04. மறுபாதி

0
13

அவள் அந்த கல்லூரியில் சேர்ந்து 1 மாதம் சென்று இருக்கும் நிலையில் எதுவும் மாறவில்லை .. இவளும் சென்னை வாழ்க்கைக்கு மாறவில்லை ..
மற்றவர்களை போல் ஊர் சுத்துவது .. படத்திற்கு செல்வது எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை… தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவள்..
ஏனோ அன்று காலை முதல் மன அழுத்தமாக இருக்க பக்கத்தில் உள்ள பூங்காவிற்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தால்…

சென்னையின் மைய பகுதியில் உள்ள குழந்தை பூங்கா அது… கடந்த கால நினைவுகளில் அவள் அமர்ந்து இருக்க யாரோ தன்னை பார்ப்பது போல் உணர்ந்து அவள் சுற்றிலும் பார்த்தாள்.. ஆனால் யாரும் இல்ல…
இன்னும் எவ்வளவு தூரம் வாழ்கை இருக்கிறது என்று நினைத்தவள் மீண்டும் கண்களை மூடி தான் கடந்த வந்த பாதையை அசைப்போட ஆரம்பித்தாள்..
அப்பொழுது ஒரு சிறு கரம் அவள் கை மீது பட .. அந்த பிஞ்சு கரத்தின் மேன்மையை கண் மூடி ரசித்து மெதுவாக கண்ணை திறந்தாள் ..

“ஹாய் ஆண்ட்டி ஏன் சோகமா உட்காந்து இருக்கீங்க??” என்றால் அந்த குட்டி தேவதை..

“நானா ?? சோகமா எல்லாம் இல்லையே மா…. ” என்று சம்யுக்தா கூற ..

இல்ல நான் பார்த்தேன் நீங்க ரொம்ப நேரமா சோகமா இருந்தீங்க….

ம்ம்ம்ம் எனக்கு யாரும் ப்ரென்ட் இல்லயா… அதுதான் டா ஆண்ட்டி சோகமா இருந்தேன்..

ஓஹ் என்று அவள் யோசிப்பது போல் செய்ய சம்யுக்த அவளை ரசித்து பார்த்து கொண்டு இருந்தாள்.. மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து குழந்தைகளிடம் உள்ளது.. அவள் தன்னையே மறந்து அவளிடம் பேசி கொண்டு இருந்தாள்…

எனக்கும் ப்ரென்ட்ஸ் இல்ல ஆண்ட்டி பேசாம நம்ப 2 பெரும் ப்ரென்ட்ஸ் ஆகிடலமா??

“ம்ம்ம்ம் கண்டிப்பா டா .. உங்க பேர் என்ன ??” என்று சம்யுக்தா கேட்க

“யாஷிகா… உங்க பேர் ஆண்டி?? “அவள் பேர் சொன்னவுடனே எங்கயோ கேட்டது போல் இருக்க ஒரு நிமிடம் சம்யுக்தா யோசித்து பார்த்தால் ..
எங்க என்பது அவளுக்கு நியாபகம் வரவில்லை .. குழந்தை தன் பதிலுக்காக தன் முகத்தையே பார்த்து இருப்பதை கண்டு “என் பேர் சம்யுக்தா ..” என்று கூறினாள்…

நான் உங்களை சாம் னு கூப்பிட்டடுமா ??

யாஷ் பேபிக்கு எப்படி கூப்பிட பிடிக்குதோ அப்படி கூப்பிடுங்க .. யார் கூட வந்து இருக்கீங்க??

நான் டெய்லி தாத்தா கூட வருவேன் சாம் .. எங்க தாத்தா அங்க வாக்கிங் போவாங்க… நான் இங்க தனியா விளையாடுவேண்..

ஓஹ்… ஏன் என்னோட யாஷ் பேபி கூட விளையாட யாரும் இல்லயா ??

இல்ல சாம்.. தினமும் புதுசு புதுசா வருவாங்க… நான் மட்டு தான் டெய்லி வருவேன் அதுனால ப்ரெண்ட்ஸ் இல்ல சாம்.. என்று தன் ஆரஞ்சு உதுடுகளை அழகாக பிதுக்கினாள்..

ஓஹ் அப்போ நானும் உனக்காக இனி டெய்லி வரேன் நம்ப 2 பெரும் சேர்த்து விளையாடலாம் .. ஒகே வா அம்மு??

“உண்மையா??” என்று அவள் சந்தோஷத்தில் குதிக்க…

“உண்மையா நம்ப டெய்லி விளையாடுவோம்…” என்று சம்யுக்தா யாஷிகாவிற்கு உறுதி அளித்தால்…

“நீங்க டெய்லி 4 மணிக்கு இங்க வந்துடுங்க… நானும் வந்துடுவேன்..” என்று யாஷிகா குட்டி கூற

ம்ம்ம்ம் சரி டா… பட் சாம் வர லேட்டாகும் …. நான் இங்கே கரெக்ட்டா 5 மணிக்கு இருப்பேன் ஓகே வா??

சரி சாம்… தாத்தா தேடுவங்க நான் போய்ட்டு வரேன்… டாடா நாளைக்கு பார்ப்போம்… என்று சம்யுக்தவிற்கு டாடா காட்டிக்கொண்டே யாஷிகா ஓடிவிட்டாள்…

போய்ட்டு வா டா.. டாடா என்று அவளும் சிறு பிள்ளை போல கையை ஆட்டினாள்..

விடு திரும்பிய யாஷிகா நேராக யாதவிடம் சென்று .. ” அப்பா எனக்கு ஒரு ப்ரென்ட் கிடைச்சி இருக்காங்க..”

“குட்டிமா அப்பா கொஞ்சம் பிஸி ஆஹ் இருக்கேன்டா… அப்புறம் பேசலாமே… ” என்று அவன் சொல்ல..

அந்த சின்ன குட்டியும் அவன் சொல் பேச்சு கேட்டு சென்றது…
ஒருவேலை அவன் கேட்டு இருந்தால் பின்னால் நடக்க போகும் பிரச்சனையில் இருந்து தப்பி இருக்கலாம்..

அடுத்த நாள் காலை இவள் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக
காத்துக்கொண்டு இருக்க வெகு நேரம் ஆகியும் எந்த பேருந்தும் வர வில்லை.. அருகில் உள்ள நபரிடம் “அண்ணா ஏன் இன்னைக்கு பஸ் எதுவும் வரல??”

இன்னைக்கு ஆல் இந்திய ஸ்ட்ரைக் மா ..

‘ஓஹ் இப்போ என்ன பண்றது?? இதுகூட தெரியாம இருக்கனே ..’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு இருக்கையில்..

அவள் அருகில் ஒரு பைக் வந்து நின்றது ..

யார் என்று அவள் பார்க்க வேற யாரும் இல்லைங்க நம்ப ராகவ் தான்…தன்னுடைய ஹெல்மெட்டை ஸ்டைலாக அவன் கழட்ட ..

அவன் செய்யும் செயலில் அவளுக்கு சிரிப்பு வர வாய் விட்டு சிரித்தாள்..

மேம் எவளோ அழகா ஹீரோ மாதிரி என்ட்ரி கொடுத்தா நீங்க என்ன என்னை இப்படி காமெடியன் ஆக்குறிங்க??

ஐயோ சாரி ராகவ் சார்.. உண்மையா உங்க ஆட்டிடுயூட் சிரிப்பு வந்துருச்சு ..

ம்ம்ம்ம் போங்க என்ன போய் சார்னு கூப்படுரிங்க …கால் மீ ராகவ்… உங்களை விட நான் சின்ன பையன் தான் ..

ஓஹ் சரி ராகவ்..

“வாங்க நான் உங்களை காலேஜ்ல ட்ராப் பன்றேன்.. ” என்று அவன் சொல்ல..

அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவில் ஒரு கார் வந்து நின்றது ..யார் என்று இருவரும் பார்க்க கார் கண்ணாடியை இறக்கினான் யாதவ்..

ஹாய் தல நீங்க எப்படி இங்க?? என்று ராகவ் முந்திக்கொண்டு கேட்க..

ம்ம்ம் பாப்பாவை ட்ராப் பண்ணிட்டு வரேன் டா.. என்ன ஆச்சு டா?? எதுக்கு 2 பெரும் நின்னுட்டு இருக்கீங்க?? என்று பார்வையை சம்யுக்தாவின் மீது பதித்தவாறு கேட்டான்..

தல இன்னைக்கு பஸ் ஆட்டோ எல்லாமே ஸ்ட்ரைக்.. சோ அதான் இவுங்கல நான் ட்ராப் பன்றேன்னு சொன்னேன்…
அவனுக்கு சம்யுக்தாவை பற்றி நன்கு தெரியும்.. யாருடனும் அவள் வண்டியில் செல்ல விரும்ப மாட்டாள் .. இருந்தும் அவள் சொல்லும் பதிலுக்காக அவன் அவளை பார்க்க…

அவள் பதில் சொல்லாமல் நின்று கொண்டு இருக்க மூவருக்கும் நேரம் ஆவதை உணர்த்த யாதவ் … “நீ போ டா தம்பி நான் கூட்டிட்டு வரேன் …”

“இல்ல நானே வந்துப்பேன்” என்று சம்யுக்தா சொல்ல .. யாதவ் அவளை யுக்தா என்று அதட்ட.. மறு பேச்சு எதுவும் இல்லாமல் அவள் அவன் காரின் கதவை திறந்து அமர்ந்தாள் ..

கார் இவர்களின் கல்லூரி நோக்கி செல்ல இருவரும் எதுவும் பேசி கொள்ள வில்லை..

இறங்கும் போது நீ செஞ்ச உதவிக்கு நன்றி .. என்று அவன் முகம் பார்க்காமல் அவள் சொல்ல.. அவளின் திடீர் கோவம் எதனால் என்பதை யாதவ் உணராமல் இருந்தான்..

கல்லூரியில் உள்ள அனைவரும் இவர்கள் இருவரும் ஒன்றாக வருவதை பார்த்து பேசிக்கொள்ள அது அனைத்தும் யாதவின் காதுகளில் விழுந்தது..

ஐயோ இதுக்கு தான் அவ கோவமா போனாலா?? எனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்ல.. அவ கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று அவளை தேட..

அவள் நேராக கேன்டீன் சென்று டீ குடித்து கொண்டு இருந்தாள்…அவள் எதிர் நாற்காலியில் அமர்ந்து ..” யுக்தா நான் தெரியாம ” என்று அவன் சொல்ல ஆரம்பிப்பதற்குள்…

அவள் உனக்கு என்ன வேணும் என்று கேட்க … புரியாமல் அவன் அவளை பார்த்தான்..

சொல்லு டீ யா இல்ல காபி யா?? என்று சம்யுக்தா கேட்க..

அவளை ஒரு நொடி புரியாமல் பார்த்தவன் பின்பு “டீ சொல்லு..” என்று கூறினான்…

“உனக்கு என் மேல கோவம் இல்லயா??” என்று யாதவ் கேட்க…

அதற்கு சம்யுக்தா “இல்ல நீ என்ன தப்பு பண்ண நான் உன்மேல கோவ பட சொல்லு?? ” என்று சம்யுக்தா அவனையே எதிர் கேள்வி கேட்க..

” நீ என்ன சொல்ல வர?? எனக்கு புரியல யுக்தா..” என்று யாதவ் சொல்ல…

“இது எல்லாம் எனக்கு பழகிடுச்சு யாதவ்.. 7 வருஷமா நான் இந்த சமுதாயத்தில இதை எல்லாத்தையும் கேட்டுட்டு தான் இருக்கேன்.. இவங்க எல்லாருக்கும் என்ன ப்ரூவ் பண்ண ஆரம்பிச்சா, என் வாழ்க்கை முழுக்க நான் அதுக்கே நேரத்தை செலவு செய்யணும்.. அவுங்களுக்கு பேச மட்டும் தான் தெரியும்.. என்னோட லட்சியம் வேற யாதவ் இதுக்கு இவங்க எல்லாம் குறுக்க வர நான் விட மாட்டேன்.. “
இவர்கள் பேசும் எந்த சொல்லும் என்னை பாதிக்காது என்று அவள் சொல்லாமல் சொன்னாள்…

அவள் பேச பேச ஏனோ சம்யுக்தா அவனுக்கு புதிதாக தெரிந்தாள்.. தன்னுடன் படித்த யுக்தா இவள் இல்லை என்பது மட்டும் அவனுக்கு தெளிவாக தெரிந்தது.

முன்பு எல்லாம் எல்லாருக்கும் பயப்படும் யுக்தா இன்று யாருக்கும் பயப்படாமல் எல்லாரையும் எதிர்த்து நிற்கும் இந்த தன் நம்பிக்கை அவனுக்கு மிகவும் ஆட்சரியம் .

சரி நான் கிளாஸ்கு கிளம்புறேன்… என்று அவள் கிளம்பி செல்ல..

“யுக்தா அப்போ ஈவினிங்?? ” என்று அவள் மாலையும் அவனுடன் வருவதை உறுதிபடுத்திக்கொள்ள கேட்டான் யாதவ் …

“வரேன்…” என்று கூறிவிட்டு அவள் கிளாஸ்கு செல்லும் வழியில் சென்றால்…

யாதவ் மனதில் அவனையும் அறியாமல் ஒரு சந்தோஷம் வந்து குடி கொண்டது…. அந்த சந்தோஷதத்துடனே அவனும் ஸ்டாப் ரூம் சென்று தேவையான நோட்ஸ் எடுத்துக்கொண்டு அவன் இப்பொழுது போக வேண்டிய வகுப்பறைக்கு சென்றான்…

சம்யுக்தா அவள் அடுத்து எடுக்க போகும் வகுப்பறைக்கு சென்று கொண்டு இருக்க. அவள் பின்னே ராகவும் சென்றான்..

சிறிது தூரமாக ராகவ் தன் பின்னாடி வருவதை அறிந்தவள் அவன் பக்கம் திரும்பி “என்ன ராகவ் எதுக்கு என் பின்னாடியே வர??”

“அது… அது வந்து ” என்று ராகவ் இழுக்க…

“அதான் வந்துட்டல சொல்லு …” என்று சம்யுக்தா அவனை கிண்டல் செய்ய…

“நான் ஏதோ தெரியாம காலைல உங்களை என் கூட வண்டில வர சொல்லிட்டேன்.. சாரி மேம்.. ” என்று ராகவ் சம்யுக்தாவிடம் சாரி கேட்க..

“ஹோய் இதுக்கு எதுக்கு சாரி ?? நீ எனக்கு தம்பி மாதிரி… ” என்று அவள் சொல்ல..

ஐயையோ தம்பின்னு மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ் ..

ஏன் ??

நான் எவளோ அழகா இருக்கேன் .. பட் அழகா இருந்து என்ன புரோஜனம் ஒரு பொண்ணு கூட நமக்கு ப்ரென்ட் ஆஹ் இல்ல.. எடுத்த எடுப்புலயே அண்ணானு சொல்லிடுதுங்க..

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்??” என்று சம்யுக்தா கறாராக கேட்க..

ஒன்னும் இல்ல உங்ககிட்ட ப்ரெண்ட்ஷிப் ப்ரொபோசல் கொடுக்கலாம் னு இருக்கேன்.. நீங்க அதை ரிஜெக்ட் பண்ணாம ஓகே சொல்லிட்டா போதும். என்று ராகவ் கூற..

“ஓஹ் அப்படியா சரி கொடு..” என்று இவர்கள் பேச்சில் நடுவில் வந்தான் யாதவ்..

தல நீங்க எப்படி இங்க .. என்று ராகவ் யாதவை பார்த்து கேட்க..

எனக்கும் இந்த பக்கம் தான் கிளாஸ்.. உன் ப்ரொபோசல் மொத என்கிட்ட கொடு.. அப்புறம் நான் அதை சம்யுக்தாக்கு கொடுக்குறேன்..

முடியாது முடியவே முடியாது… சம்யு ப்ளீஸ் என்னோட ப்ரொபோசல் அக்ஸ்ப்ட் பண்ணு..

சம்யுக்தா யாதவை பார்க்க அவன் வேணாம் என்று தலை ஆட்ட..

ஓகே ராகவ் இனி நம்ப பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் .. என்று சம்யுக்தா ராகவிற்கு கைநீட்ட.. ராகவும் அவள் நீட்டிய கை பிடித்து குலுக்கினான்…

சூப்பர் சம்யு இதை நம்ப கொண்டாடுறோம் .. மதியம் லன்ச் என்னோட ட்ரீட்.. தல நீங்களும் வரலாம்.. என்று யாதவிற்கும் அழைப்பு விடுத்தான் ராகவ்..

ஆமாம் யாதவ் சார் நீங்களும் கண்டிப்பா வந்துடுங்க.. என்று சம்யுக்தாவும் கூற…

“ம்ம்ம்ம் வரேன் வரேன்” என்று கோவமாக கூறிவிட்டு அங்கே இருந்து சென்றான் யாதவ்….

யாதவின் முகத்தில் கோவத்தை பார்த்து சம்யுக்தாவின் எண்ணம் கடந்த கால நினைவுகளுக்கு சென்றது..

* பிளாஷ் பேக் ஸ்டார்ட்ஸ் **

அவர்கள் இரண்டாம் ஆண்டு கடைசியில் இருக்கும் பொழுது.. அவர்கள் காலேஜில் ஸ்போர்ட்ஸ் டே வர.. மாணவர்கள் அனைவரும் முழு உற்சாகத்துடன் தயார் ஆகிக்கொண்டு இருந்தனர்..

அங்கே இருந்த இயற்பியல் 2 ஆம் ஆண்டு கிளாஸ் ரூமில் ஒரே கலவரமாக இருந்தது.. (வாங்க வாங்க என்ன பிரச்சனைன்னு நம்மளும் போய் பாப்போம்) ..

பெண்கள் 2 கூட்டமாக நிற்க.. ஆண்கள் அனைவரும் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்..

ஒரு கூட்டத்தில் இருந்த பெண்கள் அனைவரும் ஒரு பெண்ணை சுற்றிலும் நின்று வறுத்துஎடுத்துக்கொண்டு இருந்தனர்… அந்த தனியாக மாட்டிக்கொண்ட பெண் வேறு யாரும் அல்ல.. நம் சம்யுக்தா தான்…

இவள் என்ன பதில் கூற போகிறாள் என்று வகுப்பில் இருந்த ஒவ்வொருவரும் ஒரு விதமான எண்ணத்துடன் ஆவலாக காத்துக்கொண்டு இருந்தனர்…

முடிவா என்னதான் சொல்ல வர சம்யூ?? என்று அங்கே இருந்த பெண்கள் அனைவரும் கோரசாக கேட்க..

நான் விக்ரம் டீம்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்… நீங்க வந்தா வாங்க.. இல்ல நான் மட்டும் தனியா போய்கறேன்..

“ஏய் .. ஏண்டீ?? என்ன தான் யாதவ் உனக்கு பிடிகாதுனாலும் அவன் நம்ம கிளாஸ் டீ.. அவனை விட்டுட்டு நீ நம்ம எதிர் டீம்கு சப்போர்ட் பண்றது சரியில்லை… நீ பண்றது தப்பு சம்யூ..” என்று அவள் நெருங்கிய தோழி ரம்யா சம்யுக்தாவிற்கு அறிவுரை கூறினாள்…

” விக்ரம் என்னோட ப்ரென்ட் நான் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்.. ” என்று பிடிவாதமாக யாதவை முறைத்துகொண்டே சம்யுக்தா கூற..

அவள் அருகில் வந்த யாதவ் “உன்னோட ப்ரென்ட்கு என்னோட விஷஷ் சொல்லிடு யுக்தா” என்று கூறிவிட்டு வெளியில் சென்றுவிட.. மீண்டும் பெண்கள் அவளை திட்ட ஆரம்பித்தனர்….

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here