நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதுறேன்
இந்த எபி..
உயிர் தேடும் ஓர் ஆத்மா … பகுதி 9
, *
குருவே என்னாச்சு ஏன் அலறுனீங்க….
முனியா…
நான் சொல்லப் போறத மட்டும் காதுல வாங்கிக்கோ என்னிடம் பதில் வார்த்தை எதுவும் கேட்க கூடாது சரியா ….
ஹ்ம்ம்… முனியன் ஓர் வித பயத்தோடவே சரிங்க குருவே னு சொன்னான் ..
அவன் ஆழ் மனதில் எதுவோ சரியில்லைனு பட்டுக்கொண்டே இருந்ததது ….
ஹ்ம்ம் சரி இனி நடக்க போறத ஒதுங்கி நின்னு பாக்கறது தவிர வேற ஒன்னும் நம்மளால பண்ணமுடியாது … மனதில் நினைத்து கொண்டே ரிஷி சொன்ன மாதிரி ஒரு சக்கரத்தில் அமர்ந்து ரிஷிபனையே பார்த்து கொண்டிருந்தான்..
ரிஷி மனதுக்குள்ள மந்திரம் சொல்லிக்கொண்டே இருந்தவன் சட்டென்று கண்திறந்து முனியனை பக்கத்தில் வா என்று அழைத்தான்…
முனியன் பயத்தோட ரிஷிபனின் அருகில் சென்று சொல்லுங்க குருவே..
கேட்க ரிஷிபன் காதுல சொல்ல சொல்ல ஹ்ம்ம்னு தலையை மட்டும் ஆட்டிக் கொண்டான் .
அந்திப்பொழுது சாயரத்துக்குள்ள என் முன்னாடி நீ வந்துரனும் முனியா புரிதா.. அதுவரை நா சொல்லுறதை மனதில் ஏத்திக்கோ இது உன்ன தக்க சமயத்தில் காப்பாத்தும்…
ஹுக்கும் இதுக்கு இவரே போலாம், எப்போ பாத்தாலும் என்னையே தூண்டிலா போடறேதே இவருக்கு பொழப்பா போச்சு மனசுக்குள்ள ரிஷிபனை பொருமினான் வெளியில்,
சரிங்க குருவே இப்பவே போறேன் என… சொல்லிவிட்டு காயத்திரியின் வீட்டை நோக்கி புறப்பட்டான்.
அங்கே போன முனியனின் கண்களில் அவன் கண்ட காட்சியில் பயத்தில்பேய் அறைந்தது போல் உறைந்து நின்று விட்டான்…
காரணம் வாசுவின் உடல் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது.. அங்கிருக்கும் அனைவரும் அதிர்ச்சியில் நின்று இருக்க….
முனியனுக்குள் ஒரு பக்கம் பயம் இருந்தாலும் ரிஷி சொன்னதை செஞ்சே ஆகணுமே…, தைரியத்தை வரவழைத்துக்கொண்டுதுணிஞ்சு உள்ளே சென்றான்…
காயத்திரியிடம் அவளை விட்டுவிடு இல்லையென்றால் அடுத்து நடக்கும் பின் விளைவுகளை உன்னால சமாளிக்க முடியாமல் போகலாம் நான் சொல்லுறதை கேளு விட்டு விடு தமயந்தி அவளிடம் … முனியன் கோவத்தோட பேசவும் …
காயத்திரி சடார்னு முனியனை திரும்பி பார்த்தாள்..
ஹா ஹா ஹா…..
முனியன் ஏளனமாய் காயத்திரி பார்த்து சிரித்தான் என்ன தமயந்தி அப்படி பாக்குற, இவனுக்கு எப்படி நம்ம பேரு தெரிஞ்சதுனு பாக்குறியா பேரு மட்டும் இல்ல உன் ஜாதகமே என்கிட்ட இருக்கு … ஒழுங்கா அவளை விட்டுடு எச்சரித்தான் முனியன்….
காயத்திரி வாசுவை விடாமல் முனியனை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.. முனியனுக்குள் உள்ளூர பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தைரியமாய் காயத்திரி எதிர் கொண்டான்..
அவன் அருகில் வந்த காயத்திரி … முனியனை தீர்க்கமான பார்வையால் ஆராய்ந்தால் ..
அந்த பார்வையின் வீச்சில் முனியனுக்குள் முதுகு தண்டு சிலிட்டது…
முனியனை தீர்க்கமாய் பார்த்தபடி
என்ன பத்தி எல்லாமே உனக்கு தெரியுமா ..டா
ஆஅ து வந்து ஹ்ம்ம் எல்லாம் தெரியும் நாக்குழறி பதில் சொல்லவும்.
முனியனின் தடுமாற்றத்தை கண்டு
ஹாஹாஹா… காயத்திரி ஆங்காரமாய் சிரித்தாள்…
அந்த சிரிப்போடவே பேசினாள் போய் சொல்லுடா உன்ன அனுப்பினவன் கிட்ட அவன் முடிவு நெருங்கி விட்டதுனு …
அவனுக்கும் நான் நாள் குறித்து விட்டேனு போய் சொல்லு சொல்லிவிட்டு ஹாஹாஹா காயத்திரி சிரிக்கவும் …
(முனியன் வாயை வச்சிட்டு சும்மா இல்லாம )
அதெல்லாம் போக முடியாது ஒழுங்கா இங்கிருந்து போய்டு இல்லை
என் குருவிடம் சொல்லி உனக்கு ஒரு முடிவு கட்டிடுவேன் ஜாக்கிரதை….
எச்சரிக்கவும்…
ஆகோரக்ஷமாய் சிரித்தவள் … சட்டென்று நிறுத்தி முனியன் கழுத்தை இறுக்கி பிடித்தாள்….
முனியன் மூச்சுவிடமுடியாமல் திணறிகொண்டிருந்தான்..,
அங்கிருந்த அனைவரும் காயத்திரியோட கையின் நீளத்தை பார்த்து பயத்தில் மிரண்டுபோய் நின்றுந்தனர்..
முனியனுக்கு மூச்சு விட சிரமபடவும் …
ஜானகி அழுத படியே ஓடிவந்தாள் ..அம்மாடி தமயந்தி நீ யாரோ எவரோ… நேக்கு தெரியாதுமா .. என் பொண்ணு உடம்புல புகுந்து இருக்க… பாவம் என் பொண்ணு அவளை விட்டுடு மா உனக்கு புண்ணியமா போகும்….
முனியன் மனதுக்குள் நினைத்தான் அடிப்பாவி உன் பொண்ண காப்பாத்த போய் நா வந்து மாட்டிகிட்டேன்..
உசுர கையில பிடிச்சிக்கிட்டு தத்தளிக்கிறேன் .. இந்தம்மா பாரேன் இது பொண்ணுகாக மட்டும் இந்த பேய்கிட்ட பேசிகிட்டு இருக்கு … ..
இதுங்களுக்காக என் உசுர குடுக்கணுமா …
குருவே என்னை காப்பாத்துங்க.. மனதுக்குள்ள ரிஷிபனை நினைத்து கொண்டான்……
இந்த புள்ளையாண்டான் பாவம் மா விட்டுடு உனக்கு உயிர் தான வேணும் என் உசுர கூட எடுத்துக்கோ இந்த புள்ளையாண்டன விட்ரு மா ஜானகி கெஞ்சி கொண்டிருந்தாள்..
அப்பாடா நமக்காகவும் கேக்குது கொஞ்ச நேரத்துல இந்தம்மாவ தப்பா நெனைச்சிட்டேனே…
ஜானகியின் அழுகை காயத்திரியை என்னவோ செய்ய அவள் பிடி லேசாக இளகியது…..அதுவும் என் உயிர் கூட எடுத்துக்கோனு சொல்லியது காயத்திரியின் மனதை யாரோ சுரில் என்று தட்டியது போல் உணர்ந்தாள்…
அம்மாஆ… என ஓவென கதறி அழுதாள் இதுவரை அவள் மிரட்டி பயம் காட்டியே பார்த்து இருந்தவர்கள் அவள் அழுவதை பார்த்ததும் அங்கிருந்த அனைவரும் காயத்திரியை பரிதாபமா பார்க்கவும்..
காயத்திரி மெதுவாக எழுந்து ஜானகியிடம் வந்தாள் உங்க மடில நா படுத்துக்கவா அம்மா..
ஜானகிக்கு ஒன்னும் புரியவில்லை என்றாலும் அவள் அம்மாவென கூப்பிட்டதே தாய்மையோட வாம்மா வந்து படுத்துக்கோ னு அழைத்தாள்…
அம்மா … அம்மா கதறி கொண்டிருந்தாள்.. அழாதே மா அம்மா நா இருக்கேன் .டா கண்ணா .. உனக்கு ஒன்னும் ஆகவிடமாட்டேன்…..
ஓவென கதறியவள் அம்மா என்னதான் கொண்டாட்டங்களே அம்மாஆஆ… துடிதுடிக்க என்னயும் என்ன உயிரா நினைத்த ரெண்டு ஜீவன்களையும் பாரபட்சம்மின்றி கொன்னுட்டாங்களே… அம்மாஆஆ… கதறினாள்.
அவள் நினைவு பின்னோக்கி சென்றது……
ஏலே மாரி முத்து….
என்ன ஆத்தா….
அந்த கன்ன அவுத்துவுடு காலமரலேந்து கத்திகிட்டு கிடக்கு…. விராச அவுத்துவிடு டா..
தோ ஆத்தா.. போறேன்
ஏலே மாரி.
ஆத்தா..
இந்த சில்வண்டு பாத்தியாலே எங்கன போன னு .. தெரியல யே ஆயி அப்பன் இல்லாத புள்ளையா போச்சே னு செல்லம் குடுத்து புட்டேன் என்கிட்டயே எகனைக்கு முகனையா திருப்பிட்டு நிக்குறா… என்னத்த சொல்ல…
விடு ஆத்தா சின்ன புள்ள தான.. அது என்ன உன்னாண்ட நகை நட்டு வேணும்னா கேட்டுச்சுபுள்ள ஏதோ படிக்கணும்னு ஆசை பட்டு கேக்குது..
ஊர் உலகத்துல போய் பாரு ஆத்தா நம்ம சில்வண்டு வயசுல இருக்குற பொண்ணுகல எல்லாம் கரும்பு காட்டுக்கும் ஒத்தயடி பாதையில ஒதுங்கி நிக்குதுங்க..
நம்ம புள்ள சொக்க தங்கம் ஆத்தா. வூடு வூடு விட்டா பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம் விட்டா வுடு னு இருக்குது அத போய் வையுற…
அதுக்கில்லடா மாரி படிக்க வைக்கலாம் அதாண்டா சண்டை போடல.. டா இப்பவே எம்மவன் கிட்ட ஒதுங்கி ஒதுங்கி நிக்குறா இன்னும் பெரிய படிப்புலாம் படிச்சிபுட்டா எம்புள்ளையக்கு யார்டா பதில் சொல்லுறது…
சில்வண்டுனா எம்மவனுக்கு உசுரு அத ஒன்னு சொல்லிட கூடாது எம்மவன் என்னண்டையே பாய்ஞ்சிட்டு வருவான் உனக்கே தெரியும் தான..
அம்புட்டு உசுரு வச்சிருக்கான் அந்த புள்ள மேல. இவ என்னடானா எம்மவன கண்டுக்கவே மாற்றா..
அதெல்லாம் சரியாகிடும் ஆத்தா சில்வண்டு பத்தி நமக்கு தெரியாதா.. அது பாசக்கார புள்ள நீ வேணா பாரு அது எம்புட்டு பெரிய படிப்புப் படிச்சாலும் நம்ம ஐயாவை தான் கட்டிக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு…
என்னமோ டா நீ சொல்லுறமாதிரி நடந்ததா உன் வாய்க்கு சக்கரைய அள்ளி போடுறேன்…
எல்லாம் அவன் தலையில் என்ன எழுதி இருக்கோ அதன்படி தான் நடக்க போகுது ஏதோ நீ சொல்லுற நல்லது நடக்கட்டும்….ரெண்டு பேரும் நம்மள பத்தி தான் பேசுறாங்க னு தெரியாமல் …
நம்ம சில்வண்டு ஆஜர் ஆகுறா ..
என்ன மாரி காலையிலே மாநாடு நடக்குதுபோலயே கண்ணம்மாவை ஓர்மார்க்கமாய் பார்த்தபடி மாரியை பார்த்து கேட்டாள் சில்வண்டு(என்கிற )தமயந்தி…
ஆங்… என்னங்க அம்மிணிஅதெல்லாம் ஒன்னும்மில்ல ஆத்தா உங்க அத்தைமார் தான் உன்மேல கவலை பட்டுகிடக்கு…
என்மேல என்னத்துக்கு கவலையாம் மாரி நா நல்லா படிக்கமாட்டேனு அத்தாச்சி.. சொல்லுச்சா சொல்லு மாரி..
கோவமாய் மாரியிடம் சண்டைக்கு பாய்ந்து போனாள்…,
அப்படிலாம் இல்ல அம்மிணி ஆத்தாவுக்கு ஒரே கவலை தான் நாம போன பின்னாடி அவுக மகனநெனைச்சி..தான் கவலை பட்டு கிடக்கு …
ஓரமாய் கண்ணம்மாவை பார்த்து கண் சிமிட்டினான். சத்த நேரம் சும்மா இரு ஆத்தா இந்த புள்ள மனசுல என்ன நெனைக்குது பாக்கலாம்..
ஏன் ஏன் கவலை.. படனும் மச்சானை நா லாம் பாத்துக்க மாட்டேனா அதெல்லாம் நல்லாவே பாத்துப்பேன்னு சொல்லு மாரி…
இன்னொன்னும் சொல்லுறேன் கேட்டுக்கோ மச்சானை மட்டும் இல்ல என்ன ஆயி அப்பன் இல்லாத குறையே தெரியாத மாதிரி வளர்த்த என் அத்தாட்சியும் நல்லா பாத்துக்குவேன்னு சொல்லு மாரி ஹுக்கும் முகத்தை வெடுக்கென்று வெட்டிய படி உள்ளே சென்று விட்டாள்.
பாத்தியா ஆத்தா நம்ம புள்ள சொக்க தங்கம் ஆத்தா வீணா இத நெனைச்சி கவலைபட்டுக்கிட்டு போ ஆத்தா ….
ஏலே மாரி .. இப்போதான்லே இவ வாயை துறந்து எம்மவன மச்சான் னு கூப்பிட்டு இருக்கா.. இது போதும் ல எம்மவன பத்தி இனி கவலை படமாட்டேன் எல்லாம் என் அண்ண மக பாத்துப்பா.. நம்பிக்கை இருக்குடா மாரி… சந்தோஷமாய் கண்ணீரை துடைத்தபடியே உள்ளே சென்றாள்.
தொடரும் ……
(திங்கள் அன்று தான் என் கதை வரும் நண்பர்களே …இனி நிறுத்தாமல் போடுகிறேன் என்னை மறக்காமல் இருந்ததற்கு நன்றிகள் … நண்பர்களே… ????)
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…