வணக்கம் தோழிகளே!!! காதலை தேடி… அடுத்த அத்தியாயம் இதோ…
படிச்சுட்டு எப்படி இருக்குனு கமெண்ட்ஸ் சொல்லிட்டு போங்க மக்களே…..
காதலை தேடி….. – 25
மாலை ஐந்து மணி… தீபக் தன வேளையில் மூழ்கி இருக்க அவனின் கைபேசி சிணுங்கியது.. எடுத்து பார்த்தால் புது எண்ணாக இருக்க அதை உயிர்பித்தான்.
“ஹலோ..”
“தீபக்.. நான் ருத்ரா..”
“ஹே ருத்ரா!! எப்படி இருக்க? ஏன் இவ்ளோ நாளா போன் பண்ணல? உனக்கு என்னாச்சோனு நான் பயந்துட்டேன்.. இன்னும் இரண்டு நாள்ல உன்னோட போன் வரலைனா நான் உங்க வீட்டுக்கே நேர்ல போய் பாத்துருப்பேன்…”
“நான் நல்ல இருக்கேன்… நான் இப்போ சென்னை வந்துட்டேன்..வந்து இரண்டு வாரம் ஆகுது…”
“இங்க வந்து இரண்டு வாரமாச்சு.. எனக்கு போன் பண்ணனும்னு உனக்கு தோணலையா?”
“நானே யாருக்கும் தெரியாம தான் இப்போ பேசிட்டு இருக்கேன்…”
“சரி சரி… நாம உடனே சந்திக்கணும் ருத்ரா.. உன்னை பார்க்கணும் போல இருக்கு… ஆமா எப்படி உங்க வீட்ல நீ சென்னை வர ஒத்துக்கிட்டாங்க?”
“ஓ அதுவா!! எங்க மாமா பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததுல… அவளுக்கு இன்னும் இரண்டு நாள்ல கல்யாணம்… நம்ம காதல் விஷயம் யாருக்கும் தெரியக்கூடாதுனு எங்க வீட்ல நினைக்குறாங்க…வேலைக்கு போன பொண்ணை எதுக்கு சிங்கப்பூருக்கு அனுப்பனும்? மாசமா இருக்க பொண்ண அவ எப்படி பாத்துப்பா? அப்படி இப்படினு இங்க இருக்க எல்லாரும் ஒரே கேள்வி கோட்டாங்க போல.. அதனால இனிமேலும் நான் அங்க இருந்தா எல்லாரும் வேற ஏதாவது பேச ஆரம்பிச்சுடுவாங்க.. எங்க மாமா வேற நான் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்னு சொல்லிட்டாராம்… அவரோட புண்ணியத்துல நானும் சென்னைக்கு வந்துட்டேன்…இப்போ கூட அம்மாவும், அப்பாவும் மாமா வீட்டுக்கு போயிருக்காங்க… அதுதான் நான் உனக்கு போன் பண்ணேன்..”
“சரி.. அப்போ உடனே வா.. உன்கூட பேசணும்..”
“இப்போ வேண்டாம் தீபக்.. நீ கல்யாணத்துக்கு வந்துடு.. நாம அங்க பேசலாம்…”
“சரி.. எந்த கல்யாண மண்டபம், நேரம் எல்லாம் சொல்லு”
அனைத்து விவரங்களையும் கேட்டு கொண்டு அலைபேசியை அணைத்தான் தீபக்..
கல்யாணத்திற்கு முதல் நாளே ருத்ராவின் குடும்பம் அவர்களின் மாமா வீட்டிற்கு சென்றுவிட்டனர். தீபக்கின் வரவை ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்தாள் ருத்ரா. அவளின் கைப்பேசியையும் அவர்களின் வீட்டில் பிடுங்கி விட அவளை எப்படி தொடர்பு கொள்ளுவது என திருமண மண்டபத்தின் வாசலில் நின்று கொண்டு யோசித்து கொண்டிருந்தான்.
“தீபக்… இப்படியே நின்னுட்டு இருந்தா என்ன பண்றது? வா உள்ளே போகலாம்” என அவன் கூட வந்திருந்த அவனின் தோழி சந்தியா கூறினாள்.
“ருத்ரா எங்க இருக்கானு தெரியலே சந்தியா… அவளை இந்த கூட்டத்தில் எப்படி கண்டுபிடுக்கறது?”
“அவ்ளோ தானே…நீ முதல்ல உள்ள வா..” என அவனை அழைத்து கொண்டு உள்ளே சென்றவள், “நீ இங்க உட்காரு.. நான் இப்போ வந்திடுறேன்…”
“ஏய் சந்தியா.. நீ எங்க போற?”
“ருத்ராவோட மாமா பொண்ணுக்கு தான கல்யாணம்… அப்போ அவ மணப்பெண் கூட தான இருப்பா?”
“பரவாயில்லையே… உனக்கு கூட கொஞ்சம் மூளை வேலை செய்யுது” என அவளை கிண்டல் செய்ய, “அப்படியா? அப்போ நீயே ருத்ரா எங்க இருக்கானு கண்டுபிடுச்சுக்கோ? என அவனின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.
“சரி சரி… நீ அறிவாளி தான்.. நான் ஒத்துக்கிறேன்… இப்போ போய் ருத்ராவை கூட்டிட்டு வாரிய?”
“நீ இவ்ளோ கெஞ்சி கேட்கறதால போறேன்…” என மணமகள் அறையை நோக்கி நடந்தாள். சந்தியா, தீபக்கின் கல்லூரி தோழி என்பதால் ருத்ராவை இதுவரை பார்த்ததில்லை. தீபக், ருத்ராவின் புகைப்படம் ஒன்றை காட்டினான். அதைவைத்தே இப்போது ருத்ராவை தேடி இங்கே வந்தாள். ஆனால் அங்கே ருத்ரா இல்லாததால் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தவள் அருகில் இருந்தா பெண்ணிடம், “ருத்ராவை அவங்க அம்மா கூப்பிடுறாங்க. எங்க இருக்கானு தெரியுமா?” என கேட்க “அவ இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தா. பூ எடுத்துட்டு வர போயிருக்கா.. இப்போ வந்துடுவா.. ஆமா நீங்க யாரு? நான் உங்களை இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையே?” என அப்பெண் கேட்டு கொண்டிருக்க ருத்ராவின் அங்கு வந்து சேர்ந்தாள். இவர்களை பார்த்துவிட்டு இவர்களை கடந்து சென்றவள், “ஹே ருத்ரா, உன்ன உங்க அம்மா கூப்பிடுறாங்களாம்..”
“அம்மாவா? யாரு சொன்னது?”
“இதோ இவங்க தான் சொன்னாங்க.. ஆமா யாரு இவங்க?”
அதற்குள் சந்தியா கண்ணை காட்டிவிட, ருத்ராவிற்கு யாரென்று தெரியாவிட்டாலும் அப்பெண்ணை சமாளிப்பதற்காக,
“இவங்க மாப்பிளை வீட்டு சொந்தம்..”
“இவங்கள எப்படி உனக்கு தெரியும்?” என விடாமல் அந்த பெண் விசாரிக்க, “நிச்சயதார்த்தத்துல பார்த்தேன்…” என மேலும் பேச்சை வளர்க்காமல் அங்கு இருந்து நகர்ந்தனர்.
“நீங்க யாரு? நான் உங்களை பார்த்தது இல்லையே?”
“நான் தீபக்கோடா தோழி… தீபக் தான் உங்களை கூட்டிட்டு வரச் சொன்னான். அதோ அங்க உட்கார்ந்து இருக்கான்…” என அவன் இருந்த திசையை காட்ட, “என்னால இப்போ வர முடியாது.. இன்னும் ஒரு அரை மணிநேரத்துல நான் பின் பக்கம் இருக்க வாசல் கிட்ட வரேன்.. நீங்க தீபக்கையும் அங்க வர சொல்லிடுங்க” என சொல்லிவிட்டு சென்றாள்.
சரியாக அரை மணிநேரம் கழித்து பின் பக்க வாசலுக்கு வந்தாள். மனமக்களுக்கான சடங்குகள் ஆரம்பிக்க ருத்ராவின் தாயார் அங்கே இருந்ததால் இவளை கண்காணிக்க முடியவில்லை.
ருத்ராவை கண்ட தீபக் அவளிடம் நலம் விசாரிக்க, “தீபக் ரொம்ப நேரம் பேச முடியாது.. அதனால நான் சொல்றத கேளு… நீ நாளைக்கு எங்க வீட்ல வந்து பொண்ணு கேளு.. என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்… இந்த நாலு மாசத்துல நம்ம காதலை பத்தி எங்க வீட்ல நான் எதுவும் பேசல… அதனால எங்க அப்பா, அம்மா என மனநிலைமைல இருக்காங்கனு எனக்கு தெரியல.. அதனால நீ வந்து பேசி பாரு… அதுக்கப்புறம் என செய்யலாம்னு நாம முடிவுபண்ணிக்கலாம்… எனக்கு உன்கூட பேச ஒரு கைபேசி வேணும்… ஏதாவது தகவல்னா உனக்கு சொல்லனும்..”
“சரி ருத்ரா… இப்போ உனக்கு வாங்கிட்டு வந்து கொடுக்குறேன்…” என கூறியவன் வேகமாக ஒரு கடைக்கு சென்று கைபேசியும், செறிவட்டையும் (சிம் கார்டு) வாங்கி கொண்டு வந்தான். பின் அதை றுகற்றாவிடம் கொடுத்தவன் சந்தியாவை கூட்டி கொண்டு கிளம்பினான்.
நாட்கள் வேகமாக நகர பெருமாள், காவ்யாவிற்கு கொடுத்த ஆறு மாத கெடுவில் நான்கு மாதம் முடிவடைந்துவிட்டது. இதோ வினோத்தும் தன்னுடைய பரீட்சையை முடித்துவிட்டான். அன்று கோயிலில் காவ்யாவிடம் கோபமாக பேசிவிட்டு சென்றவனை சமாதானப்படுத்த ஒருவாரம் ஆயிற்று. தன் தந்தை தங்கள் காதலுக்காக ஆறு மாதம் வரை அவகாசம் கொடுத்ததை கூறினாள். அன்றிலிருந்து வினோத்தும் கடுமையாக தான் படிக்க ஆரம்பித்தான். இப்போது பரீட்சை முடித்து தன்னுடைய தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இந்த நாலு மாதமும் வினோத்தின் படிப்பிற்காக அவனிடம் பேசுவதை குறைத்து கொண்டாள் காவ்யா. எங்கே தான் பேசினால் அவனின் கவனம் சிதறக்கூடுமோ என எண்ணி அவனை பார்ப்பதையும், பேசுவதையும் குறைத்துக் கொண்டாள்.
அடுத்தநாள் ருத்ரா கூறியதை போல் தீபக் அவளின் வீட்டிற்கு சென்றான். வீட்டின் அழைப்பு மணி அடிக்க, காதவை திறந்தார் பார்வதி.
“யாரு பா நீங்க? யாரு வேணும்?”
“சிவநேசன் சார பார்க்கணும்”
“உள்ள வாங்க. உட்காருங்க.. அவரை கூப்பிடுறேன்..”
“என்னங்க…யாரோ ஒரு பையன் உங்களை பார்க்க வந்திருக்கான்…”
“தம்பி.. நீங்க யாரு? என்னை எதுக்கு பார்க்க வந்திருக்கீங்க?”
“சார்.. என் பேரு தீபக்.. நான் ருத்ரா கூட வேலை செய்றேன்.. நானும் ருத்ராவும் விரும்புறோம்…”
“ஓ!!! நீதானா அந்த பையன்? எவ்ளோ தைரியம் இருந்தா நீ வீட்டுக்கே வந்திருப்ப? ருத்ரா இங்கேயிருக்குறது உனக்கு எப்படி தெரியும்? அவ சொன்னாளா??” என பார்வதி ருத்ராவை அழைக்க தன் அறையை விட்டு வெளியே வந்தாள் ருத்ரா.
“நீ தான் இந்த பையன வீட்டுக்கு வர சொன்னியா? உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா நாங்க சொன்னதை மீறி இவன்கூட பேசிருப்ப? இவனை பத்தி பேசாம இருந்ததை வச்சு இவனை மறந்திட்டானு நினைச்சா நீ கல்யாணம் பேச இவனை வீட்டுக்கே கூப்பிட்டு இருக்க?” என சிவநேசன் கோபத்தில் கத்த, “சார்… ஒரு நிமிஷம்… நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க…”
“நீ சொல்றத நான் எதுக்கு கேட்கணும்.. என் பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க விருப்பம் இல்லை.. நீ கிளம்பு…”
“அப்பா… பிளீஸ்ப்பா….” என ருத்ரா கெஞ்ச, உனக்கும் இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்.. நான் பார்க்குற மாப்பிளை கூட” என அவர் கூறிக்கொண்டு இருக்க, அதை கேட்டவள் தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன் கையை வெட்டிக் கொண்டாள்.
“ஏய்!! என்னடி பண்ற?” என பார்வதி தடுப்பதற்குள் தன் கையை கிழித்து கொண்டாள்.
காயம் ஆழமாக இருக்க, ரத்தம் குபுகுபு என வழிய தொடங்கியது.. “ருத்ரா, என்ன காரியம் பண்ணிருக்க? நான் தான் பாத்துக்குறேன்னு சொன்னேன்ல.. அதுக்குள்ளே உனக்கு என்ன அவசரம்? வா சீக்கிரம்.. மருத்துவமனைக்கு போகலாம்”
“முடியாது தீபக்… அப்பா… நீங்க எங்க காதலுக்கு சம்மதிக்குற வரை நான் எங்கயும் வரமாட்டேன்.. நானும் எவ்வளவோ போராடி பார்த்துட்டேன்… சாப்பிடமா இருந்து.. பேசாம இருந்து… ஆனா நீங்க எதுக்கும் மனசு இறங்குற மாதிரி இல்ல… என்னால இதுக்கு மேல போராட முடியல பா… இப்போ கூட நீங்க சம்மதிச்சா தான் எங்க கல்யாணம்… அப்படி உங்களுக்கு பிடிக்கலைன்னா நான் தீபக்கை கல்யாணம் செய்துக்க மாட்டேன்… நீங்களும் வேற யாரையும் கல்யாணம் பண்ண சொல்லி என்னை கட்டாயப்படுத்தக் கூடாது…” என பேசிக் கொண்டு அருகில் இருந்த சாய்வு இருக்கையில் அமர்ந்தாள்.
“என்னங்க… ரத்தம் எப்படி வருது பாருங்க… அவ இஷ்டப்படியே நடக்கட்டும்.. நீங்க சரின்னு சொல்லுங்க..” என சிவநேசனை கெஞ்சிக் கொண்டிருந்தார் பார்வதி.
நேரம் செல்ல செல்ல ரத்தத்தின் அளவு அதிகரிக்க, தீபக் ஒருபக்கம் ருத்ராவிடம் மருத்துவமனைக்கு வருமாறு கெஞ்சிக் கொண்டிருந்தான். சிறிது சிறிதாக ருத்ரா மயக்கநிலைக்கு சென்று கொண்டிருந்தாள்.
தேடல் தொடரும்…
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…