ஸ்ரீ – 1

0
828

வணக்கம் தோழமைகளே,

நான் பிரியங்காஸ்ரீராம்,

சிறு வயதில் எழுத்துகூட்டி படிக்க ஆரம்பித்த பழக்கம் இன்று என் மூச்சோடு இரண்டற கலந்துவிட்டது அதன் தாக்கம் என்னையும் கதை எழுத தூண்டியது எனவே நான் ஒரு கதை எழுதி இருக்கிறேன் இது என் தலை பிரசவ நாவல் அதாவது என் முதல் படைப்பு.

ஒரு பெண் எவ்வளவு பெரிய அதிகாரம் கொண்ட பதவியில் இருந்தாலும் மனதால் மென்மையானவளே பாசம்,நேசம்,வலி,அழுகை,நாணம் போன்ற உணர்வுகள் உடையவள் கணவன்,குடும்பம் என வரும் போது தன்னையே மறப்பவள்

இது காவல் துறையை அடிப்படையாக கொண்ட கதை தைரியமான பெண் அதிகாரி நாயகி & காவல்துறையை சார்ந்த நாயகன் அவன் நண்பன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்கள் கடமையே உயிர் மூச்சு என வாழ்பவர்கள்.

கதாநாயகியின் பிரச்சினையை எப்படி நாயகன் தீர்த்துவைக்கிறார் அதில் அவன் நண்பன் எந்தளவுக்கு உறுதுணையாய் இருக்கிறான்

நாயகனை தாயாய் தாங்கும் நாயகி

நாயகியை உயிராய் நேசிக்கும் நாயகன்

நண்பன் மணைவியை சகோதரியாய் மட்டும் பாராமல் ஒரு கட்டத்தில் தன் மகளாகவே பாவிக்கும் நண்பன்

அவர்களுக்குள் உள்ள நம்பிக்கை
,அன்பு,பாசம்,கேலி,கிண்டல் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த கதை ஒரு நட்பு எப்படி இருக்க வேண்டும் ஒரு நேசம் எப்படி ஆண் பெண்ணுக்கு நடுவில் இருக்கும் அதுக்கு நண்பன் எந்தளவுக்கு துணையாக இருக்க வேண்டும் எனவும்

பல பிரச்சனைகள் வந்தாலும் நாயகன் நாயகியை விட்டுக் கொடுக்காமல் இருப்பதும் அவளிடம் நாயகன் கொள்ளும் அதீத நேசமும் நம்பிக்கையும் இந்த கதையில் தெளிவா எழுந்திருக்கேனு நினைக்குறேன்

கமெண்ட் பண்ணுங்க நான் மேற்கொண்டு கதையை போஸ்ட் பண்றேன்.
கதையின் சுருக்கம் பிடிச்சிருந்தா சொல்லுங்க
இது ஒரு நெடுங்கதை.

நாயகி ஸ்ரீபிரியா,
நாயகன் ஸ்ரீராம்,
நண்பன் அஜய்

கதையின் பெயரை சொல்லலையே

ஸ்ரீ.
(நேசம் கொண்ட நெஞ்சங்களின் உணர்வு போராட்டம்)

குறள்

கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள் :

எழுத்துகள் எல்லாம் “அ” என்ற எழுத்தை முதலாவதாகக் கொண்டு அமைந்திருப்பதைப் போல் உலகத்து உயிர்கள் எல்லாம் இறைவனை முதலாவதாகக் கொண்டுள்ளன.

ஸ்ரீ 1

ஸ்ரீபிரியா ஒரு 28 வயது இளம் நங்கை தஞ்சையை பூர்விகமாகக் கொண்டள் காவேரியின் வனப்பும்,செழுமையும் தன்னகத்தே கொண்டவள் தந்தை சேதுமாதவன் அரசு அலுவலகத்தில் உயர் பதவியில் உள்ளவர் இன்னும் ஐந்து வருடத்தில் ஓய்வு பெறக் கூடியவர் ஆனால் ஒரு இளைஞரின் சுறுசுறுப்போடு பணியாற்றும் இயல்புடையவர் நேர்மையான அரசு அதிகாரி எனும் அரிய வகையைச் சார்ந்தவர்

காயத்ரி அன்பான கண்டிப்பான தாய் அண்ணன் ஸ்ரீவத்ஸன் எம்சிஏ முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் அமுதா ஸ்ரீவத்சன் நல்ல மருமகள் மேனகாஸ்ரீ செல்ல மழலை, ஸ்ரீரஞ்சன் கடைக்குட்டி இரண்டாம் ஆண்டு BE படித்துக் கொண்டிருப்பவன் வீட்டில் வாலு கெட்ட பழக்கம் மற்ற நல்ல பையன் நட்பு வட்டம் பெரியது அதனால் தந்தையின் கோபத்தை முழுவதும் தாங்கும் ஜீவன்.

நமது நாயகி சின்ன வயதிலிருந்தே தானுண்டு தன் படிப்புண்டு என வளர்ந்தவள் வீட்டின் அணைவரின் அன்பை பெற்ற செல்ல மகள் அவளின் சிறு வயது லட்சியம் IPS ஆவது போராடி படித்து 23 வயதிலேயே டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முலம் DSP பதவி பெற்றாள் தாயின் திருமண நச்சரிப்பை தந்தை அண்ணனின் உதவியோடு தள்ளிப் போடக் கூடியவள்
நேர்மையான காவல்துறை அதிகாரி அதிலும் பெண் எணில் அவள் சந்திக்கும் பிரச்சனைகளை சமாளிப்பது கடினம் அதை பகிர்ந்து கொள்ள முடியாத சூழல் தான் உள்ளது

விழுப்புரத்தில் Law & Order ACP ஆக பணிபுரிந்தபோது அவள் சந்தித்த பிரச்சினைகள் அவள் நேசித்த காவல் பணியையும் தன்னுயிரையும் இவ்வுலகத்தையும் வெறுக்க வைத்தது

பாரதியின் வரிகளாய் ” நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாய் வாழ்பவள் ” இப்போது வாழ்வா சாவா என்று தனக்குள்ளேயே போராடி வருகிறார் ஏன் இந்த மாற்றம் ? ஸ்ரீபிரியா விழுப்புரத்திலிருந்து விருப்பமாற்றலில் சென்னை intelligence பிரிவிற்க்கு வருகிறாள் அவள் பிரச்சினைக்கான தீர்வும் அவளுக்கான அன்பனை சந்திக்கவும் போகிறாள்

அதன் பின் வரும் பலவித பிரச்சினைகளையும், சவால்களையும் கடப்பதற்கு பிரியாவிற்கு அவள் அன்பன் உதவுவது அவர்களின் ஆழமான அன்பு நம்பிக்கை காவலர்களின் இடையே இருக்கும் அன்பு பாசம் ஒருவருக்கொருவர் கொண்ட நம்பிக்கை நட்பின் ஆழம் அனைத்தும் இந்த அத்தியாயத்தில் இருந்து தொடங்குகிறது.

இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here