04.நீயின்றி நானும் இல்லை

0
16

விஷ்வஜித் இப்டி திடீரென சுஷ்மியை இழுத்து விடுவான் என்று எதிர்பார்க்காதவர்கள் தங்களை விட வினயாவை இது எப்படிதாக்கி இருக்கும் என்பது விளங்க பரணியும் பவியும் பயமாக அவளை பார்க்க அவளும் இதை எதிர்பாக்கவில்லை என்பதை சிமிட்டாமல் நின்ற இமைகளே கூறியது.

வினயா விரக்தியோடு பவியை பார்த்தாள்.
‘இதுக்கு தான் நான் விலகிக்கிறேன்னு சொன்னேன்.. எதுக்காக என்னை திருப்பி வர வைக்கணும்.. இப்டி பிடிக்காதவங்க கூட ஒன்னா வேலை செய்ய வைக்கணும்?’ என்று கேட்டபடி.

பவிக்கு ஈரக்குலை நடுங்கியது
‘ஐயோ இந்த வேதாளம் மறுபடியும் முருங்கமரம் ஏறிட்டா நான் என்ன பண்ணுவேன்?’ என நினைத்தாள் பவி.

பவியின் முகம் பரணியை வாட்டத்தோடு பார்த்தது.
பரணி ரிஷியை பார்க்க ,

ரிஷி வேகமாக நடந்து கொண்டிருந்தான்.
ரிஷிக்கு தாங்க முடியவில்லை வினயாவின் அந்த முகத்தை பார்க்க..
தன்னால் எவ்வளவு தான் கஷ்டம் அனுபவிப்பாள்..
அப்படி என்ன பிழை தான் செய்தாள்?
எனக்காக!! என தன் தோழி அனுபவிக்கும் கஷ்டத்தை போக்கும் வழி தெரியாமல் நின்று கொண்டிருந்தவனுக்கு கலங்கரை விளக்கமாக விஷ்வஜித் கண் முன் தோன்றினான்.
‘அவனால் மட்டுமே இதை சரி கட்ட முடியும்’ என்ற கண்மூடி தனமான நம்பிக்கையோடு சென்று கொண்டிருந்தான்.
“மச்சி வெயிட் பண்ணு நானும் வாரேன்” என்று அவனை நோக்கி ஓடி வந்தான் பரணி.

ரிஷியின் மனதை படித்தவன் போல,
“மச்சி தப்போ ரைட்டோ சீனியர்கிட்ட சொல்லிடு… இனியும் நம்ம வினு கஷ்டபடக்கூடாது” என்றான்.
அவன் தோளை அழுத்தி கொடுத்தவன்..
“நானும் அதுக்காகத்தான் போறேன்… வினுக்கு இதை பத்தி சொல்ல வேணாம்” என்றான் ரிஷி.

‘சரி மச்சி நீ போய் பேசு நான் பாத்துகிறேன்” என்று கிளம்பினான் பரணி.
விஷ்வாவின் அறையில்..

திடீரென்று வந்த ரிஷியை பார்த்த விஷ்வஜித்
அவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்த படி..
சொல்ல போனால் இவன் ரிஷியை முன்னமே எதிர்பார்த்தது தான்.
வினயா சொல்லாமல் கொள்ளாமல் விலகவும் காரணம் யோசித்தான்..
‘எதுக்கு இப்டி நடந்துகிட்டா? ஒரு வேலை நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனா? அப்டி ஒன்னும் பண்ண மாதிரியும் தெரியல.’ என்று தனக்குள் கூறி கொண்டவன் மனதில் திடீரென வந்து போனது..
‘ஒரு வேலை பிரண்ட்ஸ் கூட ப்ராப்ளமா? அப்படி தான் இருக்கும்’ என்று முடிவு செய்தான்.
‘அதுக்காக நான் ஏன் அவளை பிரிஞ்சு இருக்கணும்?’ என்று எண்ணியவனாக அவளை வரவழைத்து இருந்தான்.
வினயாவின் நண்பர்கள் அவளை வர வைக்க வழி தேடி கொண்டிருக்க அவளை சுலபமாக வரவழைத்து இருந்தான்.
‘எந்த பிரச்சினையா இருந்தாலும் பக்கத்துல இருந்து அவங்களே பேசி தீர்த்துகட்டும்’ என்று சிரித்து கொண்டான்.
அவன் யூகம் இரண்டு பிரச்சினை சிறிதென்றால் அவர்களே தீர்த்து கொள்வார்கள்..
அதுவே பெரிதெனும் பட்சத்தில் அவர்களுக்கு நிச்சயமாக ஒரு உதவி தேவை.. கல்லூரியில் இருந்தே பழக்க பட்ட ஒன்று என்பதால் அவர்கள் தன்னை தான் நாடுவார்கள்’ என்று கணித்து கொண்டான்.
அவன் இரண்டாம் யூகம் சரி என்பது போல ரிஷி வந்து நிற்கவும் புரிய
“என்ன ரிஷி எனிதிங் இம்பார்டண்ட்?” என வினவினான்.
“’ஆமாம் சீனியர் கொஞ்சம் பெர்சனலா பேசணும்” என்றான் ரிஷி.

“பெர்சனல் மேட்டர்லாம் வேலை நேரத்துல டிஸ்கஸ் பண்ண கூடாது இது என்னோட பாலிஸி உனக்கு தெரியாதா?” எனக்கேட்டான் சீனியர் சற்று கெத்தாக.
ஓரளவுக்கு விஷ்வாவின் மனதை படித்தவன்,
“இது வினயாவை பத்தினாலும் அப்படித்தான் யோசிப்பீங்களா சீனியர்?” என்று சிறு நமுட்டு சிரிப்போடு கேட்டான் ரிஷி.

‘என்னைய எப்படி மடக்கணும்னு கரெக்டா தெரிஞ்சு வச்சுருக்கானே பயபுள்ள… அது சரி கூடவே சுத்துனவங்களுக்கு தனியா எடுத்து சொல்லவா வேணும்? ம்ஹூம்”’என்று விஷ்வாவின் மனது அவனிடம் பேசியது.

“’சீனியர் பேசலாமா? மேட்டர் ரொம்ப அர்ஜென்ட்” என்றான் ரிஷி.
இதுவரை சிரித்து கொண்டு இருந்த அவன் முகம் திடீரென சுருங்குவதை குறித்து கொண்டவன்,

“ஓகே எது பேசுறதா இருந்தாலும் ஆபிஸ்ல பேச வேணாம் எதிர்த்தாப்புல இருக்குற காபி ஷாப்க்கு போகலாம்… வா ரிஷி” என்று வாஞ்சையோடு அவன் அழைத்தான்.
‘இதோ இந்த வாஞ்சையாக பேசும் குணத்திற்காவே தான் அவர்கள் அடிக்கடி சீனியரை நாடுவதே..
எந்த ஒரு பெரிய விஷயம் என்றாலும் இவன் காலடியில் தூசி போல பறக்குது
அதுலயும்.. வினயா என்று வரும் போது.. இவன் மொத்தமும் மாறுபட்டவன்..
வித்தைக்காரன் தான் இவன்’ என்று அவன் மனதில் கூறி கொண்டே விஷ்வாவோடு காபி ஷாப் வந்து இருந்தான்

“இப்போ சொல்லு ரிஷி.. என்ன ப்ராப்ளம்?” என்றான் விஷ்வஜித்.
ரிஷி சிறிது நேரம் அமைதியாக இருக்கவும்,
‘அவனே தொடங்கட்டும்’ என்று அவன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தான்.
ஒரு பெரு மூச்சோடு ரிஷி ஒன்று விடாமல் அன்றைய இரவில் சுஸ்மிக்கும் வினயாவிற்கும் நடந்த உரையாடல்களை சொல்லி முடித்தான்.
அவன் சொல்லி முடிக்கவும் அவர்களுக்கான காபி வரவும் சரியாக இருந்தது.
தன்னதை எடுத்து ஒரு சிப் அருந்தியவன்,
“சோ.. இப்போ சுஷ்மியை டீம் சேர்க்குறது உனக்கு விருப்பமில்லை அப்டி தான?” என்றான்.
“ ஆமா சீனியர் வினயா இந்த இடத்தை விட்டு போனதுக்கு காரணமே சுஸ்மிதான் … இப்போ மறுபடியும் இரண்டு பேரையும் சேர்த்து ஆங்கரிங் செய்ய வைச்சுட்டு வினயாவை கஷ்டபடுத்த வேணாம்னு நினைக்கிறேன்… ஏற்கனவே என்னால அவ ரொம்ப கஷ்ட படுறா.. ப்ளீஸ் சீனியர்.. இந்த ஒரு விஷயம் மட்டும் நான் சொல்ற படி கேளுங்க? சுஷ்மி வேணாம்.. நாம வேற ஒருத்தர போடலாம்..” என்றான் ரிஷி.
விஷ்வாவோ, ‘முடியாது’என்று தலையாட்ட
“சீனியர் அவள் என் கூட பேசலனாலும் பரவா இல்லை… ,அவ இதே மாதிரி எங்க கூடவே இருந்தாலே போதும்… நாங்க மூனு பேரும் சந்தோஷப்படுவோம்… ப்ளீஸ் அதுக்கு மட்டும் ஸ்யூரிட்டி குடுங்க சீனியர்” என்றான் அவனுடைய ஆழமான நட்பை எடுத்துக்காட்டி.
ஒரு ஆண்மகன் இத்தனை தூரம் இறங்கி வர முடியுமா??
நட்பின் முன் யாரும் ஒன்றே..
அதுவும் வினயா போல நட்பை பெற இவன் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வான்..
“இப்போ என்ன சொல்ல வர்ற சுஸ்மியும்,வினயாவும் சேர்ந்து ஆங்கர் பண்ண கூடாது.. அதனால வினு இன்னும் சங்கட படுவா.. அவங்க பிரிஞ்சு இருக்குறது தான் நல்லதுன்னு சொல்ல வரியா?” ‘என்று கேட்கும் அவன் சிவந்த கண்களே ரிஷிக்கு அவன் கோபத்தை சுட்டிக்காட்டியது.

“ இல்லை சீனியர்ர்ர்ர்… அது… எனக்கு சொல்ல தெரியல… வினயா பாவம்… ன்ஆன் எந்த இடத்துல தப்பு பண்ணேன்னு தெரியல… சுஷ்மி அப்டி நடந்துக்க வேண்டி ஆகிடுச்சு.. இந்த பிரச்சினை தீர இது தான் ஒரே வழினு எனக்கு படுது” என்று அவன் இழுக்கும் போதே விஷ்வஜித்தின் தலை மறுப்பாக அசைய மௌனமாக மறந்து இருந்தான் ரிஷி.
இருவருக்கும் இடையே நீண்ட மௌனம் நடை போட தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவனாக ரிஷி அவனையே பார்த்து கொண்டு இருந்தான்.
“இந்த பிரச்சினைய நான் பாத்துகிறேன் ரிஷி.. நீ வொரி பண்ணாத.. உன் அளவுக்கு வினயா மேல எனக்கும் அக்கறை இருக்கு.. அதனால இனி நான் இனி என்ன செஞ்சாலும் வேடிக்கை மட்டும் பாரு.. ‘நான் வைக்குற ட்விஸ்ட்ல சுஷ்மியும் உங்க குயினும் என்ன ஆக போறாங்க மட்டும் பாரு… ஹாஹா” என சிரித்த வண்ணம் ரிஷியிடம் கூறியவன் சிறிது நேரம் யோசித்து விட்டு,.
“இங்க பாரு ரிஷி, உனக்கே தெரியும் நான் ஒரு முடிவு எடுத்தா அதை மாத்திக்க மாட்டேன்னு.. நான் ஏற்கனவே முடிவு பண்ணது போல சுஷ்மி தான் கோ ஆங்கர்.. இப்போ நீ சொன்ன விஷயத்த வச்சி பாக்கும் போது 200% சொல்றேன் வினயாவும் சுஷ்மியும் சேர்ந்து தான் பண்ண போறாங்க.. நீ நம்ம நெக்ஸ்ட் ஷூட்டிங்க்கு அவளை வர சொல்லிடு” என்று முடித்து கொண்டான்.
‘அவன் முடிவெடுத்து விட்டான்.. இனி ஒன்றும் மாற போவதில்லை’ என்று உணர்ந்து கொண்ட ரிஷி அவன் சொல்லுக்கு செயல்பட தொடங்கினான்.
‘ஏதோ பெரிய பாரத்தை முழுமையாக இறக்கி வைத்தது போல நிம்மதியாக உணர்ந்தான் ரிஷி.
“சரி நான் கிளம்புறேன் சீனியர்…” ‘என எழுந்திரிக்க எத்தனித்தான் ரிஷி.

விஸ்வஜித்தும் எழுந்து ரிஷியின் தோளை தட்டி கொடுத்தபடி
“உன்னோட லவ்க்கும் எந்த பிரச்சனையும் வராது.. அதுக்கு ஒரு பிரெண்டா நான் கியாரண்டி…” என சிரித்தவன்
“சுஷ்மி தப்பு பண்ணி இருக்கா.. அவளோட தப்பை திருத்தி புரிய வைப்போம்.. சரியா?” என்று ஒரு உண்மையான நண்பனாக அவன் கூற இவனும் தலையை ஆட்டியபடி,
“ஓகே சீனியர்” என்றான்.

சுஷ்மியின் வீடு..

காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்த சுஷ்மி ரிஷியை கண்டதும் கட்டியணைத்து கொண்டாள்.
“ரிஷி, நீ… உன்னை எதிர்பார்க்கலை ரிஷி.. நீ இன்னும் என் மேல கோவமா தான் இருக்கனு எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ரிஷி… எனக்கும் வேற வழி தெரியல ரிஷி.. நீ எனக்கு மட்டும் தான்.. எனக்கு மட்டும் தான் சொந்தம்..” என்று அவனை இம்மியும் விலகாமல் கூறி கொண்டே செல்ல
தோளை சுற்றி இருந்த அவள் கையை விடுத்து விட்டவன்,
“நான் இப்போ வந்து இருக்கது வேலை விஷயமா?” என்று கூறினான்.
அவன் முகத்தை பார்த்து கொண்டு நின்றவள் என்ன நினைத்தாளோ?
“உள்ள வாங்க..” என்று அழைத்து சென்றாள்.
அவள் காட்டிய சோபாவில் அமர்ந்த படி அவள் முன் ஒரு காகிதத்தை நீட்டினான்.
அதை அவள் வாங்கி படிக்க அவன் தொடங்கினான்.
“லவ் பேர்ட்ஸ் ஷோவோட பைனல் எபிக்கு நீயும் ஒரு ஆங்கரரா சேனல்ல முடிவு பண்ணி இருக்காங்க..” என்று..
அவளோ தன் இரு விழிகளை அகல விரித்து அவனை பார்க்க
“ சேனல்னு சொல்றத விட சீனியர் முடிவு பண்ணிட்டாங்கனு சொல்றது தான் கரெக்ட்.. இதுக்கு தான நீ ஆசப்பட்ட.. நீ விரும்புன விஷயம் உன்ன தேடி வந்துடுச்சு..” என்றான்.
“ ஆனா பாரு.. நீ ரொம்ப ஆசை பட்ட விஷயம் உன் கைக்கு வரும் போது உன் முகத்துல அதுக்கான சந்தோஷத்தை காணோமே?? ஏன் சீனியர்னு சொன்னதும் பயம் வந்துடுச்சா?” குரலில் கேலியோட அவன் கேட்க
அவளும் அப்படி தான் அமர்ந்து இருந்தாள்.
யஏனென்று விளங்காமல் வியர்வை வழிந்த முகத்தை துடைத்தபடி அமர்ந்து இருந்தவளை அவள் முன் சொடுக்கவும் இவனை பார்த்தாள்.
“ இன்னும் மூணு நாளு ஃ ப்ரீ ஷோ.. உன்னை சீக்கிரம் வர சொன்னாங்க சீனியர்..” என்று கூறிவிட்டு எழுந்து கொண்டான்.
இவளுக்குள் தான் என்ன மாதிரியான ஓட்டம்??

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here