வணக்கம் மக்களே!!! கொஞ்சம் லேட் ஆகிடுச்சு மக்களே… காதலை தேடி அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்… படிச்சிட்டு லைக்ஸ், கமெண்ட்ஸ் சொல்லுங்க பா….
போன எபிக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி… தொடர்ந்து உங்க ஆதரவை கொடுங்க தோழிகளே….
காதலை தேடி…. – 20
இன்றோடு ருத்ரா அலுவலகத்திற்கு வந்து ஒருவாரம் ஆயிற்று. அவளது கைபேசிக்கு முயன்றால் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவளது வீட்டிற்கு தொடர்பு கொண்டாலும் பதில் இல்லை. தீபக்கிற்கும், தோழிகளுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர். அனைவரையும் சந்தித்த தீபக் மேற்கொண்டு என்ன செய்வதென்று ஆலோசித்து கொண்டிருந்தான்.
“நான் இன்னைக்கு ருத்ரா வீட்டிற்கு போய் அவங்க அப்பா கிட்ட பேசலாம்னு இருக்கேன்” – தீபக்
“நாங்க போறோம் தீபக். நீ போனா பிரச்சனை பெருசாக வாய்ப்பிருக்கு. ஒருவேளை வேறேதாவது காரணத்தால் கூட ருத்ரா வராமலிருக்கலாம்” – காவ்யா
சிறிது நேரம் யோசித்தவன் “சரி. நீங்க போயிட்டு எனக்கு என்னாச்சுன்னு உடனே தகவல் சொல்லுங்க” – தீபக்
மாலை ஆறு மணி போல் தோழிகள் மூவரும் ருத்ரா வீட்டிற்கு சென்றனர். வீட்டின் அழைப்பு மணியை அழுத்த ருத்ராவின் தாய் பார்வதி கதவை திறந்தார்.
“வாங்கம்மா.. உள்ள வாங்க..”
“ஆன்டி, ருத்ராவுக்கு என்னாச்சு? ஒருவாரமா ஆபிஸ்க்கும் வரல. போன் பண்ணாலும் போகல? என்னாச்சு அவளுக்கு?” – கிருஷ்ணா
அவர் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருக்க மதுரா, “அவளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ஆன்டி. எங்க அவ? நாங்க வந்து இவ்ளோ நேரம் ஆச்சு. இன்னும் அவளை காணோமே?”
மூவரும் மாற்றி மாற்றி கேள்வி கேட்க ருத்ராவின் தாய் பார்வதி, “அவ இங்க இல்ல. நீங்களாம் அவளோட தோழிகள்னு தான் உங்கள உள்ள கூப்பிட்டு பேசிட்டு இருக்கேன். நாங்க அவளோட காதலுக்கு ஒத்துக்கல. அவளுக்கு வேற கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம். ருத்ரா காதலிக்கிற பையன் கிட்ட சொல்லிடுங்க. இனிமே நீங்க யாரும் இங்க வரவேண்டாம்”.
அவர் இப்படி நேரிடையாக முகத்தில் அடித்தார் போல் பேசுவார் என்பதை எதிர்பார்க்காத தோழிகள் மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க, “ஆன்ட்டி, அவ இப்போ எங்க இருக்கா?” – காவ்யா
“அதெல்லாம் சொல்ல முடியாது. நீங்க கிளம்புங்க” என பார்வதி கூற மேற்கொண்டு எதுவும் கூறமுடியாமல் அங்கிருந்து கிளம்பினர்.
அங்கிருந்து வெளியே வந்தவர்கள் ருத்ராவின் தாய் பார்வதி பேசியதை தீபக்கிடம் கூறினர். அதை கேட்ட தீபக் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றான். அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தடுமாறி நின்றான்.
அனைவரையும் தவிக்க விட்ட ருத்ராவை எப்படி கண்டுபிடிப்பது என தெரியாமல் தோழிகளும், தீபக்கும் யோசித்து கொண்டிருந்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை வழக்கம் போல் எப்பொழுதும் சந்திக்கும் பூங்காவில் அருளின் வருகைக்காக மதுரா காத்துக்கொண்டிருந்தாள். அவளை அதிகம் காக்கா வைக்காமல் அருளும் வந்துவிட, அந்த ஒருவார கதையை இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ருத்ராவை பற்றியும் அவரின் தாய் பேசியதையும் அருளிடம் பகிர்ந்து கொண்டாள்.
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு அருள்”
“எதுக்கு?”
“ருத்ரா எங்க இருக்கானு தெரியல. தீபக்கும் பாவம். என்ன பண்ண போறான்னு தெரியல”.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. ருத்ரா மேல இருக்க கோவத்துல அப்படி பேசிருப்பாங்க. கொஞ்ச நாள் போனா அவங்களோட காதலை ஒத்துப்பாங்க” – அருள்
“அவங்களோட காதல் இருக்கட்டும். நம்மளோடத எப்போ நீங்க வீட்ல சொல்ல போறீங்க?”
“இன்னும் நான் பி.எச்.டி முடிக்கலை மதுரா. அது முடிச்சாதான் என்னால வீட்ல பேச முடியும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு”.
“நான் எவ்ளோ நாள் வேணாலும் காத்துட்டு இருப்பேன் அருள். ஆனா எங்க வீட்ல ஒருவருஷத்துக்கு முன்னாலையே மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொரு முறையும் யாரவது பொண்ணு பார்க்க வரும்போது அவங்க முன்னாடி நிக்கிறது நெருப்பு மேல நிக்கிற மாதிரி இருக்கு. எங்க அப்பா, அம்மாவும் பொண்ணு பார்க்க வர வரன் எப்படியும் முடிஞ்சிடணும்னு ரொம்ப ஆவலா இருக்காங்க. வர மாப்பிளையை எல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி கல்யாணத்தை தள்ளி போட்டுக்கிட்டே போறேன். நானும் அவங்கள எவ்ளோ நாள் தான் ஏமாத்திட்டு இருக்கறது?”
“இங்க பாரு மதுரா. நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். பி.எச்.டி முடிச்சிட்டு தான் எதுவா இருந்தாலும் யோசிக்க முடியும்னு. நீதான் என்னை காதலிக்கிறேன்னு சொன்னது. இப்போ எப்போ கல்யாணம்னு தொல்லை பண்ணிட்டு இருக்க. இப்படி நீ என்னை தொல்லை பண்ணிட்டு இருந்தா நான் எப்படி என்னோட பி.எச்.டி முடிக்கறது?”
“ஓ!! அப்போ நானே வந்து உன்கிட்ட காதலை சொன்னதால உனக்கு என்னை பார்த்த அலட்சியமா இருக்கா? உன்னை இப்போவே கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லலையே. என்னோட நிலைமையை தானே சொன்னேன். உன்னோட படிப்புக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை எனக்கும் கொஞ்சம் கொடுக்கலாம்ல? ஒருவேளை எனக்கு நீ மட்டும்தான் முக்கியம்னு நினைக்கிற அளவுக்கு நீ என்னை நினைக்கிறது இல்லையோ?”
“உனக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாது. நீ காதலிக்கிறன்னு சொன்னப்போவே நான் முடியாதுனு மறுத்திருந்தா இந்த தொல்லைலாம் இருந்திருக்காது. நான் தான் தப்பு பண்ணிட்டேன். நானும் உன்னை காதலிக்கிறன்னு சொல்லி தேவையில்லாத பிரச்சினையை நானே தேடிகிட்டேன்”.
“என்னது தொல்லையா?”
“ஆமா தொல்லைதான்” என எங்கோ தொடங்கிய உரையாடல் கடைசியில் சண்டையில் வந்து முடிய அருள் கோபத்தில் கிளம்பி செல்ல, மதுரா தன் அழுகையை அடக்கி கொண்டு தன் வீட்டிற்கு சென்றாள்.
அடுத்த மாதம் தன் துறை சம்பந்தமாக ஐரோப்பாவில் நடைப்பெறும் ஒரு மாநாட்டில் தன் படைப்பை சமர்பிப்பதற்கான வேலையில் மும்முரமாக இருந்ததால் மதுராவுடன் பேச அவனிற்கு நேரமில்லை. நேரமில்லை என்பது இரண்டாவது காரணம் தான். முதல் காரணம் கோபம். அதேபோல் மதுராவும் அருளின் மேல் கோபமாக இருந்ததால் அவளும் அவனை தொடர்புகொள்ளவில்லை. மேலும் தானே வழிய சென்று பேசுவதற்கு அவளின் ஈகோ தடுத்தது.
ஒரு மாதம் கடந்த நிலையில் அதிகாலை இரண்டு மணிக்கு தீபக்கின் கைபேசி அலறியது. நல்ல தூக்கத்தில் இருந்தவன் பதறியடித்து கொண்டு எழுந்தான். கைபேசி விடாமல் அலற அதை எடுத்து பார்த்தவன் வெளிநாடு எண்ணாக இருக்க கைபேசியை உயிர்பித்தான்.
“ஹலோ….”
“தீபக்… நா.. ருத்ரா…”
தன் காதுகளை நம்ப முடியாமல் சந்தோஷத்தில் பேச்சு வரமால் இருக்க, “தீபக்… கேட்குதா??”
“சொல்லு ருத்ரா… நீ எங்க இருக்க? உன்னை காணாம உங்க வீட்ல போய் விசாரிச்சா உங்க அம்மா வேற கல்யாணம்னு என்னன்னவோ சொல்றாங்க? நீ இப்போ எங்கேயிருந்து பேசுற? நீ நல்லாயிருக்கியா?”
“நான் சிங்கப்பூர்ல இருக்கேன் தீபக்… எங்க சித்தி பொண்ணு வீட்ல இருக்கேன்… நம்ம காதலை வீட்ல சொன்னதும் பெரிய பிரச்சனை ஆகிடுச்சு. நானும் வேற கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொன்னதால என்னை இங்க அனுப்பிச்சுட்டாங்க. எங்க அக்கா கர்ப்பமா இருக்கா. அவ ரொம்ப பலவீனமா இருக்கறதால அவ கூட இருந்து பார்த்துக்கணும்னு சொல்லி என்னை யோசிக்க விடாம இங்க அனுப்பிட்டாங்க. அதுக்கு அப்புறம் ஒரு நாள் எங்க அக்கா, அம்மா கூட பேசும் போதுதான் இதெல்லாம் அவங்களோட திட்டம்னு புரிஞ்சது. என்னை உன்கூட பழகவிடாமல் இருக்க தான் இங்க அனுப்பியிருக்காங்க. நான் இங்கே வந்துட்டா உன்னை மறந்துடுவேன்னு நினைக்கிறாங்க”.
“சரி, உன்னோட கைபேசி எங்கே?”
“என்னோட கைப்பையில தான் கைபேசியை வச்சேன். விமானதுல ஏறியதும் உனக்கு தகவல் சொல்லலாம்னு தேடுனப்போ தான் கைபேசி இல்லைனு தெரிஞ்சது. ஆனா கைபேசியை எடுத்து வச்ச நியாபகம் எனக்கு இருந்தது. அப்புறம் சிங்கப்பூர் வந்ததுக்கு அப்புறம் அக்கா எப்பயும் என்கூடவே இருந்தா. எனக்கு ஆரம்பத்துல ஒன்னும் தெரியல. ஆனா போகப்போக தான் அவ என்னை கண்காணிக்கிறது தெரிஞ்சது. ஒருநாள் அம்மா கிட்ட பேசும்போது தான் அவங்க திட்டம் தெரிஞ்சது”.
“சரி… இப்போ எங்க இருந்து பேசுற?”
“அக்கா மருத்துவமனைக்கு போயிருக்கா. வீட்லயிருந்து போன் பண்ணா தெரிஞ்சுடும். அதுதான் வெளியே வந்து ஒரு கடைல இருந்து போன் பண்றேன்..”
“அடுத்து நாம என்ன பண்றது ருத்ரா ?”
“கொஞ்ச நாள் பொறுத்து இருப்போம். நான் ஏதாவது செஞ்சா என்னை உன்ன பார்க்க விடமாட்டாங்க. அதுனால இன்னும் கொஞ்ச நாள்ல நான் சென்னை வந்திடுவேன். அதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்.”
“அதுவரைக்கும் உன்கூட பேசமா, நீ எப்படி இருக்கன்னு தெரியாம நான் இங்க நிம்மதியா இருக்க முடியாது ருத்ரா…”
“சரி நானே நேரம் கிடைக்கும் போதெல்லாம் உனக்கு கால் பண்றேன். நீ கவலைப்படாத. அங்க காவ்யா, கிருஷ்ணா, மதுகிட்டயும் சொல்லிடு.. அவங்களும் என்னை நினைச்சு கவலை பட்டுட்டு இருப்பாங்க…” என அலைபேசியை துண்டித்தாள் ருத்ரா.
தேடல் தொடரும்….
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…