குறள்
கண்விதுப்பழிதல்
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
பொருள்
தப்பிக்க முடியாத துன்ப வலையான காதலில் என்னைச் சிக்க வைத்த கண்கள், அழுது அழுது இப்போது அழவும் முடியாமல் நீர் வற்றிக் கிடக்கின்றன்.
ஸ்ரீ – 16
கார் விழுப்புரம் நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்க ஸ்ரீபிரியாவின் இதயமோ அதை விட வேகமாக துடித்து கொண்டிருந்தது.
ஸ்ரீபிரியா அஜய்யிடம் ஆத்திரமாக “ஏன் தான் நீங்க ரெண்டு பேரும் இப்படியிருக்கீங்க? என்ன நினைச்சுகிட்டு இதையெல்லாம் செய்றீங்க? நான் தான் சொன்னனே என் பிரச்சனையை நானே பார்த்துக்குறேன் நீங்க தலையிட வேண்டாம்னு,
இப்படி போய் அந்த கொலைகார பாவி கிட்ட மாட்டிக்கனுமா?இவர் ஒரு ஆள் அவன் ஒரு கொலைகார கும்பலையே தன்னோட வச்சுயிருக்கான் இப்படி தனியாவா போய் மாட்டிகறது? என் நிம்மதியை அந்த பொறுக்கி கெடுக்கறது போதாதா?இவரும் என்னை கஷ்டப்படுத்தனுமா? ” என அழுகுரலில் புலம்ப
அஜய் தன்வசமிழந்து நிலையில் ஸ்ரீபிரியா இருப்பதை உணர்ந்து எதுவும் பேசாமல் காரை கவனமாக செலுத்தினான்
ஸ்ரீபிரியா மனம் உலைகளமாக கொதித்து கொண்டிருக்க விழுப்புரம் வந்தடைந்தனர்
ஸ்ரீபிரியா காட்டிய கிளை வழியே ஒரு குடோனை வந்தடைந்தனர், வண்டி நின்ற நொடி குதித்தோடிய ஸ்ரீபிரியா உள்ளே போய் கதறும் குரல் கேட்டு கையில் தயாராய் பிடித்த துப்பாக்கியோடு அஜய் விரைந்து சென்றவன் பார்த்த காட்சியில்
அதிர்ந்து போனான்.
அங்கே உடல் முழுவதும் ரத்தகளரியாக ஸ்ரீராம் மயங்கியிருக்க அவனை மடியில் கிடத்தியபடியே ஸ்ரீபிரியா அழுவதை கண்டவன் விரைவாக நண்பனை நெருங்கி மூச்சை பரிசோதித்தான்.
அது தீனமாக தன் இருப்பை வெளியிட அவசரமாக ஸ்ரீராமை தூக்கி காரில் கிடத்தி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஸ்ரீராமை பரிசோதித்து வந்த டாக்டர் “உடலில் பல இடத்துல ஆழாமான வெட்டுகாயம் இருக்கு அதிகளவு இரத்தம் வேற சேதமாகியிருக்கு பிளட்க்கு சொல்லியிருக்கோம் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்றோம் கிரிட்டிக்கல் ஸ்டேஜ்தான்
எதுவும் சொல்றதுக்குயில்லை மத்தது அந்த கடவுள் கையில் போலீஸ்க்கு சொல்லிட்டிங்களா? “என கேட்க
அஜய்,ஸ்ரீபிரியா தங்கள் ஐ.டிகளை காட்டினர் ஸ்ரீராம் பற்றியும் கூறினர் விஷயம் மீடியாவிற்கு தெரிய வேண்டாம் எனவும் கேட்டுகொண்டனர் பின் இருவருமே ஸ்ரீராமிற்கு ரத்தம் தந்தனர்.
ஸ்ரீராமிற்க்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது ஸ்ரீபிரியா அழுகுரலில் “இதுக்குதான் அவர் என்னை விரும்பினாரா? சொல்லுங்க சார் எப்படி கிடக்குறாருனு
பார்த்திங்களா? இதெல்லாம் அவருக்கு தேவையா?எப்படியிருந்த மனுஷன் இப்ப இப்படியிருக்க யாரு காரணம் நான்,நான் மட்டும் தான் அவரை ஏன் தனியா போக விட்டீங்க? என்கிட்ட சொல்லியிருந்தா நான் தடுத்துயிருப்பனே” என கதற
அஜய் “அழாதம்மா அவனுக்கு ஒன்னுமாகாது அவன் நம்மை விட்டு போகமாட்டான் ” என்றான் உறுதியாக.
டாக்டர்கள் விதித்த கெடு முடியும் வரை ஸ்ரீபிரியா நடைபிணம் போலானாள் அஜய் எவ்வளவோ வற்புறுத்தியும் எதையும் உண்ண,பருக மறுத்துவிட்டாள்.
அழுகை நின்றாலும் வெறித்த பார்வையோடு சிலையென அமர்ந்தேயிருந்தாள்.
ஸ்ரீராமிற்க்கு ஆபத்தில்லை என்ற போதுதான் ஸ்ரீபிரியா ஒரு நிலைக்கு வந்தாள்
ஸ்ரீராமை பரிசோதித்து வந்த டாக்டர் “மேடம் நீங்க முன்னாடி இங்க ஏசிபியா ஒர்க் செய்தீங்க இல்லையா?” என வினவ ஸ்ரீபிரியா ஆமோதிப்பாய் தலையசைக்க டாக்டர் “ஒகே
மேடம் பார்த்த மாதிரி இருந்தது அதான் கேட்டேன்” என்றவர் தொடர்ந்து
“உங்க கணவர் உயிருக்கு இனி ஆபத்தில்லை நீங்க போய் பார்க்கலாம் ஆனா டிஸ்டர்ப் செய்யாதீங்க இன்னும் மயக்கத்தில் தான் இருக்காரு” என கூறி சென்றார்.
ஸ்ரீபிரியா டாக்டர் கூறியதை ஆச்சர்யமாக பார்த்தாலும் எதையும் மறுத்து கூறாமல்
அஜய்யுடன் உள்ளே சென்றாள் உடல் முழுவதும் கட்டுகளோடு பல குழாய்கள்
பொருத்தப்பட்டு ஸ்ரீராம் படுக்கையில் நினைவின்றி இருந்தான்.
ஸ்ரீபிரியா உடைந்து அழ இரு நாட்களாக அழாமல் பித்துபிடித்தவள் போல் இருந்தவள் கதறி அழவும் அஜய் பதறி போனான் “பிரியா அழாதே அதான் டாக்டர் சொல்லிட்டாங்களே ராம் உயிருக்கு ஆபத்துயில்லைனு சீக்கிரம் சரியாகிடுவாம்மா இது ஐ.சி.யு. அழாதே நீ ஒரு ஏசிபி இப்படி உடைஞ்சு போகக்கூடாது அமைதியாயிரு உங்களுக்கு நான் துணையாயிருக்கேன் ” என தைரியம் கூற.
சற்று திடமான ஸ்ரீபிரியா “சார் நீங்க ராமை பார்த்துகோங்க நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்” என கிளம்ப.
அஜய் “நீ இப்போ அந்த பீட்டரை பார்க்க போறது சரியில்லை உங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு எனக்கு தெரியாது அது இப்போ அவசியமும் இல்லை ராம் கடுமையான டிரைனிங் முடிச்ச ஐபிஸ் ஆபீஸர் அதுலயும் ஒரு ஆண்
உன்னை நான் குறைவா நினைகலை ஆனா நீ இப்போ வலுவா இல்லை மனசளவுலயும் சரி,உடலளவுலயும் சரி நீ சரியா சாப்பிட்டு , தூங்கி ரெண்டு நாள் ஆகுது நினைவிருக்கா?
அமைதியா இரு
என் ராம் இந்த நிலையில் இருக்க காரணம் என் தங்கைக்கு தொல்லை குடுக்குற அந்த ரஸ்கலை நான் சும்மா விடமாட்டேன் போ போய் ஃபிரஷ் அப் ஆகிட்டு வா நான் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன் “என அழுத்தமாக கூறிவிட்டு போனான்.
அஜய் வந்த போதும் ஸ்ரீபிரியா ஸ்ரீராம் அருகிலேயே அப்படியே அமர்ந்திருக்க வற்புறுத்தி முகம் கழுவி வர வைத்து உணவை எடுத்து கொடுத்தான்.
ஸ்ரீபிரியா மறுக்க அஜய் “இங்க பாரு இது சமயமில்லை அவன்கிட்ட சண்டைக்கு போக புரிஞ்சுக்கோ முதல்ல ராமை நாம கவனிக்கனும் அவனை சென்னை ஹாஸ்பிட்டலுக்கு மாத்தனும் நீ முதல்ல சாப்பிடு
அவன் மேல இவ்வளவு பிரியம் வச்சுயிருக்கல அப்புறம் ஏன்ம்மா அவனை அவ்வளவு தூரம் விலக்கிவச்ச நீயே என்ன பிரச்சனைனு சொல்லியிருந்தா அதை சரி செய்துயிருக்கலாம் இன்னிக்கு இந்த நிலையே வந்துயிருக்காதே” என்றான்
ஆதங்கமாக.
ஸ்ரீபிரியா எதுவும் பேசாமல் சாப்பிட்டவள் “எனக்கு அவர் மேல விருப்பம்னு நான் சொன்னேனா? என்னால தான் ராம் சார்க்கு இவ்வளவு கஷ்டமும் அதோட என் பிரச்சனையை எப்படி தீர்க்கனும்னு எனக்கு தெரியும் இனியாவது தயவு செய்து என் விஷயத்துல தலையிடாதீங்க சார் நீங்களும் என்னை கஷ்டப்படுத்தாதீங்க
பீளீஸ்” என்றபடியே கைகழுவ எழுந்து சென்றாள்.
அஜய் மனதினுள் ராம் சொன்ன மாதிரி நீ அழுத்தகாரி தான் பிரியா அவன் மேல விருப்பம் இல்லமலா உன் மனசு அவனுக்காக இவ்வளவு தவிக்குது உன்னால இன்னும் எத்தனை நாள் தான் மறைக்க முடியும்னு நானும் பாக்குறேன் என்றபடியே தானும்
எழுந்து போனான்.
சிறிது நேரம் கழித்து ஒரு நர்ஸ் வந்து ஒரு பார்சலை ஸ்ரீராம் அருகில் அமர்ந்துயிருந்த ஸ்ரீபிரியாவிடம் தந்தார் , ஸ்ரீபிரியா என்னவென கேட்க “உங்க அண்ணன் வாங்கிட்டு வர சொன்னாங்க மேடம் அளவு சரியாயிருக்கானு பாருங்க இல்லைனா மாத்திகலாம் தெரிஞ்ச கடைதான்” என கூறி வெளியேறினாள்.
ஸ்ரீபிரியா பார்சலை பிரித்து பார்த்தாள் அதில் ஸ்ரீபிரியாவிற்கு தேவையான ரெடிமேட் உடைகள் மூன்று செட் இருந்தது.
அப்போது குளித்து உடைமாற்றி வந்த அஜய் ” பக்கத்துல ஒரு ரூம் போட்டுயிருக்கேன்ம்மா போய் குளிச்சுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வா நீ ரெண்டு நாளா தூங்கவும் இல்லை
நீ தனியா போக வேண்டாம் நானே உன்னை ரூமில் விட்டுட்டு வரேன் அப்புறமா கால் செய் வந்து கூட்டிட்டு வரேன் நாம ஜாக்கிரதையா தான்யிருக்கனும்
சாரி எனக்கு லேடிஸ்க்கு டிரஸ் எடுத்து பழக்கமெல்லாம் இல்லை அதோட எல்லாமே வாங்கனும் அதான் நர்ஸையே வாங்கிட்டு வர சொன்னேன் சரியாயில்லைனா மாத்திகோம்மா” என்றான்.
ஸ்ரீபிரியா “சாரி சார் உங்களை ரொம்ப சத்தம் போட்டேன் நீங்க எனக்காக இவ்வளவு செய்யனுமா? “என்றாள் வருத்தமாக.
அஜய் “உன்னை மனசார தான் தங்கைனு சொன்னேன் உன் கோபம் நியாயமானதுதான் விடு நான் ஒன்னும் தப்பா நினைகலை நீ வா” என பரிவாக சொல்ல
ஸ்ரீபிரியா “குளிச்சுட்டு நானும் இங்கேயே வரேன் ரெஸ்ட்லாம் வேண்டாம் ராம் சார் கண் முழிக்கும் வரை எனக்கு நிம்மதியில்லை” என்றாள்.
அஜய் “சரிம்மா நான் ஹோட்டல் ரிசப்ஷனில் வெயிட் செய்றேன்
நாம வரும் வரை நர்ஸை பார்த்துக்க சொல்லிடலாம்” என ஸ்ரீபிரியாவோடு புறப்பட்டான்.
அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் வந்து ஐசியு வாசலில் காத்திருந்தனர்.
சற்று பொறுத்து வந்த நர்ஸ் “மேடம் உங்க கணவர் கண்விழிச்சுட்டாங்க போய் பாருங்க” என கூறி சென்றாள்.
ஆவலும் பரபரப்புமாக உள்ளே இருவரும் சென்றனர். அஜய் நண்பனிடம் விரைந்து சென்று நலம் விசாரித்தவன் உடன் வந்த ஸ்ரீபிரியாவை காணாமல் திரும்பி பார்க்க அவள் கதவின் அருகில் நின்றபடியே ஸ்ரீராமை பார்த்திருந்தாள் நண்பனின் பார்வையை தொடர்ந்துப் பார்த்த ஸ்ரீராம் ஸ்ரீபிரியாவை மெல்ல அருகே வருமாறு கண்களால் அழைக்க .
ஸ்ரீராமின் அருகில் வந்தவள் அவன் கையை எடுத்து தன் முகத்தில் வைத்தபடி அழவும் அஜய் தடுக்க வர நண்பனின் கண்ஜாடையின் அப்படியே நின்றுவிட்டான்.
ஸ்ரீராம் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்த மறுகையை சிரமப்பட்டு தூக்கி ஸ்ரீபிரியா தலையை மெல்ல வருடி சிறிய குரலில் “அழாத பிரியா எனக்கு ஒன்னுமில்லை” என்றான் தீனமாக.
வெகு நேரமாக அழுத ஸ்ரீபிரியா அழுகையும் ஆத்திரமுமாக ஸ்ரீராமிடம் “ஏன் நீங்க இப்படி செய்தீங்க? ராம் நான் எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா? எத்தனை தடவை சொன்னேன் பீட்டர் விஷயத்துல
தலையிடாதீங்க நான் சமாளிச்சுக்குவேன் ஒதுங்கிடுங்கனு, என்னை இப்படி பதற
வச்சுட்டீங்களே ராம் உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தா என் வாழ்நாள் முழுக்க என்னாலையே என்னை மன்னிக்க முடியாதே ஏன் இப்படி பண்னீங்க ராம்? “என அழுதாள்
அவன் கையை விடாமல்.
ஸ்ரீராம் “என் மனைவியின் பிரச்சனைகாக என் உயிரை விட நான் துணிந்ததில் எந்த தவறும் இல்லை பிரியா அழாத உன் அழுகையையும், வருத்ததையும் என்னால பார்க்க முடியாது அழாதே சொல்றேன்ல கேளு” என சற்று அழுத்தமாகவே சொல்ல
ஸ்ரீபிரியா திகைத்து போய் ஸ்ரீராமை பார்த்தவள் இன்னும் பலமாக அழ அஜய், “பிரியா அழாத சொன்னா கேளு அமைதியா இரு எல்லாம் சரியாகிடும்” என சமாதானம்
செய்ய முயன்றான்.
ஸ்ரீபிரியா சற்று திடமடைந்தவள் கண்களை துடைத்துக் கொண்டு “ராம் உங்கிட்ட நான் கொஞ்சம் பேசனும்” என்றாள்.
அஜய் மெல்ல வெளியேறினான்.
இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம்.?