ஸ்ரீ – 13

0
218

குறள்

ஒப்புரவறிதல்

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து.

பொருள்

மற்றவருக்கு உபகாரம் செய்வதால் கெடுதல் வரும் என்றால் ஒருவன் தன்னை
விற்றாவது அதை வாங்கிக் கொள்ளலாம்.

ஸ்ரீ – 13

ஐ.பி ஆபீஸ் கஸ்டடி ரூமில் ஸ்ரீராம், ஸ்ரீபிரியாவை தாக்கியவர்களை கவனிக்கும் விதமாக ராஜீவ் கவனிக்க அருகில் ஆத்திரமாக ஸ்ரீராம் நின்றிருந்தான்.

ஸ்ரீபிரியாவை கத்தியால் குத்தியவன் வாங்கிய அடி தாளாமல் உண்மையை சொல்ல ஆரம்பித்தான்

சார், என் பெயர் கோவிந்தன் ஏசிபி ஸ்ரீபிரியா அரஸ்ட் செஞ்ச சரோஜா தம்பி சார் நான் என் அக்காவை அரஸ்ட் பன்னதும் இல்லாம கோடிகணக்கான மதிப்புள்ள எங்க சரக்கையைல்லாம் வேற பறிமுதல் பன்னிட்டா அந்த ஏசிபி அதான் அவளை கொல்ல வந்தேன் நீங்க குறுக்க வந்து கெடுத்துட்டீங்க சார் என்றான் ஆத்திரமாக.

ஸ்ரீராம் இன்னும் கடுப்பானவன் ஒரு போலீஸ் ஆபீஸரையே கொல்ல பார்ப்பியா நீ ராஸ்க்ல் என அவனை அடிக்க,

ராஜீவ் சார் விடுங்க அவனுக்கு ஏதாவதுனா கோர்ட்டில் பதில் சொல்லனும் நான் பார்த்துக்குறேன் நீங்க போங்க என ஸ்ரீராமை தடுத்தான்.

ஸ்ரீராம் ஆத்திரமாக கேஸை ஸ்ட்ராங்கா போடு ராஜீவ் இவனும்,இவன் ஆளுங்களும்
பெயில்ல கூட வெளியே வரக் கூடாது நானே பார்த்துக்குறேன் ஐ.ஓ
(இன்வெஸ்டிகேஷன் ஆபிஸர்) நான் தானே லாயர்கிட்ட பேசிக்குறேன்

ராஸ்கல் போதை மருந்தால சமூகத்தை கெடுக்கறதும் இல்லாம அதை தடுத்த ஏசிபியை கொலை செய்யவா பார்க்குற இதுல அவங்களை மரியாதை இல்லாம வேற பேசுற நீ எப்படி தப்பிக்குறனு நான் பாக்குறேண்டா என கோவிந்தனை இன்னும் சில அடி அடித்தவன்.

என்னை கேக்காம இந்த கேஸில் யாரும் தலையிடகூடாது எந்த நடவடிக்கையும்
எடுக்க கூடாது ஒகே? என ராஜீவிடம் கிட்டத்தட்ட கத்திவிட்டு சென்றான்.

வழக்கத்திற்க்கு மாறாக ஆங்காரமூர்த்தியாய் கத்தி சென்ற தன் மேலதிகாரியை ராஜீவ் சற்று விநோதமாக எண்ணியபடியே தன் வேலையை கவனிக்க சென்றான்.

ஸ்ரீபிரியாவின் புலம்பலை கேட்ட நொடியிலிருந்தே ஸ்ரீராம் கலங்கி போய் இருந்தான்.

பீட்டர் ஸ்ரீபிரியாவை பயம் காட்ட இப்படி ஒரு கொலை முயற்சி செய்திருப்பானோ
என்ற சிறு சந்தேகமும் இப்போது தீர்ந்தது.

எனவே தன் மனதினுள் ஸ்ரீபிரியாவிற்காக இரு முடிவுகளை எடுத்திருந்தான்.

அதில் ஒன்றை செயல்படுத்த சில விஷயங்கள் செய்தவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் அஜய்யை போய் அழைத்துக்கொண்டு ஸ்ரீபிரியா பிளாட்டிற்க்கு வந்தான்.

ஸ்ரீபிரியா பிளாட் கதவை சாத்தும் வரை காத்திருந்த அஜய் நண்பனிடம் என்ன நினைச்சுகிட்டு இதெல்லாம் செய்ற நீ ? அவ அனுமதியில்லாம திருட்டுதனமா அவ வீட்டுக்குள்ள போறது தப்புனு உனக்கு தெரியாதா ராம்? இங்க தேடினா மட்டும்
என்ன கிடைக்கும்? என்றான் ஆத்திரமாக.

ஸ்ரீராம் கொஞ்சம் பொறுமையா இரு எல்லாத்துக்கும் பதில் நம்ம வீட்டுக்கு போய்
சொல்றேன் என் மேல நம்பிக்கை இருக்குல அமைதியா இரு.

என தன் லேப்டாப்பை டீபாய் மேல் வைத்தவன் கையோடு எடுத்து சென்றிருந்த சில பார்சல்களை பிரித்து அதிலிருந்து சிறு டிவைஸ்களை அந்த வீட்டின் சில இடங்களில் மறைவாக பொருத்தினான்.

பின் ஸ்ரீபிரியா பெட்ரூமிற்க்குள்ளும் சென்று வந்தவன்.

லேப்டாப்பில் சிறிது நேரம் வேலை செய்துவிட்டு வந்த சுவடே தெரியாமல்

நண்பனோடு தன் வீடு வந்து தனக்கும் அஜய்க்கும் சேர்த்து இரு ஜூஸ் டம்ளர்களுடன் வந்து சோபாவில் அமர்ந்தவன்.

அஜய்யிடம் ஒன்றை தந்துவிட்டு தானும் பருக ஆரம்பித்தான்.

அஜய் ஆத்திரமாக ஸ்ரீராமை முறைக்க ஸ்ரீராம் ஜூஸை குடித்தபடியே ஓர கண்ணால் நண்பனை பார்த்தவன் வர வர நீயும் பிரியா மாதிரியே முறைக்குறடா என்றான் கேலியாக.

அஜய் ஆத்திரமாக விளையாடத ராம் ஒரு பெண் அனுமதியில்லாம அவ வீட்டுக்குள்ள
போனதே குற்றம் நீ என்னடானா அவ வீடு முழுக்க கேமரா வச்சு அவ பெட்ரூம்குள்ளயும் வச்சு இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?

அதோட என்ன தண்டனைனு நான் உனக்கு செல்ல வேண்டாம் பிரியா புகார் செய்தா
உன் வேலையும் போய் உன்னை அரஸ்ட்டும் செய்துடுவாங்கடா என்றான் கடுமையாக.

ஸ்ரீராம் பொறுமை மை டியர் ஃபிரண்ட் உன் ராம் அவ்வளவு கேவலமானவன் இல்லை
அவ பெட்ரூமில் நான் ஃபிக்ஸ் செய்தது வாய்ஸ் ரெக்கார்டர் தான் மத்த இடத்தில் வைத்தது தான் கேமரா என்றான் அமைதியாக.

அஜய் ஆத்திரம் மட்டுபட சாரிடா நான் உன்னை தப்பா நினைக்கலை ஆனா ஏனோ கோபம் வந்துட்டு என்றான் சிறிய குரலில்.

ஸ்ரீராம் எழுந்து நண்பன் அருகில் அமர்ந்தவன் உன்னால என்னை தப்பாலாம் நினைக்க முடியாதுனு எனக்கு தெரியும்,

பிரியா இன்னிக்கு புலம்பினதை கேட்டல தன்னை அழிச்சுப்பேன்னா அப்படி எதுவும் நடந்துட கூடாது,

அதோட பீட்டர் பத்தி எதாவது விஷயம் தெரிய வரலாமே ஒரு வேளை அவன் பிரியாவை அட்டாக் செய்ய வீட்டுக்கே வந்தா?

அவனுக்கு எதிரா நமக்கு ஆதாரமும் கிடைக்கும்,பிரியாவை சேஃப் செய்யவும் முடியும்.

அதானாலதான் பிரியா வீட்டில் அட்வான்ஸ்டு வையர்லஸ் மைக்ரோ சிசிடிவி கேமரா & ரெக்கார்டர் பிக்ஸ் செய்தேன்

அவ வீட்டில் எந்த இடத்துல என்ன பேசினாலும் துல்லியமா ரெக்கார்ட் ஆகும் என் லேப்டாப் மொபைல் மூலமா பார்க்க கேட்க முடியும் இது எல்லாமே பிரியா பாதுகாப்புக்கு தான் அஜய் அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்றான் வருத்தமாக.

அஜய் எதுவும் ஆகாது கவலைப்படாத ராம் பிரியாக்கு துணையா நாம ரெண்டு
பேரும் இருக்கோம் என்றான்.

ஸ்ரீராம் சற்று இயல்புக்கு வந்தவன் நீ ரொம்ப ஃபீல் பண்ணாத அஜய் உன் தங்கச்சியை அவ புருஷன் நான் தானே பார்க்கப்போறான் என கூறி சிரிக்க.

அஜய் அவளுக்கு மட்டும் தெரிஞ்சா நீ அவகிட்ட அடிவாங்காம தப்பமாட்டே என மிரட்டியவன் தானும் சிரித்துவிட்டான்.

அப்போது ஸ்ரீராமின் செல் சினுங்கியது எடுத்தவன் செல்லு ரமா, ஆமாம் பிரியா
செல்,பேக் என் காரில் தான் இருக்கு அங்க தான் வரேன்னு சொல்லு இப்போ நல்லா
இருக்காங்களா? என்று பேசி முடித்தவன்.

அஜய் உன் தங்கை எழுந்தாச்சு வா கிளம்பலாம் எதாவது உளறி என்னை அந்த லேடி ஜாக்கிஜான் கிட்ட அடி வாங்க வச்சுடாதடாப்பா என கேலி பேசியபடியே அஜய்யுடன் புறப்பட்டான்.

ஸ்ரீபிரியா கட்டிலில் அமர்ந்து இருந்தாள் அஜய்,ஸ்ரீராமை கண்டு மெல்ல சிரித்தவள்.

ரொம்ப நன்றி ஸ்ரீராம் சார் உங்களுக்கு ரொம்பதான் கஷ்டம் கொடுத்துட்டேன்.

ரமா சொன்னா ராஜீவ் சொன்னதா என்னை அட்டாக் செய்தவன் அந்த சரோஜா தம்பினும் நீங்க அவனை அடிபின்னிட்டீங்கனும்.

தேங்கஸ் அஜய் சார் நீங்களும் உங்க வேலையெல்லாம் விட்டுட்டு எனக்காக ரமா
வரவரை காத்திருந்து, உங்க ரெண்டு பேருக்குமே என்னால சிரமம் என்றாள் சற்று வருத்தமாக.

அஜய் அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா இப்போ பெயின் இருக்கா? என்றான்.

ஸ்ரீபிரியா லைட்டா இருக்கு சார் ஆனா டிஸ்சார்ஜ் செய்துக்கலாம்னு டாக்டர் ரவுண்ட்ஸ் வந்தப்போ சொன்னாங்க என்றவள் என் பேக் என்றாள் தயக்கமாக.

ஸ்ரீராம் அது எங்கிட்டதான் இருக்கு இந்தாம்மா எல்லாம் சரியா இருக்கானு செக் செய்துக்கோ அப்புறம் என்னை சொல்லாதே என்றான் சிரித்தபடியே.

சிரித்தபடி பேக்கை வாங்கிய ஸ்ரீபிரியா ரமாவை அழைத்து தன் கார்டை தந்து பில் செட்டில் செய்ய சொல்ல

ஸ்ரீராம் தேவையில்லை பிரியா எல்லாம் பே செய்தாச்சு என்றான்.

ஸ்ரீபிரியா முகம் இறுகவும் ஸ்ரீராம் நீ தரும் போது பணத்தை நிச்சயம் வாங்கிக்குறேன் இன்னிக்கே கொடுத்தாலும் ஓகே தான் அதுக்காக நெற்றிக்கண்ணை திறந்துடாதே தாயே என்றான் பயந்தவன் போல நடிந்து.

அனைவருமே சிரிக்க ரமா சார் நீங்க இப்படியெல்லாம் கூட பேசி சிரிப்பிங்களா?
ஸ்ரீபிரியா மேம்மும் சரி நீங்களும் சரி ரொம்ப ரஃப் பர்சன்ஸ்னு நினைச்சோம் என்றாள் ஆச்சர்யமாக.

ஸ்ரீராம் எப்பவும் ரோபோ போலவே இருக்க முடியாதுல அதோட சிரிக்கவே சந்தர்ப்பம்
இப்போ தானே வாய்க்குது ரமா என்றான் ஸ்ரீபிரியாவை ஒரு பார்வை பார்த்தபடியே
மற்றவர் கவனத்தில்படும் முன் சுதாரித்தவன்

சரி சரி பிரியா கிளம்பலாமா? என கேட்ட பின் ஸ்ரீராம் ஒரு முறை டாக்டர் லேகாவை பார்த்துவிட்டு சில மெடிஸன்ஸ்,ஸ்ரீபிரியா மெடிக்கல் ரிப்போர்ட்களுடன் வந்தான் பிறகு நால்வரும் புறப்பட்டனர்.

இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம். ?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Previous Postஸ்ரீ – 12
Next Postஸ்ரீ – 14
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here