——–****
பங்களாவின் உள்ளே கால் வைத்தவள் மிரட்சியாய் பார்வையை சுழல விட்டாள் ….
அத்தாச்சி நாம உள்ளரா போவணுமா அத்தாச்சி….
ஓர் வித பயத்தோடவே சில்வண்டு கேட்டாள்..
ஏ ஆத்தா பயப்புடுற நம்ம பண்ணையாரம்மா சொக்க தங்கம் ஆத்தா நீ பயப்படாம வா அத்தாச்சி இருக்கேன்ல வா கண்ணம்மா சில்வண்டை அழைத்துகொண்டு உள்ளே சென்றாள்..
பட்டு புடவை சரசரக்க மாடில இருந்து இறங்கி வந்துகொண்டிருந்தாள் அகிலாண்டேஸ்வரி.
அடடே…
வாலே கண்ணம்மா என்னாலே கூப்பிட்டு அனுப்பின தான் இங்கன வருவியலே பெரிய ஆளாய் ஆகிட்டயலே இந்த பக்கம் கண்ணுல அக பட மாற்றியேலே….
அப்படிலாம் ஒண்ணுமில்லங்கமா …. நம்ம பசு மாடு கண்ணு போட்டு இருக்குதுங்கமோ .. அதுக்கு கொஞ்சம் உடம்பு சுகமினம் இல்லமா அதான் பக்கமே இருந்து கவனிச்சிட்டு வரேனுங்க மா….
ஓஹோ… யாரு டி உன்னையே ஒட்டிட்டு நிக்குறவ … கண்ணம்மா பின்னாடி ஒளிந்து கொண்டிருந்த சில்வண்டு பார்த்து கேட்டாள்….
இவ தான் என் அண்ணமக சில்வண்டு அம்மா..
ஹ்ம்ம்…அட துறு துறுன்னு உன்பின்னாடியே சுத்திட்டு வருவாளே அவளா இவ இப்படி நெடு நெடுனு வளர்ந்துபுட்டா….
சும்மா சொல்லக்கூடாது கண்ணம்மா உன் அண்ணமக பாக்க லட்சணமாத்தான் இருக்கா ….. உன் மவனுக்கு வெளிய பொண்ணு தேடுற ஜோலியே உனக்கில்லை போ வீட்டுலயே அழகான மருமகள தான் வச்சிட்டு இருக்க…சிரித்தபடியே சொல்ல
ஆமாங்க மா மனசெல்லாம் பூரிப்போடு கண்ணம்மா சொல்லவும் …
அவர்கள் பேசுவது தம்மை பற்றி தான் புரிந்து கொண்டாள் அதுவும் மச்சானுக்கும் எனக்கும் மா தமயந்தி க்கு.. ஏனோ கண்ணம்மா பேசியது பிடிக்காமல் போனது .. அது வரை ஒட்டிபடியே நின்றுகொண்டிருந்தவள் ஓர் அடி தள்ளி நின்று கொண்டாள்…
அந்த பங்களாவை சுற்றி பார்வையை சூழல விட்டவள், மாடிபடியில் இருந்து இறங்கி வந்தவனை கண்டு அதிர்ந்து போனாள்…
பார்த்திபனும் தமயந்தியை பார்த்து அதிர்ந்து தான் போனான்…
அப்போது…
சில்வண்டு 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தநேரம்..
. ஒரு நாள் சில்வண்டு பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வரும் போது பாண்டிக்கு காய்ச்சல் பயங்கரமா அடிக்கவே முனங்கி கொண்டிருந்தான்..
சில்வண்டு ஓடி போய் நெத்திய தொட்டு பார்த்துட்டு அச்சச்சோ எம்புட்டு காய்ச்சல் அடிக்குது மச்சானுக்கு . .. மச்சானை தனியா விட்டுட்டு எங்கன போச்சு அத்தாச்சி … பக்கத்து வீட்டு ராக்காயி அக்காவிடம் கேட்டாள்..
அக்கோவ் அத்தாச்சி எங்கன போச்சு உனக்கு தெரியுமா…
யாரது வாலே சில்வண்டு .. உங்க அத்தாச்சியா பண்ணையாரம்மா வர சொன்னாங்க னு போனாக லே ஏண்டி என்ன ஆச்சி எதுக்கு இப்போ அவவுகள தேடுறவ…
அக்கோவ் மச்சானுக்கு காய்ச்சல் அடிக்குது அக்கோவ் என்ன பண்றதுனு தெரியல அதான் உங்கிட்ட கேட்டுட்டு போலாம் னு வந்தேன்..
அடியாத்தி பாண்டிக்கா காய்ச்சலா அடிக்குது ஏ ஆத்தா இத முன்னமே சொல்லுறதுக்கு என்ன வாலே போவோம்…
அய்யா பாண்டி என்னால பண்ணுது உடம்பு நெத்திய தொட்டு பாத்துட்டு அம்மாடி என்னா அனல் அடிக்குது வா ராசா ஆஸ்பத்திரிக்கு போவோம்…
ஏலே சில்வண்டு நா பக்கத்து ஊருக்குள்ள இருக்குற ஆஸ்பத்திரிக்கு பாண்டிய கூட்டிட்டு போறேன் நீ போய் அத்தாச்சிய கூட்டிட்டு வா …
ஹ்ம்.. சரி அக்கோவ்
ராக்காயி பாண்டியனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக சில்வண்டு அத்தாச்சியா கூட்டிட்டு வர பங்களா நோக்கி ஓடினாள்…(கிராமபுரம் லாம் பொழுது சாய்ந்ததும் இருடிட்டும்… )
சில்வண்டு நடந்து போகையில் வெளிச்சமாய் தான் இருந்தது போக போக இருட்ட ஆரம்பிக்கவும் சில்வண்டுக்கு பயம் எடுக்க ஆரம்பித்தது எங்கோ நாய் குறைக்கும் சத்தம் கேட்டதும் பயத்தில் கண்முன் தெரியாமல் அலறிஅடித்து கொண்டே ஓடிவந்தவள் … கேட் திறந்து இருக்கவும் உள்ளே ஓடினாள்
எதிரே யார் வாரங்கனு பாக்காம கண்முன் தெரியாமல் பயத்தில் ஓடியவள்..எதிரே வந்தவன் மீது மோதிய வேகத்தில் அவன் மேல் சரிந்து விழுந்தாள்….
பார்த்திபனுக்கோ தன் மேல் ஒரு பூ குவியல் போல வந்து விழுந்தவளைஅதிசயமாய் பார்த்தான் … யார்னு . அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க…
அவளோ பயத்தில் அவனோடு இறுக்கமாய் அணைத்தபடி கண்மூடிக் கொண்டாள்…அவளின் செய்கையில் ஆச்சரியம் பட்டான்…
இறுக்கமாய் மூடி கொண்டிருக்கும் விழியில் கண் பதித்தவன் அவளின் இதழின் அழகில் சொக்கி போனான்…
ஆஹா என்னமா இருக்கா …
பாக்க சின்ன பொண்ணா இருக்கா ஆனா அழகா இருக்காலே, யார் இவள் எங்க இருந்து வரா, இவ ஓடிவந்தது வச்சி பாத்தா யாரோ இவளை துரத்திட்டு வந்து இருக்கனும் அதான் அம்மிணி பயந்துட்டாங்க போல…..
ஹலோ அம்மணி கண்ணை திறங்க யாரும் இல்லை பயம் வேணாம்.. திறங்க சில்வண்டு கன்னத்தை தட்டினான் பார்த்திபன்..
பயத்தில் கண்ணை இறுக்கமாய் மூடி கொண்டிருந்தவள் … ஆணின் குரல் கேட்டதும் சட்டென்று கண் திறந்தாள் தமயந்தி.. தான் ஒரு ஆடவன் மேல் படர்ந்து இருக்கோம்னு உள் உணர்வு சொல்லியும் அவனை விட்டு விலக முடியாமல் அவனின் பார்வையோடு தன் பார்வையை கலக்க விட்டாள்.. இனம் புரியாத சுகமான உணர்வுகுள் இழுத்து செல்லப்பட்டாள்…
அவனிடமும் மாறுதல் இருக்க அவளை இறுக்கமாய் அணைத்தான்… அந்த அணைப்பின் இறுக்கம் தேகம் முழுவதும் பரவி சுகமான இம்சைக்கு ஆளானாள்.
அவனின் அணைப்பு இன்னும் இன்னும் நெருக்கமாக பெண்ணுக்கே உரிய எச்சரிக்கை உணர்வு யோசிக்க வைத்தது….. யார் இவன்…. இதுக்கு முன்ன இவனை பாத்தது கூட கிடையாது ஆனா நாம இவனோட இவளோ நெருக்கமாக கட்டிட்டு இருக்கோமே… நானா இது எனக்கே சந்தேகமா இருக்கு…
நாம எதுக்கு இங்க வந்தோம்…. அச்சச்சோ மச்சானுக்கு உடம்பு சரில்ல அத்தாச்சி கூட்டிட்டு போக தான வந்தோம் சட்டுனு அவனை விட்டு விலகவும் …
அது வரை இனம் புரியாத சுகமான உணர்வுக்குள் அமிழ்ந்து இருந்தவன் அது இன்னும் வேண்டும் இன்னும் நீடிக்கணும்னு தோன்றியது அவனுக்கு அவள் விலக நினைக்கவும் …. விலக விடாமல் இன்னும் இறுக்கமாக அணைத்தான்….
தமயந்திக்கு அவனின் இறுக்கமான அணைப்பில் மூச்சு முட்டியது ….
ஹ்ம்ம் விடுங்க … என்று முனங்கினாள்.
அவன் மோன நிலையில் இருந்து வெளியே வரவும் … தன் மேல் விழுந்தவளை ஆராய்ந்தான்.. மேல் இருந்து கீழ் வரை…
அளவான நெற்றி. அதுல சிகப்பு பொட்டு. அதுக்கு மேல சிறியதா
சந்தனம்- குங்குமம் வச்சிருக்கா. அழகான நாசியின் ஓரத்தில சிகப்பு கல் பதித்த மூக்குத்தி போட்டு இருக்கா. அதுவும் இவ அழகை தூக்கி காட்டுதே. ஆரஞ்சு சுளை போல உதடு… ஆஆ.. உதட்டு ஓரத்தில் கூட மச்சம் ஒன்னு இருக்குறாப் போல தெறிதே, ஆமா இருக்கு…அது இன்னும் அழகை கூட்டுதே.
காதுல ஜிமிக்கி போட்டு இருக்கா… சங்கு போல இருக்கும் கழுத்துல மெல்லிய செயின் போட்டு இருக்கா.
பள்ளிகூடம் போரவளா இருப்பா போல அதான் யூனிபார்ம் கூட மாத்தாம வந்து இருக்கா …
ஹ்ம்ம் பாவாடை தாவணில கூட ஒரு மார்கமா தான் இருக்கா… இதழ் கடையில் விஷம சிரிப்போட பார்த்து கொண்டிருந்தான்.
அவளும் அவனை போலவே பார்வையால் அளந்து கொண்டிருந்தாள். அட என்னா அழகா ஸ்டைலா இருக்காரு.. கிராப்பு கட்டிங், முத்து போல பல்வரிசை, ரோஜா பூ உதடு ..
வெறும் முண்டா பனியனும் அரைக்கால் டௌசரும் போட்டு இருக்காரே.. அச்சச்சோ இவ்ளோ பெரிய பங்களால இருக்காரு கொஞ்சம் கௌரவமா துணி உடுத்த கூடாதா… என்ன துணியோ … ஹுக்கும் ….. என்று மனதில் நினைத்து கொண்டிருந்த பொழுது,
அடியே சில்வண்டு நீ பாத்த வர
போதும்டியம்மா இன்னும் எம்மானேரம் தான் இவன் மேலயே விழுந்து கிடப்ப. என..அவள் உள் மனது இடித்துறைக்க … சட்டுனு எழுந்துக்க பார்த்தாள்…
எங்க எழுந்துக்க விட்டா தானே….
அவன் தான் அவளை இறுக்கமா பிடித்துக்கொண்டு இருக்கானே…
சில்வண்டு விலக முடியாமல் திணறினாள்.
அவளின் விலகளில் பார்த்திபனுக்கு கோவம் வர ஏன் அவசரப்படுற இரு விடுறேனு சொல்லவும் …..
ஹ்ம்ம்.. விடுங்க நா போகணும் … திமிறினாள்…
ஹ்ம் போலாம்.. போலாம் யார் நீ எங்க இருக்க உன் பேர் என்னனு சொல்லு அப்புறம் உன்ன விடுறேன்…
அதெல்லாம் சொல்ல மாட்டேன் இப்போ விட போறிங்களா இல்லையா … சில்வண்டுக்கும் கோவம் வரவும்… கோவத்தோடவே கேட்டாள்.
பார்த்திபன் எதுக்கும் அசராமல் சரி விடுறேன் உன் பேர் மட்டும் சொல்லுனு சொன்னான்..
என் பேர் எதுக்கு உங்களுக்கு விடுங்க இப்போ நீங்க விடல நா கத்தி கூச்சல் போட்ருவேன் ஆமா சொல்லிப்புட்டேன். ஒழுங்கு மரியாதையா என்ன விடுங்க நுனி மூக்கு சிவக்க கோவத்தோட சொல்லவும்,
பார்த்திபனுக்கு அவளின் கோவம் சிரிப்பை வரவைத்தது கலகலவென சிரித்தான். .
என்ன இவன் விடுனு சொன்னாக்க கிறுக்கு பய போல சிரிக்குறான் மனசுக்குள் நினைத்தவள்… கட்டுக்குகடுங்காம கோவம் வர … இங்க பாரு என்ன விடு இல்லனா கத்தி கூப்பாடு போட்ருவேன் பாத்துக்க ஒரு விரல் நீட்டி மறுபடியும் மிரட்டினாள் அவளின் செய்கையில்
பார்த்திபன் சிரித்தபடியே இருக்க… சில்வண்டு அத்தாச்சீனு கத்தவும்..
பார்த்திபனுக்கு ஐயோ கத்திட்டாளே என்ற பதட்டத்துடன் என்ன பண்ணுறோம் யோசிக்காம சட்டென்று அவளை இழுத்து வாய் திறக்க விடாமல் வாயோடு வாய் சேர்த்து அழுத்தி மூடி கொண்டான்.
ஹ்ம்ம்ம் மூச்சு விட முடியாமல் திணறினாள்… அப்போதும் விடாமல் அவளை கைப்பிடிக்குள்ளயே இறுக்கமாய் பிடித்துகொண்டிருந்தான் ..
கண்ணம்மாவுக்கு தன்னை யாரோ கூப்பிட்டது போல தோன்றவும் . ….. வெளியே ஓடி வந்தாள் ஆறதுல கூப்பிட்டது என கேட்டுட்டே வர..
யாரோ வர சத்தம் கேட்டு சட்டுனு தன் பிடியில் இருந்து விடுவித்தான் அவளை …
அவனின் முரட்டு அணைப்பிலும் அழுத்தமான முத்தத்தாலும் அதிர்ச்சி அடைந்த தமயந்தி அப்படியே மயங்கியும் போனாள்..
ஆள் வர அரவம் பக்கத்தில் கேக்க அவளை விட மனசில்லாமல் பக்கத்துல இருக்குற செடியின் மறைவில் போய் நின்று கொண்டான்.
கண்ணம்மா… அங்க யாரோ படுத்து இருகப்பலே இருக்கே யாரதுனு ஓடி வந்து பாத்தாள்.
அடியாத்தி ஆத்தா சில்வண்டு என்னடா ஆச்சி அம்மாடி எழுந்திரு டா அப்பனே குண்ண குடி கருப்பா உனக்கு கடா வெட்டி பொங்க வைக்குறேன் இவளை கண்ணு முழிக்க வை மனசுக்குள்ளாற சாமி கிட்ட வேண்டிக்கிட்டு தண்ணி கொண்டு முகத்தில் அடித்தாள்.
சில்லென்று தண்ணி பட்டதும் சிலிர்த்து கண்ணை திறந்து பார்த்த சில்வண்டு . தான் எங்க இருக்கோம் என்ன நடந்துச்சுனு யோசிக்கறதுக்கு முன்ன, அத்தாச்சிய பார்த்ததும் பாண்டியோட நியாபகம் வரவும் …
அத்தாச்சி மச்சானுக்கு உடம்பு சரில்ல ராக்காயி யக்கா பக்கத்து ஊருக்கு கூட்டிட்டு போயிருக்கு உன்னைய கூட்டிட்டு வர தான் நான் வந்தேன்.
நாய் குரைச்சிட்டே துரத்திட்டு வந்துச்சா பயத்துல ஓடிவந்தேனா அப்படியே மயங்கி விழுந்துட்டேன் அத்தாச்சி…..
பொய் சொல்லியே பழக்கம் இல்லாத சில்வண்டு மனசரிஞ்சு இது தான் முதல் முறையா பொய் சொல்கிறாள் அத்தாச்சியிடம்….
ஐயோ சாமி என்ற ராசாவுக்கு உடம்பு சரில்லயா வாலே போவோம் … அவசர படுத்தினாள்….
தமயந்தி கண்ணம்மா கூட சென்றாலும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வர விராச வாலே ….அங்கன என்னால பார்த்துட்டு வரவ வாலே .. வேகமாய் இழுத்து கொண்டு ஓடினாள்…
அவள் போவதையே ஒளிந்து நின்று பார்த்துட்டு இருந்தவன் அவள் திரும்ப திரும்ப பார்த்துட்டு போனதும் நடந்தவை எல்லாம் நெனைச்சு பார்த்தபடி உள்ளே சென்று கட்டிலில் தொப்பென்று விழுந்தான். பக்கத்தில் இருக்கும் தலையணை எடுத்து இறுக்கமாக கட்டிக் கொண்டான்.
அவளின் அருகாமை நியாபகம் படுத்த சுகமான இம்சைக்கு உள்ளானன் ஹ்ம்ம்…. ஏய் உன் பேர் என்னடி சொல்லாமலே போய்ட்டியேடி அழகி…
விட மாட்டேன் டி எப்படியாவது உன்ன கண்டு பிடிக்கறேன் பாருடி…என்று தனக்குள் சொல்லியபடி தலையணை இறுக்கமாய் அணைத்தபடி கண்மூடி கொண்டான்.
கண்ணம்மா கூட சென்ற சில்வண்டு எதிர்பாராமல் நடந்த சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வர மனதை சஞ்சலப்படுத்த அப்படியே மயங்கி விழுந்து விட
ஆத்தாடி ஏத்தா சில்வண்டு என்னடா பண்ணுது உனக்கு சில்வண்டை தொட்டு பார்த்தாள் அவளுக்கும் காய்ச்சல் அடிக்குற போல தெரிய ஆஸ்பத்திரிலேயே ஒரு வாரம் தங்கிவிட்டனர்..
பாண்டி கிட்ட சில்வண்டுக்கும் காய்ச்சல் ராசா இங்க தான் சேத்து வைத்தியம் பாக்குறதா சொன்னதும்
அவனுக்கு வந்த காய்ச்சல் கூட பறந்து போனதை போல உணர்ந்தான். சில்வண்டை பக்கத்தில் இருந்து கவனித்துகொண்டான்….
விடியரத்துக்கு முன்னவே பார்த்திபன் வெளியே போவதும் வறுவதுமா இருக்கிறது அகிலாண்டேஸ்வரி கவினித்துக்கொண்டுதான்…. இருந்தாள்…பார்த்திபனின் நடவடிக்கையில் எதுவோ மாற்றம் தெரிய ……….அவன் எங்க போறான் வறான்னு .விசாரிக்க சொன்னாள்… இதுதான் விசியம் னு அறிந்துகொண்டதும் அமைதியாய்இருந்து கொண்டாள்…….. தொடரும்…..
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…