ஒரு வழியாக அபய் மகி கழுத்தில் தாலி கட்டிய பிறகே பாட்டியால் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது… திருமணம் முடிந்த பிறகு கையோடு பின் வரும் சம்பிரதாயங்கள் அதற்கும் விட இருந்தது..
தாலி கட்டியவுடன் ஐயர் இருவர் கைகளையும் கோர்த்து வலம் வர சொல்ல அவனும் அவள் கையை பற்ற அவள் கையோ பயத்தில் சில்லிட்டு போய் இருந்தது அதன் பின் வரும் சடங்குகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவனை இம்சித்தது..
பாட்டியோ வயது குறைந்து சிறு பிள்ளை போல் ஓடிக்கொண்டிருந்தார்.
முத்துக்கோ தங்களது இளவரசி இன்னொரு வீட்டின் மகாராணி ஆனதில் சந்தோசம் என்றாலும் தங்களை விட்டு பிரிய போவதில் வருத்தம் கொண்டிருந்தார்…
இருவரும் ஒன்றாக சென்று பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்… பாட்டியோ அவனை ஆர தழுவிக்கொண்டு இன்னிக்கு தான் கண்ணா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… உனக்கு நல்லபடியா ஒரு வாழ்க்கையை அமைச்சு குடுத்துட்டேன்…இனிமே நீ நல்ல படியா வாழ்ந்து காட்டனும் என்றார்..
பின்பு முத்து தம்பதியினரிடமும் ஆசிர்வாதம் வாங்கி விட்டு எழும் போது மகி தன் தாயை கட்டிக்கொண்டு அழ ஆரம்பிக்க அன்பு அவளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்…
கல்யாணம் முடிந்த கையோடு வீட்டிற்கு அழைத்து சென்று பாலும் பழமும் குடுத்து அடுத்தடுத்த விஷயங்கள் நடக்க அபயின் பொறுமை காற்றில் பறந்தது..
முத்து, மறுவீட்டிற்கு அழைக்க அபயோ கல்யாணம் அவசரத்துல நடந்ததால எனக்கு வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பாத்துக்கலாம் அங்கிள் என்று நாசூக்காக தன் விருப்பமின்மையை தெரிவித்தான்…
பாட்டி அபயிடம் டேய் உன் பெண்டாட்டியை கூப்பிட்டு உன் ரூம்க்கு போயி ரெஸ்ட் எடு அப்பறம் கோவிலுக்கு போகனும்னு சொல்லிட்டு முத்து தம்பதியினருக்கும் ஒரு அறையை ஏற்பாடு செய்திருந்தார் அவர்களையும் அங்கே தங்க சொல்லிவிட்டு தன் அறைக்கு வந்து தன் கணவனின் உருவப்படத்திற்கு முன் அமர்ந்து என்னங்க நம்ம பேரனுக்கு நல்ல படியா கல்யாணம் பண்ணி வச்சுட்டேன் உங்க ஆசிர்வாதத்துல தான் இதெல்லாம் நடந்துச்சு.. இதுக்கு மேல அவன் குடும்ப வாழ்க்கையை நல்ல படியா வாழனும்ங்க நீங்க தான் அதுக்கு துணையா இருக்கணும் என்று மனதுடன் பேசி கொண்டிருக்க அவரின் போட்டோவில் இருந்து மலர் விழுந்தது அதை பார்த்த பாட்டியின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது…
அதற்குள் அபய் போன் வர அதை வெளியே எடுத்து கொண்டு போனவன் பேசிவிட்டு திரும்பி வீட்டிற்க்குள் நுழைந்தவன் மகியை கண்டுகொள்ளாமல் அவன் பாட்டுக்கு ரூமுக்கு செல்ல அவனை பின் தொடர்ந்து அவளும் சென்றாள்…
ரூமின் உள் சென்று கட்டிலில் அமர்ந்த அபய் வாசலை பார்க்க அங்கே மகி நின்று கொண்டிருந்தாள் உள்ளே செல்லலாமா வேண்டாமா என்ற பலத்த யோசனையுடன்… அவளை பார்த்த பின்பு விறுவிறுவென்று அவளருகே சென்றவன் அவளை இழுத்து ரூமில் விட்டுவிட்டு கதவை சாத்திவிட்டு அவளருகில் வந்தான் கோபம் தெறிக்கும் கண்களுடன்…
அவளின் நிலைமையோ சிங்கத்தின் பிடியில் சிக்கிய புள்ளி மான் போன்று இருந்தது….
அவளருகே வந்த அபய்,”ஹே என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க… ச்சி உன்னையெல்லாம் என் வாழ்க்கையில பாதியா நினைக்கவே என்னால முடியல… பணக்காரனு சொன்னதுமே பல்ல இழிச்சுட்டு வந்துருவிங்களே…” என்று வார்த்தைகளை அம்பாய் தொடுத்தான்….
மகிக்கோ கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது இருந்தும் அடக்கி கொண்டு,”உங்க பணம் யாருக்கு வேணும்…” என்று அவள் ஆரம்பித்த உடனே அவளின் தாடை இறுகியது.. அபய் தான் அவளின் தாடையை பிடித்து அவளை சுவரோடு சாய்த்து, “என்னை எதித்து பேசரையா…லீவ்க்கு மெயில் அனுப்பும் போது கூட மெடிக்கல் லீவ்னு தானடி போட்டிருந்த.. அதனால தானேடி எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வரல ஆனா நீ எல்லாத்தையும் திட்டம் போட்டு தான் பண்ணிருக்க…” என்றான்…
மகி,” வீட்டுல கல்யாணத்துக்கு என்ன அவசர படுத்துனாங்க… போட்டோ கொடுத்தாங்க….நான் தான் பாக்க விருப்பமில்லாம வாங்கி கபோர்டில் வச்சுட்டேன்.. அப்பறம் வேலை கொஞ்சம் அதிகமா இருந்தனால பாக்க முடியல…” என்று தட்டு தடுமாறி கூறினாள் அவன் இறுக்கி பிடித்திருந்ததில் வலி தாங்க முடியாமல்..
அவளை விடுத்தவன் நீ சொல்ற கதையை எல்லாம் நம்ப இங்க யாரும் காதுல பூ வச்சுட்டு வரல… அண்ட் மோரோவர் என் தகுதி என்ன உன் தகுதி என்னனு உனக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்… என்ன பொறுத்த வரை நீ எனக்கு வேலைக்காரி தான் என்னையே நம்ப வச்சு ஏமாத்திட்டல இனி இந்த அபய் மனோஜ் ஓட ஆட்டத்தை பாப்ப…”லெட்ஸ் பிகின் தி வார்…” ஒத்த ஆளா தொழில் சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்ட என்னை உன் பின்னாடி சுத்த வைக்கலாம்னு நினைக்காத என்று அவளுக்கு பேச வாய்ப்பளிக்காமல் இவனே பேசி விட்டு பால்கனியில் சென்று அமர்ந்து சிகெரெட் பிடிக்க ஆரம்பித்தான்…
அவளோ அதே இடத்தில் மண்டியிட்டு அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்…
அழுது ஓய்ந்தவள் உடலும் மனமும் சோர்ந்ததில் தரையிலே படுத்து தூங்கி போனாள்…
புகைத்து விட்டு உள்ளே வந்த அபயும் க்
அவளை கண்டும் காணாமல் பெட்டில் படுத்து உறங்கினான்…
திடீரென்று கதவு தட்டும் சத்தம் கேட்டு மகியே கண் விழித்தாள் அப்போது தான் தரையிலேயே படுத்து உறங்கியது நினைவு வர வேகமாய் எழுந்தவள் அவசரமாக பாத்ரூம் சென்று முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள் அவள் அழுதது தெரிய கூடாது என்பதற்காகவே…. அவளும் கதவை திறக்க பாட்டி நின்று கொண்டிருந்தார்….
பாட்டி மகியிடம்,”அவன் எங்கமா” என்றார்.
மகி,”தூங்கராங்க பாட்டி”என்றாள்..
பாட்டியோ அவளிடம் அபயை எழுப்புமாறு சொல்ல அவளோ இல்ல..பாட்டி… என்று தயங்கியபடி நீ தள்ளுமா என்று அவரே உள்ளே வந்து அபயை தட்டி எழுப்பி கண்ணா எழுந்திருடா.. நல்ல நேரம் முடியரத்துக்குள்ள கோவிலுக்கு போகணும் வா… என்று எழுப்பிவிட்டுட்டு மகியிடம் உனக்கு கொஞ்சம் புடவைங்க இந்த கபோர்டுல இருக்கு அதுல உனக்கு புடிச்சத கட்டிகிட்டு கீழ வா என்று கூறிவிட்டு சென்றார்…