளவு நிம்மதி அவ முகமும் அமைதியாகிட்டு
நான் கவனிச்சேன் அதோட இனி உன்
விஷயத்துல நான் தலையிடமாட்டேன்னு சொன்னப்போ அவ முகத்துல ஒரு வருத்தம்
எதையோ இழந்த தவிப்பு இருந்தது அவ மனசு அதையெல்லாம் உணரக்கூடிய நிலையில் இப்போ இல்லை அது மட்டும் எனக்கு தெளிவா புரியுது அப்புறம் சாரிடா அஜய் உன் கிட்ட பிரியா பத்தி மறைக்கனும்னு நினைகலை என வருந்த.
அஜய் அதெல்லம் விடு ராம்
மனசுக்குள்ள நேசம் வந்தா கள்ளத்தனம் தானா வந்துடும் போலீஸ்காரன்னு
விதிவிலக்கெல்லாம் கிடையாது வெளியே சிரிச்சாலும் நீ உள்ளே எப்படினு எனக்கு மட்டும் தானே தெரியும் உனக்குள்ள கூட இப்படிப்பட்ட ஒரு மெண்மையான
உணர்வு வந்து இருக்குனா
அது உன் வாழ்க்கையே நல்லவிதமா மாற்றக்கூடியது தான் அதை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷம்மா இருக்குடா ராம் நீ பட்டதுயெல்லாம் போதும் இனிமே குடும்பம்,குழந்தைனு எல்லோரை போலவும் நீயும் வாழனும் அது தான் எனக்கு வேனும் என புன்னகைக்க.
ஸ்ரீராம் நெகிழ்ந்து போனவனாய் உனக்கும் இப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சாதாண்டா
எனக்கு நிம்மதி நிச்சயம் நடக்கும் நாம பட்டதுயெல்லாம் போதும்னுதான் என்
வாழ்க்கைகுள்ள கடவுள் பிரியாவை அனுப்பி வச்சு இருக்குறார் அவ மூலமாவே உன் வாழ்க்கைளையும் ஒரு தேவதை வருவா பாரு என சிரிக்க.
அஜய் பேராசைகாரா இதுயெல்லாம் நடக்குற கதையா? ஏதோ உனக்கு ஒரு அப்சரஸ் கிடைச்சுட்டா சரி அதுகாக எனக்கும் அதே போல நடக்கும்னு எதிர்ப்பார்கறது ரொம்ப ஓவர் என சிரிக்க
ஸ்ரீராம் இல்லை அஜய் நம்ம லைஃப் பிரியா மூலமா தான் மாறப் போகுது நீ வேனா பாரு நம்ம ரெண்டு பேரு நிலையும் ஒன்னு தானே ஆனா நீ என்னை விட அதிகமாவே கஷ்டத்தை அனுபவிச்சுட்ட நாம நினைச்சபடி படிச்சோம் ,ஆசைப்பட்ட வேலைக்கும் வந்தாச்சு நம்ம வாழ்க்கை இப்படிதான் நாம ரெண்டு பேரு மட்டும்தான்
நாம நம்ம கடமை அதான் நம்ம வாழ்க்கைன்னு முடிவு செய்துயிருந்தோம் ஆனா அதுல ஒரு பெண் வருவானு நாம நினைச்சுகூட பார்க்கலை ஏன் மனைவி , குடும்பம்னு ஒன்னை இதுவரை நாம நினைச்சாவது பார்த்து இருப்போமா?
கடமையை தவிர வேற எதையுமே நாம
இத்தனை வருஷத்துல நினைச்சது இல்லையே ஆனா இன்னிக்கு பிரியா வந்துட்டா எனக்கு கடவுள் ஒரு நல்ல வழியை காட்டினா உனக்கு அதைவிட நல்ல வாழ்க்கை
அமையும்
இல்லைனு எதுவும் மறுத்து சொல்லாதடா அப்படி நடந்தா தான் நானுமே நிம்மதியா வாழ முடியும் நிச்சயம் நடக்கும் என்றான் உறுதியான குரலில்.
அஜய் ஆல்ரைட் மை டியர் ஸ்ரீராம் உன் விருப்பத்தை கடவுள் நிறைவேற்றட்டும் என
நாடகபாணியில் கூறி சிரிக்க ராமும் நண்பணுடன் இணைந்து நகைத்தான்.
இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம்.?