03.மறுபாதி

0
25

சம்யுக்தாவின் நீ இனி என்கிட்டே தோற்க போற என்ற வார்த்தையே யாதவின் மனதிற்குள் ஓடிக்கொண்டு இருந்தது… அன்று முழுவதும் அதே எண்ணத்துடன் சுற்றியவனின் கண்களில் மீண்டும் அவள் படவே இல்லை… எப்படியும் மதியம் சாப்பாடு இடைவெளியில் அவளை பார்த்து பேசலாம் என்று என்னியிருந்தவனின் என்னைத்தை கூட தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தாளோ அவளை ஸ்டாப் ரூமில்லும் காணவில்லை.. எங்கே சென்று இருப்பாள் என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டவன் அன்று முழுவதும் தேடியும் அவள் கிடைக்காததால் அவளிடம் பேசவேண்டும் என்று நினைத்ததை செய்ய முடியாமல் வீட்டிற்கு சென்றவன் அன்று முழுவதும் ஏதோ சிந்தனையிலேயே இருப்பதை கண்ட அவன் தாய் என்ன நடந்தது என்று விசாரிக்க ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு வழக்கத்திற்கு மாறாக அன்று சீக்கிரமே படுக்கையில் சென்று விழுந்தான்…

சீக்கிரம் படுத்துவிட்டானே தவிற அவனால் அன்று ஏனோ உறங்க முடியவில்லை.. சம்யுக்தாவை பார்த்த பிறகு அவனின் நினைவுகள் எல்லாம் அவனது கல்லூரி நாட்களை சுற்றியே இருந்தது.. அனைத்தையும் மனதில் அசைபோட்டு முடிதவனின் முகத்தில் ஒரு விரக்தியான புன்னகை… ” என்னைக்கு நான் என்னோட வாழ்கையில ஜெய்சு இருக்கேன் யுவி?? இன்னைக்கு புதுசா தோற்க போறதை பத்தி சொல்ற?? ” என்று வாய்விட்டு கூறியவனின் சோகம் அந்த கடவுளுக்கு புரிந்ததோ?? மெதுவாக தூக்கம் வந்து அவனின் கண்களை தழுவியது…

இங்கே யுக்தாவின் நிலையோ அவனை போல் அல்லாமல் நிம்மதியாக உறங்கி இருந்தால்.. அன்று மதியமே சில பொருள்கள் வாங்க வேண்டும் என்று அரை நாள் விடுப்பு எடுத்து வந்தவள் அதிலேயே தன்னை முழுதாக ஈடுபடுத்திகொண்டால்.. தனக்கு தேவையான உடை மற்றும் சிறிது பொருள்கள் வாங்கியவள் தனது அறைக்கு சென்றவள் பொருட்களை ஒழுங்கு படுத்திவிட்டு அடுத்த நாளைக்கு தேவையான நோட்ஸ் எடுத்துவிட்டு இரவு உணவை முடித்துக்கொண்டு படுத்துவிட்டால்.. அவளது சிந்தனையில் யாதவ் என்ற ஒருவனோ காலையில் அவனிடம் போட்ட சபதமோ எதுவும் நினைவில் இல்லை.. அவனது தூக்கத்தை கெடுத்துவிட்டு இங்கு இவள் நிம்மதியாக உறங்கி இருந்தால்… சம்யுக்தா கூறியதை போல் முதல் நாள் யாதவின் தூக்கத்தை வென்று அவனை தோற்கடித்து விட்டாள்..

மறுநாள் 6 மணிக்கு அடித்த அலாரம் சத்தத்தில் விழித்தவள் சுறுசுறுப்பாக கிளம்பி வேளைக்கு சென்றால்.. விடுதியில் இருந்து அவள் வேலைக்கு செல்லும் கல்லூரி 10 கி.மி தூரத்தில் இருந்ததால் அடித்து பிடித்து செல்ல வேண்டிய கட்டாயம் இல்லமால் போனது.. இருந்தும் டிராப்பிக்கு பயந்து கால் மணி நேரம் முன் கூட்டியே சென்றால்…
சீக்கிரமாக வந்ததில் வகுப்பு ஆரம்பிக்க முழுதாக 20 நிமிடம் இருந்தது.. சில ஆசிரியர்களே வந்து இருக்க அவர்களிடம் மெலிதாக புன்னகையை சிந்திவிட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்து அவளது வகுப்பிற்காண குறிப்புகளை எடுக்க ஆரம்பித்தால்..

ஹாய்.. என் பேரு ராகவ் என்று அவள் முன் ஒரு கை நீல… அந்த கரத்திற்கு உரியவனை நிமிர்ந்து பார்க்க அலைபாயுதே மாதவன் ஸ்டைலில் அழகாக சிரித்துக்கொண்டு கை நீட்டி இருந்தான் .. அரை நொடிக்குள் அவனை ஆறைந்தவள் .. அவனிடம் தன் கரங்களை நீட்டி “ஹாய் நான் சம்யுக்தா”.. என்று இவள் கூற..

“அழகான பேரு உங்களை போலவே..” என்று அவன் வெளிப்படையாக அவளிடம் வழிய மெலிதாக சிறித்தவள்.. ” ரொம்ப நன்றி தம்பி… நீங்க இங்கே எவ்ளோ நாளா லக்சரர்ரா இருக்கீங்க??”

என்னது தம்பியா?? என்று ராகவ் வாயை பிளக்க…

ஆமாடா என்னோட கிளாஸ்மேட்கு நீ தம்பி தானே?? இல்ல அண்ணாவா?? என்று யாதவ் ராகவின் தோளில் கை போட்டவாறு கேட்க..

அண்ணா நீங்க எப்போ வந்தீங்க??

நீ மாதவன் ஸ்டைல்ல உன்ன அறிமுகம் படுத்தற அப்போவே வந்துட்டேன்…

யாதவை பார்த்து அசடு வலிந்து சிரித்த ராகவ் “தலை உங்க ப்ரென்ட் வருவாங்கன்னு நீங்க சொல்லவே இல்ல.. “

நான் ஏற்கனவே சொல்லி இருந்தா நீ இப்படி உன்னை மேடி ஸ்டைல்ல அறிமுகப்படுத்தி இருக்க முடியுமா சொல்லு??
அவன் மறுபடியும் அசடு வழிய… ” பர்ஸ்ட் ஹவர் உனக்கு கிளாஸ் தானே?? ” என்று யாதவ் ஆரம்பிக்க..

“ஹையோ மறந்தே போய்டேன் தலை பை…” என்று யாதவிடம் கூறிவிட்டு திரும்பியவன் மீண்டும் திரும்பி யுக்தாவிடம் ” பை மேம்…” என்று கூற இவளும் அழகாக தன் வெண்பற்கள் தெரிய முதன்முதலாக சிரித்து தலை அசைத்து விடைகொடுக்க.. அங்கே இருந்த இன்னொரு பெண் விரிவுரையாளர் ” அவன் கிடக்கறான் நீங்க சொல்லுங்க யாதவ் சார் கூட எப்போ படிச்சிங்க?? “

அந்த கேள்வியில் அங்கே இருந்த அனைவரின் கவனமும் இவர்களிடம் திரும்பியது.. அனைவரின் கவனமும் தன் மேல் ஒரு நொடியில் திரும்பியதை பார்த்தவள் உடனடியாக யாதவின் முகம் பார்க்க.. எப்பொழுதும் போல் அவனது முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை…. “இவனை இப்போ இங்கே யாரு கேட்டா நானும் இவனும் ஒண்ணா படிச்சோம்னு சொல்ல சொல்லி பைத்தியம்..” என்று மனதிற்குள் அர்ச்சித்துவிட்டு “நானும் அவனும்…. ஸ்ஸ்ஸ்… சாரி நானும் யாதவ் சாரும் யு.ஜி மேட்ஸ்..” என்று கூறினாள்…

“ஓஒ சூப்பர்.. சார் அப்போ எப்படி?? இதே மாதிரி தான் ஹன்ட்சம்மா இருப்பாறா??” என்று அங்கே பின் இருவதுகளில் இருந்த மற்றொரு பெண் கேட்க…

இவள் உடனடியாக யாதவின் முகத்தை பார்க்க.. அவனோ அங்கே நடப்பதற்கு தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல் அவனது இருக்கையில் அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டு இருந்தான்….

“என்ன மேடம் எந்த கேள்வி கேட்டாலும் அவரோட முகத்தை பார்க்கறீங்க?? அவர் எதுவும் சொல்ல மாட்டாரு… நீங்க சொல்லுங்க…. என்ன யாதவ் சார் நீங்க ஒன்னும் சொல்லமாட்டீங்க தானே??”

“நான் என்னமா சொல்ல போறேன்??” என்று அவன் கூறிவிட்டு அவன் வேலையை தொடற… “அதான் அவரே சொல்லிட்டாரே… நீங்க சொல்லுங்க மேடம்..”

அனைவரும் தன் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து “இல்ல ” என்று அவள் கூற…

நீங்க பொய் சொல்றீங்க மேடம் அவரோட காலேஜ் போட்டோ நாங்க பாத்து இருக்கோம்… என்று கூறி அவர்கள் சிரிக்க.. யுக்தாவிற்கு தான் கொஞ்சம் கொஞ்சமாக கோபம் ஏற ஆரம்பித்தது…

ஹேய் எல்லாரும் அமைதியா இருங்க.. வந்த அன்ணைக்கே அவங்களை ஏன் வம்பு பண்றீங்க என்று அங்கே இருந்த மற்றொரு பெண் விரிவுரையாளர் மற்றவர்களை அடக்க…

“என்ன யாதவ் சார் உங்க தோழியை மத்தவங்க ரேக் பண்றாங்க.. நீங்க அமைதியா இருக்கீங்க… அவங்களை காப்பாத்தலாம்ல” என்று ராகவ் கேட்க…

“அதுக்கெல்லாம் அவசியமே இல்ல…. வேணும்னா இன்னும் கொஞ்சம் நேரத்துல உங்களுக்கு எல்லாம் உதவி தேவைப்பட்டா சொல்லுங்க..” என்று யாதவ் கூற.. யுக்தா அவனை முறைத்து விட்டு அவள் வேலையை தொடர்ந்தாள்….

அனைவரையும் முன்பு அமைதியாக இருக்க சொன்ன ஆசிரியை இப்பொழுது யுக்தாவிடம் ” நீங்க கிறிஸ்டியனா சம்யுக்தா??” என்று வினவ.. அவர் ஏன் அவ்வாறு கேட்கிறார் என்று நொடியில் உணர்ந்து கொண்ட சம்யுக்தா தன் முகத்தில் எந்தவித உணர்சிகளையும் காட்டாது “இல்லை ” என்று தெளிவாக பதில் கூறினாள்…

அப்போ உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா?? என்று மற்றொரு பெண் ஒரு மாதிரியான குரலில் கேட்க..
இதுவரையிலும் எதையோ படித்துக்கொண்டு இருந்த யாதவின் முழு கவனமும் யுக்தாவின் மேல் திரும்பியது… அவளது பதிலுக்காக அவளது முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்…

மெலிதாக முறுவலித்த யுக்தா ” எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு… ஆனா 7 வருஷம் முன்ன அவரு தவறிட்டாறு… ” என்று கூற அங்கே சற்று நேரம் எந்தவித பேச்சு வார்த்தைகளும் இல்லாமல் போனது…

“சாரி” என்று அந்த கேள்வியை கேட்ட ஆசிரியை கூற… “ம்ம்ம் ” என்று தலையசைத்து அவள் மன்னிப்பை எற்று கொண்டவளிடம் ” குழந்தைங்க ?? ” என்று இன்னொருவர்
கேட்க … ஒரு நொடி கண்மூடி தன்னை சமன்படுத்திக்கொண்டவள் “குழந்தைங்களும் இல்லை…” என்று கூறிவிட்டு “கிளாஸ்சுக்கு டைம் ஆச்சு வரேன்” என்று பொதுவாக கூறிவிட்டு அந்த அறையில் இருந்து அவள் வகுப்பு எடுக்க போகும் வகுப்பறையை நோக்கி செல்ல “ஒரு நிமிஷங்க” என்று கூறி ராகவ்வும் அவளுடன் இணைந்து கொண்டான்…

பின்பு அனைவரின் பார்வையும் யாதவை ஒரு நொடி நோக்கிவிட்டு அவர்களுக்குள் பேசிக்கொண்டு அவர்களின் வேலையை தொடற யாதவால் தான் அவள் சொன்னதை ஜீரணிக்க முடியாமல் அமர்ந்து இருந்தான்…

7 வருஷத்துக்கு முன்னாடியே புருஷன் இறந்துடாருன்னு சொல்றா.. அப்புறம் இன்னும் ஏன் வேற கல்யாணம் பணிக்காம இருக்கா?? இவங்க வீட்ல எப்படி இவ்ளோ
நாள் இவளை விட்டாங்க??

உன்னையும் கூட தான் உங்க அம்மா மூணு வருஷமா கல்யாணம் பண்ணிகொன்னு கேக்கறாங்க நீ ஒதுக்கிட்டையா ?? என்று அவன் மனசாட்சி அவனிடம் கேள்வி எழுப்ப… நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு… நானும் அவளும் ஒண்ணா?? எனக்கு யாஷிகா இருக்கா.. அவளுக்கு குழந்தையும் இல்லை…

ஒரு வேலை உன்னோடது மாதிரி அவளதும் காதல் கல்யாணமா இருக்கும்.. உன்னை மாதிரியே அவளும் அவளோட துணையை மறக்க முடியாமல் வேற கல்யாணம் வேண்டாம்னு இருக்காலம்.. என்று அவனுடைய மனசாட்சி மீண்டும் அவனிடம் கேள்வி எழுப்ப.. ” நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கலைன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.. அதனால நீ என்ன இதுல இழுக்காத.. ஆனா நீ சொன்ன மாதிரி அவளோட புருஷனை அவ்ளோ லவ் பண்ணி இருப்பாளோ?? “

ஏன் நீ உன்னோட பொண்டாட்டியை அவ்ளோ லவ் பண்ணலையா?? என்று மீண்டும் அவன் மனசாட்சி கேட்க…

இப்போ உனக்கு என்ன பிரச்சனை?? அமைதியா தானே இருந்த இவ்ளோ நாளும்?? இப்போ திடீர்னு என்ன என்னை கேள்வி கேட்கற?? என்று தன் மனசாட்சியை அசிங்கமாக திட்டி விட்டு யுக்தாவிடம் இன்னைக்கு காலேஜ் முடிஞ்ச உடனே இதுபற்றி கேட்க வேண்டும்.. என்று தன் மூலையில் பதிவு செய்துவிட்டு அவன் வேலைகளை தொடர்ந்தான்….

மாலை காலேஜ் முடிந்து அனைவரும் கிளம்ப ஆரம்பிக்க யுக்தாவிடம் சென்று நின்றவன் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேக் எடுத்துட்டு கான்டீன் வா ” என்று யாதவ் கூற..

உங்ககிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்ல சார்.. என்று கூறிவிட்டு இவள் வெளியில் செல்ல போக.. அவள் வழியை மறைத்து நின்றான்…

அவன் இவ்வாறு வழியை மறைத்து நிற்பான் என்று எதிர்பார்க்காதவள் “என்ன பண்ற நீ?? லூசா நீ?? யாரவது பார்த்தா என்ன நினைப்பாங்க?? வழியை விடு யாதவ் … ” அவன் நகராமல் நிற்க.. இவள் அவனை சுற்றி போக முயல அவன் அதற்கும் விடாமல் அவள் வழியை அவள் நகரும் இடம் நகர்ந்து மறைக்க .. யுக்தாவிற்கு அவன் செய்வது சுத்தமாக பிடிக்காமல் போக..

என்ன இன்னும் காலேஜ் பையன்னு நினைப்பா மனசுல?? ஒழுங்கா வழியை விடு…

எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை.. ஆனா நீ தான் அப்போ அப்போ மறந்தற போல…

யாரு நானா??

“ஆமா நீதான்… சின்ன புள்ள தனமா ஏதோ நேத்து சவால் எல்லாம் விட்டையே அதுக்குள்ள மறந்துருச்சா?? ” என்று யாதவ் அவளிடம் கேட்க அப்பொழுதுதான் அவளுக்கு தான் செய்த செயல் எவ்வளவு குழந்தைதனமானது என்று புரிந்தது… யாதவை பார்த்தவுடன் அவனை தனது காலேஜ் எதிரியாகவே பாவித்து அவ்வாறு பேசியது மெல்ல புரிய… அவன் முன் தன் சிறுபிள்ளைதனத்தை ஒத்துகொள்ள முடியாமல் அவனிடம் வீராப்பாக ” ஆமா நீ என்ன நேத்து அவ்ளோ ஸ்டுடென்ட்ஸ் முன்னாடி அசிங்க படுத்துனதால அப்படி சொன்னேன்… “

நான் என்ன சொன்னேன்?? அது அவங்களா சொன்னது.. நான் உன்னை ஏதாவது சொன்னனா?? உன்னை மன்னிப்பு கேட்க சொன்னேனா?? நீயா வந்து சாரி சொல்லிட்டு போனா அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா?? என்று யாதவ் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க…

“நல்லா பேச கத்துகிட்டடா ” என்று கூறியவள் அவள் கூறிய பின்புதான் அவள் கூறிய வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்து நாக்கை கடித்துகொண்டு சாரி கேட்க..

ஆமா இப்போ எதுக்கு இந்த சாரின்னு நான் தெரிஞ்சுக்கலாம?? என்னை நல்லா பேச கத்துகிட்டேன்னு சர்டிபிகேட் கொடுத்ததுக்கா இல்லை டா ன்னு சொன்னியே அதுக்கா என்று அவன் மீண்டும் கேக்க…

” இரண்டிற்கும் “என்று அவள் மெதுவாக கூற.. “காலேஜ்ல படிக்கும் பொழுது அப்படி தானே கூப்ட.. சோ உனக்கு தோன்ற மாதிரி கூப்டு… நம்ம மட்டும் இருக்கும் போது.. அப்புறம் நீ சொன்ன மாதிரி நல்லா பேச கத்துகிட்டேன் தான்… “

” யாஷிகா கூட இருந்துட்டு இந்த அளவுக்கு கூட பேசலைனா எப்படி?? ” அவள் புரியாமல் பார்க்க ” என்னோட பொண்ணு யாஷிகா… உன்னை மாதிரியே செம வாய்.. அவ அப்படி பேசும் போது எல்லாம் எனக்கு உன்னோட நியாபகம் தான் வரும்.”

யுக்தாவிற்கு யாதவ் தன்னை நியாபகம் வரும் என்று கூறுவதை கேட்டதில் இருந்து இப்படி ஒருத்தன் இருக்கானே இங்கே வந்து பார்த்த உடனே தானே எனக்கு நியாபகமே வருது… நண்பர்கள் யாரிடமும் பேசாமல் இருந்தது தவறோ?? என்று யோசித்தால்… அப்படி பேசி இருந்தால் தனக்கு இந்த நிலை வந்து இருக்காதோ என்று காலம் கடந்த ஞாநோதையம் வந்தது..

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here