காலை 8 மணி:
“ஹே எழுத்துரு டி… மணி என்னாகுது? இன்னும் தூங்கிட்டு இருக்க…..” இது நம்ம ஹீரோ சிவா வீடு.
அந்த வீட்டு செல்வ சீமாட்டி அதாங்க நம்ம ஹீரோ தங்கச்சிய எழுப்பறதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம், சிவாவின் பெற்றோர் அப்பா மோகன்ராஜ் அம்மா லட்சுமி அப்பறம் அந்த கடைக்குட்டி ஜானவி. இது தாங்க ஹீரோ பேமிலி…
சிவா “அம்மா விடுங்களேன் நான் அவளை எழுப்பறேன்”
“இப்டியே நீயும் உங்க அப்பாவும் அவளை செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்கீங்கடா… அதனால தான் அவ இப்டி சோம்பேறியா இருக்கா…” இது அம்மா லட்சுமி,
சிவா , “அம்மா விடுங்க அவ இங்க தானே இப்டி என்ஜாய் பண்ணுவா. அதும் இல்லாம இப்போ தான்மா காலேஜ் போறா. போக போக சரி ஆயிடுவா, விடுங்க, நான் அவளை எழுப்பறேன்”னு சொல்லிட்டு சிவா அவன் தங்கை அருகில் சென்று “ஹே ஜானுமா எழுத்துருடா.. லேட்டா ஆகுது காலேஜ் போகணும் இல்ல.. சீக்கிரம் கிளம்புடா”ன்னு எழுப்பிவிட்டு வந்து அவளுக்காக டைனிங்ல வெயிட் பண்ணிட்டு இருந்தான்.
அப்போ சிவா அம்மா வந்து சிவாகிட்ட அவன் கைய புடிச்சுட்டு உக்காந்தாங்க. சிவா “சொல்லுங்கம்மா”னு சொன்னான்.
“நான் உன்கிட்ட என்னப்பா கேக்கபோறேன், எல்லாம் உன் கல்யாண விஷயமாதா”னு சொன்னாங்க,
சிவா தீர்க்கமா அவங்கள ஒரு பார்வை பாத்துட்டு “அம்மா நானா சொல்ற வரைக்கும் இந்த பேச்ச எடுக்காதிங்க”னு கோவமா சொல்லிட்டு அமைதியா உக்காந்துட்டான்.
ஜானு ரெடி ஆகி வந்ததும் ஜானு, சிவா டிபன் முடிச்சுட்டு கிளம்பிட்டாங்க டெய்லி அவளை காலேஜ்ல ( ஜானு இன்ஜினியரிங் த்ர்ட் இயர் படிக்கறா) ட்ராப் பண்ணிட்டு தான் சிவா ஆபீஸ் போவான்.
சிவா வயது 27 MBA படிச்சவன் வளர்ந்து வரும் ஒரு தொழிலதிபர் ஆறடி உயரம்,நேர்மையான பார்வை, கம்பீரமான நடை, நல்ல மாநிறம் பார்ப்போரை கவர்ந்திழுக்கும் வசீகர தோற்றம், அவனுடைய ஆளுமைத்திறன் அனைவரையும் மிரள வைக்கும்.
அதனால அவன்கிட்ட பேசறதுக்கே எல்லாரும் யோசிச்சுட்டு தான் போவாங்க, சிவாக்கு சொந்தமாக S.J.Constructions, A.M.S Textiles பிசினெஸ் இருக்கு, அவனுடைய அப்பா அத்தியண்ணன் டெக்ஸ்னு சின்னதா பண்ணிட்டு இருந்தத பையன் டெவலப் பண்ணி பெரிய லெவல் பிசினஸா கொண்டு வந்துருக்கான். அதோட அவனோட இன்டெரெஸ்ட்டிங் பீல்ட் ஆன கன்ஸ்டிரக்சன்ஸ்லயும் நம்பர் ஒன்னா வந்துட்ருக்கான்.
அவனுக்கு அவன் பேமிலி அப்பறம் அவன் நெருங்கிய நண்பன் ஆதவ் மட்டும் தான் கிளோஸ் மத்த யார்கிட்டயும் தேவை இல்லாம எதுவும் பேச மாட்டான். கேட்ட கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்லுவான். சிவா, ஆதவ் ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒன்னா வளந்தவங்க இப்பவும் பார்ட்னெர்ஷிப்ல பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.
சிவா ஆபீஸ்ல நுழைந்தவுடன் ஆதவ் “சிவா அம்மா போன் பன்னாங்கடா, காலைல அவங்ககிட்ட கோவிச்சுட்டு வந்துட்டயாமா? ஏன்டா இப்டி பண்ற? அவங்க மனசையும் ஏன் கஷ்டப்படுத்தற?” னு கேட்டான்.
“ஏன்னு உனக்கு தெரியாதா?”னு ஒரு வெத்து புன்னகையோட சோபால உக்காந்துட்டான்.
ஆதவ்க்கு தான் அவன் நண்பன் சின்னதா மனசு காயப்பட்டாலும் தாங்கிக்க மாட்டானே, அதனால “சரி விடு மச்சான் பத்துக்கலாம்”னு சொல்லிட்டு அவன தட்டி குடுத்தான்.
அப்பறம் கொஞ்ச நேரத்துல சிவா நார்மலாயிட்டான், ஆதவ் ‘கடவுளே அவன் மனசுல இருக்கற அந்த கருப்பு பக்கத்தை மாத்துப்பா’னு மனசுல கடவுள் கிட்ட அப்ப்ளிகேசன் போட்டுட்டு இருந்தான்.
சிவா மனசுல ஒரு ஆறாத ரணம் இருக்கு. அது அவன் நண்பன் ஆதவ் மற்றும் அவன் தங்கையை தவிர யாருக்கும் தெரியாது. என்ன தான் அவன் நம்பர் ஒன்னா இருந்தாலும் லைப்ல பல தோல்விய பாத்துட்டு வந்தவன். அந்த தோல்வி தான் அவனுக்கு வெறித்தனமா உழைச்சி முன்னேறணும்னு நம்பிக்கையை குடுத்தது. இன்னும் அவன் வெறியோட உழைச்சிட்டு முன்னேற்ற பாதையில போயிட்டு இருக்கறதும் அதனால தான், அந்த வலியால அவன் வெளி ஆட்களை நம்பவே யோசிப்பான் யார்கிட்டயும் தேவைக்கு அதிகமா எதுவும் வச்சிக்க மாட்டான்.
ராஜா (ஆரா கர்மரண்ட்ஸ் ஓனர்) மற்றும் பார்வதியின் ஒரே புதல்வி நம்ம ஹீரோயின் ஆராதனா (வயது -23) MBBS மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி, கொஞ்சம் குறும்பு (நம்ம ஜெனீலியா மாதிரி) நல்ல குணவதி. அழகான முகம், எளிமையான ஒப்பனை, பார்ப்போரை புன்னகையால் கவர்ந்திழுக்கும் மகாலட்சுமிக்கு இணையான தோற்றம்.
ஆரா ஒரு சுதந்திர பறவை. ஆனாலும் அவளுடைய லிமிட்ல கரெக்ட்டா இருப்பா, எல்லார்ட்டையும் அன்பா பழகுவா. யாரையும் ஹர்ட் பண்ண கூடாதுனு நினைப்பா. அவளோட காலேஜ்ல அவளுக்கு பேன்ஸ் அதிகம். இன்னும் சொல்ல போனா பசங்க எல்லாம் ஜொள்ளு விட்டு அலையுற அளவுக்கு ஆள மயக்கற தேவதை…
ஆரா, “அம்மா டிபன் எடுத்து வைங்க நான் கெளம்பனும்”னு சொல்லிட்டே கீழ இறங்கி நடந்து வந்தா. அவளோட அப்பா ராஜா சோபால உக்காந்து பேப்பர் படிச்சுட்டு இருந்தாரு. அவரை பாத்துதும் ‘குட் மார்னிங்பா’னு சொல்லிட்டு வந்தா.
அவரும் “குட் மார்னிங்டா செல்லம் உனக்காக தான் வெயிட்டிங்”னு சொல்லிட்டு ரெண்டு பேரும் சாப்பிட உக்காந்தாங்க.
பாரு, “ஏங்க அவளை இன்னும் கொழந்தை மாதிரி பாத்துட்டு இருக்கீங்க? போற எடத்துல அவ புருஷன் வாயிலேயே இடிக்க போறான் பாருங்க”ன்னு சொல்லி சிரிச்சாங்க.
உடனே ஆரா “அப்பா இங்க பாருங்கப்பா அம்மாவ….”னு சிணுங்குனா.
அவ அப்பா “அவ கிடக்கராமா”னு ஆரா தலைய தடவி கொடுத்திட்டு, “என் மகளுக்கு என்ன? அழகான ராஜகுமாரன் அவள கையில வச்சு தாங்கறவன் தான் கிடைப்பான்”னு சொன்னாரு.
அவளும் அவங்க அம்மாகிட்ட வக்கணைத்துவிட்டு அவளோட ஸ்கூட்டி எடுத்துட்டு “பைப்பா & பைம்மா…” னு சொல்லிட்டு கிளம்பிட்டா
விதியின் வசத்தால் இரு வேறு துருவங்கள் எப்படி இணைய போகுதுங்கிறது தான் நம்ம கதை…..