குறள்
தெரிந்து வினையாடல்
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
பொருள்
அன்பு,அறிவு,இயமில்லாமல் தீர்மானிக்கும் திறமை,பேராசை இன்மை,ஆகிய
இந்நான்கும் உறுதியாக உள்ளவரிடத்தில் நம்பிக்கை வைக்கலாம்.
ஸ்ரீ – 11
ஸ்ரீராம்,அஜய்யின் தேடலில் பீட்டர் பற்றிய எந்த விவரமும் கிடைக்கவில்லை
அவன் பெயர்,ஊர் தவிர அவர்களுக்குள் என்ன பிரச்சனை என கண்டறிய முடியாமல்
இருவருமே தவித்தனர்.
ஸ்ரீபிரியா உடல்நிலை சரியாகி ஆபிஸ் வர ஆரம்பித்தாள் இயல்பாக நாட்கள் நகர தொடங்கியது.
அன்று ஒரு தம்பதி வந்தனர் சத்தியநாதன்,ரம்யா கல்லுரி பேராசிரியர்கள் என தங்களை அறிமுகப்படுத்திகொண்ட இருவரும் மிகவும் வருத்ததுடன் தங்கள் பிரச்சனையை கூற ஆரம்பித்தனர்.
அவர்களின் ஒரே மகன் சதீஷ் ஒன்பதாம் வகுப்பு படிப்பவன்.
வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் புத்திசாலி மாணவன்.
கொஞ்ச நாளாக படிப்பிலும் நாட்டம் இல்லை
எந்நேரமும் எதையோ பறிகொடுத்தவன் போன்ற அவன் தோற்றம் பொறுக்காமல் பேசி பார்த்தோம் நான் நல்லாதான் இருக்கேன்னு சொல்லிட்டு போய்ட்டான் மேம் செல்லில் யார்கிட்டயோ பேசுறான் பயப்படுறான்,
என்ன செய்யறதுனு புரியாம எங்க பக்கத்து வீட்டுக்காரங்க தான் டாக்டர்
ரித்திகா அவங்ககிட்ட கேட்டப்போதான் உங்களை பார்க்க சொன்னாங்க மேடம்
என்றாள் ரம்யாசத்யநாதன் அழுகுரலில்.
ஸ்ரீபிரியா மேம் ரித்திகா எங்கிட்டயும்
பேசினாங்க நான் என்னனு பாக்குறேன் நீங்க கவலைபடாம இருங்க உங்க பையன்
போட்டோ, செல் நம்பர் ஸ்கூல் டீட்டெயில்ஸ் தாங்க உங்க காண்டாக்ட் நம்பர்
எழுதிதாங்க நானே கால் செய்றேன் என்றாள்.
ஸ்ரீபிரியா கேட்ட விவரங்களை தந்து
இருவரும் புறப்பட.
ஸ்ரீபிரியா சஞ்சீவ்,ஆதிராவை அழைத்தவள் சதீஷ்யை கண்கானிக்கவும்,அவன் செல் கான்வர்சேஷனை டேப் செய்யவும் அதன் முலம் தகவல் கண்டறிந்து சொல்ல சொன்னாள்.
இருநாட்கள் கடந்த நிலையில் சஞ்சீவ்,ஆதிரா
சதீஷ் பற்றிய முழு ரிப்போர்டுடன் வந்தனர்.
சஞ்சீவ் கூற ஆரம்பித்தான் மேம்
சதீஷ் ஒரு போதை மருந்து கும்பல் பிடியில் சிக்கி இருக்கான் ஆனா அவனுக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது கொரியர் பாய் போல அவங்க மிரட்டல்க்கு பயந்து வேலை செய்றான்,எதை வச்சு மிரட்டுறாங்கனு தெரியலை.
இதில் அவன் செல் கான்வர்சேஷன் ரெக்காட்ஸ்,நம்பர்ஸ் & டீட்டெயில்ஸ் இருக்கு என ஒரு பெண்டிரைவை தந்தான்.
பிரியா அனைத்தையும் பார்த்தவள் சரி நீங்க எப்படியாவது அந்த கும்பல்க்கு தெரியாம சதீஷ்யை இங்க கூட்டிட்டு வாங்க என்றாள்.
அன்று மாலையே சதீஷ் பிரியா முன் பயந்து போய் அமர்ந்திருந்தான்.
ஸ்ரீபிரியா ஜுஸை குடி சதீஷ் நான் டாக்டர் ரித்திகா ஃபிரண்ட் நீ பயப்படாம பேசு என்றாள் அவனுக்கு சற்று அவகாசம் தந்து.
சதீஷ் எதுவும் பேசாமல் இருக்க.
ஸ்ரீபிரியா சதீஷ் நீ குட்பாய் , டாப்ரேங்க் வர பையன் ஆனா ஏன் இப்போல்லாம் சரியா ஸ்கூல் போறது இல்லை யாருக்கோ பயப்படுற வேற சொல்லுப்பா உனக்கு உதவி செய்யதான் கேட்குறேன் என்றாள் தன்மையாக.
சதீஷ் சற்று மிரண்டவனாக மேம் என்னை ஜெயில்ல போட்டுவீங்களா? என்றான்.
பிரியா இல்லைப்பா அப்படில்லாம் ஆகாது நீ உண்மைய சொல்லிடு போதும் என்றாள்.
சதீஷ் மெல்ல பேச ஆரம்பித்தான் மேம் ,எங்க ஸ்கூல் பக்கத்து பார்க்கில் வழக்கமா ஃபிரண்டுஸ் சேர்ந்து வீக் எண்ட்ஸ் விளையாடுவோம் அப்படி ஒரு நாள் விளையாடும்போது ஒரு ஆள் வந்தார் அவர்கூட இன்னும் 4 பேர் இருந்தாங்க
எங்களை போட்டோ எடுன்னு கேமரா கொடுத்தாங்க அப்படியே எங்களை பத்தியெல்லாம் விசாரிச்சாங்க அப்புறம் எங்ககூடவும் போட்டோ எடுத்துகிட்டாங்க.
ஒரு வாரம் கழிச்சு அந்த ஆள் வந்தார் மேம் , நாங்க சொல்லுற வேலை செய்தால் பணம் தரோம்னு சொன்னார் நான் ஏதோ தப்புகாரியம்னு யூகிச்சு மறுத்துட்டேன் அவர் என் அம்மா,அப்பா எப்போ எங்க இருப்பாங்க என்ன செய்வாங்கனுலாம் சொல்லிட்டு அவங்களை கொலை செய்துடுவேன்னு மிரட்டுனாரு நான் முடியாதுனு ஓடி போய்ட்டேன்.
அன்னைக்கு நைட் அப்பா அடிபட்டு கட்டுப் போட்டு வந்தாங்க கடைக்கு போனப்போ ஒரு டூவீலர் வந்து மோதிட்டுனு சொன்னாங்க.
மறுநாள் அந்த ஆள் மறுபடியும் வந்தார்.
எப்படி உங்க அப்பாக்கு அடி போதுமா ? இல்லை உயிரையே எடுத்துடவானு ? அப்பாக்கு ஆக்ஸிடெண்ட் செய்த வீடியோ காட்டினார்.
அப்போ ஆக்ஸிடெண்ட் செய்த ஆளு அவர் கூடவே இருந்தான் ,அப்புறம் அவங்க சொல்லும் அட்ரஸ்சில் இருந்து பார்சல் வாங்கிட்டு வந்து அவர்கிட்ட தரனும் அதான் என் வேலை.
ஆனா பிராமிஸா எனக்கு அது போதை மருந்துனு தெரியாது.
கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும் அவரை கேட்டேன் இது தப்பு நான் போலீஸ் போவேன்னு மிரட்டினேன் ஆனா அவர் நீ தான் பார்சல் எடுத்துட்டு வர நீயும் தான் மாட்டுவ அதோடு உன் குடும்பத்தையும் அழிச்சுடுவேன்னு மிரட்டடினார் நான் பயந்து அடங்கிட்டேன் மேம் சாரி நான் தெரிஞ்சு செய்யலை என்னை மன்னிச்சுடுங்க என அழ.
ஸ்ரீபிரியா தைரியம் சொன்னவள் நாளை நீ பார்சல் வாங்க போகும் போது எங்க ஆபீஸர்ஸ் உன்னை ஃபலோ செய்து அந்த கும்பலை பிடிச்சுடுவாங்க நீ பயப்படாம போ சதீஷ் இப்போ வீட்டில் எதுவும் சொல்ல வேண்டாம் என சதீஷை அனுப்பிவைத்தாள்.
பின் சஞ்சீவை அழைத்தவள் ரகசிய கேமரா
மூலமாக ரெக்கார்ட் செய்த சதீஷ் வாக்குமூலத்தை போட்டு காட்டி நாளை சதீஷை ஃபலோ செய்து அந்த கும்பலை அதன் தலைமையோடு பிடிக்க வேண்டும் எனவும் யாரும் தப்பகூடாது என கடுமையாக உத்தரவிட்டாள்.
அதன்படி மறுநாள் சஞ்சீவ் ,பிரேம் ,ரமா, ஆதிரா,ராஜீவ் ஒரு டீமாக சென்று அந்த போதை மருந்து கடத்தல் கும்பலை பிடித்தனர் ,
அதன் தலைமை சரோஜா என்ற பெண் தன் கணவன் மறைவுக்கு பின் அவன் இடத்திற்க்கு வந்தவள்.
போலீஸ் கெடுபிடி அதிகமாக
இருப்பதால் சரக்கை கைமாற்ற ஸ்கூல் போகும் ஓரளவு பயந்த சுபாவம் உள்ள பிள்ளைகளை பிடிப்போம் பொதுவாக சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவர்களை போலீஸ் சோதிப்பது இல்லை.
அதனால் அவர்கள் பெற்றோரை சிறுசிறுவிபத்துகளில் சிக்க வைத்து அதை வீடியோ செய்தும்,போலீஸ் பயம் என மிரட்டியும் தங்கள் வேலைக்கு பயன்படுத்திகொள்வதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாள் சரோஜா
பலமான விசாரிப்புகளுக்கு பின்.
அதன் பிறகு அவளுடைய கூட்டாளிகள் மற்றும் பல கோடி மதிப்புள்ள போதை மருந்துகளும் கைப்பற்றப்பட்டது.
பிரியா மாலை சதீஷ் வீட்டிற்க்கு சென்றாள் சத்யநாதன்,ரம்யா இருவரிடமும் நீங்க உங்க பையனுக்கு என்னைக்கும் பலமா தான் இருக்கனும் பலகீனமா இருக்ககூடாது,
நீங்க சதீஷ்கிட்ட ஒரு மாறுபாடு தெரிஞ்ச பிறகு தான் பேசி இருக்கீங்க அவன் கூட தினமும் மனம் விட்டு பேசியிருந்தா அவன் தன்னை மிரட்டும் போதே சொல்லிருப்பான் வேலை, வேலைனு ஒடுறதை குறைச்சுகிட்டு
கொஞ்சம் அவன் கூட டைம் ஸ்பெண்ட் பண்னுங்க உங்க மேல அவன் வச்சுயிருக்குற அன்புதான் அவன் அந்த கும்பல்கிட்ட மாட்ட காரணம் இனிமே அவனை பார்த்துக்கோங்க இனி அவங்களால சதீஷ்க்கு எந்த பிரச்சனையும் வராது என்ற போது சதீஷ் வந்தான்.
அவனோடு சற்று பேசியிருந்து விட்டு அவனுக்காக வாங்கி வந்த “மகாத்மா காந்தியின் சத்திய சோதனை” புத்தகத்தை தந்து வாழ்த்தினாள் ஸ்ரீபிரியா .
சதீஷ் மேம் ரொம்ப நன்றி மேம் நான் பயந்து போய் இருந்தேன் நானும் உங்களை மாதிரி படிச்சு எல்லாருக்கும் உதவி செய்யும்
நல்ல போலீஸா ஆவேன் என்றான் மகிழ்ச்சியோடு.
பிரியா இளையவனை மனதார
வாழ்த்திவிட்டே புறப்பட்டாள்.
இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம்.?