அத்தியாயம் 14
அண்ணா நீங்க நினைக்கிற மாதிரி நான் மனோ அப்பா பொண்ணு இல்லன்னா நான் யாழிசை மனோ அப்பா எனக்கு சித்தப்பா
என்னம்மா சொல்ற என்று தேவா கேட்க
கொஞ்சம் இருங்க நான் தெளிவா சொல்றேன் ..நான் லதாம்மாவோட அக்கா பொண்ணு என் அப்பா பேரு அரவிந்த் அம்மா பெயர் ராதா.. அப்பாவும் அம்மாவும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க ..அப்பா மும்பைல உள்ள ஏ ஆர் குரூப் ஆப் கம்பெனியோட ஒரே வாரிசு ..நான் பிறந்தவுடனே அம்மா இறந்துட்டாங்க.. சின்ன வயசுல இருந்தே போர்டிங் ஸ்கூல்ல தான் படிச்சேன் …இன்னும் என்ன பத்தி ஏதாவது தெரியணுமா அண்ணா …
அப்போ 13 வருஷத்துக்கு முன்னாடி இங்கே வந்தது நீ இல்லையா மா
நான் தான் அண்ணா வந்தது .. இதுவரைக்கும் தென்றல் இந்த ஊருக்கு வந்ததில்ல
நான் சம்மர் ஹாலிடேக்கு எப்போதும் லதா அம்மா மனோ அப்பா வீட்டுக்கு வந்துடுவேன்… என் பெயருக்கு முன்னாடி உள்ள இன்ஷியல் மட்டும்தான் எங்க அப்பாவோடது மத்தபடி என்னை வளர்த்தது எல்லாமே மனோ அப்பாதான் என்னோட பெஸ்ட் பிரண்ட் அவர்தான் என்றால் இசை
அவளின் அண்ணா என்ற வார்த்தையில் அவனுக்கு குழப்பம் மேலோங்க என்ன ஞாபகம் இல்லையா என்று கேட்டான்
ஞாபகம் இல்லன்னா
எப்படிமா இந்த பையாவ மறந்த இப்ப கூட உனக்கு ஞாபகம் வரலையா
பையா என்ற வார்த்தையைக் கேட்டவுடன் இசைக்கு ஞாபகம் வந்துவிட்டது.
தேவ் பையா நீங்களா அப்போ பாக்கும்போது ஒல்லியா குச்சி மாதிரி இருந்திங்க நீ இப்ப எப்படி இப்படி மாறிட்டீங்க உண்மைய சொல்ற அடையாளமே தெரியலனா
என்னம்மா பண்றது எம்எல்ஏவாக ஆனதுக்கு அப்புறம் கொஞ்சம் இது மாதிரி கேத்தா இருந்தால்தானே உலகம் நம்புது..
சரி அண்ணா அப்போ உங்க நண்பன் லவ் பண்ற பொண்ணு யாரு ..நீங்க சொல்றத பார்த்தா அதுநான் தான் .. பட் அத்தை மனோ அப்பா பொண்ணை தான கல்யாணம் பண்ணிக்கனும்னு சத்தியம் வாங்குனாங்க
ஆமாம்மா ஆனா அத்தை சொன்னது உன்ன தான்… உன்னைத்தான் அவனும் லவ் பன்னினான் .. அத்தையும் உன்ன தான் கல்யாணம் பண்ணிக்க சொல்லி சத்தியம் வாங்கிகிட்டாங்க …
என்னையா என்று ஆச்சரியப்பட்டாள் இசை
கீழனூர் கிராமத்துக்கு முதன்முதலாக வந்ததை சிந்தித்தாள் அவளுக்கு 15 வயது இருக்கும்போது சம்மர் ஹாலிடேக்கு மனோவின் வீட்டிற்கு வந்திருந்தாள் ..அப்போது கீழனூர் கிராமத்தில் இருந்து மனோக்கு கடிதம் ஒன்று வந்தது .அதாவது அந்த ஊரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்துக்கு வருமாறு அழைப்பு வந்தது. அவர் எவ்வளவு கூறியும் அந்த சிறு கிராமத்திற்கு தன்னாலும் தன் பெண்ணாலும் வர முடியாது என்று லதா மறுத்து விட சோர்வாக அமர்ந்த மனோவின் அருகில் சென்று நா வரேன் அப்பா என்று இசை கூறினாள்
ஏண்டி நீ பொய்அங்க எப்படி இருப்ப அது கிராமம் டி உன்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது ரொம்ப கஷ்டம் அம்மா சொன்னா கேளு என்று லதா அதட்ட
இல்லமா நான் அப்பா கூட போயிட்டு வரேன்
போ…. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா போயும் போயும் அந்த பட்டிக்காட்டு கிராமத்துக்கு போக ஆசைப்படுற நீ எல்லாம் திருந்தவே மாட்ட டி பெரியப்பா கூட சிங்கப்பூர் அமெரிக்கானு சுத்தமா வேஸ்ட் பண்ற.. என்று தென்றல் செல்ல
மனோ தென்றல் அப்படிலாம் சொல்லாதம்மா ஒரு தடவை நீயும் வந்து பாரு உன்னாலே அந்த ஊரைவிட்டு வரமுடியாது.
எல்லாரும் ஜாலியா டூர் மாதிரி போயிட்டு வரலாம் வாங்க என்று மனோகர் அழைக்க
அப்பா என்னால் அங்க ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது ..அதான் உங்க செல்ல பொண்ணு வரேன் சொல்றால அவள கூட்டு போங்க
லதா நீயாவது நான் சொல்றத புரிஞ்சுக்கோ நான் மட்டும் தனியா போனா நல்லா இருக்காது ப்ளீஸ் என்று மனோ கெஞ்ச
வேண்டாம் நாங்க வரல உங்க வீட்ல இருக்குறவங்க யாரையும் நான் பார்க்க விரும்பல என்ன போர்ஸ் பண்ணாதீங்க
இருவரும் சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு ட்ரெய்னில் வந்தனர் அங்கிருந்து கீழனூர்க்கு பஸ் பிடித்து இறங்கி தேவா வீட்டிற்கு சென்றனர் தேவாவின் தந்தை ராமசாமியும் மனோகரூம் பாலிய நண்பர்கள்
வாப்பா மனோகரா இப்பதான் நம்ம ஊருக்கு வரதுக்கு உனக்கு வழி தெரிஞ்சுதா
அப்படி எல்லாம் இல்ல ராமு
ஆமா இது யாரு உன்னோட பொண்ணா ரொம்ப அழகா இருக்காடா என்றவர் சொல்ல
இசையை பார்த்து மனோ ஆமாண்டா என் பொண்ணுதான்
இவர்களை வரவேற்பதற்காக தேவாவும் அவன் அன்னை மல்லிகாவும் வெளியேவர தேவாவிற்கு மனோகர் யார் என்று தெரியாத காரணத்தினால் முழித்து கொண்டிருந்தான்
என்னடா அப்படி பாக்குற அவன் உனக்கு சித்தப்பா முறை டா இது அவன் பொண்ணு உனக்கு தங்கச்சி என்று இசையை அறிமுகப்படுத்தினார் ராமு.. சிறுவயதிலிருந்து இருவரும் தனியாக வந்ததாலோ என்னவோ இருவரும் அந்த உறவை ஏற்றுக் கொண்டனர்
மறுநாள் காலை ஊரை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று இசை அடம்பிடிக்க அவளை இழுத்துக் கொண்டு சென்றான் தேவா
தேவ் பையா அங்க போகணும் என்று ஒரு இடத்தை சுட்டிக்காட்டி இசை சொல்ல.. அப்போது எதிரே வந்தவர் தேவாவிடம் பேச்சு குடுக்க
இசை இனியனின் வயலுக்கு சென்றால்
அங்கே அவனும் அவன் அம்மாவும் வரப்பில் வேலை செய்து கொண்டிருக்க இசை அங்கே தொட்டிலில் அழுது கொண்டிருக்கும் குழந்தைக்கு அருகில் சென்றாள்.. அந்த குழந்தையைப் பார்த்ததும் இசைக்கு இனம் புரியாத ஒரு உணர்வு தோன்றியது
அந்தக் குழந்தையை தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டே இருந்தாள் இருந்தும் அந்த குழந்தை அழுகையை நிறுத்தாமல் அழுது கொண்டே இருக்க இசை தனக்கு தெரிந்த ஹிந்தி பாடலை பாட ஆரம்பித்தாள்..
அவளின் இனிமையான குரல் கேட்டு அந்த குழந்தை அழுவதை நிறுத்தி உறங்க ஆரம்பிக்க தன் தோள் மீது போட்டு அந்த குழந்தையை உறங்க வைத்தாள்.. சிவகாமியும் இனியனும் இந்த இனிமையான குரலை கேட்டு வந்து பார்க்க அங்கே இசையை கண்டவுடன் இருவரும் திகைத்தனர்..
ஏனென்றால் இசை பேண்ட் ஷர்ட் போட்டு இருந்தாள்.. சிவகாமி இசையிடம் சென்று யாருமா நீ ஊருக்கு புதுசா என்று கேட்க
அதற்குள் அங்கு வந்த தேவா முந்திக்கொண்டு அத்தை இவ என் தங்கச்சி சித்தப்ப பொண்ணு பட்டனத்திலிருந்து வந்து இருக்கா.
தேவாவின் உறவினர் என்பதால் மேலும் ஏதும் கேட்காமல் சிவகாமி இசையை ஆராய்ந்தால்
வெள்ளை நிற ஷர்ட்டும் ப்ளூ ஜீன்சும் அணிந்து இருந்தாள்..
அம்மாடி இது கிராமம் இது மாதிரி எல்லாம் இங்கே உடுத்தக்கூடாது… பாவாடை தாவணி இல்ல வேற ஏதாவது இருந்தா கட்டிக்கோ என்று அவள் சொல்ல
தேவா சிவகாமியை அத்தை என்று கூப்பிட்டாதால் இசையும் இயல்பாக அத்தை என் கிட்ட வேற டிரஸ் இல்லையே என்று சொல்ல
அத்தை நான் நம்ப செல்விகிட்ட சொல்லி இவளுக்கு பாவாடை தாவணி வாங்கி கொடுக்கிறேன் என்று தேவா சொன்னான்… செல்வி தேவாவின் அத்தைமகள்
என்கிட்ட அவன குடு நான் பாத்துக்குறேன் என்று இசை இடம் இருந்த இரண்டு வயது குழந்தையான தமிழை வாங்கினார் சிவகாமி .. இதை அனைத்தும் தூரத்தில் இருந்து கவனித்து கொண்டு இருந்தான் இனியன்
ஏனோ இசையை பார்த்தவுடன் இனியனுக்கும் சிவகாமிக்கும் பிடித்துவிட்டது இனியனை நோக்கி தேவா அவளை அழைத்துச் சென்றான்
இவன்தான் என் நண்பன் இனியன் என்று அறிமுகம் செய்ய
ஹாய் பையா என்றால் இசை
பையா என்றால் இந்தியில் அண்ணா என்பது இனியனுக்கு புரிய
கோவம் தலைக்கு ஏறி என்னது பையாவா ஒழுங்கா அத்தான்னு கூப்பிடசொல்லுடா என்று சொல்ல..
இசை ஒன்னும் புரியாமல் முழித்து கொண்டு இருந்தால் .. என்னடி அத்தான் கூப்பிடு என்று மறுபடியும் மிரட்ட ..
அத்தான்னு கூப்பிடமுடியாது
தேவ் பையானா நீங்க அவங்க ஃப்ரெண்ட் சோ நீங்களும் எனக்கு பையா தான் என்று இசை சொல்ல
இன்னொரு வாட்டி பையா சொன்னா உன்ன கொன்றுவேன் பாத்துக்கோ என்று மிரட்ட
சிறு வயதிலிருந்தே யாரும் அவளை மிரட்டாத காரணத்தினால் முதன்முதலில் பயந்தால் இசை… ஏனோ இசையை இனியனால் தங்கச்சியாக ஏற்று கொள்ள முடியவில்லை
ஏண்டா அவள இப்படி மிரட்டுற நீ வா மா நம்ம வீட்டுக்கு போலாம் என்று தேவா அவளை அழைத்துச் சென்றான்
இவர்களைப் பின்தொடர்ந்தான் இனியன்… பையா இது அக்கலிப இண்டிகா தானே என்று குப்பைமேனி இலையை பார்த்து அவள் கேட்க.. இது என்ன அது என்ன என்று ஒவ்வொன்றுக்கும் சந்தேகம் கேட்டுக் கொண்டே வர தேவா விற்கும் மண்டையை பிடித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது…
எனக்கு தெரியாது இசை நீ கேட்கிறது எதுவுமே புரியல உனக்கு ஏதாவது டவுட் இருந்தா வேணும்னா இனியன் கிட்ட கேட்டுக்கோ அவன் தான் இந்த ஊரிலேயே மெத்தப் படித்தவன்.. ஓஹ் இப்போ என்ன படிக்குறாரு என்று இசை கேட்க
இப்ப எதும் படிக்கல மா … அவனுக்கு வக்கீல் அகனும்னு ரொம்ப ஆசை .. 2 வருஷத்துக்கு முன்னாடி அவுங்க அப்பா இறந்துட்டாரு ..அவனுக்கு நாலு தம்பிங்க .. அவனுங்கலுக்குக்காக அவன் படிப்பை விட்டுட்டு விவசாயம் பன்றான் மா ..
அப்போ அங்கு ஒரு வயதான மூதாட்டி ஒருவர் காலில் செருப்பில்லாமல் ஊன்று கோலுடன் அந்த வெயிலில் நடப்பதை பார்த்த இசை தான் அணிந்திருந்த காலணி களை கழட்டி அந்த மூதாட்டியிடம் குடுத்து பாட்டியின் இந்தாங்க இதை போட்டுக்கோங்க என்று சொல்ல
ஐயோ வேணாம்டா எனக்கு இதெல்லாம் வேணாம் நான் இப்படியே நடந்து போய்விடுவேன் என்று அவர் மறுக்க
எவளோ வெயில் எப்படி பாட்டி நீங்க நடபிங்கஅதுமட்டும் இல்லாம நீங்க ரொம்ப ஸ்லோவா வேற நடக்கிறிங்க இந்தாங்க நான் எப்படியாவது வீட்டுக்கு ஓடி போய்டுவேன் என்கிட்ட இன்னொரு செருப்பு இருக்கு என்று அவள் அப்பாவியாகக் கூற
அவளின் அப்பாவியான முகத்தை ரசித்துக்கொண்டிருந்தான் இனியன்
இதுவரை பிறந்ததிலிருந்து செருப்பில்லாமல் நடக்காத இசைக்கு முதன் முறையாக நடப்பது மிகவும் கடினம்தான் இருந்தாலும் ..அவளின் குணம் அவளை அவ்வாறு செய்ய வைத்தது
கால் சுட ஆரம்பிக்க ஒவ்வொரு மரங்களின் நிழல்களில் ஓடிப்போய் நின்றாள் அதற்குமேல் அவளால் முடியாமல் போக அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து தன் கால்களை கவனித்தாள் வெள்ளைநிற பாதங்கள் வெயிலின் தாக்கத்தால் சிவப்பாக மாறி இருக்க.அதுமட்டும் இல்லாமல் ஒரு முள் வேறு அவளின் பாதத்தில் குத்தி இருக்க அதை எப்படி எடுப்பது என்று புரியாமல் இருந்தால் இசை
அவளின் ஒவ்வொரு நடவடிக்கையை கவனித்து இனியன் அவள் காலில் முள் இருப்பதை கவனித்து அவள் அருகில் சென்று அந்த முள்ளை எடுத்து விட்டான் ஏண்டி உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லை உன்ன யாரு அந்த பாட்டிக்கு கழட்டி கொடுக்க சொன்னது பாரு உன் கால் எப்படி ஆகிடுச்சுனு
அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் இசை தன்னுடைய காலணிகளை அவளுக்கு கழட்டி கொடுத்து இதை போட்டு போ என்று சொன்னான்
.
உங்களது ஒன்னும் எனக்கு தேவை இல்லை பையா என்று சொல்ல வந்தவள் பையா என்ற வார்த்தையை பாதியில் நிறுத்தி இனியனின் முகத்தை பார்த்தாள்.. அவன் கோபத்தில் எதோ பேச வர . அதற்குள் அவனின் காலணிகளை போட்டு கொண்டு மறுபடியும் எழுந்து ஓட ஆரம்பித்தாள்
அவளின் செயலை கண்டு சிரித்தான் இனியன் .. இருவரின் வாழ்க்கையை மாற்ற அந்த கடவுள் முடிவு செய்ததை அறியாமல் இருவரும் இருந்தனர் …..