1.மறுபாதி

0
35

சீக்கிரம் வா டீ.. இன்னும் எவ்ளோ நேரம் பண்ணுவ??
வந்துட்டு தானே இருக்கேன்?? அதுக்குள்ள உனக்கு அப்படி என்ன டீ அவசரம்?? இன்னும் கிளாஸ் ஆரம்பிக்க 15 நிமிஷம் இருக்கு..
ஆனா முதல் பீரியட் பிசிக்ஸ் டீ..
அதுக்கு என்ன டீ?
அதுக்கு என்ன என்று அவள் தோழி கேட்டவுடன் அவளை வேற்றுகிரகவாசி போல் பார்த்தவள்… “உனக்கு விஷயமே தெரியாதா?? ” என்று கேட்க.

என்ன ஆச்சு இந்த செம்முக்கும் அந்த குண்டோதரி தான் வரப்போகுதா?? ஹையோ இந்த தடவையும் பார்டர் பாஸ் ஆகறதே கஷ்டமா?? ஏண்டீ கடைசி செம்முக்கு வந்த லக்சரையே இந்த செம்முக்கும்
போட மாட்டாங்களே… நமக்கு மட்டும் எப்படி டீ அந்த குண்டோதறியையே போட்டாங்க?? சொல்லு டீ….
எரும நமக்கு இந்த தடவை குண்டோதரி இல்ல டீ…
அப்புறம்???

ஹேய் … நான் நினைக்கற பதிலை மட்டும் நீ சொன்னா, இன்ணைக்கு உனக்கு குல்பி வாங்கி தரேன் டீ வீட்டுக்கு போகும் போது..
அப்போ 2 குல்பி வேணும் இப்போவே சொல்லிட்டேன்….
என்ன டீ சொல்ற??? நமக்கு இந்த செம் யாதவ் டார்லு தான் பிசிக்ஸ் எடுக்க போறாரா??
ஹேய் நிறுத்து நிறுத்து…. அவரு ஒன்னும் உன்னோட பாய் ப்ரென்ட் இல்ல.. டார்லுனு கொஞ்ச புரிஞ்சுதா??
நான் அவரை என்ன வேணா சொல்லுவேன் உனக்கு என்ன டீ??
அவரு நம்ம காலேஜோட பொது சொத்து டீ.. நீ மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது ..
யாரை யாரு டீ சொந்தம் கொண்டாடறா?? என்று அவர்களுடன் மற்றும் ஒரு யுவதி இணைந்து கொள்ள.. அங்கே பேச்சுக்கும் சிரிப்புக்கும் பஞ்சம் இல்லாமல் போனது..

காலேஜ் பெண்கள் மட்டும் அல்லாது ஆண்களுக்குமே மிகவும் பிடித்த விரிவுரையாளர் தான் நம் கதையின் நாயகன் யாதவ்.. மாணர்வர்கள் மத்தியில் இருந்த வரவேற்பு சிறிதும் குறையாமல் அங்கே இருந்த மற்ற விரிவுரையாளர்கள் தொடங்கி அங்கே பனி புரியும் அணைத்து ஆட்களுக்கும் யாதவ் என்றால் பிடித்தமே.. ஒரு முழுமையான ஆண்மகனுக்கான அத்தனை தகுதிகளும் இருந்தாலும்… அவனை அனைவருக்கும் பிடிக்கும் ஒரே காரணம் அவனது மனிதம் தான்..
ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணாதிசயங்கள் அவனிடம் அனைத்தும் கொட்டி கிடந்தது… முகத்தில் எப்பொழுதும் தவழும் மெம்மையான சிரிப்பு.. அந்த சிரிப்பை அவனது கண்களும் பிரதிபலிப்பதால் அதுவே அவனுக்கு அழகை அள்ளி தரும்..

அனைவரிடமும் வேற்றுமை பாராட்டாமல் ஒரே மாதிரி நடந்துக்கொள்ளும் அவனது அணுகுமுறை… அவனது துறையில் மட்டும் இல்லாது உலகம், வான்வெளி, ஆன்மிகம் என்று எந்த தலைப்பை கொடுத்தாலும்
அரைமணி நேரத்திற்கு குறையாமல் விவாதிக்கும் அவனது அறிவுதிறன்… இதை விட அவன் விளையாட்டு மைதானத்திற்கு வந்து கைப்பந்தை எடுத்தால் அந்த மாவட்டதில் முதன்மையாக விளங்கும் விளையாட்டு வீரர்கள் கூட அவனுக்கு ஈடு கொடுக்க முடியாது.. இப்படி அவனை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்…

இப்படி அருமையான மகனை பெற்ற அன்னை யசோதா இன்று அழுதுவடிந்துகொண்டு இருந்தார்.. எத்தனையோ முறை அவரது மனக்கவலையை கடவுளிடமும் தன் மகனிடமும் கூறியாகிவிட்டது..
ஆனால் இரண்டு பேரும் கிணத்தில் போட்ட கல் போல் அமைதியாக இருந்தனர்… இவர்கள் இருவரும் காது கொடுக்காததால் அவர் சந்திக்கும் அணைத்து மனிதர்களிடமும் புலம்ப ஆரம்பித்து இருந்தார் அந்த தாய்..

அப்படி தான் இன்றும் அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் அவரது மனக்குறைகளை கொட்டிக்கொண்டு இருந்தார்… “கடவுள் எல்லோருக்கும் ஒரு குறை கண்டிப்பா வைப்பாறு ராஜாத்தி… இல்லாட்டி நம்ம அவரையே மறந்துடுவோம்ல..”
“அக்கா வெள்ளிகிழமை கோவிலுக்கு வந்துட்டு இப்படி அழுகாத அக்கா.. எல்லாம் நல்லப்படியா நடக்கும்.. ” என்று ராஜாத்தி அவருக்கு சமாதானம் கூற..

எங்கே டீ நானும் இந்த 2 வருஷமா தலையால தண்ணி குடிச்சு பாத்துட்டேன்.. கல்யாணம் பணிக்கறேன்னு ஒரு வார்த்தைக்கு கூட சொல்ல மாட்டேங்கறான்.. வர தை வந்தா 35 வயசு ஆயிடும்.. ஏற்கனவே கல்யாணம் ஆனவன்..
குழந்தையும் இருக்கு… இதுல வயசும் எரிட்டே போச்சுனா நான் எங்க டீ போய் அவனுக்கு பொண்ணு கேக்க முடியும்??

நீ அவனோட பொண்டாட்டி இறந்த அப்போவே அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சு இருக்கலாம் அக்கா.. சூட்டோட சூடா… இப்போ பாரு ஒத்துக்க மாட்டேங்கறான்..

போடி இவளே.. அவன் இப்போ இந்த 2 வருஷமா தான் உயிர்பாவே இருக்கான்.. இதுல எங்கே போய் அப்போவே கல்யாணம் பண்றது? நம்மள நம்பி நம்ம வீட்டுக்கு வர பொன்னும் நம்ம பொண்ணு மாதிரி தான் டீ.. நடப்பினம் மாதிரி இருந்தவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சு அந்த பொண்ணோட சாபத்தை வாங்கிக்க சொல்றியா??
ஏற்கனவே எந்த ஜென்மத்துல என்ன பாவம் செஞ்ஜோம்ன்னு தெரியல இப்படி கஷ்டப்படறான் என்னோட பையன் ..

என்னவோ போ அக்கா.. கூடிய சீக்கிரம் நல்லது நடக்கும்னு என்னோட மனசு சொல்லுது.. நீ வா அக்கா இந்த அம்பாளை வேண்டிக்கோ சீக்கிரம் நம்ம யாதவ் தம்பிக்கு கல்யாணம் கைக்கூடி வரும்…

உன்னோட வார்த்தை மட்டும் பளிச்சுதுணா நீ என்ன கேட்டாலும் செய்யறேன் ராஜாத்தி..

அக்கா யாதவ் உன்னோட பிள்ளையா இருந்தாலும் அவன் எனக்கும் மகன் மாதிரி தான்… எவ்ளோ நல்ல புள்ளை அது.. அதுக்கு ஒரு நல்லது நடந்தா நான் தான் முதல் ஆளா சந்தோசம் படுவேன்..

ரொம்ப சந்தோசம் டீ … வா உள்ள போலாம்…. என்று கூறி ராஜத்தியையும் அழைத்துக்கொண்டு அம்பாளை வழிப்பட சென்றார் யசோதா…

ஏண்டீ இப்போவே போகனுமா?? இன்னும் 2 மாசம் கழிச்சு இந்த ஸ்கூலை மாத்துனா என்ன உனக்கு??

அப்பா தயவு செஞ்சு இந்த அம்மாவை அமைதியா இருக்க சொல்லுங்க… இதோட எத்தனையோ தடவை சொல்லியாச்சு… எனக்கு அந்த காலேஜில் வேலை கிடைச்சதே பெரிய விஷயம்… நான் எம்.எஸ்.சி தான் படிச்சு இருக்கேன்.. அதுவும் நடுவுல 3 வருஷம் கேப்… அப்படி இருக்கும் போது காலேஜில் வேலை கிடைக்கிறதே பெரிய விஷயம்.. அது ரொம்ப நல்ல காலேஜ்… நான் அதுல லக்சரர்றா வேலை பாத்துட்டே என்னோட எம்.பில் படிக்க அப்ளை பண்ணுணதுக்கும் ஓகே சொல்லிட்டாங்க…
என்னால இந்த சான்ஸ்சை விட முடியாது..
நீங்க வேணா இங்கயே இருங்க.. நான் அங்க போய் ஹாஸ்டல் பாத்துக்கறேன்…
என்று ஒரே மூச்சாக கூறி முடிக்க.. இனி இவளிடம் பேச முடியாது என்பதை உணர்ந்த அவளது தாய் லதா அவளையும் அவளது தந்தையையும் முறைத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டார்…

இப்படி விடாமல் அடம்பிடித்து செல்லும் தானே அங்கே இருந்து திரும்ப வர முடியாமல் ஏன் இங்கே வந்தோம் என வருந்த போவது தெரிந்து இருந்தால் ஒரு வேலை நம் நாயகி சம்யுக்தா புது வேலைக்கு செல்லாமலே இருந்து இருப்பாள்…
விதி யாரை விட்டது??

பாப்பா என்று அவளது தந்தை சரவணன் ஆரம்பிக்க…
அப்பா ப்ளீஸ்… எனக்கு தினமும் அந்த கேள்விக்கு பதில் சொல்லி சொல்லி சலிச்சு போச்சு.. நீங்க கேக்கறதை எப்போ நிறுத்த போறீங்க??

இதை கேட்டு சமையல் அறையில் இருந்த அவளது அம்மா வேகமாக வெளியில் வந்து.. “நீ சொல்றத மட்டும் நாங்க கேட்கணும்.. நாங்க சொல்ற ஒன்னு கூட நீ கேட்க மாட்டா அப்படி தானே??” என்று கோபமாக கேட்க..

மெதுவாக அவள் அன்னையிடம் பார்வையை செலுத்தியவள் ” நான் நீங்க சொன்னது ஒன்னு கூட கேட்டது இல்லையாமா?? இந்த 34 வயசு வரைக்கும் நீங்க சொன்னது அத்தனைக்கும் நான் சரின்னு மட்டும் தானேம்மா சொல்லி இருக்கேன்… போதுமா எனக்கு 34 வயசு ஆகுது… நல்லது எது கேட்டது எதுன்னு எனக்கும் தெரியும்.. இனி என்னோட விஷயத்துல நானே முடிவு எடுத்துக்கறேன்…

கடைசியா ஒரு முறை சொல்லிடறேன் 2 பேரும் கேட்டுக்கோங்க… என்னோட வாழ்க்கையில் கல்யாணாங்கற அத்தியாயம் முடிஞ்சு போச்சு… அதை நான் திரும்ப துவங்கறதா இல்லை.. நீங்களும் அதை துவங்க நினைக்காதீங்க… நான் இருக்க மிச்சம் கொஞ்ச நாளாவது சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சீங்கனா இதை பத்தி இனி பேசாதீங்க ..” என்று கை எடுத்து கும்பிட்டவள் வெளியில் சென்று விட்டாள்…

சரவணனிடம் திரும்பிய லதா ” ஏங்க அவளுக்கு நீங்களாவது புரிய வைக்க கூடாதா?? எவ்ளோ நாள் தனியா வாழ முடியும்.. நம்ம இருக்க வரைக்கும் துணைக்கு இருப்போம்… அதுக்கு அப்புறம் அவளுக்கு ஒரு துணை வேண்டாமா??
படிச்சு இருக்கா வேலைக்கு போறா இல்லைங்கள… அவ சொந்த காலுல சாகிற வரைக்கும் அவளால நிக்க முடியும்… எந்த பிரச்சனை வந்தாலும் சமளிச்சுடுவா…
ஆனா எல்லாம் எத்தனை நாளைக்கு??

வாழ்கை அலுப்பு தட்டிடுங்க.. நமக்குன்னு ஒருத்தர் கடைசி வரைக்கும் வேணும்ங்க … நம்ம இவ கூட இருக்கற வரைக்கும் அவளுக்கு இது புரிய போறது இல்ல.. அதனால அவளை தனியா போய் தங்க சொல்லுங்க… அப்போ தான் அவளுக்கு வாழ்க்கைல கல்யாணமும் வாழ்கை துணையும் எவ்ளோ முக்கியம்னு புரியும்..” என்று கூறி முடித்து விட்டு தன் கணவரின் முகம் பார்க்க.. சிறிது நேரம் தீவிரமாக யோசித்த சரவணனுக்கு லதா கூறுவது 100 சதவீதம் சரியே என பட ” சரிமா சமு வரட்டும் நான் பேசறேன் ” என்று கூறினார்…

மாலை கடைசி வகுப்பில் யாதவ் மானவர்களுக்கு புரியும் வகையில் விளக்கி கொண்டு இருக்க..

அங்கே இருந்த அனைத்து மாணவர்களும் அவன் சொல்வதை உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தனர்.. என்ன தான் விளையாட்டு பிள்ளைகளாக இருந்தாலும் யாதவ் வகுப்பு என்றால் அணைத்து மாணவர்களும் மந்திரத்திற்கு கட்டுண்டது போல் அமைதியாக கவனிக்க ஆரம்பித்து விடுவர்..

எல்லாருக்கும் புரியும் விதத்தில் அருமையாக பாடம் எடுக்கும் கலை அறிந்த ஆசிரியர்களில் யாதவும் ஒருவனே..
ஆகையால் அவன் விரிவுரையாளர் ஆனதில் இருந்து இன்று வரை அவன் எடுத்த வகுப்பில் ஒரு மாணவன் கூட தேர்ச்சியில் தவறியதில்லை…

இயற்பியைலை கூட இலையராஜாவின் மெல்லிசை போல அவன் எடுத்துக்கொண்டு இருந்தான்…
அப்பொழுது அதை இடையூறு செய்வதுபோல் பியூன் ஒரு சுற்றக்றிக்கையை கொண்டு வந்து கொடுத்தார்…

அதை வாங்கி படித்த யாதவ் அதில் கையொப்பம் இட்டு பியூனிடம் கொடுத்தவர்.. மாணவர்களிடம் திரும்பி
“உங்க எல்லாருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கைஸ்… இன்னும் ஒரு மாசத்துல இன்டர் காலேஜ் போட்டி வருது.. அதுக்கு யார் யார் என்ன என்ன பண்ண போறீங்கன்னு உங்க ஸ்டுடெண்ட் பியூப்பில் லீடர் கிட்ட பேர் கொடுங்க..

நல்லா பண்ணுங்க உங்களுக்காக விளையாடம காலேஜ்காக விளையாடுங்க… ஆல் தி பெஸ்ட்… ” என்று கூற..

பசங்கள் பக்கம் இருந்து கோரசாக ” சார் வாலிபாலுக்கு நீங்களே கோச்சா வாங்க சார்… அப்போ நம்ம காலேஜ் தான் கண்டிப்பா முதல் பரிசு வாங்கும்… ” என்று அவரை கோச்சாக அழைக்க..

அழகாக தன் வெண்பற்கள் தெரிய சிரித்தவன்.. ” நான் கோச்சா இல்லைனாலும் நீங்க கண்டிப்பா ஜெய்ப்பிங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு டா.. நான் வறது ரொம்ப கஷ்டம் டா.. பாப்பா கூட அப்புறம் டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது..”

சார்…..
சொல்லுங்க…
நீங்க வாரத்துல ஒரு 2 நாளாவது வந்து ப்ராக்டீஸ் கொடுங்க சார்.. என்று மாணவர்கள் கேட்க.. சரி டா ட்ரை பண்றேன் என்று கூறியவன் தன் மகளை பற்றி கூற ஆரம்பித்தான்…

“இப்போலாம் நான் இல்லைனா அவளுக்கு பொழுது போறதே இல்லையாம்.. ரொம்ப வாலு ஆகிட்டா… அதான்… ” என்று தன் மகளின் குறும்புகளை எண்ணியவனது கண்கள் கனிவாக மாறியது…
எந்த தந்தைக்கு தான் தன் மகளின் குறும்புகள் கசக்கும்.. தன் மகளின் ஒவ்வொரு அசைவுகளும் கூட தந்தைகளுக்கு பரிச்சயமே… ஊருக்கே அடங்காமல் ஏன் தன் தாய்கும் தாரத்திற்கும் கூட அடங்காமல் இருக்கும் ஆன் மகன்கள் இருக்கலாம்.. ஆனால் எந்த ஒரு ஆண் மகனும் தன் பெண் பிள்ளையின் சிறு கட்டளைக்கு கூட கட்டுண்டு தான் கிடப்பான்…

நம் யாதவ் மட்டும் அதில் எவ்வாறு விதிவிலக்காக முடியும்.. அந்த குட்டி தேவதையின் சிறிப்பிற்காக மட்டுமே தன்னை உயிர்ப்புடன் மாற்றிக்கொண்டவன்…. அவளது சிறு சிறு ஆசைகளை கூட அவள் கேட்காமலே தவறாமல் நிறைவேத்திவிடுவான்… அந்த ஆசை தகப்பன்.. அப்படி இருக்கும் பொழுது அவள் பேச தெரிந்த நாட்களில் இருந்து முதல் முதலாக அவனிடம் ஒரு யாசகம் கேட்கும் பொழுது???

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here