குறள்
புலவி
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
பொருள்
பெரும் பிணக்கும்,சிறு ஊடலும் இல்லாத காதல் வாழ்க்கை,கொள கொளத்த பழமும், முதிராத வெம்பிய காயும் கொண்ட மரம் போன்றதாகும்.
ஸ்ரீ – 17
எழப்போன ஸ்ரீபிரியாவின் பிடித்திருந்த கையை விடாமல் தடுத்த ஸ்ரீராம் எதுவா இருந்தாலும் இங்க உட்கார்ந்து என் கையை பிடிச்சுகிட்டே பேசு உன் கையை என்னைக்கு இருந்தாலும் நான் தான் பிடிக்க போறேன் அதான் சொல்றேன் என்றான் மெல்ல சிரித்து.
அந்த அரை சிரிப்பில் மறைந்திருந்த வலியை உணர்ந்த ஸ்ரீபிரியா மறுக்காமல் அவன் சொல்லுக்கு பணிந்தாள்.
ஸ்ரீபிரியா தலைகுனிந்து பேச ஆரம்பிக்க தடுத்த ஸ்ரீராம் என் முகத்தை பார்த்து பேசு ஸ்ரீபிரியா என்றான் அழுத்தமான குரலில்.
ஒரு நொடி தயங்கிய ஸ்ரீபிரியா பின் தன்னை திடப்படுத்தி கொண்டு குறுக்க பேசாம கேளுங்க ஸ்ரீராம்,உங்களுக்கு நான் எப்படி இவ்வளவு பிடிச்சுப்போனேன்னு தெரியலை
நான் ஒன்னும் பேரழகியில்லை, உங்க அதீத அன்புக்கு நான் தகுதியானவளுமில்லை,
உங்கள் நேசம் உண்மை,புனிதமானது அதை நான் புரிஞ்சுகிட்டேன் ஆனால்
அதை நான் ஏத்துக்குற நிலையில் இல்லை அது ஏன்னு கேட்காதீங்க அதை யார்கிட்டயும் சொல்ல நான் தயாராயில்லை என் மரணதோடு அழிய வேண்டிய விஷயம் அது பிளீஸ் கேட்காதீங்க என்ற போது பிசிரடித்த குரலை செருமி சீர் செய்து கொண்டு
நீங்க இப்படியிருக்க நான் தான் காரணம் அதனால உங்களுக்கு ஒரு பணிப்பெண்ணா நான் உதவி செய்ய தயார் ஆனா மனைவிக்கான அந்தஸ்த்தை பெறும் தகுதி எனக்கில்லை ராம் உங்க உடல்நிலை தேறும்வரை ஒரு நர்ஸ் மாதிரி உங்களை கவனிச்சுக்குறேன்
சில காலம் கழித்து நீங்கள் என்னை மறக்கும் சூழல் ஏற்படலாம் அதையேற்று வேற நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்து சந்தோஷமா வாழுங்க என முகம் திருப்பினாள் கண்ணீரை மறைக்க.
ஸ்ரீராம் அமைதியாக அனைத்தையும் கேட்டவன் திரும்பு பிரியா நீ அழறனு புரியுது நான் உன் முகத்தை பார்த்துதான் பேசுவேன் என அழுத்தமாக கூற
ஸ்ரீபிரியா கலங்கிய கண்களேடு அழுகையை விழுங்கியபடி திரும்ப ஸ்ரீராம் கண்னை துடை இவ்வளவு கஷ்டமா இருக்குல சொல்றப்பவே அப்புறம் ஏன் அதையெல்லாம் பேசுற?
சரி ரொம்ப நன்றி என்றான் முறுவலோடு
ஸ்ரீபிரியா புரியாமல் பார்க்க ஸ்ரீராமின் அதரங்கள் முறுவலில் மேலும் விரிய நீ என் நேசத்தை புரிஞ்சுகிட்டதுக்கு, அது போதும் எனக்கு இப்போ , உனக்கும் என் மேல நேசமிருக்கு மறுக்காதே உன் கண்னுல,உன் முகத்துல அதை நான் பார்திருக்கேன் நீயே அதை புரிஞ்சுகிட்டு என் கிட்ட சொல்லுவ அது வரை உன்னை நான் வற்புறுத்த மாட்டேன்.
என் மேல உனக்கு இன்னுமா நம்பிக்கை வரலை? என்ன பிரச்சனைனு சொல்ல கூடாதா? என்றான் மென்மையாக.
ஸ்ரீபிரியா வேண்டாமே பிளீஸ் நீங்க பட்டதெல்லாம் போதும் இனி நீங்க கஷ்டப்படறதுல எனக்கு பிரியமில்லை விட்டுங்க பிளீஸ் என்றாள் கெஞ்சும் குரலில்.
ஸ்ரீராம் இனிமே எனக்கு என்ன ஆக போகுது அதான் மொத்தமா வந்து படுத்துட்டனே மிச்சமிருக்கறது என் உயிர் மட்டும் தான் அதையும் உனக்காக இழக்க நான் தயார் சினிமா டயலாக் இல்லைம்மா மனசாரதான் சொல்றேன் என்றான் அழுத்தமாக.
ஸ்ரீபிரியா பிளீஸ் ராம் அப்படியெல்லாம் பேசாதீங்க என்றாள் குரல் கரகரக்க.
ஸ்ரீராம் உன் மனசுல நான்யிருக்கேன் ஏன் மறைகுற? உன்னை நீயே ஏன் ஏமாத்திக்குற? பிரியா எனகூறி சற்று நிறுத்தியவன் சரி நான் எதையும் உன்கிட்ட கேட்க மாட்டேன் நீயா எங்கிட்ட சொல்லுவ
அது வரை உனக்கு ஒரு நல்ல நண்பனா,ஒரு காவலனாவும் நான் இருப்பேன் அது நம் நேசத்தின் மேல ஆணை என்றான் பிரியா கையை அழுந்தப்பற்றி திட குரலில்.
அப்போது ஒரு நர்ஸ் வரவும் ஸ்ரீபிரியா விலக முயல ஸ்ரீராமும் சன்ன சிரிப்போடு அவள் கையை விடுவித்தான்.
நர்ஸ் சார் டிரிப்ஸ் மாத்தனும் என தன் வேலையை ஆரம்பித்தவள் சார், மேடம் அழுது இப்போ தான் சார் பாக்குறேன் எவ்வளவு மிடுக்கா இருப்பாங்க?உங்க மேல ரொம்ப அன்பு வச்சுயிருக்காங்க சார் கிட்டதட்ட ரெண்டு நாளா அவங்க தவிச்ச தவிப்பும்,
துடிப்பும் கொஞ்ச நஞ்சம் இல்லை சார் பின்ன புருஷன்னா துடிக்காதா? ஆனா உங்களுக்கு ஆபத்துயில்லைனு டாக்டர் சொல்ற வரை ஒன்னும் சாப்பிடாம பித்துபிடிச்சு போனது போல ஐசியு வாசல்ல உட்கார்ந்தே இருந்தாங்க.
அவங்க அண்ணனும் எவ்வளவோ சொல்லி பார்த்தாங்க அது எதையும் காதில் வாங்கினா தானே? இனிமே இப்படிலாம் போய் மாட்டிகாதீங்க சார் ஆமாம் நீங்க என்ன வேலை பாக்குறீங்க சார்? ஏன் இங்கே வந்து இப்படி ஆச்சு? எப்போ சார் கல்யாணம் ஆச்சு? என கேட்டாள் படபடவென கேட்க
ஸ்ரீராம் ஸ்ரீபிரியாவை ஒரு பார்வை பார்த்தவன் உங்க மேடம் இங்க இருந்து மாற்றலில் சென்னை வந்தாங்கலே அப்போவே கல்யாணமாகிடுச்சு சிஸ்டர்,
நானும் போலீஸ் ஆபீசர் தான் ஒரு கேஸ் விஷயமா வந்தப்போ இப்படியாகிட்டு இனிமே உங்க மேடம் கண்கலங்காம பார்த்துக்குறேன் ஓகேயா? உங்களுக்கு பிரியாவை முன்னாடியே தெரியுமா? என சன்ன முறுவலோடு கேட்க
நர்ஸ் தெரியும் சார் மேடம் இங்க ஏசிபியா இருந்தவரை ஒரு பொறுக்கி பய
பொண்ணுங்களை கிண்டல் செய்ய முடியாது காலை,மாலை பீக் ஹவர்ஸில் மேடம் ரவுண்ட்ஸ்ல தான் இருப்பாங்க.
என் தங்கச்சிகிட்ட ஒருத்தன் தொடர்ந்து வம்பு செய்து அவ கல்யாணத்தையும் கலைச்சுகிட்டே இருந்தான் மேடம் தான் அதை சரி செய்தாங்க இப்போ என் தங்கச்சி கல்யாணமாகி நல்லாயிருக்கா சார் ஐந்து மாசம் முழுகாம இருக்கா சார் இவங்க எங்களை பொறுத்தவரை சாமி சார் என்றாள் உணர்ச்சிபூர்வமாக.
ஸ்ரீபிரியா விடுங்க சிஸ்டர் இதெல்லாம் போய் பேசிகிட்டு உங்க தங்கச்சிக்கு நல்லபடியா குழந்தை பிறக்கனும்னு நான் கடவுள்கிட்ட வேண்டிக்குறேன் என்றாள் அமைதியாகவே.
நர்ஸ் இதான் சார் எங்க மேடம் நல்ல மனசுங்கறது என்றவள் தேங்கஸ் மேடம் அப்புறம் சார்க்கு நார்மல் டயட் தரலாம் இட்லி,இடியாப்பம்,ரசம் சாதம்,கஞ்சி சாதம் போல இப்போ ஏதாவது சாப்பிட தாங்க மெடிசன் தரனும் ஒரு மணி நேரம் கழிச்சு வரேன் என புறபட்டாள்.
ஸ்ரீபிரியா என்ன சார் சாப்பிடுறீங்க? என கேட்க ஸ்ரீராம் அய்யோ என முனக பதறிய ஸ்ரீபிரியா என்ன சார் வலிக்குதா? எங்க வலிக்குது? இருங்க டாக்டரை கூப்பிடுறேன் என வேகமாக ஒட
ஸ்ரீராம் ஆமாம் வலிக்குது ஆனா டாக்டரால சரி செய்ய முடியாது என சொல்ல கதவருகே சென்ற ஸ்ரீபிரியா அப்படியே நின்று திரும்பி புரியாமல் ஸ்ரீராமை பார்க்க.
ஸ்ரீராம் சிரித்தபடியே இங்க இதயத்துல வலிக்குது அதை டாக்டரால சரி
செய்யமுடியாது உன்னால தான் முடியும் என பூடகமாக கூறி சிரிக்க
ஸ்ரீபிரியா முறைத்தவள் புரியலை
கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க சார் என குரலில் கடுமையோடு கேட்க
ஸ்ரீராம் அந்த சார் இருக்குல சார் அதை வெட்டி விட்டெரிஞ்சுட்டு ராம்னு சொல்லு இல்ல செல்லமா எப்படி வேனா கூப்பிடு புருஷனை சார் போட்டா கூப்பிடுவாங்க? என கேட்டு சிரிக்க.
ஸ்ரீபிரியா நீங்க ஒன்னும் என் புருஷன் கிடையாது நான் ஆரம்பத்துலயே சொல்லிட்டேன் உங்க மனைவியாகுற தகுதி எனக்கில்லை விட்டுங்க சார் என்றாள் அழுத்தமாக.
ஸ்ரீராம் ஏன் அந்த நர்ஸ் சொன்னப்போ நீயும் சும்மா தானேயிருந்த மனசுள இல்லாமலா அமைதியாயிருந்த வீனா உன்னை நீயே ஏமாத்திகாத சரி போகட்டும் என்னை ராம்னு கூப்பிடுறதுனா நீ என்னை கவனிச்சுக்கோ இல்லைனா இன்னிக்கே சென்னை போய்டு
அஜய் இருக்கான் அவன் பார்த்துப்பான் இத்தனை வருஷமா அவன் தானே இந்த
அனாதைக்கு எல்லாம் என வேகமாக கூறி முகம் திருப்ப.
அனாதை என்ற சொல்லின் வலிமை ஸ்ரீபிரியாவை உலுக்கி பார்க்க மெல்ல சரி ராம்னே கூப்பிடுறேன் இனி, ஆனா அனாதைனுலாம் சொல்லாதீங்க பிளீஸ் என்றாள் சிறிய குரலில்.
ஸ்ரீராம் குட் அது என்ன ஆனா ஊனா தகுதி இல்லைனு சொல்ற என் மனசுள நீயிருக்க உன் மனசுள நான் இருக்கேன் நீயா ஒத்துகலைனாலும் அதான் உண்மை நீ பெண் , நான் ஆண் வேற என்ன தகுதி வேனும் நேசிக்க? இல்ல அதுல எதுவும் சந்தேகம்னா சொல்லு
இன்னிக்கே டாக்டர்கிட்ட டெஸ்ட் செய்து உன்கிட்ட ரிப்போர்ட் தர சொல்றேன்
என்றான் கூலாக.
பதறிய ஸ்ரீபிரியா ஏன்ங்க இப்படியெல்லாம் பேசுறீங்க? நான் அந்த அர்த்ததுல சொல்லலை என்னை இப்படி பேசி வதைகாதீங்க ராம் பிளீஸ் என்றாள் அழுகுரலில்.
ஸ்ரீராம் சாரி பிரியா இனி பேசலை விடு உன் அண்ணன் கிட்ட சொல்லி எதாவது சாப்பிட வாங்கிட்டு வர சொல்லு பசிக்குது என்றான் தனிவாக.
அஜய் வாங்கி வந்த இட்லியை ஊட்ட போன ஸ்ரீபிரியாவை தடுத்த ராம் முழு மனசா
செய்றதுனா செய் பிரியா எதையும் மனசுள வச்சு கஷ்டபட்டுகிட்டு செய்ய வேண்டாம் அஜய் இல்லை நர்ஸ் கூட செய்வாங்க என்றான் வெறுமை குரலில்.
ஸ்ரீபிரியா எல்லாம் முழுமனசோடு தான் செய்றேன் உங்களை ஒரு அடிப்பட்ட குழந்தையா தான் நினைகுறேன் நீங்க வேற அர்த்தம் புரிஞ்சுக்க வேண்டாம் நான் ஒரு
நர்ஸ்னே நினைச்சுகோங்க என வெறுமை குரலில் கூறிய படி ஊட்டிவிட்டாள்.
ஸ்ரீராம் சாப்பிட்டபடியே நர்ஸ் நிறைய பேர் இருக்காங்க எனக்கு அம்மா தான் இல்லை
அம்மாவா பார்த்துக்கோ தாய்க்கு பின் தாரம்தானே ஸ்ரீமா நீ எனக்கு ஒரு தாயா
இரு என்றான் அவள் வலக்கரத்தில் இதழ் பதித்து.
ஸ்ரீராமின் பேச்சாலோ அன்றி அவனின் செயலாலோ ஸ்தம்பித்து போன ஸ்ரீபிரியா நர்ஸ் வரும் அரவம் உணர்ந்து அவசரமாக ஸ்ரீராமின் பிடியில் இருந்து தன் கைகளை உருவிக் கொண்டு வாஷ் ரூமிற்குள் ஓடினாள்.
ஸ்ரீராம் சிரித்தபடியே நர்ஸை
எதிர் கொண்டான் அவள் தந்த மருந்துகளை சாப்பிட்டவன் மெல்ல உறங்கிபோனான்.
இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம்.?