1.கண்ணாளனின் கண்மணியே!!

0
743

மனோகரன் மற்றும் காமாட்சியின் புதல்வன் பெற்றெடுத்த சீமந்த புத்திரன் தான் நம்ம அபய், ஆமாம் சேகர் மற்றும் வசந்தியின் ஒரே மகன்…. அவன் பிறந்த உடனேயே அவனுடைய தாத்தாவின் சாயலில் இருந்ததனால் அவனுடைய தாத்தா அவரோட பெயரையும் சேத்து அவனுக்கு அபய் மனோஜ் னு பெயர் வச்சாராம்…
சின்ன வயசுல இருந்தே தாத்தாவின் செல்ல பேரனான இவன் குணத்துலயும் அவங்க தாத்தா மாதிரி தான்( அவர் உயிரோட இருக்கும் வரை)
அவனுடைய ஆறு வயதில் நடந்த விபத்தில் அவன் அப்பா அம்மா இறந்துவிட, பின்பு முழுக்க முழுக்க தாத்தாவின் அரவணைப்பில் வாழ்ந்தவன் பெத்தவங்க இல்லாத குறையே தெரியாம தான் அவன் தாத்தா அவனை வளர்த்தார்..அதுக்கு தகுந்த மாதிரி அபயும் தாத்தா கூட சேந்து தொழிலும் கத்திருந்தான் அதே சமயத்துல படிப்புலயும் சுட்டி தான்.
எல்லா நல்லா போயிட்டு இருக்க, அந்த ஒரு நாள் விடியல் இவனுக்கு சோகமா அமஞ்சது, நைட்டு தூங்குன அவங்க தாத்தா விடிஞ்ச பிறகும் எழுந்திரிக்காம ஓரே அடியாய் நித்திரையில் மூழ்கிய நாள். அன்று அவனுக்கு உலகமே சூனியமாகி போன நாள்.

பாட்டி அழுது ஓய்ந்திருக்க உறவினர்கள் எல்லாரும் ஒரு பக்கம் இருக்க அபய் அத்தனை துயரங்களையும் அடக்கி தன் தாத்தாவுக்கு எல்லா கடமையும் செஞ்சி முடிச்சான். அவன் எந்த உணர்வும் இல்லாம வெறுமையா இருக்கிறத பாத்த அவங்க பாட்டிக்கு கொஞ்சம் பயம் வந்து அவனருகில் அமர்ந்து,”கண்ணு அழுதுரு பா நீ இப்படியே இருக்காத எனக்கு பயமா இருக்கு, எனக்குன்னு மிச்சமிருக்கறது நீ மட்டும் தான்”னு சொன்னாங்க.
சொந்தபந்தமெல்லாம் பணத்துக்காக இந்த எஸ்டேட்ட விக்க சொல்ல
அபயோ சற்று கடுமையாகவே எல்லாரையும் பாத்து,” என் தாத்தா சொத்தை எனக்கு பாத்துக்க தெரியும் நீங்க எல்லாம் வெளிய போங்கன்னு” கத்திட்டு, பாட்டியை பாத்து ஒரு வெறுமையை உணர்த்திவிட்டு ரூம்க்கு போயிட்டான்.
சிலர் வயசு கோளறுல பேசறான் இவனால சாதிக்க முடியாதுன்னு இவன் காது படவே பேச ஆரம்பிச்சாங்க…..

அவனால இப்பவும் நம்ப முடியல அவன் தாத்தா அவன் கூட இல்லங்கிறது, பாட்டியாலயும் அவனை வழி நடத்த முடியல, எல்லாத்தையும் ஜீரணிச்சுக்கிட்டு
சொந்த பந்தங்களோட ஏளன பேச்சில் தன் வைரக்கியத்தை வளர்த்தவன் ஒரே நேரத்துல தொழில்,படிப்பு எல்லாத்துலயும் கஷ்டபட்டு முன்னேறி இருந்தான்.பாட்டியால அவனை புரிஞ்சுக்க முடியல இருந்தாலும் அவனுக்கு கொஞ்சம் பக்கபலமா நின்னாங்க ஒரு சில விஷயத்துல பாட்டி பேச்சுக்கு மதிப்பு குடுத்து நடப்பான் மத்த விஷயமெல்லாம் அவனோட விருப்பத்துக்கு ஏத்த மாதிரி தான்.

அவனுடைய 15 வயசில இருந்து எவ்ளோ ஏமாற்றங்கள்,வலிகள் எல்லாத்தையும் பாத்து பாத்து பணம் மட்டும் தான் உலகம் அது இருந்தா இங்க எல்லாத்தையும் சாதிக்க முடியும்ங்கிற அளவுக்கு வந்திருந்தான் அதை செயல்படுத்தவும் ஆரம்பிச்சிருந்தான்.

யாரோட முயற்சியும் தயவும் இல்லாம முன்னேறுனதுனால அவனுக்கே உரித்தான கர்வம்,இளம் ரத்தத்திற்கே உண்டான வேகம் எல்லாமே அவன் கிட்ட இருக்கும்… என்ன தான் அவன் தொழில் சாம்ராஜ்ஜியத்துல வளர்ந்துகிட்டு வந்துருந்தாலும், அவனுக்கான பர்சனல் வாழ்க்கையில இது வரைக்கும் நிறைய பேர் கூட இருந்துருக்கான், சில பேர் அவனோட பணத்துக்காகவும் அவன் கூட இருந்திருக்காங்க.. பாசம் பந்தம் அதெல்லாம் அவனை பொறுத்த வரைக்கும் கிடையாது…
நைட் ஆன கிளப்,ட்ரிங்க்ஸ்னு மகிழ்ச்சியான ஒரு லைஃப் ஸ்டைல்ல இருக்கவன்.

மகிழினி சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த முத்துக்குமார், அன்பரசியின் மகள் அவளோட தம்பி பிரபு 12 வது படிக்கிறான். அவ BBA முடிச்சுட்டு ஜாப் ட்ரை பண்ணிட்டு இருக்கா, அம்மா இல்லத்தரசி அப்பா டிரைவர் அளவான மகிழ்ச்சியான குடும்பம்.மகி வேலைக்கு போயி அப்பாவோட சுமையை கொஞ்சம் குறைக்கலாம் னு ஜாப் ட்ரை பண்ணிட்டு இருக்கா, மகி ஜாலியான கேரக்டர் யார் என்ன சொன்னாலும் நம்ப கூடிய ஆள் சுத்தி இருக்கற எல்லாருமே சந்தோசமா இருக்கனும் னு நினைப்பா.

அபயோட எஸ்டேட்ல வேலைக்கி அப்ளிகேஷன் போட்ருந்த மகிக்கு இன்டெர்வியூக்கு வர சொல்லி லெட்டர் வர,மகி இன்டெர்வியூக்கு செல்ல அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு கோவிலுக்கு போயிட்டு இன்டெர்வியூக்கு போனாள்.
மகி நல்லா பூ,பொட்டு, புடவை னு அம்சமா இன்டெர்வியூ அட்டெண்ட் பண்ண வர,
இன்டெர்வியூ ஹாலுக்குள் அவள் நுழைய உள்ளே அமர்ந்திருந்த அபய் அவள் தோற்றத்தை பார்த்து புருவத்தை உயர்த்த அவளோ பவ்யமாய்,” குட் மார்னிங் சார் ” என்றாள்.

அபய்,”சிட் டௌன்” என்றான் பாஸ்க்கே உண்டான கட்டளை தோரனையுடன்,

மகி,” தேங்க்ஸ் சார் “னு அமர்ந்தாள்.

அபய்,”நீ இங்க என்ன வேலைக்காக வந்துருக்கனு தெரியுமா, இந்த மாதிரி இன்டெர்வியூ அட்டெண்ட் பண்ண சொல்லி யார் சொல்லி குடுத்தா உனக்கெல்லாம்,
“ஐ மீன் இந்த பட்டிக்காட்டு லுக்” ஏதோ நான் உன்னை பொண்ணு பாக்க வந்துருக்க மாதிரி வர என்ன இந்த பைல்க்கு பதிலா ஒரு காபி கப் இருந்தா கரெக்ட்டா இருக்கும்னு நக்கலா சொன்னான்.

அவளோ அமைதியாய் இருக்க அவனே தொடர்ந்தான், ” இங்க என்னோட PA வுக்கான இன்டெர்வியூ நடக்குது அதுக்கு தேவையான ஏதும் உன் கிட்ட இருக்கற மாதிரி தெரியல”னு கோபமாய் சொல்ல.

மகியின் விழி கலங்கி இருக்க,இருந்தாலும் அதை மறைத்து அவனிடம் பேச தொடங்கினாள்,” சார் எனக்கு இந்த வேலையை ஒரு 3 மாசம் குடுங்க அப்பறம் என் திறமையை பாத்து நான் இருக்கணுமா போகனுமானு நீங்களே சொல்லுங்கன்னு சொன்னா”

அபய்,” ஓஹோ உன் மேல உனக்கு அவ்ளோ நம்பிக்கையா? அவளுடைய சர்டிபிகேட் எல்லாத்தயும் பாத்தவன் உனக்கு 3 மாசம் டைம் உன்னோட திறமையை வச்சு தான் உனக்கு வேலை கன்பார்ம் ஆகும்” னு சொன்னவன்.

அப்பறம் இனிமே பட்டிக்காடு மாதிரி வராதனு
கோபமாய் உரைத்து விட்டு அப்பாயின்மெண்ட் லெட்டர் ரிசப்சனில் வாங்கி கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டான்….

அவளோ இந்த சிடுமூஞ்சிகிட்ட எப்படி வேலை செய்ய போறேனோங்கிற யோசனையில் ஆழ்ந்து இருந்தாள்…. பாவம் வாழ்க்கையே அவனோட தான் அமைய போகுதுன்னு தெரியாம….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here