11 உயிரே என் உலகமே

0
854

அத்தியாயம் 11

பாரத ரத்னா விருது

பாரத ரத்னா விருது இந்தியாவின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும்.. மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களுக்கு வழங்கப்படும் விருது

இந்தியாவின் தலை சிறந்த மனநல மருத்துவரான டாக்டர் யாழிசைக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.. என்று இசையின் போட்டோவுடன் இருந்த நாளிதழை பார்த்தான் இனியன் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் டாப்… கருப்பு நிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்து முடியை போனி டைல் போட்டு இருந்தாள்….இனியன் இது உண்மைதானா என்று மீண்டும் மீண்டும் அந்தப் புகைப்படத்தை பார்த்தான் ..

பாரதரத்னா விருது பெற்றது தன் மனைவி என்ற கர்வம் தோன்றினாலும் .. ஏதோ ஒன்று அவனை தடுத்தது இவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கும் என் மனைவி எதற்காக இந்த கிராமத்தில் கஷ்டப்பட வேண்டும்… நான் அவள் வாழ்க்கையை வீணாக்கி விட்டேனா என்று வருந்தினான் ..ஆனால் ஒருவேளை இசை நினைத்திருந்தால் என்னை வேண்டாம் என்று சொல்லி சென்று இருக்க முடியுமே.. இன்று காலையில் கூட என் தம்பிகளிடம் அவள் பேசியதை பார்த்தால் அவள் என் குடும்பத்துடன் வாழ்வதை விரும்புகிறாள் … 13 வருடம் நான் மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னாலே… ஆனால் ஏன் அவள் அவளுடைய அடையாளத்தை வெளிப்படுத்தாமல் வாழனும் நினைக்கிறா…. அவ கிட்ட கேட்டா கண்டிப்பா சொல்ல மாட்டா இனி வேற ரூட்டு தான் கரெக்ட் இன்று வீட்டுக்குப் புறப்பட்டான் இனியன்..

கவி கயலை புதுக்கோட்டை டவுனுக்கு காரில் அழைத்து சென்றான் …கவி எதும் பேசாமல் அமைதியாக கயல் மௌனத்தை கலைக்க பேச ஆரம்பித்தாள்

அத்தான் ……….சொல்லு கயல்

கவி அத்தான் என் மேல ஏதாவது கோவமா இருக்கீங்களா….

அப்படிலாம் இல்ல கயல்

பொய் சொல்றிங்க அத்தான் நீங்க என்மேல கோபமா தான் இருக்கீங்க.. எனக்கு தெரியாதா நீங்க என்ன ரொம்ப லவ் பண்றீங்க … நீங்க அப்ப என்கிட்ட சொல்லும்போது நான் நீங்க விளையாடுறீங்கனு நினைச்சேன் . ஆனா நீங்க இவ்வளவு சீரியஸா என்ன லவ் பண்ணுவீங்க என்று நா எதிர் பாக்கல ..நீங்க ஆஸ்பிடல் வந்தப்ப தான் எனக்கு தெரியும். எனக்காக நீங்க துடிச்சப்போ தான் உங்க காதலை புரிஞ்சிக்கிட்டேன் அத்தான்

ஏதாவது பேசுங்க அத்தான்

நீ சின்ன வயசுல இருந்து இனியன் அண்ணாவ லவ் பண்ணதாசொன்னா இப்ப எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா….என்று கேள்வி கேட்டான் கவி

இனியன் அத்தான எனக்கு சின்ன வயசுல இருந்து பிடிக்கும் அவர கல்யாணம் பண்ணிக்கணும் நினைச்சேன்.. ஆனா இப்பதான் புரியுது அது காதலே இல்லன்னு அது இன் ஃபேக்ட் ்ஸ்விஷன் அத்தான் …

ஓ என்ற சொல்லோடு நிறுத்திக் கொண்டான்…

நாம் அப்படியே நிச்சய புடவை எடுத்துட்டு போயிடலாமா அத்தான்

அது எப்படி கயல் முடியும்.. முன்னாடிதான் எங்க வீட்ல பெரியவங்கனு யாரும் இல்ல ஆனா இப்போ எங்க அண்ணி இருக்காங்க இல்ல அவங்க ஆச்சி எல்லாரும் சேர்ந்து நாளைக்கு போய் எடுக்கலாம்…

அவன் கூறியதில் கடுப்பான கயல் ஏன் கவியத்தான் உங்க அண்ணி வந்தா தான் எனக்கு புடவை எடுத்து தருவீங்களா.. இல்லைனா எடுத்து தரமாட்டிகளோ அப்படி என்னதான் பண்ணிவச்சியிருக்களோ எல்லாரும் அவபின்னாடியே சுத்துறீங்க என்று சத்தமாக முணுமுணுத்தாள் கயல்

அப்படிலாம் இல்ல கயல் இப்ப வந்து உனக்கு எத்தனை புடவை வேணாலும் எடுத்துக்கோ ஆனா நிச்சயதார்த்தப் புடவை மட்டும் அண்ணியோட வந்து எடுத்துக்கலாம் என்று கவி சொல்ல

அதற்குமேல் எதுவும் பேசாமல் இருவரும் கடைக்குச் சென்று கயலுக்கு தேவையான பொருட்களை வாங்கினர்

வீட்டிற்கு வந்த இனியன் இசையை தேடினான் வழக்கம்போல இசை இனியனின் தம்பிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு சமையல் செய்தாள்..

டார்லி நேத்து என்ன அந்த பொண்ணு லவ் பண்றேன்னு சொல்லிட்டா டார்லி …. என்று மகி சந்தோஷமாக கூற

என்னடா சொல்ற நான் பார்த்து கைநிட்டுர பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் சொன்ன இப்ப என்ன மாத்தி பேசுற

நான் சொல்ற பொண்ண நீ கைகாட்டு டார்லி…. உனக்குவேலைய ஈசி ஆக்கிட்டேன் என்று காலர் தூக்கிவிட்டு சொன்னான் மகி .. இசை சப்பாத்தி கட்டை தூக்கி அவன் மேலேறிய

டார்லி நோ வயலென்ஸ் … என்று அழகாக அதை கேட்ச் புடித்தான் …

டேய் ஒழுங்காக சப்பாத்திய உருட்டு …. தேவையில்லாம பேசுன .. நாக்குலே சூடு வச்சிடுவேன் ஜாக்குறதை என்று இசை மிரட்ட

தமிழ் அம்மு எனக்கு உன்ன மாதிரி ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வை என்று சொல்ல

தம்பி உனக்கு 15 வயசுதான் ஆகுது வயசுக்கு தகுந்த மாதிரி பேசு உனக்கு முன்னாடி நாங்க ரெண்டு பேரு இருக்கோம் ஞாபகம் வச்சுக்கோ…மகி சொல்ல

எனக்கு எப்படியும் கல்யாணம் ஆயிடும் உனக்கு கல்யாணம் ஆகுறதுதான் கொஞ்சம் டவுட்டா இருக்கு என்று அகி சொல்ல

ஏண்டா இப்படி சொல்ற.. என்று மகி கேட்க இல்ல நீ பண்ற அலப்பறைய பார்த்தா உனக்கு யாரும் பொண்ணு தர மாட்டாங்க…. நீயா எதாவது ஒரு பொண்ண இழுத்துட்டு வந்தாதான் உண்டு

டார்லிங் இங்க பாரு அவன .. என்று கண்களை துடைத்துக்கொண்டு மகி சொல்ல

இதைக் கேட்டுக் கொண்டு அங்கு வந்த இனியன் ..ஏன்டா உங்க அண்ணி தனியா இதெல்லாம் பண்ண மாட்டாளா எப்போதுமே அவ பின்னாடியே சுத்திட்டு இருக்கீங்க..

அண்ணா நாங்க அண்ணிக்கு ஹெல்ப் பண்றோம் என்று அகி சொல்ல

சரிடா நீங்க போங்க நான் ஹெல்ப் பண்றேன்…..ஓ ஓ என்று மூவரும் ஓ போட

ஒன்னும் தேவையில்லை மகி… நீங்க எல்லாருமே போங்க நானே பாத்துக்குறேன் என்று இசை சொல்ல … அனைவரும் சென்றனர் இனியன் மட்டும் போகாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் …

திடிர்னு தன் அருகில் யாரோ இருப்பது போல் உணர்ந்து திரும்பி பார்த்தால் இசை .. இனியன் நிற்பதை கண்டு ஒருநிமிடம் அதிர்ந்தாலும் பின் வேலைகளை தொடர்ந்தால் …

உன்கிட்ட கொஞ்சம் பேசணும் … என்று இனியன் சொல்ல

என்ன என்பது போல் கேள்வியாக அவனை பார்த்தால் ..

இங்க வேணாம் நம்ப ரூம்க்கு வா ….என்று அவன் சொல்ல

அவள் எதும் சொல்லாமல் அவள் வேலையில் குறியாக இருக்க

ஆனா உனக்கு கொழுப்பு அதிகம் தாண்டி கெஞ்சுனா மிஞ்சுற இருடி என்று அவளை தூக்குவது போல் பாவனை செய்ய …

ஐயோ அம்மா என்று அவள் கத்த … அவள் வாயை பொத்தி அடியே கத்தாதாடி இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படி கத்துற என்று இனியன் சொல்ல …அதற்குள் என்னாச்சு ராசாத்தி என்று கேட்டுக்கொண்டு அங்கு வந்தார் கமலம்

ஒண்ணுமில்ல அப்பத்தா கிட்சேனுக்குள்ள கருப்பாம்புச்சி வந்துடுச்சி அதான் ..

கருப்பான் பூச்சிக்கு போய் பயப்படலாமா என்று கமலம் கேட்க

அது கொஞ்ச பெரிய சைஸ் கருப்பான் அப்பத்தா என்று இன்னியனை பார்த்து சொன்னால் இசை

சரி தாயி எல்லாரையும் சாப்பிட கூப்புடு ..

சாப்பாடு கொண்டு வந்து ஹாலில் வைத்தால் இசை … டேய் எல்லாரும் சாப்பிடவாங்க என்று அனைவரையும் கூப்பிட்டால்

தமிழ், அகி, மகி அமர்ந்திருக்க இசையின் கையை பிடித்து இழுத்து நீயும் வந்து உட்காரு என்று இனியன் சொல்ல ….

அவள் பேச ஆரம்பிப்பதற்குள் இன்னியனே பேசினான்

டேய் உங்க அண்ணிக்கு வேலைக்காரி போஸ்டிங் இருந்து பொண்டாட்டி போஸ்டிங் குடுக்கலாம்னு இருக்கேன் நீங்க என்ன சொல்றீங்க

இவரு கொடுத்தாலும் என்னால ஏத்துக்க முடியாது என்று இசை மறுக்க

ஏண்டா இப்ப கம்பெனியில புரோமோஷன் கொடுக்குறத எல்லாரும் ஏத்துக்கலையா அது மாதிரிதான் இதுவும் ஏத்துக்க சொல்லு

அதெல்லாம் முடியாது என்று அவனை பார்த்தால்

அவன் மனதுக்குள் நீ இப்ப இங்க உட்காரு இல்ல உனக்கு கட்டி புடிச்சி எல்லார் முன்னாடியே முத்தம் கொடுத்திடுவேன் என்று அவன் மனதுக்குள் நினைக்க

அவள் டக்குனு அவன் பக்கத்தில் அமர்ந்தாள்… அப்படி வாடி என் வழிக்கு இனி இருக்கு உனக்கு…. இனியன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்

மலர் வந்து பரிமாற அகி எப்போதும்போல மலரை சைட் அடிக்கத் தொடங்க

டேய் போதும்டா வழியுது தொடச்சுக்கோ என்று மகி சொல்ல

அண்ணா அங்க பாரு இதைவிட பெரிய சீனு ஓட்டிட்டு இருக்காங்க..தமிழ் இனியனை பார்த்து சொல்ல

இனியன் இசையை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்
மூவரும் சேர்ந்து மம்க்கு என்று இரும

இருமல் வந்தால் தண்ணி குடிங்க டா என்று தண்ணி டம்பளரை அவர்களுக்கு குடுத்து மீண்டும் அவன் வேலையை தொடர ….

அண்ணா உங்க ரொமான்ஸா ரூமுக்குள்ள போய் வச்சுக்கோங்க சின்னப் பிள்ளைங்களாம் இருக்கோம்ல என்று மகி சொல்ல .. யாருடா சின்ன புள்ள நீயா உன்னோட வண்டவாளம தெரியுமடா தம்பி அடக்கி வாசி என்று இனியன் சொல்ல .. ஐ அம் சர்ரெண்டேர் என்றான் மகி

இசை சாப்பிடாமல் சாதத்தை பிசைந்து கொண்டிருக்க சாதம் பிடிக்கலேனா சப்பாத்தி சாப்பிடு

மீண்டும் அவள் ஏதோ யோசித்துக் கொண்டே இருக்க காதருகில் சென்று சாப்புடுறியா இல்ல நானே உனக்கு ஊட்டி விடட்டுமா என்று கேட்க வேண்டாம் என்பது போல் தலையை ஆட்டி விட்டு சாப்பிட தொடங்கினால் இசை

ஒரு புடி சாதம் கூட அவள் தொண்டைக்குள் இறங்க வில்லை.. சாப்பிட முடியாமல் வரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு கஷ்டப்பட்டு முழுவதையும் சாப்பிட்டால் ….திடீரென்று வயிறு பிரட்டி கொண்டுவர பாத்ரூமை நோக்கி ஓடினாள்… சாப்பிட்ட மொத்தத்தையும் வாந்தி எடுத்துவிட்டு இனியனின் மெத்தையில் சோர்ந்து படுத்தாள்

சோர்ந்து படுத்து கிடக்கும் தன் மனைவியை பார்க்க பார்க்க இனியன் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பித் தவித்தான் … அவனும் அவள் வந்த நாளில் இருந்து பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான் இதுவரை அவள் எதையும் சாப்பிடாததை ..அவள் அருகில் சென்று அவள் நெற்றியில் தன் முதல் முத்திரையை பதித்தான் … நான் இருக்கேண்டி உனக்கு ..என்று அவள் தலையை தடவி கொடுக்க இசையும் அதை உணர்ந்தாலும் எதுவும் சொல்லாமல் நன்றாக தூங்க ஆரம்பித்தாள் ..

தூங்கி எழுந்து வெளியே வந்த இசையை … அகி அண்ணி உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணேன் கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும் அண்ணி

சொல்லு அகி என்ன ஆச்சு

அதுவந்து அண்ணி மலர் .. தோட்டத்துல உட்காந்து அழுதுட்டு இருக்கா அண்ணி நா போய் கேட்டாலும் ஒன்னும் சொல்லமாட்டுற அண்ணி அதான் உங்கள கூட்டிட்டுபோகலாம்னு நெனச்சேன் என்று அகி சொல்ல

தோட்டத்தில் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் மலரிடம் சென்று

ஹே மலர் எதுக்கு இப்பொ அழுதுட்டு இருக்கிற என்று இசை கேட்க…

இல்லக்கா சும்மாதா அப்பா அம்மா நியாபகம் வந்துச்சு அதான்.. பொய் சொல்லாத மலர் உனக்கு வேற ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு சொல்லு…

அப்படிலாம் ஒன்னும் இல்லக்கா .. நா உன்ன என் சொந்த தங்கச்சியாத்தான் நினைக்குறேன் மலர் … நீ என்ன உன் அக்காவா நெனைச்சா சொல்லு

அக்கா அன்னைக்கு சொன்னேன்ல அந்தப் பையன் என்கிட்ட மறுபடியும் தப்பு தப்பா பேசறான் அக்கா … என் போட்டோ எடுத்து நெட்ல போட்டுடுவேன்னு பயமுடுத்துறான் அக்கா …

இதை தூரத்தில் இருந்து கேட்ட அகிழன் அவளிடம் வர … யாருனு சொல்லு என்று மலரை மிரட்ட

அவள் பயந்து இசையை பார்க்க

இசை அகியிடம் நான்தான் பேசிட்டுஇருக்கேன்ல கொஞ்சம் பொறுமையா இருடா

யாரு அவன் சொல்லு மலர் நா பாத்துக்குறேன்என்று இசை சொல்ல

அக்கா வேணாம் அக்கா அவன் பொறுக்கி .. நீ சொல்லு நாங்க பத்துக்குறோம் என்று அகி சொல்ல ….

இங்கே பாரு மலர் நீ யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நானும் உன்னை மாதிரிதான் மலர் சின்னவயசுல எல்லாத்துக்கும் பயப்படுவேன்.. எனக்கும் அம்மா கிடையாது அப்ப மட்டும் தான் அவரும் பிசினஸ் பிசினஸ் அது பின்னாடியே சுத்திட்டு இருப்பாரு .. சின்ன வயசுல இருந்து போடிங் ஹாஸ்டல்ல தான் படிச்சேன் நிறைய பேர் என்னை கிண்டல் பண்ணுவாங்க நிறைய பசங்க டார்ச்சர் பண்ணுவாங்க.. ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடப்பேன் .. யார்கூடயும் பேசாம அழுதுட்டேய் இருப்பேன் ..ஒரு நாள் என்னோட டீச்சர் நான்அழுறத பார்த்து என்ன கூப்பிட்டு கேட்டாங்க .. நானும் நடந்தத சொன்னேன் .. அவுங்க எல்லாரையும் காட்டி பாரு அவுங்களம் எப்படி சிரிச்சிட்டுஇருக்காங்க ஆனா நீ அழுதுட்டு இருக்க உன்ன அழ வச்சவங்கள நீ அழ வைக்க வேணாமான்னு கேட்டாங்க

அழுதா எல்லாமே நமக்கு கிடைச்சுடுமா சொல்லு மலர் … அப்ப முடிவு பண்ணேன் என்ன நான் தைரியமாக மாத்திக்கிட்டேன்.. பசங்களுக்கு சமமா என்னால இருக்க முடியும் நினைச்சேன்.. கராத்தே குங்பூ எல்லாமே கத்துக்கிட்டேன் எனக்கு தெரியாத விஷயமே கிடையாது… அதுனால மனசுக்குள்ள ஒரு தெம்பு வந்துச்சு எல்லாரையும் எதிர்க்க முடிஞ்சுச்சு… இதெல்லாம் எதுக்கு உன்கிட்ட சொல்றேன்னா நீ வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா எதுவும் மாறாது மலர் …இதை விட்டுட்டு வெளியில் வா… உன் கூட்டுக்குள்ளே அடையாத.. உலகம் ரொம்ப பெருசு மலர் அத சுத்தணும்னு ஆசை படு … ஆசைகள் அதிகமானால் தான் சாதிக்குற எண்ணம் வரும் … கண்டிப்பா நீ பெரிய ஆளா வருவ எனக்கு நம்பிக்கை இருக்கு… அப்போ உன்கிட்ட யாருனாலயும் மொத முடியாது … என்று சொன்னால் இசை

சரி வா உள்ள போலாம் … அண்ணி என்று அகி ஆரம்பிக்க

அகி இனிமே மலர் பாத்துப்பா .. வா உள்ள போலாம்

உள்ளே அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.. இசை உள்ளே வருவதை அறிந்த இனியன் சேனலை மாற்றி நியூஸ் சேனல் ஓடவிட்டான்.. அதில் இசையின் போட்டோ வர அனைவரும் திரும்பிஇசையை ஒரு தடவை பார்த்துவிட்டு மறுபடியும் சேனலை பார்த்தனர்..

அனைவரும் திகைத்துப்போய் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த இசை டிவியில் ஓடுவதைக் கவனித்துப் பார்த்தால் சிறந்த மருத்துவருக்கான பாரதரத்னா விருது இந்த வருடம் யாழிசைக்கு வழங்கப்படுகிறது என்ற போட்டோவுடன் தலைப்பு செய்தி ஓடி கொண்டுஇருந்தது

மகி டார்லி கங்கிராட்ஸ் சொல்லவே இல்ல எப்ப ட்ரீட் தர போற என்று கேட்க

கவிய அகியும் கங்கிராஜுலேசன் அண்ணி என்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க

தமிழ் அம்மு சூப்பர் எனக்கு ஸ்வீட் செஞ்சு கொடுக்கணும் என்று சொல்ல

எல்லாருக்கும் பொதுவாக தேங்க்ஸ் டா என்று சொல்லிவிட்டு இசை ரூமுக்கு சென்றாள்… அவள் முகத்தில் சந்தோசம் என்பது சிறிதும் இல்லை என்பதை கவனித்தான் இனியன்

கண்டிப்பா இது எல்லாம் அவனோட வேலையா தான் இருக்கும் .. அவனுக்கு கவர்மெண்ட்ல யாரோ ஹெல்ப் பண்றங்க ..என்ன வெளியே கொண்டு வர இன்னும் என்ன செய்வான்..

பார்ப்போம்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here