——****

அம்மா … உங்களை யாரோ பாக்க வந்துருக்காங்க… அகிலாண்டேஸ்வரி வீட்டு வேலையாள் சொல்ல …

யாரு வந்துருக்கறது…?

தெரியல மா பார்த்த ஏதோ மந்திர வாதிமாதிரி தெரிதுஓர் வித பயத்தோடவே சொல்ல..

ஹ்ம்… சரி நீ போய் வேலை யை பாரு நான் பாத்துக்கிறேன்…

ஹ்ம் சரிங்க மா..

மாடியில் இருந்து கம்பிரமாய் இறங்கி வரும் அகிலாண்டேஸ்வரியை பார்த்து ரிஷிபனே அவனை அறியாமல் எழுந்து நின்றான்..

ஹ்ம்யார் நீ என்ன விசியம்மா என்ன பாக்க வந்திருக்க .. அவனை பார்வையால் அளந்த படி கேட்டாலும்

அவனை பார்த்ததும் அகிலாவுக்குள் ஒரு திகில் பரவியது முகத்தை சுளித்தபடியே கேட்டாள் …

ரிஷி.. அவளின் உதாசீனம் பத்தி எதையும் கவலை படாமல் ..
நான் சொல்ல வந்து இருக்கும் விசயத்தை பத்தி இந்த அம்மாமட்டும் கேள்வி பட்டுச்சினா என்னை இவளோ எகத்தாள மா பாக்காது மனசுல நினைத்து கொண்டவன் …
உங்க கிட்ட ஒரு முக்கியமான விசியம் சொல்லணும் அத சொல்லிட்டு போக வந்தேன்னு சொல்லவும் …

இவனுக்கு…. என்கிட்ட என்ன பேசணும் குழப்பத்தோட ரிஷிபன் முகத்தை பார்த்தாள்…

நான் உக்காந்து பேசலாமா.. கேட்க..

அகிலாண்டேஸ்வரி…
அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு….. நீ சொல்ல வந்ததை சீக்கிரமா சொல்லு எனக்கு முக்கியமான வேலை இருக்கு அலட்சியமாய் கையில் இருக்கும் கடிகாரத்தை பார்க்க…

அவளின் அலட்சிய மான பதிலில் ரிஷிபனுக்கு கோவம் வரவும் …..

சட்டுனு அங்கிருந்து கிளம்பவும்…..

அகிலாண்டேஸ்வரி இவன் எதுக்கு வந்தான் வந்தவன் எதுவும் சொல்லாம போறானேனு கொண்டிருந்தாள்..

கோவமாய் வாசல் வரை போனவன்… ரிஷி.. திரும்பி …
அகிலாண்டேஸ்வரியை பார்த்து உங்க மகன்னுக்கு ஒரு கண்டம் இருக்கு …

அந்த கண்டத்துல இருந்து உங்க மகனை காப்பாத்தணும்னா என்னால மட்டும் தான் முடியும் …
இதை தான் உங்க கிட்ட சொல்ல வந்தேன் ..
ஆனாவந்த இடத்துல எனக்கு மரியாதை இல்லனு தெரிஞ்சி போச்சு …
மரியாதை இல்லாத இடத்துல இந்த ரிஷிபன் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டான்….
அப்படியும் ஏன் இருந்தேன் தெரியுமா உங்க மகனை காப்பாத்தணுமே னு ஒரு நல்லா எண்ணத்தில் வந்த என்னை நல்லா பாடம் கத்து குடுத்திட்டீங்க…

என்னதான் பணத்தால நீங்க உசந்து இருந்தாலும் உயிர் பிச்சை கேக்க நீங்க எல்லாரும் என்னிடம் தான் வந்தாகணும்…

நா சொல்லுறத சொல்லிட்டேன் நம்பறதும் நம்பாம இருக்கறதும் உங்க இஷடம் உங்களுக்கு உங்க மகன் மேல அக்கறை இருந்தா அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு வாங்க .. சொல்லி விட்டு விறுவிறுனு சென்றுவிட……

அகிலாண்டேஸ்வரி அதிர்ச்சியோட பார்த்துக்கொண்டிருந்தாள் ..
என்ன சொல்லிட்டு போறான் … என் மகனுக்கு கண்டமா…. பயத்தில் வேர்த்து கொட்டியது… இவனை நம்பலாமா… ஹ்ம்ம் போய் தான் பாப்போம்…

ரிஷிபன் சொன்னமாதிரியே அந்த கோவிலுக்கு எல்லைக்குள் வந்தாள்….
இங்க தான வர சொன்னான்…
எங்கே காணுமே…
சுத்தி தேடி பார்த்தாள்…
அந்த இடமே ஒரு மயான அமைதியாய் இருக்க அகிலாமனதுக்குள் கிலி வந்து போனது ..
யாரோ எதுவோ சொன்னாங்க னு இப்படி தனியா கிளம்பி வந்துஇருக்க கூடாதோ…
கூட யாராவது கூட்டிட்டு வந்து இருக்கலாம்… இப்படி தனியா வந்து மாட்டிகிட்டோமே ….
தன் மட தனத்தை எண்ணி அவளையே திட்டி கொண்டிருந்தாள் ….

இவனை வேற காணுமே என்ன வர சொல்லிட்டு இவன் எங்க போய் தொலைஞ்சான்…பயத்தில் புலம்பிகொண்டிருக்க…

முனியன் கூட ரிஷி வருவது தெரிஞ்சதும்

அப்பாடா வந்துட்டான்…
அகிலாவுக்கு போன உசுரு திரும்பி வந்த மாதிரி இருந்தது பெருமூச்சு விட்டாள்…

ரிஷி.. அகிலாவை பார்த்ததும் வாங்க மா வாங்க நீங்க கண்டிப்பா இங்க வருவீங்க னு எனக்கு தெரியும் வந்து தானே ஆகணும் உங்க புள்ளைக்காக..

ஹேய்… சும்மா தொண தொணனு பேசாத எதுக்காக இங்க வர சொன்ன…. நீ சொன்னது உண்மையா…
அது இது னு சொல்லி என்கிட்ட பணம் புடுங்கலாம் னு பாக்கறியா அதான் என் மகனுக்கு ஏதோ கண்டம் இருக்குனு பொய் சொல்லி வர வச்சிஇருக்கியா கோவத்தில் பட படவென பொறியவும்…

ரிஷி… எந்த சலனமும் முகத்தில் காட்டாமல்… நிற்கவும் …

ஹேய்ய்ய… உன்ன தான கேக்குறேன் எதுக்காக வரசொன்ன சீக்கிரமா சொல்லு
என் முஞ்சியே பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம் அகிலாண்டேஸ்வரிக்குதலைக்கு மேல் கோவம்வரவும் … கத்தினாள்…

அந்த இடமே மயான அமைதியா இருக்கவும் அகிலா கத்தினதும் பருந்துகள் எல்லாம் அதிர்ந்து பறந்து சென்றது…

ஷ் ஷு… வாயில் கை வைத்து ரிஷி எச்சரிக்கை செய்தான்…

இது காடு… இங்க நீங்க சத்தம் போட்டு பேசுனா நா சும்மா இருப்பேன் ஆனா இங்க இருக்குற வன விலங்குகள் சும்மா இருக்காது …
அதுக்கு தீனியா உங்களை தான் எடுத்துக்கும் பரவா ல்லையா..
இதை சொன்னதும் அகிலா கப் சிப் ஆகிவிட…

ஹ்ம்ம்.. வாங்க கோவில் குள்ள போகலாம் இதை பத்தி பேசணும்னா நாம கோவில் உள்ள போன தான் பேச முடியும் வெளியே பேச முடியாது வாங்க… ரிஷி கூப்பிடவும்

அகிலாண்டேஸ்வரி தயங்கினாள்.. இல்லை எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லு… உள்ளே எல்லாம் வரமுடியாது … கறாரா சொல்லவும் .

ஹ்ம்ம்… நான் சொன்ன நீங்க கேக்க மாட்டீங்க அப்றம் உங்க இஷடம்…

சொல்லிய படி பக்கத்தில் நிற்கும் முனியனை பார்கவும் .. அவன் விறு விறுனு ஓடி போய் அங்கே இருக்கும் மண்டபம் ஒன்னில் தன் குரு அமர்வதுக்கு ஏற்பாடு செய்துவிட்டு அழைத்தான்…

ஹ்ம்ம் வாங்க போகலாம்… அகிலாவை அழைத்துகொண்டு சென்றான்..

இருவரும் அந்த மண்டப திட்டில் அமர்ந்து கொள்ள..

ஹ்ம்ம்… இப்போ சொல்லு என் மகனுக்கு என்ன கண்டம் அகிலா கேட்க…

ஹ்ம்ம்… ரிஷி முனியன் போட்ட புலி தோளில் அமர்ந்து கண்மூடி ஏதோ மந்திரம் சொல்லவும்…

அகிலாண்டேஸ்வரி ….
ரிஷிபனையே பார்த்து கொண்டிருந்தாள்…

அது வரை
அமைதியாய் இருந்த இடம் எங்கிருந்தோ வந்த
காற்று சடார் சடார்னு சுழன்று அடிக்கவும் …

அகிலா பயந்து போனாள்…
இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த இடம் திடிர்னு இப்டி பேய் காத்து போல சுழன்று அடிக்குதே… என்ன பன்னுறதுனே தெரிலையாமல் முழிச்சிட்டு இருக்கவும்..

சட்டுனு கண்ணை திறந்த ரிஷி.. முனியன் கையில் குங்குமம் குடுத்து சுத்தி வட்டம் போடுனு சொல்லவும் முனியன் அடிக்குற காத்தில் தள்ளாடியபடியே மூவருக்கும் சேர்த்து குங்குமத்தால் வட்டம் போட்டு விட்டு ரிஷிபன் பக்கத்தில்வந்து அமர்ந்து கொள்ளவும் …

அகிலா அதிர்ச்சியோட பார்த்து கொண்டிருந்தாள் ஏன் என்றால் .. அதுவரை பேய் காத்தாய் சுழன்று அடித்து கொண்டிருந்த காத்து ரிஷிபன் குடுத்து குங்குமத்திலான வட்டத்தை போட்டதும் வட்டத்துக்கு அப்பால் போய்விட மறுபடியும் அமைதியாய் ஆனது அந்த இடம்…
இதை எல்லாம் ஓர் பயத்தோடவே பார்த்துக்கொண்டிருந்தாள் அகிலாண்டேஸ்வரி ..

என்ன நடக்குது இங்க ரிஷிபனிடம் கேட்டாள்…

இதுக்காகதான் நான் கோவில்குள்ள போய் பேசலாம் னு சொன்னேன் … இந்த காத்து
உங்க கிட்ட எதையும் சொல்லக்கூடாதுனு சொல்லுது…

ஓ… அந்த காற்றையே ஓர் வித பயத்தோட பார்த்தாள்..
ஏ.. ஏன் சொல்லவேணாம் னு சொல்லுது…. திக்கி திணறி கேட்டாள் ….

ஹாஹா…. இது தான் உங்களை அழிக்க நினைக்கும் ஆத்மா… நான் கட்டு போட்டு இருக்கறதுனால ….இங்க நெருங்க முடியாமல் காற்றாய் சூழந்துகொண்டிருக்கு…

ஓ… பயந்து போனாள் வேர்த்து கொட்டியது…. நீங்க தான் காப்பாத்தணும்சாமி என்னையும் என் மகன் மகளை…எல்லாம்… பயத்தோட கையெடுத்து கும்பிட …

ஹாஹா…. கம்பிரமாய் இறங்கி வரும் அகிலாண்டேஸ்வரியை ஓர் நொடி நினைத்து பார்த்தான்…. இதழ்கிடையில் ஓர் ஏளன சிரிப்பு சிரிக்கவும்…

அகிலா … மன்னிப்பு கேட்டாள் நான் அப்படி நடந்து இருக்க கூடாது தான் மன்னிச்சிருங்க சாமி நீங்க தான் காப்பாத்தணும் …. எங்களை கைவிட்டுடாதீங்க… சுழன்று அடிக்கும் காத்தை பயத்ததோடு பார்க்கவும்..

அந்த காத்து ஹாஹாஹா ஆக்ரோஷமாய் சிரித்தது….
விட மாட்டேன் நீ எங்கே போனாலும் விட மாட்டேன் உன் குலமே தழைக்க விட மாட்டேன் டி ஹாஹாஹா ஹாஹாஹா…. சிரிப்பொலி கேட்டு கொண்டிருக்க.. அகிலாண்டேஸ்வரி ரிஷிபனயே பயந்து போய் பார்த்தாள்…

ஹ்ம்ம்.. நான் இருக்கேன் பயப்படாதீங்க…. ரிஷி கண்மூடி மந்திரம் சொல்ல அவன் கையில் தாய்யித்து மாதிரி வரவும் அதை எடுத்து அகிலாவிடம் குடுத்து இதை வீட்டில் உள்ள உங்க சொந்தங்களுக்கு மட்டும் குடுத்து கட்டிக்க சொல்லுங்க…

அகிலா.. ஏன்.. வீட்ல எல்லாருக்கும் கட்டணும் ஆபத்து என் மகனுக்கு தானே… சந்தேகம் கேட்கவும் …

ஹாஹாஹா இப்போ வந்தா ஆத்மா என்ன சொல்லிட்டு போச்சு உங்க குலம் தழைக்கவிடாதுனு தானே…
உங்க குலம் னா நீங்க உங்க மகனும் மட்டும் இல்லை
உங்க மகள் அவங்களுக்கு வாரிசு இருந்தா எல்லாரையும் தான் குறிக்கும்… புரிதா…

ஹ்ம்ம்…. சரிங்க சாமி அகிலா நடுங்கி போனாள்… உங்களை தான் மலை போல நம்பிருக்கேன்… ..

ஹ்ம்ம்.. என்னை நம்பி வந்துட்டீங்க… நீங்க நான் சொல்லுற மாதிரி நடந்தால் மட்டுமே என்னால் உங்க குடும்பத்தை காப்பாத்த முடியும்…

செய்யறேன் நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன் சாமி
என் குடும்பத்தை மட்டும் காப்பாத்தி குடுங்க அகிலா பயத்தில் சொல்லவும்…

இந்த ஊர் கோவில் பூசாரி இருக்கார் இல்லையா.

ஆமா … இருக்கார் சாமி எனக்கு தெரிஞ்சவர் தான்…

ஹ்ம்ம் அவர்க்கு ஒருபொண்ணு இருக்கு தெரியுமா..

ஹ்ம்ம் சாமி தெரியும் ஆனா பேர்லாம் தெரியாது..
பாத்து இருக்கேன் .. கோவில் வரப்ப… எதுக்கு கேக்குறீங்க சாமி…

ஹ்ம்ம் சொல்லுறேன் பொறுங்க… அவசரம் படாம செய்யணும் இல்லனா ஆபத்து நமக்கு தான்…

ஹ்ம்ம் சொல்லுங்க சாமி ..அதிர்ச்சியோட கேட்டாள்..
உங்க மகனும் குடும்பமும் எந்த ஆபத்தும் இல்லாம இருக்கணும்னு னா
அந்த பொண்ணை தான் உங்க மகனுக்கு கட்டிவைக்கணும்…

என்ன….?? அதிர்ச்சியோட பார்த்தாள்… சாமி என் பரம்பரை என்ன, வசதி என்ன , அந்தஸ்து என்ன, கேவலம் பூசாரி வீட்டு பொண்ணா எனக்கு மருமகளா வரனும் … என்ன சாமி சொல்லுறீங்க…

இதுக்கு வேறபரிகாரமே இல்லையா சாமி வேற இருந்தா சொல்லுங்களேன்… தயவு செய்து.
அகிலாண்டேஸ்வரி கேட்கவும்…

ஹாஹாஹா .. உங்களுக்கு அந்தஸ்து கவுரவம் முக்கியமா இல்ல உங்க மகன் உயிர் முக்கியமா..

அதிர்ந்து போனார் அகிலாண்டேஸ்வரி என்ன சாமி இப்படி கேட்டுட்டீங்க ..?
எனக்கு எல்லாத்தயும் விட என் மகன் தான் சாமி முக்கியம்… கண்கலங்கினார்…

அகிலாண்டேஸ்வரி கண்கலங்குவதை பார்த்து ரிஷிபனுக்கே பரிதாபம் ஏற்பட அம்மா நான் சொல்லுறத கேளுங்க கேட்டா தான் உங்க மகன் உயிரை காப்பாத்த முடியும் வேற வழி இல்ல மா …

ஹ்ம்ம் அகிலா மனசை திட படுத்தி கொண்டாள்…. என் மகனை விட இந்த உலகத்துல எதுவும் பெருசில்ல சாமி நீங்க என்ன செய்ய சொன்னாலும் நான் செய்யுறேன் சொல்லுங்க… கவலையாய் சொல்லவும்…

ரிஷிபன் சிரித்து கொண்டான் …

என்ன சாமி சிரிக்கிறீங்க.. நான் உண்மையா தான் சொல்லுறேன் நீங்க எது சொன்னாலும் நான் கேட்டுக்கிறேன்..

அப்போ அந்த பூசாரி பொண்ணா என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டா என் மகனுக்கு வந்து இருக்குற ஆபத்து விலகிடுமா சாமி… ஒரு தாயோட பரிதவிப்போட கேட்கவும் …

ஹாஹாஹா….. அதுக்கும் ரிஷிபன் சிரித்தான் ..

என்ன சாமி நான் எவளோ கவலையோடு கேக்குறேன் நீங்க என்னடனா சிரிச்சிட்டு இருக்கீங்க…. ரிஷிபன் மேல் குறைப்படவும் …

ஹ்ம்… நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு எளிதில் நடக்கூடியது இல்லை இந்த கல்யாணம்…

என்ன சாமி சொல்லுறீங்க ? நீங்கதான அந்த பூசாரி வீட்டு பொண்ணா கல்யாணம் பண்ணி வச்சிட்டா என் மகனை காப்பாத்தலாம்னு சொன்னிங்க…
இப்போ நீங்களே மாத்தி பேசுனா என்ன அர்த்தம்…?

இப்பவும் அது தான் சொல்லுறேன் …. அந்த பொண்ணு தான் உங்க மகனை காப்பாத்த போறது….
ஆனால் இந்த கல்யாணம் நடக்காம இருக்க ஆயிரம் தடைகள் வரலாம் …அத்தனையும் கடந்து நீங்க இந்த கல்யாணத்தை நடத்தணும்…

ஹ்ம்ம்ம் புரிந்தது சாமி என் உசுரே போனாலும் பரவாயில்ல எப்படியாவது இந்த கல்யாணத்த நடத்துறேன்….

ஹ்ம்…. இந்தாங்க இந்த தாய்யுது கட்டிகிட்டதற்குஅப்றம் ஊர் எல்லை விட்டோ இல்லை வெளியுரோ எங்கேயும் போக கூடாது … கல்யாணம் முடியும் வரை ..

ஓ.. அப்படி போனா என்ன ஆகும் சாமி …

ரிஷிபன் அகிலாவையே ஓர் அழுத்தமாய் பார்வை பார்த்தான் .
..உயிர் பலி தொடங்கிடும்…. எச்சரிக்கை விடுக்கவும்…

அதிர்ந்து போனாள் அகிலாண்டேஸ்வரி… ஹ்ம்ம் சரிங்க சாமி … இப்பவே போய் அந்த பொண்ணையே என் மகனுக்குபேசி முடிக்கிறேன்.. கிளம்பவும்…

நில்லுங்க….. ரிஷிபன் சத்தமாய் அதட்டவும்.. அகிலா பயந்து போனாள்… அதிர்ச்சியோட ரிஷிபன் முகத்தை பார்க்க …

எனக்கு அந்த பொண்ணோட உச்சி முடி… உடுத்துன ஆடை.. கால் கட்டைவிரல் நகம்துண்டு … மூணுமே எனக்கு வேணும் எவளோ சீக்கிரமா எடுத்து குடுக்க முடியுமோ அவளோ சீக்கிரமா குடுத்தா
நல்லது உங்களுக்கு…

ஹ்ம்ம் சரிங்க சாமி எடுத்து குடுக்கிறேன் …

ரிஷிபன்.. திரும்பி முனியனை பார்த்து கை நீட்ட அவன் கையில் வெற்றிலை வைத்தான் அந்த வெற்றிலையில் மை போல தடவி அகிலா கையில் குடுத்து இதை அந்த பொண்ணு தலையில் தடவுங்க….

ஹ்ம் சரிங்க சாமி …
உங்களால முடிலனா அந்த வீட்டில் அந்த பொண்ணுக்கு நெருங்கின சொந்தமா இருக்குறவங்க கையில் குடுத்து வைக்க சொல்லுங்க சரியா…

ஹ்ம் சாமி கண்டிப்பா செய்யுறேன்…

ஹ்ம் கண்ணைமூடி ஏதோ மந்த்ரம் சொல்லியவன் … அகிலாவிடம் உங்க கையை நீட்டுங்க சொல்லவும்..

அகிலா கையை நீட்டவும் அதில் ரிஷிபன் தாயத்து கட்டினான்…..இப்போ கிளம்புங்க…

அகிலா சுழன்று அடிக்கும் காத்தையே பயத்தோடு பார்க்கவும் ..

பயப்படாதீங்க … நான் கட்டிஇருக்கும் தாயத்து உங்க கையில் இருக்கும் வரை உங்களுக்கு எந்த ஆபத்தும் நெருங்காது போய்ட்டு வாங்க…. ரிஷிபன் சொல்லியனுப்பவும்…

ஹ்ம்ம்ம் .. சரிங்க சாமி….

ஆத்மாவின் பயணம் தொடர போகிறது…..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago