10. கிணற்று தவளை

0
124

வீட்டிற்கு வந்தவளால் அவனைப் பற்றிய உண்மைகள் ஜீரணிக்க முடியாமல் இருந்தது.தான் அவ்வளவு பலவீனமாக இருந்து இருக்கிறோமா? என்று நினைக்கும் போதே தன் மீது அவளுக்கு ஆத்திரம் வந்தது. தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று நினைக்கும்போதே அவளுக்கு மனதில் ஈட்டியால் குத்தியது. தன்னையறியாமல் அவன் மேல் காதல் கொண்டது பெரும் தவறு என்று நினைக்கத் தோன்றியது. இந்த கேஸ் தனக்கு சாதகமாக முடிய வேண்டும் என்று நினைத்து அவர் தன்னை காதலிப்பதாக சொல்லி இருப்பாரோ? அப்படி ஒன்றும் தெரியவில்லையே? என்றது இன்னொரு மனது. இப்படியாக தன்னை குழப்பிக் கொண்டு தன்னுடைய அறையிலே காலையில் வந்ததிலிருந்து உண்ணாமல் உறங்காமல் குழம்பியபடி இருப்பவளே கண்டு நிரஞ்சனாவிற்கு சங்கடமாயிருந்தது.

நாம் மிகவும் நம்புகிறவர்கள் தான் பெரும்பாலும் நம் முதுகை குத்துகின்றனர். அந்த நம்பிக்கை துரோகம் கத்தியால் குத்துவதை விட வலி அதிகமாக இருக்கும். அந்த வலியை அனுபவித்து கொண்டிருந்தாள் நம் நிர்பயா.

நிரஞ்சனா,” என்ன ஆகியிருக்கும் காலையில் சந்தோஷமாக நீதிமன்றத்துக்கு கிளம்பிச் சென்றாள். வரும்போது முகத்தில் ஏதோ ஒரு ஏமாற்றம். அப்படி என்ன ஆகியிருக்கும்? நித்யனிடம் இதைப்பற்றி விசாரிக்கலாம் என்று நினைத்தால் இவருடைய எண்ணிற்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. இவளை இந்த நிலைமையில் பார்க்கவும் முடியவில்லை. யாராவது உள்ளே சென்றால் அவர்களிடம் தன்னை தனியே இருக்க விடுமாறு கேட்டுக் கொள்கிறாள் எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்பாள்? என்று தன் தங்கையை சமாதானப்படுத்த அவளே செல்வதென முடிவு செய்து அறைக்குள் பிரவேசித்தாள்.

நிரஞ்சனாவை அங்கு அவள் எதிர்பார்த்ததாள் தான். ஆனால் இதை எப்படி தன் தமக்கை இடம் கூறுவது என்று அவளுக்கு தெரியவில்லை. சொன்னாலும் என்ன நினைப்பாள் என்று நினைக்கும்போதே அவளுக்கு சொல்ல முடியாத ஒரு உணர்வு. ஒரு வேலை இப்படியும் நீ ஏமாறுவியா? என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தாள் நிர்பயா.

நிரஞ்சனா,” நிர்பயா என்ன ஆச்சு உனக்கு? எதுக்கு காலையிலிருந்து இந்த மாதிரி இருக்க? கோர்ட்ல ஏதாவது பிரச்சனையா? கேஸ்ல ஏதாவது சிக்கலா? என்று தனக்கு தோன்றிய அத்தனை கேள்விகளையும் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
பொருமையை இழந்தவள் இப்ப சொல்லப் போறியா இல்லையா என்று நிர்பயாவை பிடித்து உலுக்கினாள்.

நிர்பயா,” அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று மழுப்ப பார்த்தாள்.

நிரஞ்சனா,” பொய் சொல்லாதே நீ ஏதோ பிரச்சினை நடந்து இருக்கு. என்ன என்ன சொல்லாமல் உன்னையும் கஷ்ட படித்திக்கிட்டு அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்தற இது உனக்கே நியாயமாபடுதா?

அவ்வளவுதான் நிர்பயா இவ்வளவு நேரம் அடக்கி வைத்து இருந்த மொத்த கண்ணீரும் கோபமாய் வெளிவந்தது.

நிர்பயா,” ஆமா நான்தான் எல்லாரையும் கஷ்டப்படுத்துறேனா? என்னுடைய மனச நீங்க எல்லாரும் தான் காயப்படுத்திரீங்க. என்னோட உணர்வுகள் கூட விளையாடுறிங்க. நான் என்ன கைப்பாவையா? என்று தன் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

நிரஞ்சனாவிற்கு ஒன்று மட்டும் புரிந்தது இது நித்யன் சம்மந்தப்பட்ட ஒன்று என்று. துரிதமாக அவனுடைய லேண்ட்லைன் நம்பருக்கு கால் செய்தவள் அதை நித்யன் எடுக்கவும் ஒன்று விடாமல் அவனிடம் சொன்னாள். ஆனால், மறந்தும் அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்கவில்லை.

அடுத்த 20 நிமிடத்தில் அவனுடைய கார் அவர்கள் வீட்டு வாசலில் நின்றது. அவனை வரவேற்ற யாரையும் கண்டுகொள்ளாமல் நிர்பயாவின் அறையை நோக்கி சென்றான். இத்தனை வருடத்தில் தன்னவள் அழுது ஒருமுறை கூட இவன் பார்த்ததில்லை. அப்படி இருக்க இந்த அழுகைக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைக்கும் போது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர்களைத் தனியே விடும் நோக்கில் நிரஞ்சனா அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். அவள் சென்றதும் தன்னவளின் அருகில் சென்று அமர்ந்தவனின் ஸ்பரிசத்தை அவள் உணர்ந்தாள்.

நித்யன்,” நிர்பயா என்றான் தட்டுத்தடுமாறி.

அவன் தன்னுடைய பெயரை கூப்பிட்டதும் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தில் அவனை ஓங்கி அறைந்தாள்.

நிர்பயா,” எதுக்காக இங்க வந்தீங்க? யாரைக் கேட்டு என்னுடைய ரூமுக்குள்ள வந்தீங்க ?முதல்ல இந்த இடத்தைவிட்டு வெளியில போங்க உங்ககிட்ட பேச நான் தயாராக இல்லை.

நித்யன்,” நிர்பயா நீ என்ன தப்பா புரிஞ்சு இருக்க. நான் சொல்றது ஒரு பத்து நிமிஷம் கேளு அப்புறம் நான் எந்த தப்பும் பண்ணல ன்னு உனக்கு புரியும்.

நிர்பயா,” இன்னும் என்ன சொல்லி என்னை ஏமாத்த நினைக்கிறீங்க? ஒருதடவை ஏமாந்தா மறுபடியும் ஏமாற மாட்டார்கள். உங்களுக்கு எதிரா இந்த கேஸ் எப்படி எடுத்து நடத்தனும்னு எனக்கு தெரியும். இந்த கேஸ்ல நான் ஜெயிக்காமல் விடமாட்டேன். என்னுடைய இந்த கோபத்தை,உங்ஙளோட துரோகத்தை இந்த கேஸ் ஜெயிக்கிறது மூலமா ஆறுதல் படுத்திப்பேன் என்று தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்து நிறுத்தினான் நித்யம்.

நித்யன்,” நிர்பயா என்ன பாரு என் கண்ணுல ஏதாவது பொய் இருக்கா அப்படின்னு நீயே கண்டுபிடி. உன்ன நான் போய் சொல்லி ஏமாத்தல. இந்த கேஸ் உங்களுக்கு பாதகமா முடியும் என்று நான் நினைக்கவில்லை. இன்பேக்ட் நீ சொல்ற வரைக்கும் இந்த கேஸ் அதாவது இந்த கம்பெனி இந்த வரப்போகுதுன்னு எனக்குத் தெரியாது. கிட்டத்தட்ட 15 வருஷமா நான் எங்க அப்பாவோட இல்லை. எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு பிரச்சனையாள நாங்க எங்க சொந்த ஊரை விட்டு விட்டு இங்க பக்கத்துல குடி வந்தோம். இங்க வந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே எனக்கு என்னுடைய அப்பாவுக்கும் பிரச்சனை உண்டாச்சு. அந்தக் கோவத்துல அவருடைய இருக்க முடியாது சொல்லிட்டேன்.ஆனா அப்ப என்னுடைய தாத்தா உயிரோட இருந்தாரு அவர்‌ மூலமா லண்டன் போய் அங்கையே படிச்சேன். நான் இந்த ஊருக்கு வந்த உடனே என்ன வந்து என்னுடைய அப்பா பார்த்தார். என்னுடைய கம்பெனி பொறுப்புகள் எல்லாம் எடுத்துக்க சொன்னாரு.ஆனா எனக்கு இந்த கம்பெனியால நடந்த ஒரு பிரச்சினையில தான் என்‌ அம்மாவை இழந்தேன்.அதனால எனக்கு என்னுடைய வக்கீல் தொழில் இருக்கு. உங்களுடைய நேர்மையின்மை எனக்கு புடிக்கல போங்கனு சொல்லி அனுப்பி வச்சேன். அப்ப வரைக்கும் கூட என்ன பத்தி யாருக்கும் தெரியாது. நான் போகும் போது என் சம்பந்தப்பட்ட எல்லா விசயத்தையும் என் தாத்தா வீட்ல வச்சிட்டதுனால என்ன பத்தி யாருக்கும் தெரியல. அந்த நேரம் தான் நான் உன்ன பார்த்தேன். உன்னுடைய பேச்சில், நடவடிக்கையில் என் அம்மாவின் சாயலை பார்த்தேன். உனக்கு ஒண்ணு தெரியுமா? என்று தன்னவள் தான் சொல்வதை கவனிக்கிறாளா என்று பார்த்தான்.

நிர்பயா, “என்ன சொல்ல வந்தீங்க என்றாள் சற்றே எரிச்சலாக.

அது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தவில்லை மாறாக தான் சொல்வதை கோபத்தில் இருந்தால் கூட கேட்கிறாள் என்று பெருமையடைய வைத்தது.

நித்யன்,” என் அம்மா கூட லாயர் தான், அப்பாவும் அம்மாவும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அப்பாக்கு பணம் சம்பாதிக்கனும், அத நல்ல வழியில் மட்டும் தான் சம்பாதிக்கனும்னு நினைக்க மாட்டாரு. இதுல நிறைய தடவை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிரச்சனை நடக்கும். அந்த மாதிரி ஒரு நாள் அப்பா தான் ஆரம்பிக்க போகும் கூல்டிரிங்ஸ் கம்பெனி விசியத்தை பத்தி சொன்னாரு. உன்ன மாதிரியே என் அம்மாவும் வேண்டாம்னு சொன்னாங்க. அதுல ஆரம்பிச்சது பிரச்சனை. ஒரு கட்டத்தில் அம்மா அப்பாவுக்கு எதிரா கேஸ் பைல் பண்ணாங்க. அப்பா எல்லா குறுக்கு வழியிலும் ட்ரை பண்ணாரு பட் அம்மாவ தோற்கடிக்க முடியல. அப்படி இருக்கும் போது ஒரு நாள் அவங்க இரண்டு பேருக்கும் சண்டை அதிகமாச்சி அதுல அப்பா அம்மாவ அடிச்சிட்டாரு. அதுல சுவத்துல மோதி அப்படியே என்று சொல்லும் போதே அவன் தொண்டை அடைத்தது.

நிர்பயா, “அப்பறம் என்றாள் சற்றே ஏளனமாய்.

நித்யன்,” என்ன அப்பறம்? என்ன பொறுத்த வரைக்கும் என்னுடைய அப்பா தான் என் அம்மாவ கொன்னாரு. பட் அவங்களுக்கு ஆல்ரெடி ஹார்ட் வீக்காக இருந்து இருக்கு இது எனக்கு அப்ப தெரியாது. கொஞ்ச நாளுக்கு முன்னாடி வரைக்கும் என்னுடைய அப்பா தான் அம்மாவோட இழப்புக்கு காரணம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். அப்ப ஒரு நாள் என்னுடைய அப்பா அம்மாவோட போஸ்ட் மார்ட்டம் ரிபோர்டோட வந்தாரு. அதுல அம்மாவுக்கு ஹார்ட் வீக்கா இருந்ததுனால அடிப்பட்ட உடனே அதிர்ச்சியில் வலி வந்து இறந்து இருக்கான்னு இருந்தது. பட் எனக்கு அப்பாவ நம்ப விரும்பம் இல்ல அதனால அந்த ரிபோர்ட்டில இருப்பது உண்மையா அந்த ரிபோர்ட் உண்மையானு டெஸ்ட் பண்ணி பார்க்க சொன்னேன். அதுல இருப்பது உண்மைனு எனக்கு தெரியவந்தது. ஆனாலும் என்னால முழுசா என் அப்பாவ மன்னிக்க முடியல. சரின்னு சொல்லிட்டு ஆபிஸ் டிசிஸன்லாம் மட்டும் நான் எடுத்துக்க முடிவு பண்ணேன். இதுல பிரச்சனை என்னன்னா கூல்டிரிங்ஸ் பேக்டரியோட லீகல் அத்தாரிட்டி மட்டும் இப்ப கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் என் பெயருக்கு மாத்தினாரு அப்ப தான் நீ வந்த நான் அது வரைக்கும் என் அப்பாவ நம்பாம, பேசாம இருந்ததுனால உன்னோட இந்த கேஸ நான் எடுத்துக்கிட்டேன். நான் அவர மன்னிக்கலன்னும் நானும் தப்புக்கு துணை போக மாட்டேன் உணர்த்தற்காகவும் இந்த கேஸ ஜெயிச்சி தர முடிவு பண்ணேன். ஆனா என்ன நானே எப்படி கேள்வி கேட்டு உன்ன ஜெயிக்க வைக்கிறதுனு யோசிச்சேன். இன்னும் சொல்ல போனா உன் எதிர்ல இந்த கம்பெனிக்கு நான் தான் ஓனர்னு சொல்ல எனக்கு மனசு வரல. உனக்கு பொய் சொல்றதோ, ஏமாத்தறதோ பிடிக்காதுன்னு தெரியும். நான் உண்மைய சொல்லி என்ன வெறுத்திடுவியோனு தான்.. எனும் போதே அவனை தீப்பார்வை பார்த்து வைத்தாள் நிர்பயா.

அப்ப தான் மறுபடியும் அப்பா என்ன பார்க்க வந்தாரு.. என்னுடைய காதல் பத்தி தெரியும்னு சொன்னாரு.. நான் அவர் கூட பழையபடி பேசி, ஒரே வீட்ல அப்பா, மகன் என்ற உரிமையோடு கம்பெனி பொறுப்புகளை ஊரரிய ஏத்துக்கிட்டா உன்ன எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது மட்டும் இல்லாம இந்த ஊருக்கு கூல்டிரிங்ஸ் பேக்டரி வராதுன்னும் சொன்னாரு. நானும் நம்பி அவர் கூட போனேன். இங்க வரும் போது கூட நீ வீட்டுல இருக்காத நேரத்தில் போகணும்னு சொன்னாரு. நான் கேட்டதுக்கு நீ தான் என் பையன்னு தெரிஞ்சா உன் காதல ஏத்துக்க மாட்டா. அதனால மொதல்ல பெரியவங்க சம்மத்ததை வாங்கிட்டு நிச்சயம் பண்ணிட்டா உன்ன வெறுக்க மாட்டானு சொன்னாரு என்றான் தட்டு தடுமாறி. எனக்கு அது அப்ப சரின்னு படவே நீ கிடைச்சா போதும் வேற எதுவும் வேண்டாம்னு சரின்னு தலையாட்டிட்டேன். அதுக்கு அப்புறம் இன்னைக்கு ஜட்ஜ் கிட்ட போகுறதுக்கு கூப்பிட்டாரு நானும் சரி நான் தான் சக்ரவர்த்தி இந்த கூல்டிரிங்ஸ் கம்பெனி அந்த ஊருக்கு வராது, சோ நீங்க கேஸ தள்ளுபடி பண்ணலாம்னு சொல்ல தான் போனேன். ஆனா நான் வச்ச ஒரிஜினல் டாக்குமென்ட் கூட உங்க ஊர் இருக்கவங்க பேசின வீடியோ ஒண்ணு இருந்தது. அதாவது உனக்கு இந்த ஊர் நல்லா வளரது பிடிக்கலன்னும் அவங்க வளர்ச்சியை நீ கெடுக்குறனும் சொன்னாங்க. முக்கியமா நீ அவங்க கிட்ட பேசி சில பேர் கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வந்த இல்லையா அவங்க எல்லாம் என்னோட அப்பா ஆளுங்க. உன் கிட்ட கையெழுத்து போட்டு குடுத்திட்டு அந்த வீடியோல அது எங்க கையெழுத்தே இல்லன்னு சொல்றாங்க. நீ பிராடு தனம் பண்றதாகவும் சொன்னாங்க. அதனால நீ ஜோடிக்கப்பட்ட வழக்கு போட்டு இருக்கறதா இந்த கேஸ் தள்ளுபடி ஆகி போச்சி.

அவன் பேசுவதை அவ்வளவு நேரம் பொறுமையாய் கேட்டவள், சிரித்தாள். அவனோ தன்னை இவள் நம்பி விட்டாள் தன் மீது இருந்த கோபம் போய் விட்டது என்று நினைக்கையில்,

நிர்பயா, “நித்யன் உங்க ஸ்டாரி சூப்பரா இருந்தது. நீங்க பேசாம வக்கீல் தொழில் இந்த கம்பெனி இதல்லாம் விட்டுட்டு கதை எழுத போயிடுங்க. இந்த மாதிரி செண்டிமெண்டா கதை சொன்னா நான் நம்பனும் இல்லையா? ஓகே இப்ப நம்பிட்டேன் இப்ப என்ன பண்ணணும்.?வாங்க கல்யாணம் பண்ணிப்போம் இந்த ஊர் எப்படி போனா எனக்கு என்னனு நான் உங்க பின்னாடியே வரனும் இல்லையா? நெவர் இந்த நிர்பயா நெவர் டூ டட். இந்த ஊருக்கு உங்க கம்பெனி வராது, வரவும் விட மாட்டேன் நௌ யூ கேட் லாஸ்ட். இந்த நிர்பயா பெயருக்கு ஏற்றார் போல் பயமில்லாதவள்னு நிரூபிக்கிறேன்.

தொடரும்..

images|690x353
Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here