குறள்
மக்கட்பேறு
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
பொருள்
பிள்ளைகளைக் மக்கட்செல்வம் என்று அறிஞர்கள் கூறுவார்கள். அச்செல்வம்
அவரவர் செய்யும் வினைக்கேற்றபடி.
ஸ்ரீ – 14
ஸ்ரீபிரியா ஒரு நாள் ஓய்வுக்கு பின் ஆபீஸ் வந்தாள் அனைவரின் நலவிசாரிப்புகளுக்கும் பதில் கூறி தன்னறைக்கு வந்தமர்ந்தாள்.
ராஜீவ் வந்தவன் சல்யூட் செய்து மேம் சரோஜா கேஸ் ஃபைல் சைன் செய்யனும் என
நீட்டினான்.
ஸ்ரீபிரியா ஃபைலை வாங்கினாள் அதை படித்தபடியே ராஜீவ்வை அமர
சொன்னவள்.
கையெழுத்து போட்டு அவனிடம் தந்துவிட்டு சரோஜா தம்பி கோவிந்தன் கேஸ்
யார் பாக்குறாங்க? இந்த கேஸ் சம்பந்தப்பட்டது தானே அதுவும் ஆனா அவன்
பெயர் இதுல இல்லையே? என்றாள்.
ராஜீவ், மேம் அது முழுக்க ஸ்ரீராம் சார் தான் பாக்குறாங்க அவரை கேட்காம எந்த ஆபீஸரும் இன்வால்வு ஆகக்கூடாதுங்கறது சாரோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.
அவனை கஸ்டடியில் எடுத்து அவர் விசாரிச்சப்போ நானும் கூட இருந்தேன் மேம்
இதுவரை ஸ்ரீராம் சார் இவ்வளவு ஆத்திரப்பட்டு நாங்க யாரும் பார்த்ததேயில்லை என்றான்.
ஸ்ரீபிரியா சரி சரி ராம் சார் எங்க? இன்னும் வரலையா? நான் பேசிக்குறேன் என்றாள்.
ராஜீவ் இல்லை மேம் ஸ்ரீராம் சார் ரெண்டு நாள் லீவ் பர்சனல் ஒர்க்னு சொன்னார்.
அதனால கேவிந்தன் கேஸ் ஃபைலை என்னை ரெடி செய்து வைக்க சொன்னார்.
ஆனா கோவிந்தன் மேல வேறும் போதை மருந்து கேஸ் மட்டும் இல்லை மேம், ஸ்ரீராம்
சார் அவன் மேல திட்டமிட்ட கொலை முயற்சி,காவல்துறை அதிகாரியை கொலை செய்ய முயன்றதுனு பல செக்க்ஷன்களில் எப்.ஐ.ஆர் போட்டுயிருக்கார் கேஸ் ரொம்ப
ஸ்டாராங் என்றான்.
ஸ்ரீபிரியா ஒகே ராஜீவ் நான் பார்த்துக்குறேன் என்றாள்.
ராஜீவ் ஓரு சல்யூடுடன் புறப்பட.
அஜய் கதவை தட்டிவிட்டு வந்தான்.
ஸ்ரீபிரியா எழுந்து சல்யூட் செய்ய அஜய் அதை ஒரு தலையசைவுடன் ஏற்று ஸ்ரீபிரியா
எதிரில் அமர ஸ்ரீபிரியாவும் அமர்ந்தாள்.
அஜய் இப்போ பெயின் இருக்காம்மா மெடிஸன்ஸ் சரியா எடுத்துகுறியா? என விசாரிக்க.
ஸ்ரீபிரியா பெயின் இல்லை மருந்தெல்லாம் சரியா எடுத்துக்குறேன் தேங்க்ஸ் சார் என்றவள் தொடர்ந்து
ஸ்ரீராம் சார் கோவிந்தன் கேஸில் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காங்க போல அவன் சரோஜா கேஸ் சம்பந்தப்பட்டவன் அது விஷயமா ஸ்ரீராம் சார் கிட்ட பேசனும் சார் லீவ்னு ராஜீவ் சொன்னான் ஸ்ரீராம் சார் செல்லும் ஸ்விட்ச் ஆப் செய்து இருக்காரு எப்போ வருவாரு? எங்க போயிருக்காரு? என வேகமாகவே கேட்க
அஜய் ஒரு நொடி ஸ்ரீபிரியாவை ஆழப்பார்த்தவன் ராம் ஊருக்கு போயிருக்கான் மேக்ஸிமம் நாளை வந்துடுவான் என அமைதியான குரலில் கூறியவன் தொடர்ந்து
ஒரு கேஸ் பிரியா சிட்டி போலீஸ் நமக்கு ஃபார்வேர்ட் செய்துருக்காங்க
அவங்களும் ஒரு சைடு பாக்குறாங்க
சென்னை அரசு மருத்துவமனையில் பிறந்து மூணு நாளேயான சிறு குழந்தையை
கடத்திட்டாங்க அதை செய்தது ஒரு பெண்.
அங்க இருந்த சிசிடிவி கேமராவில் அவ குழந்தையை எடுத்து செல்வது பதிவாகியிருக்கு.
ஆனா முகத்தை மறைக்க முக்காடு போட்டுயிருக்கா சோ முகம் கூட சரியா தெரியலை.
அவ எந்த குழந்தை கடத்தல் கும்பல்னும் தெரியலை பழைய குற்றவாளி லிஸ்டில்
அவ ஜாடையில் யாருமில்லை ரயில்வே ஸ்டேஷன்,பஸ் ஸ்டாண்ட் சிசிடிவி எதிலும்
அவ இல்லை.
நேத்து நைட் நடந்த சம்பவம் இது ஹாஸ்பிடல் சிசிடிவி வீடியோவை நமக்கு அனுப்பியிருக்காங்க ஆபீஸ் ஐடியில் இருக்கு பாரு பிரியா என்றான் அஜய்.
ஸ்ரீபிரியா முழுவதையும் கவனமாக கேட்டவள்.
அந்த வீடியோவை திரும்ப,திரும்ப பார்த்த பின் ஏதாவது வித்தியாசமா தெரியுதானு பாருங்க சார் என அஜய்யையும் பார்க்க சொன்னாள்.
அவனும் பார்த்தவன் ஒன்னும் தெரியலையே டிஃப்ரண்ட்டா என்ன இருக்கு பிரியா? என புரியாமல் கேட்க.
ஸ்ரீபிரியா இருக்கு சார் என மறுபடியும் அதை பிளே செய்தவள்.
இது குழந்தை கடத்தல் கும்பல் வேலையில்லை சார் , அது கன்ஃபார்ம் எப்படினா அவ யாரையும் லட்சியம் செய்யலை யாருக்கும் சிக்னல் தரலை தனியாதான்
வந்துயிருக்கா அதோட திருடுறோம்னு ஒரு பதற்றம்,பயம் எதுவும் இல்லை.
அவ கவனம்,பார்வை எல்லாம் குழந்தை மேல தான் இருக்கு தன் சொந்த பிள்ளையை
அனைச்சுகிட்டு போற மாதிரி போறா அந்த பெண்.
என் கெஸ்படி அந்த பெண் குழந்தையில்லாதவளா இருக்கனும் தனக்குனு ஒரு குழந்தை வேனும்னோ இல்ல ஒரு நிர்பந்ததுலயோ இப்படி செய்துயிருக்கலாம் என கூறி சற்று யோசித்தவள்,ஒன்னு செய்யலாம் சார் அந்த பொண்னு முகம் ஒரு கோணத்துல
தெளிவாதான் தெரியுது அதை வச்சு கிராபிக்ஸ் டிசைனர் மூலமா சில
முகங்களை ரெடி செய்து ஆதார், தேர்தல் ஆணைய டேட்டா பேஸில் தேடி பார்த்தா
என்ன முதல்ல சென்னை சுற்றுபகுதியில் தேடி பார்க்கலாம் என்றாள்.
அசந்து போன அஜய் வெரிகுட் பிரியா செய்யலாம் டிசைனரை வர சொல்றேன் என்றவன் அது போலவே ஒருவரை வர வைத்து சில முகங்களை தயாரித்தனர்.
அதை ஆதார்,தேர்தல் ஆணையங்களிடம் முறையான அனுமதி பெற்று அவர்களின் டேட்டா பேஸ்களுடன் ஒப்பிட்டு பார்த்ததில் சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளுரில்
பதினைந்து பெண்களின் முக ஜாடை அந்த பெண்ணின் முக ஜாடை வயதோடு ஒத்து போனது.
லோக்கல் போலீஸ் உதவியுடன் அவர்களை பற்றிய தகவல்களை ரகசியமாக சேகரித்தனர்.
அதில் ஐந்து பேருக்கு குழந்தை இல்லை அதில் இருவர் குழந்தைகளை
தத்துதெடுத்து வளர்ப்பதும் ஒரு பெண் கருவுற்றுறிருப்பதும் தெரியவந்தது
மீதமிருந்த இருவரையும் நேரில் பார்க்கவென்று ஸ்ரீபிரியா, அஜய், ஆதிரா ,ராஜீவ் ,பிரேம் புறப்பட்டனர்.
திருவள்ளுரின் பஜார் பகுதியில் இருந்த ஒரு பெண்ணை விசாரித்த போது அவள்
மேல் தவறில்லை என தெரிந்து.
கடைசி பெண்ணின் இருப்பிடம் நோக்கி கார் விரைந்தது அந்த முன்மாலை
வேளையில் வானம் இருட்டி சிறு தூறலாய் மழை பெய்து கொண்டிருந்தது.
கார் திருவாலாங்காடு எனும் ஊரினுள் சென்றுக்கொண்டிருந்தது காரைகால்
அம்மையார் சிவ தாண்டவம் கண்ட பழம்பெருமை வாய்ந்த ஊர் அதே பழமை மாறாமல் இருந்தது.
அந்த பெண்ணின் வீடு சற்று ஒதுக்குபுறமாக இருந்தது அது ஒரு குடிசை வீடு அதன் வாயிலில் ஒரு வயதான பெண்மணி வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு
அமர்ந்திருக்க.
ஸ்ரீபிரியா,அஜய்,ஆதிரா அவரை நெருங்க, பிரியா வணக்கம் அம்மா நாங்க
சென்னையிலிருந்து வரோம் வள்ளி வீடு இதுதானே? என கேட்க.
முதியவள் ஆமாம் தாயி வள்ளி என் மருமக தான் இப்போதான் குழந்தை பிறந்தது
இன்னிக்கு காலையில தான் அவ அம்மா கூட வந்தா வீட்டு பின்னாடி குடிசையில
தான் குழந்தைய தூங்க வச்சுகிட்டு இருக்கா ஆமாம் நீங்களாம் யாரு? என்றாள்
குழப்பமாக.
ஸ்ரீபிரியா நாங்களாம் டாக்டர்கள் வள்ளி குழந்தைகான தமிழக அரசு பரிசு பொருளை
விட்டுட்டு வந்துட்டாங்க அதோட குழந்தைக்கு சில சொட்டு மருந்தும் தரனும் என்றாள்.
முதியவள் அப்படியா வாங்க நானே கூட்டிக்கிட்டு போறேன் என எழ,
ஸ்ரீபிரியா வேண்டாம் அம்மா நாங்க பார்த்துக்குறோம் எங்க ஆளுங்க பரிசு
பொருளோட வராங்க வீடு தெரியாது நீங்க பார்த்துகூட்டிகிட்டு வாங்க நாங்க
குழந்தையை பாக்குறோம் என வீட்டின் பின்புறம் சென்றனர் வீட்டின் உள்ளே
குழந்தை அழும் சப்தம் வர மூவரும் மெல்ல உள்ளே நுழைந்தனர்.
அங்கு ஒரு நடுத்தர வயதுபெண் அழும் குழந்தையை சமாதானம் செய்தபடியிருக்க.
ஸ்ரீபிரியா என்ன வள்ளி குழந்தைதான் அழுதுல பால் குடுக்க வேண்டியதுதானே என
கேட்டவாறே அவள் எதிரில் நின்றாள்.
ஆதிரா அது எப்படி மேடம் அது அவங்க சொந்த குழந்தையில்லையே என கூற,
மிரண்டுபோன வள்ளி குழந்தையோடு பின் கதவு வழியே தப்ப முயல பின் கதவின்
அருகே நின்ற ராஜீவ்வும், பிரேமும் வழிமறைக்க வள்ளி வேறு வழியின்றி உள்ளே
வந்தாள்.
ஆதிரா குழந்தையை வாங்கிகொள்ள.
வள்ளி யாரு நீங்க? இது என் குழந்தை என்கிட்ட தாங்க என கைநீட்ட,
ஸ்ரீபிரியா நாங்க போலீஸ் இது உன் குழந்தையில்லைனும் தெரியும் ஏன்
குழுந்தையை திருடிட்டு வந்த? சொல்லு உன் மேல கேஸ் வராம பார்த்துக்குறேன் என்றால் அதட்டலாக.
வள்ளி அழுகையோடு மேடம், நானும்,என் புருஷனும் படிக்காதவங்க என் புருஷன்
ஒரு தினக்கூலி எங்களுக்கு கல்யாணமாகி பத்து வருஷம் ஆச்சு புள்ளயில்லைங்க
வேண்டாத சாமியில்லை என்ன பாவம் செஞ்சனோ இந்த பாழும் வயித்துல ஒரு
புழு,பூச்சி வரலைங்கம்மா.
என் மாமியாரு,சொந்த பந்தமெல்லாம் மலடி,மலடினு சொல்லும் போது என் உயிரே போகும்.
இத்தனை வருஷம் நான் வாங்குன ஏச்சும்,பேச்சும் கொஞ்சம் நஞ்சமில்லை,
போன வருஷம் பஞ்சாயத்தை கூட்டி என்னை விலக்கி வச்சுட்டு என் புருஷனுக்கு
வேற கல்யாணம் செய்ய என் மாமியார் முடிவு செய்துட்டாங்க.
அதான் வேற வழி தெரியாம புள்ள உண்டான மாதிரி நடிச்சேன் என் புருஷனும் வெளியூர் வேலைக்கு போய்டுவாரு, மாமியாருக்கும் மேலுக்கு முடியாது.
நான் எங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டேன்.
அம்மாவை துணைக்கு வச்சுகிட்டு இத்தனை மாசமும் வயித்துல துணியை கட்டி ஏமாத்தினேன்.
கடைசியா ஒவ்வொரு ஆஸ்பத்திரியா அலைஞ்சி இந்த புள்ளையை எடுத்துட்டு வந்துட்டேன்ங்கம்மா
ஏற்கனவே அவங்களுக்கு ரெண்டு புள்ளைங்க இருக்கும்மா இது மூணாவது
புள்ளதான் இந்த புள்ளய நானே வச்சுக்குறேன் தாயி’
உன்னை என் குலசாமியா நினைச்சு கும்பிட்டு கேட்டுக்குறேன் என கையெடுத்து
கும்பிட்டவள்.
என் புருஷனுக்கும் , மாமியாருக்கும் , ஊருக்கும் தெரிய வேணாம்.
எனக்கு வாழ்க்கை பிச்சை போடும்மா , என்னையும் , என் தாலியையும்
காப்பாத்தும்மா என கதறியபடியே ஸ்ரீபிரியா காலில் விழுந்தாள்.
ஸ்ரீபிரியா பதறி விலக ஆதிரா குழந்தையை ராஜீவ்விடம் தந்தவள் வள்ளியை தூக்கி
சமாதானம் செய்து அமர வைத்தாள்.
இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம்.?