02.மறுபாதி

0
15

பேருந்து பயணம் சென்னையை நோக்கி புதுவிதமான அனுபவம் சம்யுக்தவிற்கு…
பேருந்து சன்னல் ஒர இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..
கோயம்பேடு வந்து இறங்கியவளை சென்னை அதற்கு உரிய கம்பீரத்துடன் வரவேற்றது… வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நம் சம்யுக்தாவிற்கு முற்றிலுமாக வேறு பரிணாமத்தை காட்டியது…

சென்னை மக்கள் அவளுக்கு புதிதாக தெரிந்தனர் ..ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை தேடி ஓடி கொண்டே இருந்தனர்..
வேகமாக அதே சமயம் ஒரு தனி உலகமாக சென்னை அவளுக்கு காட்சி அளித்தது…

தி.நகர் செல்லும் பேருந்தை அங்கே இருந்தவர்களிடம் விசாரித்து அதில் ஏறி அமர்ந்தாள்…
பேருந்தில் அமர்ந்து இருந்த அனைவரும் செல் போன் இல்லாமல் இல்லை.. யாரும் யாருடனும் பேசி கொள்ளவில்லை… பேருந்தில் இருந்த 50 பேரும் கீழே குனிந்து போனை நொண்டி கொண்டே இருந்தனர்.. தன் அருகில் அமர்ந்து இருந்த கல்லூரி மானவியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்…

ஹாய் டி நகர் ஸ்டாப்பிங் வந்தா சொல்றிங்களா … அந்த பெண்னோ இவளை பார்க்காமல் சொல்றேன் என்று சொல்ல .. பார்க்காமலே எப்படி சொல்லுவ என்று வாய் வரை வந்த கேள்வியை கேட்காமல் அவள் மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .. அந்த பெண் தன்னுடைய ஆண் நண்பனுடன் முக புத்தகத்தில் சாட் செய்து கொண்டு இருந்தாள்.. வெகு நேரம் ஆகியும் அந்த பெண் எதுவும் பேசாமல் இருக்க மறுபடியும் அவளிடம் கேட்க இன்னும் வரல என்றாள் அந்த பெண் இம்முறையும் அவளை பார்க்கவில்லை அவள் மும்மரமாக தன் ஆண் நண்பனுடன் சாட் செய்து கொண்டு இருந்தாள்..

இவளை நம்பி புரோஜானம் இல்ல வேற யார்கிட்டயாவது கேட்கலாம்.. என்று முன் இருக்கையில் இருந்த ஒரு பெண்ணிடம் கேட்க அது போன ஸ்டாப்பிங் மா என்று சொல்ல வேற வழிஇல்லாமல் அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கினால்.. எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை அவளுக்கு …
ஒரு ஆட்டோ பிடித்து அவள் தந்தையின் மூலம் நல்ல மகளிர் விடுதியில் ஏற்கனவே பதிவு செய்து வைத்து இருந்ததால் அந்த விலாசத்தை ஆட்டோ ஓட்டுனரிடம் காட்டி அந்த விடுதிக்கு ஒரு வழியாக சென்று சேர்ந்தால் ..

சென்னையின் மையப்பகுதியில் உள்ள மகளிர் விடுதி அது.. கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் வேலைக்கு செல்லும் பெண்கள் என்று 500 பேர் தங்கி இருக்கும் விடுதி.

யார் மா நீ என்று அந்த விடுதியின் வார்டன் கேட்க.. நான் சம்யுக்தா மேடம் என்று தன்னை பற்றி அறிமுகத்தை சொல்லிவிட்டு அவளுக்கான அறையை நோக்கி சென்றாள். நால்வர் தங்க கூடிய அறை அது நாலு பெட் அதற்கு ஏற்றார் போல தலையணைகளும் இருந்தன.. அறையை பார்வையிட்ட படி சம்யுக்தா அறை வாசலில் நிற்க அந்த அறையில் இருந்த மற்ற மூவரும் இவளை கண்டு கொள்ளாமல் தங்களின் வேளையில் மும்முரமாக இருந்தனர்.. அவளை அந்த சென்னையில் வர வேற்றது அந்த பலகை மட்டுமே..

ஹாய் என்றால் அனைவரையும் பார்த்த படி… ஆனால் யாரும் அவளுக்கு பதில் சொல்லாமல் இருக்க அவளும் எதுவும் பேசாமல் தன்னுடைய பெட்டில் அமர்ந்தாள். அவள் வந்து 20 நிமிடம் கடந்த பிறகும் யாரும் பேசவில்லை.. அவர்களின் நடவடிக்கை எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை வேறு வழி இன்றி அவள் அங்கு தங்கினால்…

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது .. தன் பயணத்தை மாற்ற போகும் இடத்தை நோக்கி சென்றால் நம் நாயகி …

யாதவ் நான் சொல்றத கேளு நம்ப சொந்தம் தான் டா அந்த பொண்ணு கண்டிப்பா அவ நம்ப பாப்பாவ நல்லா பார்த்துப்பா..

அம்மா நான் உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லுறது .. எனக்கு கல்யாணம் வேணாம் மா ..

இதே நீ எத்தனை நாளைக்கு சொல்லுவ யாதவ் இன்னைக்கு பாப்பா சின்ன பொண்ணு நாளைக்கு அவ பெருசா ஆனா அவளை பார்த்துக்க ஒரு அம்மா வேணாமா.. அப்பா கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட முடியாது யாதவ் அதை ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டேங்கற???

உன் பொண்ணுக்காக யோசி எங்களுக்கும் வாயாசகிடுச்சு .இன்னும் எத்தனை நாளைக்கு நாங்க உயிரோடு இருப்போம்னு தெரில்ல அதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிட்டா நாங்களும் நிம்மதியா கண்ணை முடுவோம்.. என்று அவர் கண்ணீர் சிந்த…

அம்மா … என்று யாதவ் கோபத்தில் கத்திவிட .. அங்கே சில நிமிடங்கள் மௌனமே ஆட்சி புரிந்து… தனது கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன் மேலே பேச ஆரம்பித்தான்… “இன்னொரு தடவை நீங்க இப்படி பேசுனிங்க நானும் யாஷிகாவும் இந்த வீட்டை விட்டு போய்டுவோம்..”

அப்போ நாங்க உனக்கு முக்கியம் இல்லயா யாதவ்.. எங்களுக்காக நீ கல்யாணம் பண்ணிக்க கூடாதா??

என்னால காருண்யாவ மறக்க முடியாது அம்மா ..ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க. எனக்கு காலேஜ்கு லேட் ஆகுது நான் வரேன்..

நீ பதில் சொல்லாம இங்க இருந்து போகமுடியாது யாதவ்..

நீங்க எப்போ கேட்டாலும் என் பதில் ஒன்னு தான் .. நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..

நாங்க சொல்றதையும் நீ புரிஞ்சிக்கோ யாதவ். பெண் குழந்தையை தனியா வளர்க்க முடியாது..

என்னால முடியும் அம்மா.. இதுக்கு அப்புறம் இதை பத்தி என்கிட்ட பேசாதிங்க…

அப்போது அங்கு வந்தால் அந்த வீட்டின் குட்டி இளவரசி யாஷிகா.. அப்பா நான் ரெடி போலாமா..

போலாம் அம்மு..

சென்னையின் புகழ் பெற்ற கல்லூரி .. முதல் நாள் அழகான காட்டன் புடவை கட்டி ஒப்பனை எதுவும் இல்லாமல் சென்றால்.. கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் அவளை ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டுத்தான் சென்றனர்.. 34 வயது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் பார்ப்பதற்கு 25 வயது பெண் போலவே இருந்தாள் சம்யுக்தா..

அப்போது அங்கு உள்ள சீனியர் மாணவர்கள் இவளை கூப்பிட ..

“என்ன ??” என்று கேட்டாள்.

யார் நீங்க இதுக்கு முன்னாடி நாங்க உங்களை இங்க பார்த்ததே இல்ல..

நான் இங்க எம்.பில் படிக்க வந்துஇருக்கேன்..

அப்போ நீங்க எங்களுக்கு ஜூனியர் நாங்க உங்களை ராக்கிங் செய்யலாம் தான..

கண்டிப்பா செய்யலாம் ஆன நான் இந்த காலேஜில லக்ட்சுரர் கூட..நீங்க இப்போ என்ன ராக்கிங் பண்ணா கண்டிப்பா அதுக்கான பனிஷ்மெண்ட் கிடைக்கும்…

சம்யுக்தா அவ்வாறு கூறியவுடன் அந்த மானவர்கள் பதறிப்போய் அவளிடம் ” ஓஹ் சாரி மேடம் …” என்று மன்னிப்பை வேண்ட…
“பனிஷ்மெண்ட் என்னனு கேட்கமாட்டீங்களா?? .. எனக்கு டெய்லி டீ வாங்கி தரணும் அப்புறம் உங்களோட காங் ல என்னையும் சேர்த்துக்கனும்
நீங்க என்ன உங்க பிரின்ட் ஆஹ் நினைக்கலாம் ..”

“மேடம் டீ வாங்கி தறோம் பட் அதுக்கு பதில் நீங்களும் எங்களுக்கு பிரியாணி வாங்கி தரணும்.. ” என்று அங்கே இருந்த ஒரு மாணவன் பதிலுக்கு அவளை கலாய்க்க…

டேய் 10 ரூபா டீ க்கு பதில் 100 ரூபா பிரியாணி கேட்குரிங்க..

டெய்லி வேணாம் மேம் ..

பார்டா …

வீக்லி ஒன்ஸ்..

கண்டிப்பா வாங்கி தரேன் சரியா.. இப்போ சொல்லுங்க

என்ன சொல்லணும் மேம்???

வழி சொல்லுங்க… ஹச்.ஓ.டி ரூம் எங்க இருக்கு?? நேரா போய் ரைட் கட் பண்ணுங்க … நன்றி என்று கூறி அவர்கள் சொன்ன அறையை நோக்கி சென்றாள்..

அந்த அறையின் வாசலில் நின்று
மே ஐ கம் இன் மேம்.. யா கம் இன் என்று குரல் கேட்க உள்ளே விரைந்தாள்..

ஐ அம் சம்யுக்தா .. என்று தன்னை அவள் சிறிதாக அறிமுக படுத்திக்கொள்ள… அதை கேட்டுக்கொண்டவர்…
“சம்யுக்தா உங்களுக்கான டீடெயில்ஸ் எல்லாம் மிஸ்டர் மனோகர் சொல்லுவார்..”

மனோகர் இவுங்க சம்யுக்தா நம்ப காலேஜ்ல புதுசா சேர்ந்து இருக்க இயற்பியல் பிரிவு விரிவுரையாளர்…

வணக்கம் மேடம் நான் மனோகர் இங்க பியூன்..

ஹாய் சார் ..

நீங்க 2வது மாடில 4 வது கிளாஸ் க்கு போங்க மேடம் ..
சரி சார்..
மேடம் நீங்க என்ன மனோகர்னே கூப்பிடுங்க இங்க எல்லாரும் என்ன அப்படித்தான் கூப்பிடுவாங்க..

ஓஹ் ஆனா நீங்க மட்டும் என்ன மேடம்னு சொல்ரிங்க நான் உங்களை விட சின்ன பொன்னுதான் என்னையும் பேர் சொல்லி கூப்பிடுங்க அண்ணா..

சரி மா.. அவளுக்கான வேலை அனைத்தையும் சொல்லி அவளை அனுப்பி வைத்தார்.. தன்னுடைய கிளாஸ் நோக்கி சென்றால்..

ஹாய் குட் மார்னிங் எவரி ஒன் நான் சம்யுக்தா உங்களுக்கு இயற்பியல் கிளாஸ் எடுக்க வந்து இருக்கேன்.. என்று அவளை பற்றி சிறு அறிமுகம் மாணவர்களுக்கு கொடுத்து விட்டு…

இன்னைக்கு முதல் நாள் சோ சின்னதா ஒரு கான்செப்ட் மட்டும் இப்போ கிளாஸ் எடுக்கிறேன்.. அதுக்கு அப்புறம் நீங்க எல்லாரும் உங்களை பத்தி எனக்கு சொல்லுங்க என்று கூறி பாடம் எடுக்க ஆரம்பித்தாள்…

அப்போ யாதவ் சார் இல்லையா டி நமக்கு.. ரொம்ப கஷ்டம் டி.. அங்க பாரு அவனுங்களை எவளோ சந்தோஷமா இருக்காணுங்க.. டேய் ஜொள்ளு வலியுது தூடச்சிக்கோங்க டா…
ஏன் நீங்க மட்டும் யாதவ் சார் பார்த்து வழியும் போது நாங்க சம்யு டார்லி கிட்ட வழியுறது தப்பு இல்ல..

நம்ப டார்லு ஏன் வரல. அதான் டி எனக்கும் தெரில்ல…

ஆன நேத்து தான யாதவ் சார் நம்ம கிளாஸ்கு வந்தாரு அவருக்கு என்ன ஆச்சு ஏன் திடீர்னு புது மேடம் வந்து இருக்காங்க?? என்று அந்த கிளாஸ்சில் உள்ள மாணவர்கள் பேசிக்கொண்டே இருக்கும் போது அங்கு வந்தான் யாதவ்..

ஹலோ கைஸ் குட் மார்னிங்.. குட் மார்னிங் சார்.. என்று மாணவர்கள் அனைவரும் எழுந்து நிற்க. போர்டு பக்கம் திரும்பி எழுதி கொண்டு இருந்த சம்யுக்தா யார் என்று திரும்பி பார்க்க ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்து பின் சாதரணமாக “ஹலோ யார் சார் நீங்க நான் கிளாஸ் எடுக்கும் போது நீங்க பாட்டுக்கு உள்ள வரிங்க?? ” என்று காட்டமாக கேட்க.. அப்பொழுதுதான் யாதவ் அங்கே ஏற்கனவே ஆசிரியர் இருப்பதை கவனித்தான்..
காலையில் அவன் அம்மாவிடம் சண்டையிட்டுவிட்டு கிளம்பியதில் நேரம் ஆனதால் அவசரமாக கிளாசிற்குள் நுழைந்தவன் அங்கே இருந்த சம்யுக்தாவை கவனிக்கவில்லை…

“யுக்தாவா” ஐயோ இவளா .. இவளோட யுத்தம் போடவே நம்மள அந்த கடவுள் படைச்சி இருக்காரு போல .. காலேஜ் ல சண்டை போட்டது பத்தாதுன்னு இங்கேயும் வந்துட்டா..

நான் எடுக்க வேண்டிய கிளாஸ் நீங்க எடுத்துட்டு இருக்கீங்க மேடம்..
ஏதோ ஒன்னு உள்ள வரதுக்கு முன்னாடி பர்மிஷன் கேட்கணும்னு உங்களுக்கு தெரியாதா.. எப்படி தெரியும் நீங்க தான் எல்லாம் தெரிஞ்ச வல்லவர் ஆச்சே…. என்று அவள் மாணவர்கள் முன்னே வாயை விட…

ஸ்டாப் இட் யுக்தா.. என்று யாதவ்வும் கோபத்தில் ஒருமைக்கு தாவி இருந்தான்…

ஹலோ சார் நானும் இங்க உங்களை மாதிரி ஒரு ஸ்டாப் கொஞ்சம் மரியாதையா பேசுங்க .. என் பேர் சொல்லி கூப்பிட நீங்க யாரு..

சாரி மேடம் .. இது என் கிளாஸ் நீங்க எடுக்க வேண்டிய கிளாஸ் பக்கத்துல இருக்கு…

ம்ம்ம் இட்ஸ் ஓகே நான் தான் தெரியாம வந்துட்டேன்.. பை என்று அவள் அந்த வகுப்பை விட்டு வெளியே செல்ல..

சார் அந்த மேம் பண்ண தப்புக்கு நீங்க ஏன் மன்னிப்பு கேட்டிங்க..

அதுலாம் ஒன்னும் இல்லடா நான் தான் தெரியாம உள்ள வந்துட்டேன்..

சார் அவுங்க தான் தெரியாம வந்துட்டாங்க.. சோ அவுங்களும் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்..

ஆமாம் சார்..அவுங்க உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும் . தன் கைப்பையை எடுக்க வந்த சம்யுக்தா வின் காதுகளில் இவர்களின் உரையாடல் விழ..

கோவமாக அவர்கள் முன் வந்து நின்று
இப்போ என்ன நான் இவர் கிட்ட மன்னிப்பு கேட்கணும் அவளோ தான..
ஐ அம் சாரி யாதவ் சார் என்று அந்த யாதவில் அழுத்தம் கூட்டி சொல்ல..

யுக்தா நான் என்று யாதவ் சொல்ல வருவதற்குள்..

அவன் அருகில் வந்து உனக்கு எப்போதுமே என்ன எல்லார் முன்னாடியும் அவமானம் படுத்தனும்.. காலேஜ் டேஸ் ல நீ ஜெயித்து இருக்கலாம் ஆனா இனி எப்போதும் நீ ஜெயிக்க முடியாது யாதவ்…இனி உன் வாழ்க்கை முழுவதும் என்கிட்ட நீ தோற்க போற.. என்று கைபையை எடுக்க வந்த சாக்கில் யாதவிற்கு மட்டும் கேட்டுக்குமாறு கூறி விட்டு சென்றால்…

யார் யாரிடம் தோற்க போகிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்…

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here