ஹெச்.ஓ. டியின் அறையில்,
“ அடியே பெருசா சொன்ன? இவனா இருக்க போய் ஒன்னும் பண்ணாம விட்டான்னு? இப்போ பாரு எப்டி கோர்த்து விட்டுருக்கான்னு?”
ரூபிணியின் காதில் மாலினி முணங்குவது வசந்த்திற்கு தெளிவாக கேட்க
ரூபிணியை பார்த்து சிரித்தான்.
அதை கண்ட மாலினி அவனை முறைக்க அவளை பார்த்து கண்ணடித்தான்.
‘ அடப்பாவி, சார் முன்னாடியே இப்டி??’ என்று பல்லை கடித்து கொண்டே
வரமாட்டேன் என்று சொன்னவளை வம்படியாக இழுத்து வந்த ரூபிணியை முறைத்தாள்.
‘ உன்னால தானே’ என்று.
அதற்குள் ஹெச்.ஓ.டி. அவனிடம் எதோ பேப்பரில் கையெழுத்திட்டு அவனிடமே திருப்பி கொடுத்து விட்டு,
“ நீயே கூட்டிட்டு போ” என்று வழியனுப்பினார்.
‘ என்னடா நடக்குது இங்க?’ என்ற லுக்கோடு அவனை பின் தொடர்ந்தனர் இருவரும்.
“ என்னடி காபி கொட்டுனதுக்கெல்லாமா டீஸி வாங்கிட்டு போவாங்க?” என்று முணுமுணுத்தாள்.
அவளை முறைத்த ரூபி,
“ ஆமா, அவர் டீஸி வாங்குறதுக்கு உன்னை சாட்சி கையெழுத்து போட கூப்ட்டாங்க.
யார்டி இவ?” என்று கடுப்பாகி கூறினாள்.
அவளுக்கே என்ன நடக்கிறது என்று புரியாத படியால்.
“ என்னடி நான் யாருன்னு உனக்கு தெரியாதா? ஐ அம் யுவர் பெஸ்ட் பிரண்ட்” மாலினி கூற,
“ வேணாம்டி, கோவத்துல ஏதாச்சும் அசிங்கமா திட்டிற போறேன்.
உன் கிட்டக் தான கையெழுத்து வாங்குணாங்க சார், அப்புறம் வசந்த் எதுக்கு என்னை வர சொல்லணும்?” என்று தனக்குள் கேட்க
“ அடிப்பாவி!! அப்போ அவன் தான் வர சொன்னதா? நீயும் நேக்கா என்னை கோர்த்து விட்டிருக்க.
இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ,
“ ஐ அம் நாட் யுவர் பெஸ்ட் பிரண்ட். ஐ அம் யுவர் பிக்கஸ்ட் எனிமி” என்று கூற
“ ச்சு, அப்புறமா காமெடி பண்ணு செல்லம். இப்போ சிரிக்க வரல” என்று இவள் கூற அவளை நன்றாக முறைத்தாள்.
அதற்குள் அவன் அவர்களை ஒரு அறைக்கு அழைத்து வந்திருந்தான்.
அங்கு இவர்களுக்கு முன்னரே ஐந்து பேர் இருக்க
“ தேவதைங்களா, உங்க சண்டையை நிறுத்துறீங்களா?” என்று வசந்த் கூறவும் தான் அவர்கள் சுற்றி உள்ளவர்களை பார்த்தனர்.
“ என்ன சீனியர்? இங்க என்ன நடக்குது எனக்கு ஒன்னும் புரியல?” ரூபிணி வசந்திடம் கேட்டாள்.
“ நாங்க சொல்லுறோம்ப்பா.
நாங்க விஸ்காம் ஸ்டுடெண்ட்ஸ்.
ஆல்பம் கிரியேட் பண்ணுறதுக்கு ஒரு நல்ல பேக்ரௌண்ட் வாய்ஸ் தேடிட்டு இருந்தோம். அப்போ தான் இவங்க கேண்டீன்ல பாடுனதை கேட்டோம். சரி எங்க ஆல்பம்க்கு யூஸ் பண்ணிக்கலாம்னு டிஸ்கஸ் பண்ணி இருந்தோம்.
ஆனா அதுல ஒரு சின்ன சிக்கல். இவங்க வேற டிப்பார்ட்மெண்ட்.
அதுக்கு தான் உங்க ஹெச்.ஓ.டி கிட்ட சைன் வாங்கிருக்கோம்
எங்க ஆல்பம்க்கு தேவப்படும் நேரம் நாங்க உங்கள கூப்பிடுக்கலாம். அதனால உங்க அட்டெனென்ஸ் பாதிக்காது” என்று ஒருவன் கூற
இவள், “ ஹலோ ஹலோ… ஸ்டாப். நான் எப்போ உங்க ஆல்பம்ல பாட சம்மதிச்சேன். நீங்க பாட்டுக்கு அடுக்கிட்டே போறீங்க?” என்று மாலினி பொரிய
“ சார் குடுத்த லெட்டரை வாசிக்காமயா கையெழுத்து போட்ட.
முன்ன பின்ன எங்காவது கையெழுத்து போடுறதா இருந்தா வாசிச்சு பாத்துட்டு போடணும் தெரியாதா?” என்று வசந்த் கேட்க…
இவள் அவனை முறைத்தாள்.
“ யூ சீட்… போர்ஜரி பண்ணி சைன் வாங்கிட்டு பட்டிமன்றமா நடத்துறீங்க?”
அவன் சிரிக்கவே மேலும் கடுப்பானவள்,
“ இதோ பாருங்க என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாது. நீங்க இதை என் கிட்ட நேரடியா கேட்டு இருந்தாலாவது கொஞ்சம் யோசிச்சு இருப்பேன். ஆனா இப்போ நோ சான்ஸ்.
உங்க சவாரிக்கு வேற கிராக்கி பாத்துக்கோங்க” என்று அவள் நகர போக மற்றவர்கள் தான் அவளிடம் கெஞ்சாத குறையாக பேசினர்.
‘ இது அவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம்’ என்று அழுத்தமாக அவர்கள் கூறிய பின்பே இவள் சம்மதிக்க வேண்டியதாகி போனது.
“ தேங்க்ஸ். தேங்க் யூ சோ மச்”
அவர்களிடம் விடைபெற்று கிளம்பி போகும் முன் ரூபிணியிடம் வசந்த்,
“சாரிமா, நான் கூப்பிட்டிருந்தா உன் பிரண்ட் வந்து இருக்க மாட்டா. அதான் உன்னை கூட்டி வர சொன்னேன். இப்போ கூட அவ என் மேல உள்ள கோவத்துல தான் ஒத்துக்க மாட்டேன்னு சொன்னா.. ஆனா அவங்க சொன்னதும் சம்மதிச்சுட்டா பாத்தியா??” என்று சிரிப்பாக அவன் கூறினாலும் அவன் மனம் என்ன சொல்கிறது என்று இவளுக்கு புரிந்தது.
“ பரவாயில்லை சீனியர்.” என்று அவனிடம் கூறியவள் அவனுக்கு வேறு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவளோடு கிளம்பினாள்.
“ மாலினி இந்த வீக் எண்டில் ஒரு ரிகர்சல் இருக்கு வந்துடுங்க” என்று கூறவே அவர்களிடம் சரியென்று தலையாட்டி விட்டு கிளம்பினர்.
வகுப்பறையில் தோழிகளிடம் விஷயம் தெரிவிக்க ஆனந்த கூத்தோடு அவளை வாழ்த்தினர்.
ஒருத்தியை தவிர.
ஆம். அவள் தான் ராகவி.
ராகவி, மாலினி மற்றும் ரூபிணியோடு ஒன்றாய் பள்ளி பயின்றவள் தான்.
படிப்பினில் மாலினியின் மேல் ஏற்பட்ட சிறு போட்டி…
எல்லாவற்றிலுமே முதன்மையாக விளங்கிய மாலினி மேல் பொறாமையாக மாறியது.
மாலினியை சுற்றி இருக்கும் நட்பு வட்டத்தை காணும் போது…
பணத்திற்காக மட்டுமே தன் மேல் வந்து விழும் மோகினிகளின் மேல் கோவம் வர அதுவும் மாலினியிடம் பகையாக திரும்பியது.
ரூபிணி மாலினியின் பிரிக்க முடியா அந்நட்பை காண கண்ணில் கனல் கக்கும்.
ரூபிணியை அவளை விட்டு பிரித்து மாலினியை தனிமை படுத்த எண்ணிய ராகவி,
“ ஹேய் ரூபிணி ஆர் யூ மேட்??? நம்மளோட ஸ்டேட்டஸ் என்ன? அந்த மாலினி தராதரம் என்ன??? அவ கிட்டலாம் அவ்வளவா டச் வச்சிக்காத” என்று கூற
“ சட் அப் யுவர் ப்ளடி டங்க் ராகவி. ஐ நோ வாட் ஐம் டூயிங்.
உன் கிட்ட யாரும் ப்ரீ கோச்சிங் கேக்கல. சொந்தக்காரியா போயிட்ட.
இல்லனா இதே வார்த்தைய வேற யார் சொல்லி இருந்தாலும் அவங்க முகரை பேந்துருக்கும்” என்று எரிந்து விழுந்தாள்.
“ என்ன யோசனை ராகவி?” அருகில் இருந்த மேக்னா கேட்க
“ எங்க போனாலும் இவளுக்கு தான் ஃபர்ஸ்ட் ப்ரியரிட்டி…”என்று கருவினாள்.
தோழியர் வட்டத்தின் குதூகல கூத்தை கண்டு ஏற்பட்ட எரிச்சலோடு நகர்ந்தாள் ராகவி.