குறள்
வாய்மை
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
பொருள்
வாய்மை என்று சொல்லப்படுவது எது வென்றால் மற்றவருக்குத் தீங்கு வராதபடிப்
பேச வேண்டும்.
ஸ்ரீ – 15
அழுதுக்கொண்டிருந்த வள்ளி அருகிலேயே ஸ்ரீபிரியாவும் அமர்ந்தவள்.
அழாதே வள்ளி, நீ எப்படி பிள்ளைகாக ஏங்குறியோ அதை விட பல மடங்கு இந்த
குழந்தையோட தாயும் ஏங்கி தவிப்பாளேம்மா எத்தனை குழந்தையிருந்தாலும்
பெத்தவளுக்கு எல்லாம் ஒன்னு தானேம்மா வள்ளி.
உன் கணவனை பிரியாமலும்,உன் மாமியாரால் பிரச்சனையில்லாமலும் உன்
கஷ்டத்துக்கு நாங்கள் தீர்வு சொல்கிறோம் சரியா? என்றாள் வள்ளியின் கைகளை
ஆதரவாக பற்றியபடியே.
வள்ளி,மேடம் நிஜமா எனக்கு குழந்தை பிறக்குமா? என் மாமியார்கிட்ட பேசி என்
புருஷனுக்கு வேற கல்யாணம் செய்ய கூடாதுனு சொல்லுவிங்களா? என்றாள் கண்களில் மின்னிய அவலோடு அழுகுரலில்.
ஸ்ரீபிரியா நிச்சயமா செய்றேன் என கூறியவள் பிரேம் மூலமாக வள்ளியின் மாமியாரை வரவழைத்து அவளிடம் பொறுமையாக உண்மையை சொன்னாள்.
வள்ளியின் மாமியார் கோபமாகி மலடினு நினைச்சா, புள்ள புடிக்குறியா நீயு?
என்ன நெஞ்சழுத்தமடி உனக்கு என்னையவே ஏமாத்திட்டல நீயு? உன்னைய சும்மா
விடமாட்டேண்டி என்ன செய்யறேன் பாரு என ஆங்காரமாக வள்ளியை நெருங்க
குறுக்கே வந்த அஜய் போட்ட அதட்டலில் முதியவள் அடங்க.
ஸ்ரீபிரியா உன் பெயர் என்ன? என அதட்ட
முதியவள் ராசாத்திங்க அம்மா இவள புடிச்சு ஜெயில போடுங்க தாயி திருடி, பிள்ளை
புடிக்குறவ வெளியவே விடாதீங்க அம்மா என்றாள் கோபம் தீராமல்.
வள்ளி பலமாக அழ ஸ்ரீபிரியா, வாய மூடும்மா எங்களுக்கு நீ ஒன்னும் சட்டம் சொல்லி தர தேவையில்லை நியாயமா உன்னையும்,உன் மகனையும் தான் ஜெயில்ல போடனும் மனைவி உயிரோட இருக்கும் போதே இன்னொரு கல்யாணம் செய்ய பார்த்ததுக்கு என்றாள் கடுமையாக.
ராசாத்தி சட்டென அமைதியாக ஸ்ரீபிரியா தொடர்ந்தாள் வள்ளிக்கு எதாவது ஆச்சு நீயும், உன் மகனும் ஜெயில்ல தான் மீதி வாழ்க்கையை வாழனும் என்ன சம்மதமா? என அதட்டலாகவே கேட்க
ராசாத்தி அம்மா ஒரு புள்ளய பெத்து குடுக்க வக்கில்லாத மலடி இவ, இவள ஒதுக்கி வச்சுட்டு தானே வேற கல்யாணம் செய்யகூடாது?
இவளும் இருக்கட்டும் சேர்ந்தே வாழட்டும் இவளால தான் என் புள்ள வாழ்க்கையே
வீனா போகுது இன்னொருத்தி மூலமாவாவது என் குலம் வளரட்டுமே தாயி என கெஞ்சும் குரலில் கேட்க
வள்ளி அதுக்கு என்னை முதல்ல கொன்னுடு அத்தை என அழ, இடையிட்ட ஸ்ரீபிரியா ஷ்
அழாதே வள்ளி என்றவள் இதோ பாரு ராசாத்தி முதல்ல மலடினு சொல்றத விடு நீயும் ஒரு பெண் ஒரு தாய் தானே அப்படி சுலபமாலாம் இன்னொரு கல்யாணம் செய்துட முடியாது அப்படி நடந்தா நானே உங்க ரெண்டு பேரையும் தூக்கி உள்ளே
வச்சுடுவேன்.
வள்ளிக்கும்,உன் மகனுக்கும் நானே ஒரு டாக்டர் மூலமா பரிசோதனை செய்து
வைத்தியத்துக்கு ஏற்பாடு செய்றேன் இப்போ உள்ள மருத்துவ வசதியில் குணப்படுத்த முடியாததுனு எதுவுமில்லை என்றவள் ஒரு விசிட்டிங்க கார்டை வள்ளியிடம் தந்து நீ இவங்களை போய் பார் உன் புருஷனையும் அழைச்சுகிட்டு போ என்றாள்.
ராசாத்தி என் புள்ள ஆம்பளை அவனுக்கு ஏன் இதெல்லாம் இவ தான் குறையுள்ளவ
பத்து வருஷமா விளங்காம இருக்கா என் மகனை நான் எங்கயும் அனுப்ப மாட்டேன்
என ஆங்காரமாக கூற
அஜய் சரி நீ அனுப்ப வேண்டாம் உன்னை ஜெயிலில் வச்சுட்டு நாங்க மத்ததை
பார்த்துகுறோம் என்றான் கடுமையாக
பயந்து போன ராசாத்தி சரிங்க சார் நீங்க சொன்னபடி செய்ங்க ஆனா இவளுக்கு
தான் குறைனா இவளை ஒதுக்கி வச்சுட்டு என் மகனுக்கு நான் வேற கல்யாணம் செய்வேன் என அழுத்தமாக கூற
ஸ்ரீபிரியா அதை அப்புறம் பார்த்துக்கலாம் என் நம்பர் வள்ளிகிட்ட இருக்கு நீங்க யாராவது அவளை எதாவது செய்ததா எனக்கு தெரிய வந்தது அவ்வளவுதான் என
மிரட்டினாள்.
வள்ளி கைபற்றிய ஸ்ரீபிரியா பயப்படாம இரு இந்த டாக்டர் ரித்திகா திறமையான,
கைராசியானவங்க ஒரு இலவச மருத்துவ அமைப்பு நடத்துறாங்க அதனால இலவச
வைத்தியம் தான்
நான் அவங்ககிட்ட பேசிடுறேன் உனக்கு சீக்கிரமே நல்லது நடக்கும் வாழ்த்துக்கள் எதாவதுனா எனக்கு போன் செய்ய தயங்காதே என கூறி புறப்பட்டனர்.
ஏற்கனவே பிள்ளையின் பெற்றோர் திருவாலாங்காடு வந்துவிட குழந்தையை
அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு கார் சென்னை நோக்கி விரைந்தது.
ஆதிரா,மேம் நாம வள்ளி மேல கேஸ் கூட போட்டுயிருக்கலாம் ஏன் விட்டுடீங்க என்றாள்.
ஸ்ரீபிரியா நாம போலீஸ் தான் ஆதிரா தப்பு செய்தவங்களுக்கு தண்டனை வாங்கி
தர கூடிய பதவியில் தான் இருக்கோம் ஆனா நாமலும் மனுஷங்க தானே
நம்ம டிரைனிங் பீரியடில் (Criminology) கிரிமினாலஜியில் என்ன சொல்லி தந்தாங்க “குற்ற மனதோடு செய்யும் செயல் மட்டுமே குற்றமாக கருதப்படும்”
இங்க குற்றவாளி வள்ளி இல்லை அவளை மலடினு சொல்லி ஒதுக்கி வச்சு இப்படி ஒரு
செயலை செய்ய தூண்டின சமூகமும்,அவ குடும்பமும் தான் குற்றவாளிகள்.
நாம நம்ம வேலையே மட்டும் செய்துட்டு வந்திருக்கலாம் ஆனா நம்மால ஒருத்தங்க
கஷ்டத்தை போக்க முடியும்னா அதை கட்டாயம் செய்யனும்
நாம மக்கள் நலனுக்கு தானே விரும்பி இந்த போலீஸ் வேலையில் சேர்ந்தோம் அப்போ நம்மாலான உதவியை அவங்களுக்கு கட்டாயம் செய்யனும், வள்ளி செய்தது குற்றம் இல்லை அது ஒரு செயல் தான்
அதான் அந்த குழந்தையோட அம்மாகிட்ட பேசி கேஸை வாபஸ் வாங்க வைத்தேன் நாளை நம்ம எஸ்.பி சார் மூலமா கமிஷ்னர் சார்கிட்ட பேச சொல்லிகலாம் ஒரு பெண்ணுக்கு மலடிங்குற சொல் உயிர் போற வலியை தரும் அதோட விளைவு தான் வள்ளியோட இந்த செயலுக்கு காரணம் என்றாள் அமைதியாக.
காரில் இருந்த அனைவருமே ஸ்ரீபிரியாவை பிரம்மிப்பாய் உணர்ந்தனர்.
சென்னை வந்தடைந்த அனைவரும் இரவு உணவை முடித்து கொண்டு அவரவர் தங்கள் இருப்பிடம் கிளம்ப
ஸ்ரீபிரியா புறப்படும் போது அஜய் அழைத்தவன் நானே உன்னை டிராப் செய்துடுறேன் வாம்மா என்றான்
ஸ்ரீபிரியா உங்களுக்கு ஏன் சார் வீண் சிரமம்? நான் கால் டாக்சியில் போய்டுவேன் காலையில் இருந்து ரெஸ்டே இல்லையே உங்களுக்கு நீங்க போங்க சார் என சொல்ல
அஜய் நான் எங்க வேலை பார்த்தேன் எல்லாத்தையும் நீ தானே பார்த்தே லேட்
நைட் ஆகிட்டு முறைக்காதீங்க ஏசிபி மேடம் என் தங்கையை இந்த நேரத்துல தனியா
அனுப்ப எனக்கு சம்மதமில்லை என சிரித்தவன்
சும்மா வா பிரியா போற வழிதானே அதோட உன் கிட்ட கொஞ்சம் பர்ஸ்னலா பேசனுமேம்மா என்றான் தனிவாக.
ஸ்ரீபிரியா சற்று யோசித்த பின் காரில் ஏறியவள் சரி சார் ஆபீஸ் ரூமில் என்
லேப்டாப் மறந்துட்டேன் எடுத்துட்டு போகலாமா? என கேட்க.
அஜய் சரியென காரை ஆபீஸ் நோக்கி செலுத்தினான்.
ஸ்ரீபிரியாவின் அறைக்கு சென்று தன் இருக்கையில் அமர்ந்தவள் இப்போ
சொல்லுங்க சார் என்ன பேசனும் என்றாள்.
அஜய் தன் எதிரில் அமர்ந்திருந்தவளை பார்த்து முறுவலித்தவன் லேப்டாப் ஒரு சாக்கு தான் இல்லையா? என முறுவலோடு கேட்க.
ஸ்ரீபிரியா பதில் சொல்ல இயலாமல் தவித்தபடி அஜய்யையே பார்க்க
அஜய் புன்னகையோடு நான் தப்பா நினைகலை இந்த நேரத்துக்கு உன் வீட்டுக்கோ, என் வீட்டுக்கோ போறது சரியில்லை கார்லையே உட்கார்ந்தும் பேச முடியாதுனு நீ நினைகறது தப்பேயில்லைம்மா என்றான்.
ஸ்ரீபிரியா சாரி சார் என்றாள் மெல்ல.
அஜய் அதான் சொல்லிட்டனேம்மா தப்பா நினைகலைனு சரி விடு முதல்ல உன்னை
பாராட்டனும் இந்த கேஸை நீ கையாண்ட விதம் சூப்பர் ஒரு குடும்பத்தையும்
காப்பாற்றி, ஒரு பெண் வாழ்க்கையையும்
காப்பாற்றி குடுத்துயிருக்க நீ இல்லைனா
இந்த கேஸ் இவ்வளவு ஈசியா முடிஞ்சுயிருக்காது நிஜமாவே யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாம அருமையா முடிச்சுட்ட ஆளுக்கு தகுந்தபடி எடுத்து சொல்லி புரிய வச்சு பிரச்சனையில்லாம செய்துட்ட வெரிகுட் என்றான் பாராட்டும் குரலில்.
ஸ்ரீபிரியா நன்றி சார், நான் ஒன்னும் பெருசா செய்துடலை நீங்களாம் இல்லைனா
என்னால ஒன்னும் செய்துயிருக்க முடியாது எல்லாம் ஒரு டீம் ஒர்க் தான் சார் என்றாள் பனிவாகவே.
அஜய் அது உன் பெருந்தன்மைம்மா சரி நீ உண்மையாவே என்னை உன் அண்ணனா ஏத்துகுறியா? அப்படினாதான் என்னால உன்கிட்ட பேச முடியும் என நிறுத்தி ஸ்ரீபிரியா முகத்தை பார்த்தான்.
ஸ்ரீபிரியா சிரித்தவள் இப்போ ராக்கி கிடைக்காதே நான் எப்படி நிருபிக்கறது? சார் என கேட்க.
தானும் சிரித்த அஜய் வட நாடு வேண்டாமேம்மா தமிழ்நாடு ஸ்டைல்ல நிருபிங்க ஏசிபி மேடம் என்றான் சவாலாக
ஒரு நொடி யோசித்த ஸ்ரீபிரியா சொல்லுங்க அஜய் அண்ணா என்ன விஷயம்? என கேட்க
அஜய் என் தங்கை புத்திசாலியாச்சே என சிரித்தவன், நான் உன் நன்மைக்கு தான்
எதையும் சொல்வேன் குறுக்கிடாம கேளு நான் என்ன பேசுறேன்னு முழுசா காதுல
வாங்கு பிரியா என சீரியஸாக சொல்ல ஆரம்பித்தான்
முதல்ல என்னை பத்தியும்,ஸ்ரீராமை பத்தியும் சொல்றேன் நானும்,ராமும் ஸ்கூல் & காலேஜ் ஒன்னாவே தான் படிச்சோம் நாங்க ரெண்டு பேருமே சின்ன வயசுலயே பெத்தவங்களை இழந்தவங்க என் அம்மா,அப்பா ஒரு விபத்துல தவறிட்டாங்க
எனக்கு அப்போ ஒரு பத்து வயசு இருக்கும் அம்மா இறந்தப்போ நாலு மாசம் கர்ப்பமா இருந்தாங்க என்கிட்ட சொல்லுவாங்க அஜய் உனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வர போகுது நீ தான் அவளை பார்த்துகனும்னு ,
அந்த விபத்துல ஒரே நாளில் குடும்பம்குற ஒரு இனிய அமைப்பு இல்லாம அனாதையா நின்னேன் என்ற போது அஜய்யின் குரலும் முகமும் வழக்கதை விட இறுகி போனதை ஸ்ரீபிரியா கவனிக்க தவறவில்லை
அஜய் தொடர்ந்தான் என் சித்தப்பா தான் என்னை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார் சித்திக்கு என்னை வளர்க்க பிரியமில்லை ஆனாலும் என்னை பார்க்க வந்துட்டு போவாங்க சித்தப்பா நேர்மையானவர் என் சொத்துக்கள் எல்லாம் எனக்கே வந்து சேர வழி செய்தவர்
மத்தபடி அன்பு,பாசம்னு எதையும் நான் அவங்ககிட்ட அனுபவிச்சது இல்லை அப்போ அப்போ வந்து பார்த்துட்டு போவாங்க அவ்வளவுதான்
எனக்கு எல்லாமே ஸ்ரீராம் தான் அவன்கிட்ட தான் நான் அன்பை, பாசத்தை உணர்ந்தது என் அம்மா அப்பாக்கு பிறகு என்ற போது அஜய்யின் குரலும் முகமும் இளகி அதரங்களில் மெல்லிய புன்னகை பூத்ததையும் ஸ்ரீபிரியா கவனிக்க தவறவில்லை
ஸ்ரீராம் அப்பா அவன் சிறு வயதிலேயே இறந்துட்டாங்க அவன் அம்மா ஆரம்பத்தில் இருந்தே உடல் நலமில்லாதவங்க தான் அவங்க அப்பா போன பிறகு இன்னும் மோசமாகிட்டாங்க கிட்டதட்ட படுத்தபடுக்கை நிலைதான்ம்மா ராம்காக கொஞ்ச
காலம் வாழ்ந்தாங்க அவங்க மறைவுக்கு
பிறகு ஸ்ரீராமோட தாய்மாமா தான் அவனை
ஆதரித்தார் ராமின் நலனில் அக்கறை இருந்தது அவருக்கு அவன் சொத்துக்கள் அவனுகே என முறையாக சேர வழி செய்தார் என் கதை போலவே ராமின் மாமியும் அவனை ஏற்க தயாராயில்லை நான் படித்த போர்டிங் ஸ்கூலில் தான் ராமை அவன் மாமா சேர்த்தார்
என் ரூம் மெட்டா வந்தான் அவனுக்கும் என்னை போலவே எல்லாம் கிடைச்சது ஆனா அன்பு,பாசம்,ஆதரவு எதுவும் கிடைக்கலை பிரியா அவன் நிலை,என் நிலை கிளாஸ் , ஹாஸ்டல் ரூம் , லட்சியம்னு எல்லாமே ஒன்னாயிருந்தது எங்களுக்குள் இருக்கும் நட்பு அன்யோன்யமானது கல்லூரி,வேலைனு ஒன்னாவே எங்க பயணம் தொடர்ந்தது.
என் மனசு அவனுக்கு தெரியும், அவன் மனசு எனக்கு தெரியும் பிரியா, ராம் ரொம்ப நல்லவன் சாதூர்யமானவன் மட்டுமில்லை நம்பகமானவனும் கூட ராம் நிஜமாவே ஸ்ரீராமன் தான் நாங்க படிச்ச காலத்துல ராமை விரும்பின பெண்கள் ஏராளம் அவன் யாரையும் நிமிர்ந்தும் பார்த்ததுயில்லை ஐ.பி.எஸ் ஐ ஒரு தவமா மேற்க்கொண்டு வெற்றியை கைப்பற்றினான்
இப்போ கொஞ்ச காலமா அவனுக்குள்ள ஒரு மாற்றம் உன்னால பிரியா உன்னை அவன்
மனசார நேசிக்குறான் கல்யாணம் செய்ய விரும்புறான்ம்மா உனக்கு சம்மதம்னா
உன் வீட்டில் வந்து முறைபடி நாங்களே பேசுறோம் அவன் நல்லவன்ம்மா எந்த கெட்ட பழக்கமும் இல்லை பிரியா உன்னை
நல்லா பார்த்துப்பான் உன் மனசில் உள்ளதை சொல்லும்மா எதுவானாலும் தயங்காம சொல்லு என்றான் பரிவாக
அஜய் பேச ஆரம்பித்ததில் இருந்து ஸ்ரீபிரியா முகத்தை கவனித்து வந்தான் அதில்
ஆவலும், ஆசையும்,நிராசையும்,வருத்தமும் கலந்து கடைசியில் ஏதோ புரியாத
மொழி பேசுபவனை பார்ப்பது போல வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவள் கடைசி
வாக்கியத்தில் திகைத்து போனாள் பின் உணர்ச்சியற்ற குரலில் கிளம்பலாமா?
என கேட்க.
அஜய் மீண்டும் பேச முயலும் போது ஸ்ரீபிரியா செல் சினுங்கியது அதை ஆன் செய்து
பேசியவள் முகம் இருண்டது தான்யிருக்கும் சுற்றம் மறந்து இல்லை அப்படியெல்லாம் ஒன்னுமில்லை வேண்டாம் நீ நினைக்குற மாதிரி எதுவுமில்லை பீளீஸ் நான் சொல்றதை நம்பு என்னை வேனா கொண்னுடு
நான் தானே எல்லா பிரச்சனைக்கும் காரணம் உனக்கான எதிரி நான் என்னை கொண்னுடு பீளீஸ் அவருக்கு எதுவும் தெரியாது,அவரை ஒன்னும் செய்துடாதே ஹலோ,ஹலோ என
ஆத்திரமும்,அழுகையுமாய் செல்லை அணைத்தவள்.
எதிரில் பதற்றத்தோடு நின்றிருந்த அஜய்யிடம் அழுகுரலில் ராம் சார் எங்க
போயிருக்கார்? ஏதோ பர்சனல்னு சொன்னது பொய் தானே? பீளீஸ் சொல்லுங்க அஜய் சார்
தயவு செய்து உண்மையை சொல்லுங்களேன் என அழ
அஜய் சற்று தயங்கியவன் கோபப்படாதம்மா ராம் விழுப்புரம் தான் போயிருக்கான்
பீட்டரை பத்தி விசாரிக்க என கூற
ஸ்ரீபிரியா இடிந்து போய் சேரில் விழுந்தாள் அய்யோ என்னை நம்பின ஐந்து உயிரை
என்னால காப்பாத்த முடியாம போய் நான் தினம் தினம் தவிக்கறது போதலையா?
கடவுளே என்னை விரும்பின பாவத்துக்கு அவர் உயிரையும் எடுத்துடாத அதுக்கு
பதிலா என் உயிரை எடுத்துக்கோ இந்த நிலை அவருக்கு வரகூடாதுனு தானே அவர் மனசு புரிஞ்சும் அவரை விலக்கி வச்சேன் என கதறி துடிக்க
அஜய் பிரியாம்மா என்ன ஆச்சு? என சற்று அதட்டவும் சுய உணர்வுக்கு வந்தவள்
வாங்க காரை எடுங்க அண்ணா அவருக்கு ராம் சார்க்கு ஆபத்து விழுப்புரம் போகனும் பீளீஸ் சீக்கிரம் என்றாள் அவசரமாக.
அஜய் நண்பனுக்கு ஏதோ ஆபத்து என யூகித்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல்
அழாதே பிரியா வெளியே நைட் டியூட்டி ஆஃபீசர்ஸ் இருக்காங்க நீ இப்படி அழுதுகிட்டே வெளியே போனா நல்லாயிருக்காது ராம்க்கு எதுவும் ஆகாது முகத்தை கழுவிட்டு இயல்பா காட்டிகிட்டு கிளம்பு வா என்றான் திடமாக.
ஸ்ரீபிரியா அவசரமாக முகத்தை துடைத்துக் கொண்டு வாங்க சார் என்றாள் முகத்தை இயல்பாக வைக்க முயன்றபடியே.
கார் விழுப்புரம் நோக்கி புறப்பட்டது.
இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம்.?