03. நீயின்றி நானும் இல்லை

0
18

“கைஸ் (guys) கெட் ரெடி… எல்லாம் ஓகே தானே? டேக் போலாமா?” என்ற கணீர் குரலுக்கு கட்டுப்பட்டவர்களாய் அவரவர் தயாராகி நிற்க லேசாக டச் அப் செய்து கொண்டிருந்த வினயாவின் அருகில் வந்தான் விஷ்வஜித்.
“ரெடியா மேடம்? டேக் போலாமா?” என்று கேலி விழியாட கேட்டவனை முறைத்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன் அவள் மேல் “ஆக்ஷன் எடுப்பேன்” என்று மிரட்டிவிட்டு அதன் பிறகு அவன் செய்த திருவிளையாட்டில் சுவற்றில் அடித்த பந்தாக திரும்ப வந்திருந்தாள். இல்லை இல்லை விக்டரால் கெஞ்சி அனுப்பி வைக்கப்பட்டாள் என்பதே பொருந்தும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு:
வினயாவை வரவழைக்கும் பொருட்டு யோசனையில் இருந்தவன் விக்டருக்கு கால் செய்தான்.
“ஹலோ, எப்டி இருக்க விஷ்வா?” ஒரு பக்கம் விக்டர் இது எதிர்பார்த்தது தான் என்றாலும் துளிகளாய் வியர்த்த முகத்தை துடைத்த படி கேட்டான்.
“ஐ அம் குட் விக்டர்.. நீ எப்டி இருக்க? உன் ஷோ நல்லபடியா ஸ்டார்ட் ஆகிடுச்சா?” என்று நேரடியாக அவன் கேட்கவும் இவன்,
‘ ஆஹா, இதுக்கு பேர் தான் புயலுக்கு முன்னாடி வர அமைதியா? பாம்பு பாசமா பாய்ஸன் சாப்பிடுங்க ஃபிரண்ட்னு சொல்ற மாறியே இருக்கே’ என்று மனதிற்குள் எண்ணி கொண்டிருந்தான்.
“ஹலோ விக்டர், என்ன ஆச்சு? லைன்ல இருக்கியா?” என்று அவன் சத்தமாக அழைக்கவும் தான்
“ஹான், இருக்கேன் விஷ்வா.. இங்க கொஞ்சம் நெட்வொர்க் ப்ராப்ளம்.. அதான் சரியா கேக்கல.. என்ன கேட்ட?”
“ஷோ எப்டி போயிட்டு இருக்குனு கேட்டேன்?” என்றான்.
“பைன் விஷ்வா, லொகேஷன் தான் ரெடி பண்ணிட்டு இருக்கோம்.. நெக்ஸ்ட் வீக் தான் ஷூட் ஸ்டார்ட் பண்ணனும்”
“லுக் விக்டர், எனக்கு உன் ஷோ மேல எந்த தனிப்பட்ட கோபமும் கிடையாது.. உனக்கு உன்னோடது எவ்ளோ இம்பார்ட்டன்ட்டோ அதே மாதிரி தான் எனக்கும்.. நான் எதை பத்தி பேசுறேன்னு உனக்கு தெரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்..”
மறுமுனையின் அமைதியே ‘ஆம்’ என்று சொல்லாமல் சொல்ல விஷ்வஜித் மேலும் தொடர்ந்தான்.
“நா நினைச்சா.. இந்த இஷுவ பெருசாக்கி உன் ஷோவை கேன்சல் பண்ண முடியும்.. ஆனா நான் அப்டி செய்ய போறது இல்ல.. அப்டி செய்ற அளவுக்கு நீ வச்சுக்க மாட்டேன்னு நம்புறேன்..”
“ஸாரி விஷ்வா, குயின் ஓகே சொன்னாலும் நானே உன் கிட்ட இதை பத்தி சொல்லி இருக்கணும். ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி..” என்று விக்டர் கூற
“இட்ஸ் ஓகே விக்டர்.. இன்னும் ஒன் மந்த்ல எங்க ஷோ முடிஞ்சுடும்.. அதுக்கு அப்புறம் வினயா உன் ஷோக்கு சைன் பண்ணுவா.. அதுக்கு நான் கியாரண்டி” என்று விஷ்வஜித் கூறவும் இவனும் சரியென்றபடி நேராக வினயாவின் அறைக்கு வந்தான்.
டீமில் இருக்கும் பெண்களுக்கான அறையில் மற்றவர்கள் உறங்கி கொண்டிருக்க இவள் மட்டும் நிலவோடு கதை பேசி கொண்டிருந்தாள்.
கதவு தட்டும் ஓசையில்,
‘இந்த நேரத்துல யாரா இருக்கும்?’ என்று யோசித்தபடி கதைவை திறக்க விக்டர் நின்று கொண்டிருந்தான்.
அவனுக்கும் ஆச்சரியம் தான்.
காலையில் போய் சொல்வதாக விஸ்வஜித்திடம் கூற அவன் தடுத்து,
“இப்போ மேடம் தூங்காம தான் இருப்பா… போய் சொல்லு கொஞ்ச நேரம் கத்திட்டு அப்டியே தூங்கிடுவா” என்று கூறியது போலவே அவளும் தூங்காமல் விழித்து கொண்டிருந்தாள்.
“ என்ன சார் இந்த நேரத்துல? என்ன ஆச்சு? எனி ப்ராப்ளம்?” என்று கேட்டாள்.
“நத்திங் வினயா.. நீங்க நாளைக்கே ஊருக்கு கிளம்பனும் பேக்கப் பண்ணி ரெடியா இருங்க நான் கார் ரெடி பண்ணிடுறேன்”
அவன் செய்தியில் இவளோ விழி சுருக்கி..
“ஏன் சார்? இன்னும் ஷூட் ஸ்டார்ட் கூட பண்ணலயே..”
“இங்க லொகேஷன் செர்ச் தான போயிட்டு இருக்கு.. அதை நாங்க ரெடி பண்ணிட்டு உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றோம்.. நீங்க அப்போ வாங்க.. நம்ம ஷோவை கொஞ்சம் போஸ்ட்பார்ன் பண்ணிக்குவோம்… இப்போதைக்கு நீங்க இங்க சும்மா இருக்குறதுக்கு பதிலா உங்க ஷோவை முடிச்சு கொடுத்துட்டு வரலாமே..” என்று கூறவும் இவளுக்கு மொத்தமும் விளங்கியது.
“ஆனா சார்…?” என்று அவள் மேலும் ஏதும் கூற தொடங்கும் முன்..
“குயின்.. இந்த ஷோவோட ஆங்கர் நீங்க தான்.. அதுல எந்த சேஞ்ச்சும் இல்ல.. ஆனா இப்போ நம்ம ஷோவுக்கு எந்த இஷுவும் வராம இருக்க.. நீங்க அங்க போக தான் வேணும்… புரிஞ்சிக்கோங்க?” என்று கூறினான்.
இவளுக்கு மொத்தமும் புரிந்தது..
‘தன்னை கேட்டு வராமல் போகவும்.. தன் மேல் ஆக்ஷன் எடுப்பான்..’ என்று அவள் எண்ணி கொண்டிருக்க அவன் இப்படி தன்னை இழுத்து கொள்வான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..
‘என்னை தனியாவே விட போறது இல்லைனு முடிவு பண்ணிட்டானே… இவனை…’ என்று பல்லை கடித்தாள்.
விக்டர் தன் பதிலுக்காக நிற்பதை உணர,
“ஓகே சீனியர்..” என்று புன் சிரிப்போடு கூறி கொண்டாள் உள்ளுக்குள் குமுறும் எரிமலையாய்..
அன்றிலிருந்தே அவனை அர்ச்சித்து கொண்டிருந்தவள் இன்று நேரில் காண அவனை முறைத்து கொண்டிருந்தாள்.
“ப்பா, ஏசி ரூம்ல கூட இவ்ளோ அனல் அடிக்குது..” என்று அவன் கண்ணடித்து கேட்க அவள் உதட்டை சுழித்து ஒழுங்கு காட்டினாள்.

“உசுரே போகுது உசுரே போகுது..
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கயிலே…” என்ற பாடல் சத்தமாக ஒலிக்க திரும்பி டி.ஜே பரணியை பார்த்து சிரித்தான்.

மொத்தம் கூட்டமும் மெல்ல முனகல்களாக சிரிக்க இவள் மட்டும்,
“பரணிய்ய்ய்…..” என்று கத்தியபடி அவனை முறைத்தாள்.
அவன் சிரிப்பாய் தோளை குலுக்கினான்.
“பவித்ரா…” விஷ்வஜித் அழைத்ததில் அவசரமாக ஓடி வந்து நின்றாள்.
“எஸ் சீனியர்…” என்றபடி.
“ இன்னிக்கு உங்க குயினுக்கு யார் காஸ்ட்யூம் ரெடி பண்ணது?”
நடுங்கிய மனதை பிடித்தபடி,
“ நான் தான் சீனியர்…” என்று கூற வினயாவும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.
‘என்னவாச்சு?’ என்று எண்ணியபடி.
“இன்னைக்கு உங்க குயின் பாக்க ஏஞ்சல் மாதிரி இருக்காங்க.. அதும் இந்த ரெட் ஃப்ராக்குக்கு அந்த ஸ்டெட் நல்ல இருக்கு..” என்று கூற
பவி, “ தேங்க்ஸ் சீனியர்..” என்றாள் பெருமையாக.
இங்கு வினயாதான் வெட்கத்தில் செவ்வானமாக சிவந்து நின்றாள்.
‘அட கடவுளே இப்டி தான் எல்லார் முன்னாடியும் சொல்றதா??? லூசு..’ என்று தலையை குனிந்து கொண்டாள்.
அவளின் சிவந்த முகத்தை ரசித்தவன் சிரித்தபடி நகர்ந்தான்.
“ ரிஷி….” கேமரா முன் நின்று கொண்டவன் கையில் இருந்த மைக்கில் அழைக்க அவசரமாக அவன் அருகில் வந்தான் ரிஷி.
“எஸ் சீனியர்…”
“ எல்லாம் ஓகேவா பாரு.. டேக் போலாமா??” என்று அவன் கேட்க ஒரு முறை அனைத்தையும் பார்வையிட்டு வினயாவிடம் வந்தான்.
“வினு, டயலாக்லாம் ஓகே தானே… ஏதாவதுனா சொல்லு.. நான் டாக்பேக்ல ஹெல்ப் பண்ணுறேன்..” என்றபடி.

அவன் மேல் ஸ்நேகமாக ஒரு சிரிப்பை சிந்தினாள்.
அவளின் சிரிப்பில் அவன் என்ன நினைத்தானோ?
தலையை குனிந்து கொண்டு, “ஸாரி வினு..” என்று மெல்ல முனகினான்.
அதற்குள் விஷ்வஜித் மீண்டும் அழைக்க அவன் வேகமாக நகர்ந்தான்.

“ரோல் கேமரா…. ஆக்ஷன்…” என்று அவன் கூறி முடிக்கவும் பிரம்மாண்டமான இசையுடன் அந்த கேமரா அரங்கை சுற்றி வந்து வினயாவின் மேல் வந்து நின்றது.
“ஹாய் ஹலோ வணக்கம் அண்ட் வெல்கம் டூ லவ் பேர்ட்ஸ்.. என்ன மக்களே இந்த வீக் எப்டி போச்சு? என்னதான் ஒவ்வொரு வாரமும் சரி மாதமும் சரி வருஷமும் சரி நம்மள வச்சி செஞ்சாலும் வார கடைசியில அதையெல்லாம் மறந்துட்டு குதூகலமா குத்தாட்டம் போடுறது தான நம்ம இயல்பே.. அதே மாதிரியான ஒரு என்டர்டைமெண்ட்க்காக தான் நானும் இப்ப வந்துட்டேன்.. வழக்கம் போல இந்த நாள் கலகலப்புக்கு நான் கியாரண்டி.. ஆனா என்ன இதுக்கு அப்புறம் தான் நாங்க உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவோம்.. ஆமாங்க நம்ம ஷோ இப்போ இறுதி கட்டத்தை நெருங்கிருச்சு.. 12 பேர் (pair) கொண்டு தொடங்குன நம்ம ஷோ இப்போ 4 பேர் ல வந்து நிக்கிறோம்.. நான் முன்னாடியே சொன்ன மாதிரி ஜெயிக்கற அந்த ஒரு கபில் மட்டும் லவ் பேர்ட்ஸ் இல்லைங்க..
இந்த ஷோல பார்டிசிபேட் பண்ண எல்லாருமே லவ் பேர்ட்ஸ் தான்… இப்ப நாம நம்ம ஃபேபுலஸ் ஃபோர் (fabulous four) கப்பில்ஸ இன்வைட் பண்ணிடாலம்… வாங்க கைஸ்…” என்று வரவேற்றவள் அவர்களோடு அந்த பயணத்தை பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களுக்கான இருக்கையில் அமர வைத்தாள்…
“காதல்.. இந்த காதல் தான் இவங்கள இவ்ளோ தூரம் கொண்டு வந்துருக்கு.. ஒவ்வொரு கடுமையான இடத்துலயும் தன் மனைவி கஷ்ட பட்டுற கூடாதுன்னு கணவர்கள் எடுத்த ரிஸ்க்கும் சரி.. ஒருவருக்கு பிடிச்சதை அவருக்கே தெரியாம சர்ப்ரைஸ்ஸா செய்றதுலயும் சரி.. இவங்களோட அந்த அன்யோன்யத்தை பாக்க முடிஞ்சுது..
இந்த காதல் தான் எவ்ளோ விசித்திரமானது இல்ல… ஒருத்தரை ஒருத்தர் கஷ்டப்படுத்த கூடாதுன்னு அவர்களுக்காக என்ன வேணாலும் செய்ய சொல்லுது…” சரளமாக பேசி வந்தவள் உள்ளுக்குள் ஏதோ இனம் புரியா வலி வர ஓர் நொடி அப்படியே சிலையென நின்றாள்.
திரையில் இருந்து பார்வையை எடுத்து விட்டு அவளை பார்த்த விஷ்வஜித்
அவளின் முகத்தையே பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்.
அவளின் உணர்வுகளை அவனால் மட்டும் இல்லை அவள் நண்பர்களால் கூட புரிந்து கொள்ள முடிந்தது..
“கட்….” என்று கூறியவன்,
“வினு, ரிலாக்ஸ்…” என்று ஆறுதலாய் கூறினான்.
சில நிமிடங்கள் அவள் ஆசுவாச படுத்த ஒதுக்கியவன்,
“ஓகே.. டேக் போலாம்.. விட்ட இடத்துல இருந்து தொடங்கு…” என்று மீண்டும் திரையில் பார்வை வைத்தான்.
ஆனால் பாவம், அவளால் தான் இயல்பாக இருக்க முடியவில்லை..
காதல் என்ற வார்த்தையை உதிர்த்த மாத்திரத்தில் இருந்து அவனை அவள் அநியாயமாக தண்டித்தது போன்ற எண்ணம் அவள் மனதில்..
டேக் போய் கொண்டிருந்தாலும் அவள் அமைதியாக நிற்பதை கண்டவன் மனதில் என்ன நினைத்தானோ?
செல்போனை காதில் வைத்து பேசுவது போல வெளியேறினான்.
வெளியே வந்தவன் ரிஷியை அழைத்து,
“ அவளை கேம் குள்ள போக சொல்லிடு.. பேசுனது வரை எடிட் பண்ணிக்கலாம்..” என்று கூறினான்.
அவனும் சரியென கூறிவிட்டு அவளிடம்,
“வினு, லீவிட் கேம்க்குள்ள போவோம்.. சீனியர்க்கு இம்பார்ட்டன்ட் கால் வந்து இருக்கு.. அப்புறமா ஜாயின் பண்ணுவாங்களாம்” என்று கூறினான்.
அவனின் முகத்தை எதிர்கொள்ள துணிவில்லாமல் நின்றவள் அவன் வெளியேறவும் ஓர் நெடிய மூச்சை இழுத்து விட்டு தண்ணீரை அருந்தினாள்.

அதன் பின் வந்த நேரங்கள் விறுவிறுப்பாக கழிந்தது..
போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் முழு உழைப்பை கொடுத்து கொண்டிருக்க நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கும் சமயம் வந்து சேர்ந்தான் விஷ்வா.
“ இன்னிக்கு எபிசோட் உங்களுக்கு மட்டும் இல்ல… எங்களுக்கும் விறுவிறுப்பா போச்சு மக்களே… இனி அடுத்த ரெண்டு வாரம் முழுக்க உங்க வேலை.. இந்த நாளு ஜோடியில உங்க விருப்பமான ஜோடிக்கு கீழ தெரியிற நம்பருக்கு வோட் போட மறந்துடாதீங்க… இனி அடுத்த வாரம் ப்ரீ ஷோலயும் அதுக்கு அடுத்தபடியா பிரம்மாண்டமான இறுதி போட்டியில உங்களை சந்திக்குறோம்… அன்டில் தென் திஸ் இஸ் சைனிங் ஆஃப் வினயா அண்ட் டீம்… டாடா பை…” என்று முடித்து கொண்டாள்.

சில நிமிடங்கள் கழித்து..
திரையில் ஓடிக்கொண்டிருந்த வீடியோவில் சில காட்சியை எடிட் செய்து கொண்டு இருந்த விஷ்வஜித் ரிஷியை அழைத்தான்.
“ரிஷி…”
“ சீனியர்..”
“பைனல் எபிசோட்க்கு ரெண்டு ஹோஸ்ட் போடலாம்னு யோசிக்கிறேன்.. நீ என்ன நினைக்குற?”
“ஓகே சீனியர்.. பட் ஏன் திடீர்னு..?”
“ நத்திங்.. பொதுவா பைனல் எபிக்கு இது வழக்கமா பண்றது தானே?” என்று கூற இவன்,
“ சரி சீனியர், ஆனா இப்ப செகண்ட் ஹோஸ்ட்க்கு யாரை கான்டெக்ட் பண்ண?”
“ஏன் சுஷ்மிய ஓகே பண்ணலாமே? அவங்க ஷோ தான் போன வாரமே முடிஞ்சிடுச்சே.. எனக்கு அவங்க பெர்ஃபக்ட்னு தோணுது.. நீ அவங்கள கன்வின்ஸ் பண்ணு…” என்று கூறிவிட்டு எழுந்து கொண்டான்.
இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த பரணியும், பவியும் ஒரு சேர வினயாவை பார்க்க
அவளின் நிலை???

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here