ஸ்ரீ – 12

0
170

குறள்

குறிப்பறிவுறுத்தல்

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு.

பொருள்

மலராத அரும்பினுள் மணம் அடங்கி இருப்பதைப் போல இவளுடைய புன்முறுவலுக்குள் ஒரு குறிப்பு அடங்கி இருக்கிறது.

ஸ்ரீ – 12

ஸ்ரீபிரியா ஆபீஸ் கிளம்பி லிப்டில் வர கீழ் தளத்தில் ஸ்ரீராம் இணைந்து கொண்டவன்.

பொதுவான நல விசாரிப்புக்கு பின் ஆபீஸ்தானே பிரியா சேர்ந்தே போகலாமே என கேட்டவன் .

இப்பவே சொல்லிடுறேன் உன்னை எதுவும் கேட்டு இம்சை செய்ய மாட்டேன் என்றான்
சிரித்தபடியே.

ஸ்ரீபிரியா அவன் முகத்தை பார்க்காததால் அவன் சிரிப்பை காணதவள் சரி என்றாள்.

ஸ்ரீராம் உற்சாகமாக கையிலிருந்த பைக் சாவியை பேண்ட் பாக்கெட்டில் போட்டவன்
தன் லேப்டாப் பேகில் இருந்து கார் சாவியை எடுத்துக்கொண்டான்.

காரில் போகும் போது ஸ்ரீபிரியா மௌனமாக வர,

ஸ்ரீராம் உனக்கு என்ன மாதிரி சாங்ஸ் பிடிக்கும்? டூயட்டா? என்றான்.

ஸ்ரீபிரியா ஸ்ரீராமை சற்று முறைத்தவள் பாரதியார் பாட்டு பிடிக்கும் என்றாள் அழுத்தமான குரலில்.

ஸ்ரீராம் வாவ், என்ன ஒரு ஒற்றுமை பாரேன் எனக்கும் பாரதியார் பாடல்கள்னா
உயிர் பிராமிஸா அதுலையும் “சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா” பாட்டு ரொம்ப
பிடிக்கும் என்று பிரியாவை ஆவலாக பார்த்தவன்.

அந்த பாடலை சிஸ்டத்தில் பிளே செய்துவிட்டு அதோடு தானும் மெல்ல பாடியபடி ஸ்டியரிங் வீலீல் தாளமிட்டபடியே காரை ஓட்டினான்.

அதிலும் “கண்ணம்மா” என்ற சொல்லில் சற்று அழுத்தம் தந்தே பாட ஸ்ரீபிரியா மெல்ல முறுவலித்தபடியே பாடலை ரசித்து கொண்டிருந்தாள்.

ஸ்ரீராம் மெல்ல ஸ்ரீபிரியா என அழைத்தவன் குரலில் இருந்த குழைவு ஸ்ரீபிரியாவை ஓர் நொடி அசைத்துவிட சட்டென தன்னை விரைப்பு நிலைக்கு மாற்றியவள் முகத்தில் இருந்த முறுவல் மறைந்த பின் ஸ்ரீராமை திரும்பி பார்த்தாள்.

ஸ்ரீராம் உனக்கு எதாவது புரியுதா? என்றான் தாபமாக.

ஸ்ரீபிரியா கடுமையான குரலில் இல்லை,சார் எனக்கு எதுவும் புரிய வேண்டாம் என்னை எதுவும் கேட்கமாட்டேன்னுதானே சொன்னீங்க அதான் உங்ககூட ஆபீஸ் வர சம்மதிச்சேன்.

சாரி சார் பீளீஸ் நான் உங்க ஜூனியர் ஆபீஸர் அவ்வளவுதான் நான் இங்கேயே இறங்கி ஆட்டோவில் ஆபீஸ் வந்துடுறேன் காரை நிறுத்துங்க என வேகமாக சொல்ல

ஸ்ரீராம் சிறிய குரலில் சாரி ஸ்ரீபிரியா பிளீஸ் இனி எதுவும் கேட்கலை என இறங்கிய குரலில் வருந்த. ஸ்ரீபிரியா மௌனமாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

ஸ்ரீராம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்த போது
திடீரென்று ஒரு பெரிய கார் இவர்கள் காரின் குறுக்கே வர ஒரு நொடி ராமின்
கையில் கார் ஆட்டம் கண்டு நிற்க.

சீட் பெல்ட் போடாத ஸ்ரீபிரியா நிலைதவறி டாஷ் போர்டில் தலையை இடித்துக் கொண்டாள்.

வேகமாக தன் சீட் பெல்டை விடுவித்த ஸ்ரீராம் ஸ்ரீபிரியா நெற்றியை பார்க்க வீக்கம் இருந்ததை கண்டு ஆத்திரமாக இறங்கினான்.

அந்த காரிலிருந்து இறங்கிய சிலர் ஸ்ரீராமை தாக்கியபடியே காரை நெருங்க விஷயம் யூகித்து ஸ்ரீராம் தடுக்கும் முன் ஸ்ரீபிரியா இறங்கியவள் தானும் சண்டையிட ஆரம்பித்தாள்.

ஸ்ரீபிரியாவை பின்னிருந்து நெருங்கிய ஒருவன் அவளை கத்தியால் குத்தவர ஒருவனை அடித்துக் கொண்டிருந்தவள் எதிர்பாரமல் குனிய கத்தி வலது தோளுக்கு சற்று கீழ் இறங்கியது.

குத்தியவனை பிடித்தவள் ஸ்ரீராமை அழைக்க ஓடி வந்தவன் ஸ்ரீபிரியாவின் பிடியில் இருந்தவனை அடித்து மயக்கமாக்கி காரின் பின் சீட்டில் போட்டான்.

ரத்தம் வர நின்ற ஸ்ரீபிரியாவை கைதாங்கலாக தாங்கி காரின் முன் சீட்டை சற்று சாய்வாக சாய்த்து வைத்தவன்.

கர்சீப் வைத்து காயத்தை மேற்கொண்டு ரத்தம் வராமல் அழுத்தி பிடித்து அவளை அப்படியே சாய்வாக படுக்க வைத்தான்.

ஸ்ரீபிரியா அரைமயக்க நிலையில் இருக்க ஸ்ரீராம் லோக்கல் போலீஸிற்க்கு தகவல் தந்தவன் ராஜீவ்வை செல்லில் அழைத்து அருகிலிருந்த ஹாஸ்பிட்டல் வர சொன்னான்.

விரைந்து வந்த லோக்கல் போலீஸிடம் வலியில் சுருண்டிருந்த மற்றவர்களை கைது
செய்து ஐ.பியில் ஒப்படைக்க சொல்லி காரை எடுத்தான் ஸ்ரீபிரியாவிடம் பேச்சு
கொடுத்தபடியே.

பிரியா இங்க பாரும்மா நான் பேசுறது கேட்குதா? பிரியா பிரியா என அவள் கண்ணம் தட்ட , மெல்ல கண்விழித்த ஸ்ரீபிரியா, ராம் சார் ராம் சார் வீட்டுக்கு சொல்ல வேண்டாம் பீளீஸ் அவங்க இங்க வர கூடாது பீளீஸ் உங்களுக்கு ஒன்னும் ஆகலையே? என்றாள் திக்கி திணறியபடியே.

ராம் நான் பார்த்துக்குறேன் பிரியா உங்க வீட்டுக்கு சொல்லலை நீ கஷ்டப்படாத என்றான் கலக்கமாக.

மறுபடியும் பிரியா மெல்ல முனகினாள் ராம் சார் உங்களுக்கு ஒன்னும் ஆகலையே
அடிப்பட்டுயிருக்கா? என சிறிய குரலில் முனுமுனுக்க

ஸ்ரீராம் சற்று கூர்ந்து கவனித்தவன் இல்லைம்மா எனக்கு ஒன்னும் ஆகலை நீ அமைதியா இரு நான் நல்லாதான் இருக்கேன் என ஹாஸ்பிட்டல் வாசலில் காரை நிறுத்தியவன்.

அவசரமாக குரல் கொடுத்தான் ஸ்ட்ரெக்சர் வர பிரியாவை அதில் மாற்றினான்.

அப்போது ராஜீவ் வர காரின் பின்சீட்டில் இருந்தவனை அவனிடம் ஒப்படைத்தவன்.

இவன் ஏசிபி ஸ்ரீபிரியாவை அட்டாக் செய்தவன் இவனை தனியா வை ராஜீவ், நான் வந்து பர்சனலா என்கொயரி செய்துக்குறேன் என கடுமையாக சொன்னான்.

ஸ்ரீராம் அவசரமாக உள்ளே ஓடினான் அஜய்யை செல்லில் அழைத்தபடியே.

ஸ்ரீபிரியாவை பரிசோதித்து வந்த டாக்டர் லேகா கிருஷ்ணமூர்த்தி ஐம்பது வயதை
தெட்ட கனிவான மருத்துவர்.

மிஸ்டர், அவங்க நல்ல இருக்காங்க தோள்பட்டை சதை பகுதியில் வெறும் குத்து காயம் தான் ஆழமான காயம் கூட இல்லை,நெற்றியிலும் சாதாரண வீக்கம்தான் பயம் எதுவும் இல்லை.

கொஞ்சம் பிளட் லாஸ் அதனால தான் மயக்கம் டிரிப்ஸ் ஏறட்டும் வேற ஒன்னும்
ஆபத்து இல்லை.

இது ஏதோ போலீஸ் கேஸ் போல தெரியுதே போலீஸ்க்கு இன்ஃபார்ம் செய்தாச்சா?
நீங்க அவங்களுக்கு உறவா? இல்லை உதவிதானா? என கேட்டார்.

ஸ்ரீராம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஸ்ரீபிரியாவை பற்றியும் கூறினான்

டாக்டர் லேகா சரி மிஸ்டர் ஸ்ரீராம் அவங்க மாலை வரை அப்சர்வேஷன்ல இங்க
இருக்கட்டும் என கூறி சென்றார்.

அப்போது அஜய் வந்தான் இப்போ பிரியா எப்படி இருக்கா? என்ன ராம் எப்படி
ஆச்சு? அந்த பீட்டர் வேலையா இது? என வினவினான்.

ஸ்ரீராம் நல்லா இருக்கா ஆனா மயக்கமா இருக்காடா நானும் இன்னும் போய்
பார்க்கலை மற்ற விவரங்களை நண்பனுக்கு கூறி ஸ்ரீபிரியா அறைக்கு சென்றனர். கையில் டிரிப்ஸ் ஏற மயக்கத்தில் இருந்தவளை பார்த்தனர்.

ஸ்ரீபிரியா அரை மயக்கத்தில் கூறியதை நண்பனுக்கு சொன்ன ஸ்ரீராம், அந்த பீட்டர்க்கும் இவளுக்கும் என்ன தான் பிரச்சனையோ தெரியலை ஆனா அவனால அவ குடும்பத்துக்கு ஏதாவது ஆகிடுமோனு ரொம்ப பயப்படுறா என்றான் குழப்பமாக.

அஜய் நண்பண் தோள் பற்றியவன் ரிலாக்ஸ் ராம் எல்லாம் சரி ஆகிடும், இது பீட்டர் வேலையா தெரியலையே ஆளுங்க லோக்கல் போல தெரியுதே என்றான்.

ஸ்ரீராம் எனக்கும் ஒன்னும் புரியலை அஜய் நம்ம ஆபீஸ்க்கு கஸ்டடிக்கு அணுப்பியிருக்கேன் போய் தான் விசாரிக்கனும் ஆனா இது பீட்டர் வேலையா இருக்க வாய்ப்பு கம்மி அவன் பிரியாவை கொல்ல நினைச்சுயிருந்தா எப்பவோ முயற்சி செய்து இருப்பான்

அதுவும் அவன் நேரடியா இறங்ககூடிய ஆள் இதுல வேற என்னமோ இருக்கு அவனுக்கு தேவையான ஏதோ பிரியா வசம் இருக்கனும் அதை வாங்க தான் பிரியாவை அந்த பீட்டர் இந்த பாடுபடுத்துறான்.

அதோட எதையோ வச்சு மிரட்டுறான் என்றவன் நினைவு வந்தவனாக ஸ்ரீபிரியா கைபையை கிளறி பார்த்தான்.

அதில் உபயோகமாக எதுவும் கிடைக்கவில்லை செல்லை பார்க்கலாம் என்றால் அது பாஸ்வேர்டு போடப்பட்டு இருந்தது

ஸ்ரீராம் சோர்ந்து அமர அஜய்யும் செய்வதறியாமல் அம்ர்ந்திருக்க

திடீரென ஸ்ரீபிரியா மயக்கத்தில் புலம்ப ஆரம்பித்தாள் “இல்லை முடியாது நான்
என் டிப்பார்ட்மெண்டுக்கு துரோகம் செய்ய மாட்டேன் நீ நினைக்கறது ஒரு நாளும் நடக்காதுடா பீட்டர் உன்னால என்னை ஒன்னும் செய்ய முடியாது அதுக்குள்ள
நான் செய்ய வேண்டியதை செய்து முடிச்சுட்டு என்னையும் அழிச்சுப்பேண்டா உன்னால

என்னையும்,என் டிப்பார்ட்மெண்டையும் ஜெயிக்கவே முடியாது உன் முடிவு என்னால தாண்டா போ போய்டு என் கண்முன்னாடி நிக்காதே போ” என புலம்பியபடியே பிரியா கட்டிலில் இருந்து திமிறி விழ போக அருகில் இருந்த அஜய் ஸ்ரீபிரியாவை விழாமல் பிடித்தவன்

அவள் கண்ணம் தட்டி பிரியா பிரியா இங்க பாரும்மா இங்க பீட்டர் இல்ல நான்
அஜய் நானும் ,ராமும் தான் இருக்கோம் அமைதியா இரும்மா என அவளை அமைதிபடுத்த முயல அந்த குரலுக்கு பனிந்து அனத்தல் அடங்கினாலும் அவள் உடலை முறுக்கி கீழே விழப்பார்க்க அவளை விழாமல் இறுக பற்றிய அஜய்

ஸ்தம்பித்து போய் நின்ற நண்பனை அதட்டி டாக்டரை அழைக்க அனுப்பினான்.

டாக்டர் வந்து பார்த்து ஊசி போட்டு விட்டு உங்க டியூட்டி ஸ்ட்ரெஸாதான் இருக்கும் தூங்கறத்துக்கு இன்ஜெக்ஷன் போட்டு இருக்கேன்,

தூங்கட்டும் வேற ஒன்னும் பயப்படும்படி இல்லை நல்லா தூங்கினாலே போதும் ஸ்ரீராம் சரியாகிடும் என்றவர்.

ஸ்ரீராமின் பதற்றத்தை கண்டு ஆமாம் நீங்க உண்மையாவே அவங்க சீனியர் ஆபீஸர்
மட்டும் தானா? என கேட்க ஸ்ரீராம் குழப்பமாக டாக்டரை பார்த்தவன் தன் IPS ஐடியை எடுத்து காட்டினான் எதுவும் பேசாமல்.

டாக்டர் ஐடியை அவனிடமே தந்தவர் இல்லை என் கேள்வியை நீங்க சரியா கவனிக்கலை சரி போகட்டும் நீங்க டென்ஷன் ஆகி அடுத்த வார்டில் அட்மிட் ஆகிடாதீங்க என கூறி மெல்ல புன்னகைத்தபடியே கிளம்பினார்.

ஸ்ரீராம் மனம் முழுவதும் ஸ்ரீபிரியாவின் புலம்பலிலேயே உழன்றது விஷயம் அறிந்து வரதராஜன் வந்தார் பதற்றமாக.

அஜய் நண்பன் தன்னிடம் கூறிய விவரங்களை சொல்ல பிரியாக்கு டைம் சரியில்லை போல ஜாக்கிரதையா இருக்க
சொல்லனும் இப்போதான் கியூராகி வந்தா அதுக்குள்ள இப்படி என வருத்தப்பட்டவர்

சரி ஹெல்ப்க்கு ரமாவை வர சொல்லி இருக்கேன் அது வரை கூட இருங்க ஆமாம் பிரியா வீட்டுக்கு சொல்லியாச்சா? இல்லை நான் பேசவா? என கேட்க.

ஸ்ரீராம் சுதாரித்தவன் இல்லை சார் பிரியா மயக்கம் ஆகுறதுக்கு முன்னாடியே இப்போ சொன்னா பயப்படுவாங்க நானே கால் செய்துக்குறேன் நீங்க செய்ய வேண்டாம்னு சொல்லிட்டாங்க சார் என்றான் பாதி உண்மையும் மீதி பொய்யுமாய்.

வரதராஜன் அதுவும் சரிதான் அவ பேரண்ட்ஸ் பயப்படுவாங்கதான் சரி சரி ரொம்ப நன்றி ஸ்ரீராம் நல்ல சமயத்துல உதவி பண்னியிருக்க அப்போவும் நீ தான்
ரத்தம் தந்து பிரியாவை காப்பாத்தின இப்போவும் நீ தான் உதவியிருக்க தேங்கஸ் ஸ்ரீராம் என்றார் பாராட்டுதலாக

ஸ்ரீராம் பரவாயில்லை சார் இதுக்கு போய் பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு
எல்லாரும் ஒன்னா வேலை செய்றோம் இதுகூட செய்யமாட்டோமா நாங்க
பார்த்துக்குறோம் சார், நீங்க கமிஷ்னர் மீட்டிங் போகனும்ல? என கேட்க.

வரதராஜன் ஆமாம் ராம் மீட்டிங் தான் கிளம்பினேன் ராஜீவ் சொன்னவுடனே இங்க வந்தேன் சரி நான் புறப்படுறேன் என கிளம்பினார்.

ஸ்ரீராம் வரதராஜனை அனுப்பி வைத்தவன்.

அஜய் நீ பிரியாவை பார்த்துக்கோ ரமா வந்தாலும் போகாதே நான் வரவரைக்கும்
நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன் வந்து சொல்றேன்டா என அவசரமாக கூறியபடியே வெளியேறிய நண்பனை சற்று குழப்பமாக பார்த்திருந்தான் அஜய்.

இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம்.?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Previous Postஸ்ரீ – 11
Next Postஸ்ரீ – 13
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here