05.மறுபாதி

0
27

நீ ரொம்ப தப்பு பண்ற யுக்தா…
” நான் தப்பு பண்றதாவே இருக்கட்டும்.. அப்படி தான் பண்ணுவேன்… ” என்று சம்யுக்தா கூற ….
“விடு டீ… அவளுக்கு நம்ம யாதவ்வை விட மார்க் எடுக்க முடிலன்னு அந்த கடுப்பை காட்றா…” என்று சில பெண்கள் கூறிவிட்டு அங்கே இருந்து நகர்ந்தனர்…
அவர்கள் பின்னே ஒருஒருவராக அனைவரும் கலைய… அந்த வகுப்பறையில் எஞ்சி இருந்தது சம்யுக்தாவும் ரம்யாவும் தான்…

“ஏண்டீ இப்படி பண்ற?? இப்போ எல்லாரும் உன்னை தான் ஒரு மாதிரி பேசுவாங்க.. நீ பொறாமை படுறேன்னு ” என்று ரம்யா வருத்தமாக கேட்க…
“விடுடீ.. நீ வரியா இல்லையா??”
“வந்து தானே ஆகணும்… இல்லாட்டி நீ தனியா போய்டுவியே… வா போலாம்.. ” என்று கூறிய ரம்யா சம்யுக்தாவுடன் மைதானத்திற்கு நடந்தாள்…

வாலி பால் மேட்ச் வெகு சிறப்பாக தொடங்கியது… முதல் செட்டில் விக்ரம் அணி 15-12 என்ற செட் கணக்கில் வென்று விட… அடுத்த செட்டில் யாதவ் அணி 20- 15 என்ற கணக்கில் வென்றனர்… ஆகையால் 3றாவது செட்டில் இரு அணியினரும் வெற்றிக்காக தீவிரமாக போராடிக்கொண்டு இருந்தனர்.. மேட்ச் அனல் பறக்க நடந்துகொண்டு இருக்க பாதி மாணவர்கள் யாதவிற்கு சப்போர்ட் செய்ய மீதி மாணவர்கள் விக்ரமிற்கு சப்போர்ட் செய்து கொண்டு இருந்தனர்… அனைவரும் ஒரு வித சுவாரசியத்துடன் மேட்சை பார்த்துக்கொண்டு இருந்தனர்.. யுக்தாவை தவிற….

“ஏன் டீ அந்த அலப்பறை கூட்டுன கிளாஸ்ல?? விக்ரம் என் ப்ரென்ட்… அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்னு அங்கே அளந்து விட்டுட்டு.. இங்கே வந்து மேட்ச் கூட
பார்க்காம பராக்கு பாத்துட்டு இருக்க??”

“ஹீ ஹீ ஹீ…” என்று யுக்தா பல்லை காட்ட…
“உன்னை எல்லாம் என்ன பண்ணுனா தகும்?? அப்போ யாதவ்வை வெருப்பேத்த தானே அப்படி சொன்ன?? “
ஆமா…
லூசா டீ நீ?? அவன் உன்னை என்ன பன்னுனான்?? நீ பண்றது எல்லாம் ரொம்ப ஓவர் பாத்துக்கோ…
அப்படியா?? இருந்துட்டு போகுது போ…

ஏண்டீ ?? இப்படி ?? நான் பார்த்த யுக்தாவுக்கு கோபப்பட கூட தெரியாது… ரொம்ப சாது … ஆனா யாதவ் விஷயத்துல மட்டும் ஏன் இப்படி பண்ற ?? இத்தனைக்கும் அவன் உனக்கு கொஞ்ச நாள் நல்ல ப்ரெண்டா இருந்து இருக்கான் .. இப்போவும் அவன் மாறல … ஆனா நீ தான் மாறிட்ட….

“எனக்கு அவனை பிடிக்கல அவ்ளோ தான் ரம்ஸ் …. இதை பத்தி இனி பேசாத .. அங்கே பாரு உங்க கிளாஸ் யாதவ் ஜெயிக்க போறான் …. ” என்று யுக்தா கூற அவளை முறைத்துக்கொண்டே ரம்யா மேட்ச் பார்க்க ஆரம்பித்தாள்…

யுக்தா கூறியதை போல் 3 ஆவது செட்டில் யாதவ் அணி ஜெயிக்க மைதானமே கலைக்கட்டியது… அனைவரும் அவனை தூக்கி கொண்டாட யுக்தாவோ விக்ரமிடம் சென்று விட்டாள்…

“சூப்பர்ரா விளையாடுன விக்ரம் … “

ஆனா நாங்க ஜெய்களையே ..

எப்போவுமே வெற்றி நம்ம பக்கமே இருக்காது … அது இருக்கணும்னு அவசியமும் இல்ல .. அனுபவம் தான் முக்கியம் .. அதை விட அதுல இருந்து என்ன நம்ம காத்துக்கிட்டோம்றது தான் முக்கியம் .. உனக்கு இன்னைக்கு நடந்து இந்த விளையாட்டுல இருந்து கிடைக்கிற அனுபவம் உன்னோட வாழ்க்கையில வேற எங்கையாவது உனக்கு உபயோகம் படும் டா … சோ பீல் பண்ணாத …

ம்ம்ம் .. சரி சம்யு… உன்கிட்ட பேசுனத்துக்கு அப்புறம் தான் மனசே கொஞ்சம் லேசாகி இருக்கு… தேங்க்ஸ் மா… நீ எனக்கு பிரென்ட்டா கிடைச்சதுக்கு நான் ரொம்ப லக்கி..

“அதெல்லாம் ஒன்னும் இல்ல விக்ரம் .. நீ போய் அடுத்த ஈவென்ட்கு ரெடி ஆகு .. பை ” என்று கூறிவிட்டு நகர்ந்தவளை ஒரு கூட்டம் வளைத்து பிடித்தது .. அது வேறு யாரும் இல்லை அவளுடைய கிளாஸ் மெட்ஸ் தான் …

என்னமா இப்படி உங்க டீம் தோற்று போய்டுச்சே…

இது தான் கடைசி மேட்ச் இல்ல .. இன்னும் எவ்ளோவோ இருக்கு ..

“இருந்தாலும் இப்போ இந்த மேட்ச்ல உங்க டீம் தோத்துருச்சுல .. அதனால நீ என்ன பண்ற எங்க யாதவை புகழ்ந்து ஒரு பாட்டு பாடற … புரியுதா ?? ” அப்படி ஒருவன் கேட்டுக்கொண்டே இருக்கும் பொழுதே ரம்யா அங்கு யாதவை அழைத்து வந்து விட்டாள் .. எப்படியும் இவர்கள் யுக்தாவை இன்று ஒரு வழிபன்னாமல் விட மாட்டார்கள் ஆகையால் தான் உடனே யாதவை தேடி சென்று அழைத்து வந்துவிட்டாள் .. அவன் ஒருவனுக்கு தான் அந்த கூட்டம் கட்டுப்படும் ..

என்னடா இங்கே பண்ணிட்டு இருக்கீங்க ??

சும்மாடா …

போய் அடுத்த ஈவென்ட்கு ரெடி ஆகுங்க டா..

“ம்ம் போறோம் டா,,, யுக்தா பாட்டை மட்டும் மறந்துடுதாத…” என்று கூறிவிட்டே அங்கே இருந்த அந்த கூட்டம் கலைந்தது..

ரொம்ப தேங்க்ஸ் யாதவ் நீ இப்போ வரலைன்னா இவங்க எல்லாம் இவளை ஒரு வழி பண்ணி இருப்பாங்க…

இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ற ரம்யா எனக்கும் ப்ரெண்டு தான்…

என்னை காப்பாத்தி விடுறது இருக்கட்டும் மொதல்ல அவனோட கையில இருக்க காயத்துக்கு மருந்து போட சொல்லு ரம்யா என்று ரம்யாவிடம் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்…

அவள் கூறிய பிறகுதான் யாதவ் கையில் அடிபட்டு ரத்தம் கசிந்து உறைந்து இருப்பதை பார்த்த ரம்யா “என்ன யாதவ் இப்படி அடிபட்டு இருக்கு?? அதை கவனிக்காம இவ்வளவு நேரம் சுத்திட்டு இருந்து இருக்க சீக்கிரம் போய் காயத்துக்கு மருந்து போடு…”

“நான் பாத்துக்கறேன் ரம்யா… ” என்று அவன் கூறிவிட்டு நகர்ந்து விட… ரம்யா யுக்தாவிடம் சென்றால்…

“அடியே.. மேட்ச் பார்க்காம பராக்கு தானே பாத்துட்டு இருந்த.. அப்புறம் எப்படி டி யாதவுக்கு காயம் பட்டதை பார்த்த ?? ” என்று இவள் கேட்க அதற்கு அவளோ “அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போறே ?” என்று கூறிவிட்டு முன்னால் நடக்க ரம்யா அவளை நச்சரிக்க தொடங்கினாள்… இதையெல்லாம் நினைத்து பார்த்த யுக்தாவிற்கு மெலிதான புன்னகை கீற்று அரும்பியது…

தனக்குள் சிரித்துக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்தாள்.. அதன் பிறகு மாணவர்களுடன் ஒன்றி விட்டாள்.. அடுத்து அடுத்து வந்த வகுப்புகளை முடித்து விட்டு … மதியம் கேன்டீனில் ராகவ்வுடன் சாப்பிட்டு முடித்து தன் மீதி வகுப்பறைகளுக்கு சென்று பாடம் நடத்தி முடித்தவள்… மாலை யாதவிற்காக காத்துக்கொண்டு இருந்தாள்…

அவளை வெகு நேரம் காத்திருக்க வைக்காமல் தன் கடைசி வகுப்பையும் முடித்து விட்டு விரைவாக வந்தான்..

ரொம்ப நேரமா வெய்ட் பண்றியா ??
இல்ல.. இல்ல.. நாணும் இப்போ தான் வந்தேன்..

அப்புறம் மதியம் ட்ரீட் எல்லாம் எப்படி போனது ??
சூப்பரா போனது… ரொம்ப நல்ல மாதிரி ராகவ்…
ஆமா சம்யுக்தா… ராகவ் ரொம்ப நல்ல டைப்.. நாணும் இங்கே வந்ததுல இருந்து பாத்துட்டு தான் இருக்கேன்… எல்லார் கிட்டையும் ஒரே மாதிரி பலகுவான்… ஆன் பெண் பேதம் எல்லாம் அவன் கிட்ட இல்ல.. கஷ்டம்னு வந்தா யாரா இருந்தாலும் உதவி செய்வான்.. ரொம்ப ஜாலி டைப்…

அப்புறம் ஏன் என்ன காலைல அவன் கிட்ட பிரெண்டா இருக்க வேணாம்னு சொன்னிங்க ??

ஹா ஹா ஹா… அதுவா இன்னும் நீ பலசை மறக்காம இருக்கியான்னு செக் பண்ண…

புரியல….

“ஹா ஹா ஹா… இல்ல காலேஜ் டேஸ்ல நான் எது சொன்னாலும் ஆப்போசிட்டா செய்வல… அதான் இன்னும் அப்படியே தான் பண்ணுவியான்னு பார்த்தேன்… அச்சு பிசகாம அப்படியே இருக்க நீ இன்னும்… ” என்று கூறிவிட்டு சிரிக்க ஆரம்பித்தான்…

இவளுக்கு தான் கோபம் புசு புசு வென ஏறியது… பின்பு அவனிடம் பேசாமல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்…

சிறிது நேரம் மௌனமாக காரை ஒட்டியவன் இன்று அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்று முடிவு எடுத்து பேச ஆரம்பித்தான்.. ” ஏன் யுக்தா நீ மறுபடியும் யாரையும் கல்யாணம் பன்னிக்கல?? “

திடீர் என்று யாதவ் இவ்வாறு கேட்பான் என்று நினைத்து பார்க்காதவள் இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள்…

தனக்குள் ஒரு முடிவை அவளே எடுத்துக்கொண்டு அவன் கேள்வியை அலட்சியம் செய்து விட்டு மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்…

இந்த கார் பயணத்தோடு நம்மளோட உரவு முடிந்து போக போறது இல்ல யுக்தா .. நம்ம ரெண்டு பேரும் இனி தினமும் சந்தித்துக் கொள்ள தான் போறோம் … அதனால இப்போ என் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்கறதால நான் அதை அப்படியே விட போறது இல்ல உன்னை…
அப்படியே நீ பதில் சொல்லனாளும் நான் உங்க அப்பா அம்மா கிட்ட கேட்டு தெரிஞ்சிக்க தான் போறேன்… அதனால நீயே என்னோட கேள்விக்கு பதில் சொன்னா நல்லா இருக்கும்….

யாதவ் இவ்வாறு கூறியவுடன் யுக்தாவுக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் அவனை திட்டி தப்பித்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தாள்..
ஏனென்றால் யாதவின் குணம் யுக்தாவுக்கு நன்கு தெரியும்.. எதிரியாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னே சென்று தன்னால் ஆனா உதவிகளை செய்வான்.. அப்படி இருக்கும் பொழுது நாம் உண்மையை சொன்னால் கண்டிப்பாக நம்மை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்துவான் என்று நினைத்தவள் கோபமாக கண்ணாடியில் அவனை பார்த்து திட்ட ஆரம்பித்தாள்…

அடுத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்க கூடாதுன்னு உங்க வீட்ல இருக்கவங்க உங்களுக்கு கத்து தரலையா ??

யாருக்கு என்ன பிரச்னைனாலும் உதவனும்னு சொல்லி கொடுத்து இருக்காங்க…

நான் உங்க கிட்ட இப்போ ஏதாவது பிரச்னைன்னு சொன்னனா ??

சொல்லணும் இல்ல.. ஒருத்தங்களுக்கு பிரச்சனைன்னு பார்த்தா நம்மனால முடிஞ்சா நம்ம செய்யணும்… அவங்க வந்து நம்ம கிட்ட உதவி கேட்கணும்னு எதிர் பார்க்க கூடாது.. யாரோ ஒருதருக்கே அப்படினா நீ என்னோட பிரென்ட் உண்ண எப்படி விட முடியும் ??

எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. போதுமா??

நீ ஏன் திரும்பவும் கல்யாணம் பண்ணிகல அதை சொல்லு…
அவரு மேல அவ்ளோ லவ்வா ??

வாவ் செம்ம.. இவனே கேள்வியும் கேட்டு ஐடியாவும் கொடுக்கிறான்… என்று நினைத்தவள் ” ஆமா அவரை என்னால மறக்க முடியல அதான்…. “

ஒஹ்ஹ்… சாரி யுக்தா…

மம்ம்ம்ம்ம்… என்ன இங்கேயே இந்த பார்க் பக்கம் விட்ருங்க… நான் இங்கே போய்ட்டு தான் ரூம்க்கு போகணும்..

உன் மனசை கஷ்ட படுத்திட்டனா??

இல்ல அப்படியெல்லாம் இல்ல.. சும்மா இங்கே போய்ட்டு போனா மனசு லேசாக மாறிடும்…

ம்ம் புரியுது… நானும் வரவா ??

இல்ல வேணாம்.. நீங்க போய் உங்க வைப் அண்ட் பாப்பா கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க… உங்களுக்காக காத்துட்டு இருப்பாங்க…

ஏதோ சொல்ல வாய் எடுத்தவன்.. எதுவும் கூறாமல் ஒரு தலை அசைப்புடன் விடை பெற்றான்….

அவன் கிளம்பியவுடன் பார்க் பக்கம் சென்றவள் அவளுக்காக யாஷிகா காத்து கொண்டு இருப்பதை பார்த்தவளுக்கு மனது அவள் கூறியது போல லேசானது…

“அம்மு என்ன பண்றீங்க?? ” என்று கேட்டுக்கொண்டே யாஷிகாவை தூக்கி ஓரு சுற்று சுற்றினால்…

சாம் நீ ரொம்ப பேட் கேர்ள் போ… இவ்ளோ லேட்டா வர..

அச்சோ சாம் மேல கோபமா அம்மு குட்டிக்கு?? ரொம்ப தப்பாச்சே.. என்ன செஞ்சா அம்மு குட்டி கோபம் போகும்??

ஐஸ் கிரீம் சாப்பிடலாமா??
நோ..
அப்போ சாக்கி??
நோ…
டாய்ஸ் வாங்கலாமா??
“நோ… ” என்று அவள் முகத்தை திருப்ப..

சரி அப்போ நீங்களே சொல்லுங்க.. என்ன பண்ணுனா உங்க கோபம் போகும்??

“ம்ம்ம் இரு சொல்றேன் சாம்.. ” என்று கன்னத்தில் கை வைத்து யோசித்தவள்…
“எனக்கு நீ ஷில்பா மாதிரி ஜடை பின்னி விடுவியா???”

ஷில்பாவா ?? அது யாரு??

என்னடோ பிரென்ட்.. அவ அம்மா அவலுக்கிய அழகா ஜடை போட்டு விடுவாங்க… இங்கே இங்கே என்று தலையை தொட்டு காட்டி பார்பி பொம்மை போட்ட கிளிப் போட்டு பின்னி விடுவாங்க.. எங்க பாட்டிக்கு இப்படி தான் போட வருது.. என்று அவள் தலையை இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆட்டி காட்டினாள்…

யாஷிகாவிற்கு அவள் பாட்டி வெறும் போனி டைல் போல் இரண்டு பக்கமும் ரப்பர் பேண்ட் போட்டு தலை வாரி விட்டு இருந்தார்… அதை பார்த்துவிட்டு அந்த குழந்தை எங்குவதையும் புரிந்து கொண்டவள்… ” டபிள் ஓகே… நான் உனக்கு நாளைக்கு சாயங்காலம் அழகா பின்னி விடறேன் ஓகே வா?? இப்போ வா விளையாடலாம்… “

யுக்தா தலை பின்னி விட ஒத்துக்கொண்டவுடன் யாஷிகாவிற்கு தலை கால் புரியவில்லை… சந்தோஷத்தில் யுக்தாவை அனைத்து அவள் கன்னத்தில் முத்தம்மிட்டால்….

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here