14. உனக்காக நான் இருப்பேன்

0
202

வசந்த் அடித்த கோபத்தோடு வெளியேறிய ராகவி
வந்தது அவள் வழக்கமாக வரும் அந்த பிரபல பப்பிற்கு.

கண்ணாடி கோப்பையில் இருந்த திரவத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்த ராகவியின் மனம் தன் நிலை குறித்து கழிவிரக்கம் கொண்டது.

அவள் எப்போதும் சுதந்திரமாக பறக்க நினைப்பவள்… அப்படி இருக்க திருமணம் அவளின் நினைப்பை பொசுக்கி கொண்டிருந்தது. இதில் இருந்து விடுபட போராடி கொண்டிருந்தாள் என்றே சொல்லலாம்.

“ஹாய் ராக்ஸ், என்ன திங்கிங்?” என்று அவளின் முன் வந்தமர்ந்தான் ராபர்ட்.

அமெரிக்க வாசம். அங்கே தொழில் தொடங்கி அங்கேயே செட்டில் ஆகி இருப்பவன் சில நேர பொழுதை கழிக்க இந்தியா வந்தவன் ராகவி வாடிக்கையாக வரும் அந்த பப்பில் அவளை கண்டு அவளிடம் வழிந்து கொண்டு இருந்தவன் சில நாட்களுக்கு முன் அவளிடம் தன் மனதை அவளோடு வாழ விரும்புவதை கூறி இருந்தான்.

அவனை பார்த்து கொண்டிருந்த ராகவியின் போதை மனம் அவன் பின்னே சென்றது.

“ ராபர்ட், நீ சொன்னதை திங்க் பண்ணேன்… ஆனா எனக்கு..” என்று இவள் இழுக்க

“ தெரியும் ராக்ஸ், மேரேஜ் ஆகிடுச்சு… உனக்கு பிடிக்காத கல்யாணம்… சோ நோ ப்ராப்ளம்… டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணலாம்… எனக்கு அது ரொம்ப ஈஸி” என்று அவன் கூற இருந்தும் அவள் தயங்கினாள்.

“ இன்னும் என்ன ராக்ஸ்?”

“ நம்மளோட ரிலேஷன்ஷிப்ல நீ என்னை கம்பெல் பண்ணுவியா ராபர்ட்?”

‘ஏற்கனவே ஒரு முறை பட்டதே போதும்’ என்ற எண்ணம் அவளுக்கு.

“ நோ… ராக்ஸ், ஸ்யூர்ரா சொல்றேன்… உனக்கு பிடிக்கலனா நாம ம்யூச்சுவல் அண்டர்ஸ்டேண்ட்டிங்க்கு வந்துடலாம்” என்று அவன் கூறவும் நீண்ட நேர யோசனைக்கு பின் சரியென தலையசைத்தாள்.

அடுத்து வந்த இரு நாட்களும் அவள் அவனின் கெஸ்ட்டவுஸில் வாசம் கொள்ள ராபர்ட் தெரிந்த வக்கீல் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்ப செய்தான்.

‘இரு நாட்களாக வீட்டிற்கு வராமல் கோவத்தில் தப்பான முடிவெதுவும் எடுத்து விட கூடாதே’ என்று வசந்த் வீட்டார் அவளை தேடினர்.

வசந்த் தெரிந்தவர்களிடம் விசாரிக்க ஒரு பலனும் இல்லை.

‘ அவளின் குணம் அறிந்தே தன் நிலை மறந்து அவளை அடித்த தன்னையே திட்டி தீர்த்து கொண்டான்.

சோர்ந்து போய் வந்த வசந்த் சோபாவில் சாய்ந்தான்.

அவனிடம் தயங்கியபடி மது வர,
“ மாமா…” என்ற அழைப்பில் விழி திறந்து பார்த்தவன்,

“ தெரிஞ்ச எல்லா இடத்துலயும் தேடிட்டேன் மது. ஆனா எங்க போனானே தெரியல. போலீஸ்ல என் பிரண்ட் ஒருத்தர் கிட்ட அன்னபிசியலா தேட சொல்லி இருக்கேன்” என்றான்.

“ அதுக்கு அவசியம் இல்லை மாமா” என்று ஒரு கவரை அவனிடம் நீட்ட வாங்கி பார்த்தவன் அதிர்ந்தான்.

“ மது….. என்ன இது?” என்ற அதிர்ச்சியுடனே அவன் கேட்க வாணி அழுது வீங்கிய கண்களுடன் அவனிடம் வந்தார்.

தாயின் முகம் பார்த்த வசந்த் தன் துக்கம் விழுங்கி,

“அம்மா… ஒன்னுமில்ல, அவ கோவத்துல இப்டி நடந்துகிறா எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா” என்று கூறினான்.

அதை கேட்ட அந்த தாயின் கேவல் அதிகமாக அவரை தாங்கி கொண்டான்.

“ முடியாது தம்பி, அவ உறுதியா இருக்கா… நேர்ல வந்து சொல்லிட்டு போனா…அவளை இதுக்கு மேலயும் தொந்தரவு பண்ண கூடாதாம்… மீறி ஏதாச்சும் செஞ்சா….”என்று கேவியவர் பதில் சொல்லாமல் மகனை கட்டி கொண்டார்.

மது தான் , “ வரதட்சணை கொடுமைன்னு கேஸ் பைல் பண்ணி…”என்று கூற வர வசந்த்,
‘ வேண்டாம்’ என கையமர்த்தினான்.

விபரம் கேட்டு ஓடி வந்த கணேஷும் லட்சுமியும் கூட எவ்வளவோ எடுத்து சொல்லியும் ராகவி கேட்டதாக தெரியவில்லை.

அடுத்த சில நாட்களில் இருவரும் சட்ட ரீதியாக திருமண ரத்தை பெற்று இருந்தனர்.

துக்க வீடு போல இருந்தது வசந்தின் இல்லம்.

நீண்ட நாட்களுக்கு அங்கேயே தங்கி இருந்த மதுவின் பெற்றோர் ஊரில் உள்ள வேலைச்சுமை அழைக்க மீண்டும் ஒரு முறை செய்யாத தவறுக்கு தலை குனிந்து மன்னிப்பை வேண்டி சென்றனர்.

மது மட்டும் சில நாட்களுக்கு அங்கே தங்கி இருந்து விட்டு முடிந்த மட்டும் வாணியை பார்த்து கொண்டவள் அவளின் படிப்பும் அழைக்க வசந்திடம்,

“ மாமா, இப்டியே எவ்ளோ நாளைக்கு இருப்பிங்க… தப்பு செஞ்சவ தலை நிமிர்ந்து நடமாடிட்டு இருக்கா…. நீங்க ஏன் இப்படி தலை குனிய நடக்கணும்… அத்தை மன மாறுதலுக்கு வேண்டியாதும் நீங்க சரியாக வேணாமா?” என்று கூறி

“ உதவி தேவை பட்டால் தயங்காமல் அழைக்க” சொல்லிவிட்டு சென்றாள்.

சிந்தையில் சிக்கி கொண்டிருந்தவன் மறுநாள் அதற்கான யோசனையுடன் வந்திருந்தான்.

அதன்படி வேலையை ராஜினாமா செய்தவன் அவர்களின் சொந்த ஊரான ஏற்காட்டிற்கே வந்திருந்தனர்.

இங்கு இருக்கும் எவருக்குமே வசந்தின் கடந்த காலம் தெரிந்திராமையால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல் வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர்.

சிந்தனை கலைந்த வாணியின் செவியில் மது கூறி கொண்டிருந்த,

“ஏன் மாமா? உங்க வாழ்க்கை முடிஞ்சு போச்சுன்னு யார் சொன்னா? உங்களையே நினைச்சுட்டு காலம் தோறும் காத்து இருக்க மாலினியை நீங்க ஏன் கல்யாணம் செஞ்சுக்க கூடாது?” என்று விழ அவர் முகம் அதிர்விலும் வசந்தின் முகம் கோவத்திலும் மாறியது.

“ மது, மாலினியை உனக்கு எப்டி தெரியும்?”

“ கதிர் மாலினியோட தம்பி தான் மாமா” என்று அவள் கூறினாள்.

ஒரு நொடி அவன் முகம் மாறி பின்,
“ வேணாம் மது, என்னை வேணாம்ன்னு சொல்லிட்டு போனவ எக்காலத்துக்கும் எனக்கும் வேணாம்” என்று கோவத்தில் கூறினான்.

அவனை அமைதியாக பார்த்த மதுவோ, வாணியிடம் திரும்பினாள்.

“ அத்தை, ஒருத்தர் பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாம செஞ்ச தப்பு இப்போ ரெண்டு பேரோட வாழ்க்கைய பாதிச்சு இருக்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டாள்.

புரியாமல் பார்த்த வசந்த், “மது என்ன சொல்ற நீ?” என்று கேட்க,

“ நான் எதுவும் சொல்ல போறது இல்லை மாமா, அத்தையே சொல்வாங்க” என்றாள் வாணியை பார்த்த வண்ணம்.

தாயிடம் திரும்பியவன், “ அம்மா என்னமா?” என்றான் புரியாமல் பார்த்த வண்ணம்.

மகனின் அந்த பார்வையில் அடிபட்ட வாணி தளர்ந்த குரலில்,

“ தம்பி, என்னை மன்னிச்சுடுப்பா… மது என்ன சொல்றான்னா? நான் தான் எடுப்பார் பேச்சை கேட்டு தப்பு பண்ணிட்டேன்… அந்த பொண்ணு நல்லவள்னும், உன்னை உண்மையா விரும்புறதும் எனக்கு தெரியாம போச்சு” என்று நடந்தவைகளை கூற வசந்த் அமைதியாக அமர்ந்தான்.

அவனின் அமைதி அவரை மேலும் சுட…

“ தம்பி, என்னை மன்னிடுச்சுடுப்பா” என்றார் தளர்ந்த குரலில் மீண்டும்.

அவரின் குரல் அவனை ஏதோ செய்ய,

“ அம்மா என்னமா நீ? எனக்கு உன் மேல கோவம் இல்லமா… எனக்கு உன்ன பத்தி தெரியும்மா… நீ எப்பவும் எனக்கு நல்லது தான் பண்ணுவேன்னு எனக்கு தெரியும்… ஆனா நீ இதை பத்தி என் கிட்ட கேட்டு இருக்கலாமே மா” என்று அவன் கூற
ஓர் நெடிய மூச்சை இழுத்து கொண்டு,

“ அதை என்னால சரி செய்ய முடியாது தம்பி… ஆனா இப்போ என்னால ஒன்னு செய்ய முடியும்… ஆமா தம்பி, இப்போவும் உனக்கு நான் நல்லது தான் செய்ய போறேன்” என்றவர் மதுவிடம் திரும்பி

“ நான் மாலினியை பார்க்கணுமே” என்றார்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here