குறள்
குறிப்பறிதல்
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
பொருள்
மனதில் பகை இல்லாமல் பேசும் கடும் வார்த்தையும்,எதிரியைப் போன்ற கோபப்
பார்வையும்,மனம் வேறுபட்டவர் போன்ற நடவடிக்கைகளும் அன்பு அதிகமானவர்
கொண்ட பிணக்காகும்.
ஸ்ரீ -10
நாட்கள் நகர்ந்து ஸ்ரீபிரியாவின் டிஸ்சார்ஜ் நாள் வந்தது பிரியாவிற்க்கு உதவியாக இன்று ஆதிரா இருந்தாள்.
அஜய், ஸ்ரீராம் வந்திருந்தனர் அவர்களை கண்ட பெண்கள் இருவரும் எழுந்து நிற்க அஜய் நோ ஃபார்மாலிடிஸ் கேர்ள்ஸ்
பிரியா இப்போ எதுவும் வலி இருக்கா? டாக்டர் அட்வைஸ் படி இருந்தாலே போதும்மா சீக்கிரம் கியூர் ஆகிடும் வரும் போது டாக்டரை பார்த்துட்டு தான் வரேன் சரி புறப்படலாமா? என கேட்க.
ஸ்ரீபிரியா பெயின் இப்போ இல்லை சார்
உங்களுக்கு இப்போ தேவலாமா? டியூட்டி ஜாயின் செய்துடிங்களா? என இயல்பாக கேட்க.
அஜய் பதில் கூறியபடி ஸ்ரீபிரியாவின் பொருட்களை எடுத்துக்கொள்ள ஆதிராவுடன் ஸ்ரீபிரியா நடக்க ஆரம்பித்தாள்.
ஸ்ரீராமும்,ஸ்ரீபிரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டாலும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை காரில் போகும் போதும் மௌனம் மட்டுமே நிறைந்து இருந்தது.
ஸ்ரீபிரியா வீட்டிற்க்கு வந்த பிறகு ஸ்ரீராம் சோபாவில் அமர்ந்தவன் ஆதிரா நீ ஸ்ரீபிரியா கூட கொஞ்ச நாள் தங்கிகோ உனக்கு ஒன்னும் சிரமம் இல்லையே? என அழுத்தமாக கேட்க
ஸ்ரீபிரியா அதுதெல்லாம் வேண்டாம் சார் நானே மேனேஜ் பண்ணிப்பேன் என அவசரமாக சொல்ல
ஆதிரா ஒன்னும் கஷ்டம் இல்லை மேம் நான் என் ஹவுஸ்மெட் கிட்ட சொல்லிக்குறேன் எங்க ஸ்டே பண்ணினா என்ன? என்றாள் முறுவலோடு.
ஸ்ரீபிரியா மறுக்க வர ஸ்ரீராம் சற்று அழுத்தமாக ஒன்னு ஆதிரா உன் கூட இருக்கட்டும் இல்லை நீ ஊருக்கு போய்டு இல்லையா வீட்டில் இருந்து யாரையாவது வரவை தனியா இருக்கறது சரி இல்லை மெடிசன் எடுக்குறப்போ ஒருத்தர் கூட இருக்கறது அவசியம் என்றான் தீர்மானமாக.
அஜய் ஆமாம் பிரியா நான் இப்போ
ராம் கூட கீழ் பிளாட்டில் தான் இருக்கேன் முடியலைனா வென்னீர் வேணும்னா
கூட நாமளே போகனும் மயக்கம் எதாவது வந்தா என்ன செய்வ செல்லு எல்லாம் ஒரு
உதவி தானே நீ தானே எஸ்.பி சார் கிட்ட சொன்ன நாமளே பார்த்துகலாம்னு அதனால் தானே உன் பேரண்ட்ஸ்க்கு கூட சொல்லலை
எஸ்.பி சார்கிட்ட சொன்னபடி நாங்க செய்றோம் ஆதிரா நாங்க பார்த்துக்குறோம் நீ போய் உனக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகிட்டு வா என அவளை அனுப்பி வைத்தான் ஸ்ரீபிரியா எதுவும் பேசாமல் அமைதியாகி விட. அஜய் எழுந்து வீட்டை பார்த்தபடி நடக்க.
ஸ்ரீபிரியா ஒர கண்ணால் ஸ்ரீராமை முறைக்க அதை கவனித்த ஸ்ரீராம் மனதினுல் சிரித்தபடியே நல்லா நேரா பார்த்தே முறைக்கலாம் நான் ஒன்னும் நினைச்சுக்க மாட்டேன் என குறும்பு சிரிப்போடு கூற.
ஸ்ரீபிரியா மாட்டிகொண்ட திணுசில் ஸ்ரீராமை பார்க்க அவன் சிரிப்பதை கண்டு
முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அஜய் ஒரு டிரேயில் காபி கப்களுடன் வந்து ஆளுக்கொன்றாய் தந்தவன் தானும் ஒன்றை எடுத்து கொண்டு நண்பண் அருகில் அமர
ஸ்ரீபிரியா நீங்க ஏன் சார் காபிலாம் போட்டுக்கிட்டு உங்களுக்கு ஏன் வீண் சிரமம் கீழே மாமி மெஸ்க்கு கால் செய்தா பையன் கிட்ட கொடுத்துவிட போறாங்க என்றாள்.
அஜய் இதுல என்ன சிரமம் இருக்கு பிரியா ஏன் என் காபி அவ்வளவு மோசமாவா இருக்கு? மில்க் பவுடர்,காபி பவுடர்,சுகர் பார்த்தேன் காபி போட்டேன் என் தங்கச்சி
என் குடும்பத்துக்கு நான் செய்றேன் ஈசிம்மா சரி இந்த அண்ணன் காபி பரவாயில்லையா? என சிரிப்போடு வினவ.
ஸ்ரீபிரியா சிரித்தவள் காபி சூப்பர் சார்
நிஜமா நல்லா இருக்கு தேங்க்ஸ் என கூற அஜய் நீ ஏன்டா உம்முனு இருக்க?
உன் காபியில் மட்டும் நான் என்ன உப்பா போட்டேன் ? என நண்பனை சீண்டும் குரலில் முறுவலோடு கேட்க.
ஸ்ரீராம் ஒன்னும் இல்லைப்பா என் வாய் சும்மா இருக்காது எதாவது பேசி வாங்கி கட்டிப்பேன் அதான் மரியாதையை காப்பத்திகலாமேனு சும்மா இருக்கேன் உன் காபி நல்லாவே இருக்கு அதான நீ எதிர்பார்த்த என சொல்ல.
அஜய் என்ன ரெண்டு பேரும் ஸ்கூல் பசங்க போல முகத்தை தூக்கி வச்சுகிட்டு பார்க்க நல்லாவா இருக்கு இப்போ என்ன ஆச்சு ஸ்ரீராம் தான் எதுவும் உன்கிட்ட கேட்கலையே பிரியா என்கிட்ட சகஜமா பேசுற மாதிரி அவன்கிட்டயும் பேசலாமேம்மா என்றான்.
ஸ்ரீபிரியா பதிலுக்கு ஸ்ரீராமை முறைதாளே தவிர ஒன்றும் சொல்லாமல் காபியில் கவனம் செலுத்த.
ஸ்ரீராம் அது வேற ஒன்னும் இல்ல அஜய் மேடம் விஷயத்துல தலையிடமாட்டேன்னு சொன்னேன் ஆனா ஆதிராவை இங்க ஸ்டே பன்ன சொன்ன கோபம் லுக் பிரியா நான் என்ன சொன்னேன் நான் தலையிட மாட்டேன்னு தானே ஆனா இன்னெருத்தரை தலைடயிட வைக்கலாமே என கூறி சிரிக்க.
இப்போது ஸ்ரீபிரியா வெளிப்படையாகவே ஸ்ரீராமை முறைக்க. அஜய் இருவரின் சிறுபிள்ளை தனமான சண்டையில் உள்ளுர சிரித்தவன் முகத்தில் எதையும் காட்டாமல் விடு பிரியா இவன் இப்படிதான் ஆனா ஒரு ஆள் ஹெல்ப்க்கு இருக்கறது தான் நல்லது என்ற போது ஆதிரா வர ஆண்கள் இருவரும் கிளம்பினர்.
அஜய் கதவருகில் சென்றவன் நின்று பிரியா எதாவதுனா ஒரு கால் பன்னும்மா நானும் கீழ தானே இருக்கேன் ஆதிரா பார்த்துகோ என இரு பெண்களிடமும் கூறி விடைபெற்று கிளம்பினர்.
வீட்டில் ஒரு சினிமா பாடலை முனுமுனுத்தபடியே இருந்த நண்பனை
பார்த்து சிரித்த அஜய் என்ன சார் செம ஜாலி மூட்ல இருகீங்க போல அவளை ஏண்டா சும்மா சீண்டிக்கிட்டே இருக்க அதான் உன்கிட்ட பேசவே மாட்டேங்குறா என குறைபட.
அட நீ வேற எனக்கே உள்ளுர பயம்தான்டா எங்க எழுந்து அடிச்சுடுவாளோனு
அவ செய்ய கூடியவதான் அந்த விழுப்புரம் கேஸ்ல அந்த பையனை அந்த டிரைவர்
அடிச்சுட்டான்னு தெரிஞ்சு அவனை அடி பின்னிட்டா அவ ஒரு லேடி ஜாக்கிஜான்டா
அஜய் கராத்தே,கும்ஃபூலாம் கத்து வச்சு இருக்கா
நானே கொஞ்சம் ஜாக்கிரதையாதான்
இருக்கனும் அவகிட்ட அவ அந்த டிரைவரை அடிச்சதுக்கு என்னை அந்த ஜட்ஜ்
வார்ன் செய்து அனுப்பினாங்க தெரியுமா? என்ன முறை முறைக்குறா பாரு விட்டா
கண்ணாலயே எரிச்சுடுவா போல கொஞ்சம் கேஷ்வலா என்கிட்ட பேசினா தான் என்ன சும்மா உர்ரு உர்ருனு இருக்கா அதான் கொஞ்சம் கடுப்பேத்திவிட்டேன்.
ஆமாம் பிரியாகிட்ட தங்கச்சி குடும்பம்னு சொன்னியே நீ அண்ணன், அவ உன் தங்கை சரி அப்போ நான் யாருடா உன் தங்கை வீட்டுகாரனா? என ஸ்ரீராம் குறும்பு சிரிப்போடு கேட்க.
அஜய் ஆமாங்க மாப்பிள்ளை எனகூறி பணிவு காட்டி எழுந்து நிற்க இருவருமே தங்களை மறந்து சிரித்தனர்.
ஸ்ரீராம் ஆனா இவ்வளவு செய்தும் நீ யாரு எனக்கு நல்லது செய்யனு ஒரு வார்த்தை கேட்கலை அதுவே போதும் என சிலாகிக்க.
அஜய் சற்று யோசித்தவன் இப்படிப்பட்ட ஒருத்தி ஏன் ராம் அந்த மிரட்டல் பேர்வழிக்கு பயப்படனும்? என்றான் யோசனையோடு.
ஸ்ரீராம் அதுதான் அஜய் எனக்கும் குழப்பமே ஆனா என் கெஸ் இது பிரியா உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை அவ அதுக்கு பயப்படுறவளும் இல்லை அவ குடும்பம் இல்லை அவ மானம் சம்பந்தப்பட்ட விஷயமா இருக்கனும் இல்லை இதுல ஏதோ சென்ஸிடிவ்வான விஷயம் மறைஞ்சு இருக்கு
அது வெளியே வரக்கூடாதுனு பிரியா நினைக்குறா ஒன்னு கவனிச்சியா இவ்வளவு அடிபட்டுயிருக்கு வீட்டுக்கு சொன்னாளா பாரு அழுத்தக்காரி அவங்க யாரும் சென்னை வரதை இவ விரும்பலை அவங்களுக்கு எதுவும் ஆக கூடாதுனு நினைக்குறா ஒரு வேளை என்னை விலக்கி நிறுத்தவும் அதுவே காரணமா இருக்கலாமேடா
தனியாவே எல்லத்தையும் சமாளிக்க முயற்சி செய்றா ஆனா அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல அவன் அந்த ஆள் மிரட்டினதுக்கு அப்புறம் பிரியா கண்ணுல மிச்சம் மீதி இருந்த உயிர்ப்பும் போய்ட்டு எதையும் சமாளிக்க முடியாத சூழல் வரப்போ அவ தப்பான
முடிவெடுப்பாளோனு எனக்கு பயமா இருந்தது அதான் ஆதிராவை அவ கூட இருக்க வச்சேன்
அதுக்குள்ள அவன் யாருனு கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் என்றான் முன்பிருந்த உற்சாகம் மாறி வருத்தமாக.
அஜய் நண்பண் வருத்தம் தாளாமல்
கண்டுப்பிடிக்கலாம் ராம் கவலைப்படாதே பிரியா செல் நம்பரை சைபர் கிரைம்
மூலமா டிராக் செய்யலாமா? என கேட்க.
ஸ்ரீராம் மறுத்தவன் இல்லை அது சரியா
வராதுடா அவளும் டிப்பர்ட்மெண்ட் ஆளு அவ நம்பரை நாம டிராக் செய்தா அது
தப்பா தெரியும் நான் அவளை விரும்புறேன்தான் அதனால அவளுக்கு எந்த கெட்ட பெயரும் வரக்கூடாது
அந்த பொறுக்கி அவளை என்கூட சேர்த்து தப்பா பேசினப்போ துடிச்சுப் போய்ட்டா அப்போ அவ கண்ணுல அவ்வளவு வலி இனி அவளுக்கு அது போல கஷ்டம் வேண்டாம்டா அஜய் நாம வேற வழியில் முயற்சி செய்யலாம் என்றவன் தொடர்ந்து
நான் அவளை நேசிக்கறதுனால மட்டும் அவளும் என்னை விரும்பனும்னு எந்த கட்டயமும் இல்லையே என் மனசுக்காக அவ மேல உள்ள நேசத்துக்காக அவ பிரச்சனையை தீர்க்க பார்க்குறேன் அவளா மனசார விரும்பி என்னை ஏத்துகிட்டா சரி
இல்லைனா நீ, நான்,நம்ம டிப்பார்ட்மெண்ட் அப்படியே இருந்துடுவேன்டா என கசந்த முறுவலோடு எழப்போன நண்பனை கைப்பற்றி நிறுத்திய அஜய் எது எப்படினாலும் ஸ்ரீபிரியா தான் இந்த
ஸ்ரீராம்க்கு மனைவி அது என் பொறுப்பு நீ அதை விடு அவன் அந்த மிரட்டல் பேர்வழி யாருனு மட்டும் கண்டுபிடி என்றான் உறுதியாக.
இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம்.?