ஸ்ரீ – 18

0
653

குறள்

அடக்கமுடைமை

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

பொருள்

எந்த உறுப்பைக் காக்க முடியாது போனாலும் நாக்கைக் காக்கவேண்டும். நாக்கைக் கட்டுப் படுத்த முடியாவிட்டால் வார்த்தையில் குற்றம் ஏற்பட்டு அவதிக்குள்ளாக நேரிடும்.

ஸ்ரீ – 18

மேலும் இரு நாட்கள் கடந்த நிலையில் ஸ்ரீராமை ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றியிருந்தனர்.

ஸ்ரீராம் சொன்னதாலோ அன்றி தன் மனதின் விருப்பமாகவோ ஸ்ரீராமிற்க்கு நிஜமான தாயாகவே ஸ்ரீபிரியா மாறியிருந்தாள் முகம் சுழிக்காமல் ஸ்ரீராமின் அனைத்து தேவைகளையும் கவனித்துக்கொண்டாள் அஜய் இவற்றை கண்டும் காணாதது போல் இருந்து கொண்டான்.

ஸ்ரீராமும் சொல்லி பார்த்தான் எல்லாம் செய்து கஷ்டபட வேண்டாம் என மறுத்த
போது , ஸ்ரீபிரியா குழந்தைக்கு செய்வது தாய்க்கு கஷ்டமில்லை என கூறி சென்றவளை ஸ்ரீராம் ஆச்சர்யமாகவே பார்த்தான்.

மாலை உறங்கும் ஸ்ரீராமின் கட்டில் அருகே அமர்த்து எங்கோ வெறித்துப் பார்த்து
கொண்டிருந்த ஸ்ரீபிரியாவை மெல்ல அழைத்த அஜய் உடன் வருமாறு சைகை செய்தான்.

ஸ்ரீராமை ஒரு முறை பார்த்துவிட்டு அஜய்யை தெடர்ந்து வெளியே வர “பிரியாம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என அஜய் சொல்ல ஸ்ரீபிரியா சொல்லுங்க அண்ணா எதுவும் ஆபீஸ் விஷயமா? என கேட்க மறுத்தவன் பேசனும்மா இங்க வேண்டாம் வெளியே போய்டலாம்” என்றான்.

ஸ்ரீபிரியா “சரி அண்ணா நர்ஸ்கிட்ட சொல்லிட்டு வரேன் கீழே கேண்டின் போய்டலாம்” என்றவள் நர்ஸிடம் கூறி வர

அஜய், “பிரியா கேண்டின் வேண்டாம்மா யாரவது வந்து போய்கிட்டு டிஸ்டர்பா இருக்கும்” என்றான் தயக்கமாக ஸ்ரீபிரியா “சரி உங்க விருப்பம் அண்ணா எங்க போகனும்? “என கேட்க அஜய் “ரூம்கே போய் பேசிக்கலாமா? “என்றான் மெல்ல.

ஸ்ரீராம் ஐசியுவில் இருந்தவரை ஸ்ரீபிரியா குளிப்பதற்க்கு மட்டும் அறைக்கு சென்று வந்தாள் அப்போதும் உடன் செல்லும் அஜய் கீழே ஹோட்டல் ரிசப்ஷனிலேயே இருந்துவிடுவான்.

இங்கு வந்த இத்தனை நாட்களில் இருவரும் ஒன்றாக அறைக்கு சென்றதில்லை அண்ணன், தங்கையாய் பழகினாலும் ஒரு எல்லையிலையே இருவரும் இருந்து கொண்டனர்.

அதை இருவருமே தவறாகவும் கருதவில்லை இப்போதெல்லாம் ஸ்ரீபிரியா முழுவதும் ஸ்ரீராமின் அறையிலேயே இருந்து விடுவதால் அஜய் மட்டுமே இரவில் ரூமில் தங்கியிந்தான்.

ஸ்ரீராம்,ஸ்ரீபிரியா இருவரின் சர்வீஸ் பிஸ்டலும் ஸ்ரீபிரியா வசம் இருந்ததாலும் ஹாஸ்பிடலில் இன்னொருவர் தங்க அனுமதியில்லாதாலும் அஜய் அரை மனதாய் வெளியே தங்கிக் கொண்டான்.

ஸ்ரீபிரியா “சரி அண்ணா வாங்க போகலாம்” என அஜய்யுடன் புறப்பட்டாள். ரூமில் ஸ்ரீபிரியா எதிரில் அமர்ந்திருந்த அஜய் சற்று நேரம் அமைதியாக இருந்தவன் பின் “பர்ஸ்னலா பேசனும் அதான்ம்மா இங்க வரலாம்னு சொன்னேன் அதோட பிரியாம்மா நீ என்னை நம்புறல? நான் உன் நன்மைக்கு தான் எதையும் சொல்லுவேன்னு” என தயங்கி
தயங்கி கேட்க.

மெல்ல முறுவலித்த ஸ்ரீபிரியா “அதை நான் சொல்லி தான் தெரியனுமா அண்ணா உங்களுக்கு? நான் அவ்வளவு சீக்கிரம் யாரையும் உறவு முறை சொல்லி
கூப்பிட மாட்டேன் உங்களை முழு மனசா தான் அண்ணானு கூப்பிடுறேன் சொல்லுங்க “என்றாள் மெல்ல முறுவலித்து.

அஜய் தெளிவுற்றவன் “நல்லதும்மா ஸ்ரீராமை நாளை சென்னை ஹாஸ்பிட்டல்க்கு மாத்திடலாம்னு இங்க டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க நாம நாளை கிளம்புறோம் “என்றவன் சற்று தயங்கி நிறுத்த.

ஸ்ரீபிரியா இதெல்லாம் தான் எனக்கே தெரியுமே அண்ணா நீங்க வேற எதுவோ பேச நினைக்குறீங்கனு தெரியுது சொல்லுங்க கேட்க.

அஜய் நான் அந்த பீட்டரை பத்தியும் அவன் அப்பா மரியதாஸ் பத்தியும் விசாரிச்சேன் பயப்படாத ஹாஸ்பிட்டலையும், வெளியிலையும் சும்மா பேச்சு குடுக்குற மாதிரிதான் விசாரிச்சேன் ஆனா உங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு
தெரிஞ்சுக்க முடியலை.

ஆனா அவனும் அவன் அப்பாவும் எவ்வளவு மோசம்னு தெரிஞ்சுகிட்டேன் நீ இங்க
டியூட்டியில் இருந்த வரை அவனுங்களுக்கு ஒரு சிம்மசொப்பனமா தான்யிருந்து இருக்க உனக்கு ஹையர் ஆபீசர்ஸ் சப்போர்ட்டும் இருந்தது இல்லை.

அவனுங்க சட்டவிரோத செயல் எல்லாத்தையும் தடுத்துயிருக்க உன்னை கொல்ல முயற்சியும் நடந்துயிருக்கு அதுக்கும் அசராம மரியதாஸின் முக்கிய பினாமியை குண்டர் சட்டத்துல கைது செய்துயிருக்க அப்படிபட்ட நீ ஏன் இப்போ பீட்டருக்கு பயப்படுற? கேட்க கூடாதுனு தான் நானும் நினைச்சேன்ம்மா பிரியா

அனா உன்னை பார்க்கும் போதெல்லாம் உன் தவிப்பு என்னை கலங்க வைக்குதும்மா
சென்னையில் இருந்து நாம கிளம்பும்போது சொன்னியே என்னை நம்பின ஐந்து உயிரை
என்னால காப்பாத்த முடியாம தினம் தவிக்குறேன்னு அதுக்கு என்ன அர்த்தம்?

ராமை பாக்குறல எப்படி இருந்தவன் என்ன மாதிரி கிடக்கான் அவனை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவனை சும்மா விடலாமா? உன்னையும் இந்த பாடு படுத்தினவனை சும்மா விட கூடாதும்மா நான் அவன் கிட்ட போய் சிக்கிப்பேன்னு நினைச்சு தயங்காதே,

விஷயம் என்னனு மட்டும் சொல்லு அவனை எப்படி டீல் செய்றதுனு நான் பார்த்துக்குறேன் அதோட ஒன்னு கேட்டா தப்பா நினைகாதேம்மா உன் பிரச்சனை, உன் பயம் உன் உயிர் பத்தினது இல்லை அது அது வந்து உன் ஏதோ ஒரு விஷயம் அவன்கிட்ட இருக்கு அதை வச்சு அவன் உன்னை மிரட்டுறான்னு புரியுதும்மா

ராம்கிட்ட சொல்ல நீ தயங்கலாம் என்கிட்ட சொல்லும்மா நான் சரி செய்றேன் ராம்க்கு கூட தெரிய வேண்டாம் எப்போதுமே எதுவும் நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன் என்றான் திக்கி திணறி.

ஸ்ரீபிரியா உங்ககிட்டயா என அதிர்ந்தவள் மறுநொடியே தன்னை சமன் செய்து கொண்டு சந்தேகப்படுறீங்களா அண்ணா? நான் எந்த தப்பும் செய்யலை அதோட உங்க ஃபிரண்டு வாழ்க்கையில் நான் என்னைக்கும் அவர் நினைக்கும் ஸ்தானத்துக்கு வர போறதில்லை.

எனக்காக போய் வெட்டுபட்டு கிடக்குறாறேனு தான் நான் அவரை கவனிச்சுக்குறேன்
நான் ஒரு நர்ஸ் போல இருக்கேன்னு தான் சொன்னேன் ராம் தான் என்னை அம்மாவா
பார்த்துக்கோனு சொன்னார் அதுக்காக தான் நான் அவரை கவனிச்சுக்குறேன் மத்தபடி எங்களுக்குள்ள எந்த பந்தமும் ஏற்பட வாய்ப்பில்லை

அப்போ சொன்னதுதான் இப்போவும் என்னை எதுவும் கேட்டாதீங்க நானும் எதுவும்
சொல்ல போறதில்லை என் பிரச்சனையை நானே சமாளிச்சுப்பேன் விட்டுங்க அண்ணா

இனிமே அண்ணானு கூப்பிடலாமா? இல்ல உங்க ஃபிரண்டை விரும்பினா தான் எனக்கு
அந்த ஸ்தானமா? என்றாள் இறுகிய குரலில்

அஜய் சாரிம்மா ஏன் இப்படியெல்லாம் பேசுற?நான் உன்னை சந்தேகப்படலை ஏதாவதுயிருந்தா அதை சரி செய்யலாமேனு தான் கேட்டேன் மத்தபடி உன்னை கஷ்டபடுத்த கேட்கலை நீ இப்படி முகத்திலடிச்ச மாதிரி பேசினா நான் எதுவும் கேட்க மாட்டேன்னு தானே இப்படி பேசுற ராம் கிட்ட யூஸ் செய்த தந்திரம் எங்கிட்ட பலிக்காது பிரியாம்மா

ராம் கண்னை நேசம் மறைச்சுட்டு ஆனா என்கிட்ட அது நடக்காது என்ன கேட்ட அண்ணானு கூப்பிடலாமானு தானே? இல்லை நீ சார்னு கூப்பிட்டு தான் பாரேன் உன்னை அப்போ கவனிச்சுகுறேன் ஆபீஸ்ல கூட இனிமே நீ அஜய்னு தான் கூப்பிடுற சார்னு சொன்ன என செல்லமாக மிரட்டியவன் சொல்லகூடாது சரியா? என வேக குரல்

மாறி சிரித்தபடியே கூறி தொடர்ந்தான் நிஜம் பிரியாம்மா உன்னை என் பத்து வயசுல முகம் கூட தெரியாம ஏன் உருவம் கூட இல்லாம இழந்த என் தங்கையா தான் நினைக்கிறேன் ராம்னால மட்டும் இல்லை நம்ம பந்தம் என்றான் நெகிழ்சியாக.

ஸ்ரீபிரியா சாரி அண்ணா என்றாள் குற்ற உணர்வோடு மெல்ல முறுவலித்து.

அஜய் பீட்டர் விஷயமா நீ எதுவும் சொல்ல வேண்டாம் நானும் கேட்கலை ஆனா ராமை விட்டு விலகிடாத பிரியா அவனால தாங்க முடியாது அவன் உன்னை உயிரா விரும்புறான் உன்னை பிரிஞ்சு அவனால வாழ முடியாது அது மட்டும் நிஜம்

அவனை சின்ன வயசுல இருந்து பாக்குறேன் அவன் யாருக்காகவும் இவ்வளவு பார்த்ததுமில்லை தவிச்சதும்மில்லை அவன் அம்மாவுக்கு அப்புறம் உன்னை தான் இவ்வளவு விரும்புறான் கொஞ்சம் யோசி உனக்கே புரியும் நீ எடுக்குற எந்த
முடிவாயிருந்தாலும் அது ராமை வாழவைக்குற முடிவாயிருக்கனும் நான் சொல்றது புரியுதா? பிரியாம்மா என்றான் அழுத்தமாக.

ஸ்ரீபிரியா யோசனையோடு ஆமோதிப்பாய் தலையசைத்தாள். அஜய் சரி போ போய் முகம் கழுவிட்டு வா முகமே சரியில்லை நான் ஜூஸ் ஆர்டர் செய்றேன் உனக்கு மாதுளை பிடிக்குமா? என்றவன் அவள் சரியெனவும் ரிசப்ஷனில் இரு ஜூஸ்க்கு ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தான் யோசனையோடு.

ஸ்ரீபிரியா வரவும் அஜய் வாஷ் ரூம் சென்றான். அப்போது காலிங் பெல் சப்தம் கேட்கவும் கதவை திறந்து ஜூஸை வாங்கி பில்லில் கையெழுத்திட்டு அனுப்பிய பின் கதவை சாத்த முயன்ற போது திடீரென பீட்டர் உள்ளே வந்தவன் ஸ்ரீபிரியா கழுத்தை பிடித்து நெரிக்க உடன் வந்தவன் கதவை சாத்தினான்

ஸ்ரீபிரியா பீட்டரை அடிக்க கையை வீச அவள் இரு கைகளையும் லாவகமாக பற்றி தடுத்து அவளை தன் பிடியில் நிறுத்தினான்.

ஆத்திரமாக என்ன திமிரா மேடம் பழசெல்லாம் மறந்து போச்சா? உங்க ஆளை வச்சு உளவு பாக்குறீங்களா? நல்லதுக்குயில்லை மேடம் யாருக்குனு நான் சொல்லி தெரிய வேண்டாம் என ஆத்திர குரலில் கர்ஜிக்க

வாஷ் ரூமில் இருந்து பேச்சு குரல் கேட்டு வந்த அஜய் கண்ட காட்சியின் பதறி போனான் பீட்டர் அறையினுள் இருப்பதும் அவன் ஸ்ரீபிரியாவின் கழுத்தை நெரித்தபடி அவளை தன் கட்டுப்பாட்டில் நிற்க வைத்திருப்பதையும் தங்கை மூச்சு காற்றுக்கு திணறுவதையும் கண்டு ஒடி வந்தவன் பீட்டரை அடிக்க கை ஓங்க ஸ்ரீபிரியாவை விட்ட பீட்டர் அஜய்யை தடுத்தான்

ஸ்ரீபிரியா நிலையின்றி கீழே விழ அஜய் பீட்டரை உதறிவிட்டு தங்கையிடம் விரைந்தான் ஸ்ரீபிரியா இருமியபடி எழ முயல அஜய் கை கொடுத்து எழுப்பி அமர வைத்து நீர் எடுத்து தந்து பருக வைத்தவன் கோபமாக பீட்டரை நெருங்க.

பீட்டர் என்ன மேடம் இது யாரு புதுசா? உங்களுக்காக ஒரு மடையன் வெட்டுபட்டு
ஆஸ்பத்திரியில் கிடக்கான் நீங்க என்னடானா இங்க வந்து கூத்தடிக்கிறீங்களே அவன் உங்க புருஷன்னு சொல்றாங்க அது பொய்னு எனக்கு தெரியும் அது போகட்டும் சரி அப்போ இது யாரு? என கேட்டு சிரிக்க.

ஸ்ரீபிரியா இருமியபடியே பீட்டர் போதும் போய்டு நாக்குல நரம்பு இல்லாம பேசாத
போ இங்கயிருந்து என திக்கி திணறி கூற அஜய் அவனை அடிக்க போக ஸ்ரீபிரியா அண்ணா விடுங்க பீளீஸ் போ போனு சொல்றேன்ல போய்டு பீட்டர் என்றாள் தீனமாக.

பீட்டர் அசையாமல் நின்றவன் இது உங்க அண்ணனா? உங்க குடும்பத்தை பத்தின எல்லா டீட்டெயிலும் தான் எனக்கு தெரியுமே வீணா நடிக்காதீங்க மேடம், நீங்க எவன்கூட வேனும்னாலும் கூத்தடிங்க எப்படியோ போங்க எனக்கு என்ன வந்தது என் விஷயத்துல இருந்து விலகிடுங்கனு தானே சொல்றேன் சொன்னா கேட்கமாட்டிங்களா? என்றான் ஆத்திரமாக.

அஜய் கடுப்பானவன் ஏய் உன்னை சும்மா விட மாட்டேண்டா எவ்வளவு திமிரு இருந்தா ராமை இப்படி செய்துயிருப்ப அதோட யாரை பத்தி என்ன பேச்சு பேசுற ராஸ்கல் என ஆத்திரமாக கூறி பீட்டர் சட்டையை பிடிக்க பீட்டரும் அஜய் சட்டையை பிடிக்க விரைந்து வந்த ஸ்ரீபிரியா அண்ணா விடுங்க அவனை சொல்றேன்ல பீளீஸ் என கத்த இருவரும் ஸ்ரீபிரியா பேச்சை காதில் வாங்காமல் சண்டையிட.

ஸ்ரீபிரியா கைப் பையிலிருந்து தன் பிஸ்டலை எடுத்தவள் தன் நெற்றியில் வைத்தபடி
அஜய்யை அழைக்க தங்கை செய்கையை கண்டவன் பீட்டர் மேலிருந்து கையை எடுத்தான் அதிர்ச்சியோடு.

பீட்டர் இருவரையும் முறைத்தவன் நீங்களா விலகிடுங்க மேடம் அதான் எல்லாருக்கும் நல்லது என கூறி வெளியேற அவன் பின்னோடு சென்ற ஸ்ரீபிரியா விரைந்து கதவை தாழிட்டவள் அதன் மீதே சாய்ந்து அழ.

அஜய் செய்வதறியால் சற்று நேரம் திகைத்து நின்றவன் பின் தங்கையை நெருங்கி அவள் கையிலிருந்த பிஸ்டலை வாங்கி தன்னிடம் பத்திரப்படுத்தியவன்.

அழும் தங்கையை கைபிடியாய் எழுப்பி சேரில் அமர வைத்தான்.

ஸ்ரீபிரியா அஜய்யை நிமிர்ந்து கண்ணில் நீரோடு பார்க்க அஜய் தங்கை மனநிலை உணர்ந்தவனாக நான் எதுவும் கேட்க மாட்டேன் ஆனா அழாத எதுவும் ஆகாது நான் இருக்கேன் என்றான் அவள் கண்களை துடைத்துவிட்டு.

இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம்.?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here