16 உயிரே என் உலகமே

0
1096

அத்தியாயம் 16

இசை எப்படி அவர்களை விட்டு செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள் ..தனக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது ஞாபகத்துக்கு வர அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணி இனியனிடம் அனுமதி கேட்பதற்காக ஹாலுக்கு சென்றாள்

அங்கு இனியன் அகி மகி தமிழ் அனைவரும் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருக்க

இசை மகியின் அருகில் சென்று

மகி எனக்கு அவார்ட் கொடுக்க போறாங்கள .. அதுக்கு போகணும் டா.. நாளைக்கு நான் பாம்பே போலாம்னு இருக்கேன் என்று யாருக்கோ கூறுவதுபோல இசை சொல்ல

அதை ஏன் டார்லி என்கிட்ட சொல்ற

டேய் உன்கிட்ட கிட்ட சொல்லல பொதுவா சொன்னேன்

நீ போகணும்னா போ இதுக்கெல்லாமா என்கிட்ட நீ பர்மிஷன் கேட்கனும் அவசியம் இல்ல டார்லி

அவன் காதை பிடித்து திருகி நான் உன்கிட்ட பர்மிஷசின் கேட்டேன வாய மூடிட்டு உன் அண்ணன் கிட்ட கேட்டு சொல்லு

ஸ்ஸ்ஸ்ஸ் வலிக்குது டார்லி சரி சரி கேட்கிறேன்

அண்ணா அண்ணி ஏதோ உன்கிட்ட கேட்கணுமா

கேட்டுச்சு என்று இனியன் பதில் சொல்ல

நான் நாளைக்கு அவார்ட் பங்ஷனுக்கு போகணும் போகலாமான்னு கேளு

ஏண்டா உங்க அண்ணி இத டைரக்டா என்கிட்ட கேக்க மாட்டாளா

ஆமாம் டார்லி நீயே கேட்க வேண்டியதுதான

அதெல்லாம் முடியாது.இசை சொல்ல

அப்போ என்னாலயும் அனுப்ப முடியாது

நான் போவேன்

நானும் வருவேன் என்று இனியன் சொல்ல

அதெல்லாம் முடியாது என்று இசை அடம்பிடிக்க

உன்ன என்னால தனியா அனுப்ப முடியாது

இவர் யார் அனுப்புறது நான் போவேன்.

நீ போகணும்னு நினைச்சிருந்தா எப்பயோ போயிருக்க வேண்டியதுதானே எதுக்கு என்கிட்ட அனுமதி கேட்டிருக்கிற

அது வந்து என்று இசை தடுமாற.. அவளின் தடுமாற்றத்திறகான காரணத்தை அறிந்த இனியன் அமைதியாக மகியிடம்

டேய் மகி ஒன்னு உங்க அண்ணிய என்கூட வர சொல்லு இல்ல நீங்க மூணு பேருல யாராவது அவ கூட போயிட்டு வாங்க இதுக்கு மேல அடம் புடிச்சா கை கால கட்டிபோட்ருவேன் என்று சொல்லி அவளின் பதிலை எதிர் பார்க்காமல் அவன் ரூம்க்கு சென்று விட

இசைக்கு கோபம் தலைக்கேற இவர் கட்டி போடுற வரைக்கும் என் கை என்ன மாங்கா பறிச்சிட்டு இருக்குமா.

டார்லி அது மாங்கா இல்ல பூ என்று சொல்ல

மங்கி பழமொழி சொன்ன ரசிக்கணும் இப்படி ஆராய கூடாது

ஓகே என்று அவன் கட்டை விரலை தூக்கி காமித்தான்

ஆனா உங்க அண்ணனுக்கு திமிர் ஜாஸ்தி டா .. நா என்ன சொல்ல வரேன்னு கேக்காம அவர் பாட்டுனு போயிட்டே இருக்காரு.. அவர இன்னைக்கு என்ன பண்ணுறேன்னு பாருங்க
ஒரு வாலியில் தண்ணியே எடுத்துக்கொண்டு இனியனின் ரூமுக்கு சென்றாள் .அங்கே முகத்தை மூடிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த இனியன் மீது தண்ணீரை ஊற்றினாள்.. ஒரு வேகத்தில் அவள் இவ்வாறு செய்துவிட ஆனால் இப்போது அவளுக்கு இனியனை நினைத்து பயம் வந்து தன் இரு கன்னங்களையும் மூடிக் கொண்டாள்

அவள் எதிர்பார்த்த எதுவும் நடக்காமல் இருக்க குழம்பி அந்தப் போர்வையை இழுத்தாள் அங்கு இனியனுக்கு பதிலாக தலையணைகளை இருந்தன.. எங்க என்று அவள் ரூம் முழுவதும் கண்களால் அலச இனியன் கதவை தாழிட்டுஅதன் முன் கையை கட்டிக்கொண்டு அவளை நோக்கி என்ன குல்ஃபி அத்தான குளிக்க வைக்க உனக்கு இவ்வளவு ஆசையா.. அவள் பதில் சொல்லாமல் இனியனை பார்த்து கொண்டுஇருக்க ..

நீ முன்னாடியே சொல்லிருந்தா ரெண்டு பேரும் சேர்ந்தே குளிச்சியிருக்கலாம் என்று இனியன் சொல்ல

அவனின் கேலியை புரிந்து கொண்ட இசைக்கு கோவம் வர தலைகாணியை எடுத்து அவன் மீது வீசினாள் .. அதை அழகாக பிடித்து
என்ன டாக்டர் மேடம் கிரிக்கெட் மேட்ச் ரொம்ப பாப்பீங்க போல.. என்று சொல்லி கொண்டே அவளை நெருங்க

கதவை திறங்க நான் போகணும் என்று சத்தமே வராமல் அவள் சொல்ல

என்ன மேடம் வாய்ஸ் காணும் என்று இனியன் அவளை நெருங்க

கிட்ட வராதீங்க

அவன் மேலும் அவளை நெருங்க நான் உங்ககிட்ட தான் சொல்றேன்.

ஓ மேடம் என்கிட்ட தான் பேசுறீங்களா கல்யாணமானதிலிருந்தே எதுவும் பேசாத நீங்க இன்னிக்கு எதுக்கு திடீர்னு பேசுறீங்க.

நான் போகணும்

சரி போ

ரொம்ப தேங்க்ஸ் என்று இசை சொல்ல

எதுக்கு என்று கேள்வியாக இனியன் அவளைப் பார்த்தான்

இல்ல நான் ஊருக்கு போறதுக்கு ஒத்துக் கொண்டதற்கு

ஓய் நான் இந்த ரூமை விட்டு போறதுக்கு தான் ஒத்துக்கிட்டேன்

ஊருக்கு நானும் உன்கூட தான் வருவேன் என்று இனியன் சொல்ல இசை சிறிது நேரம் யோசிப்பதை இனியன் தவறாக புரிந்து கொண்டான்

ஏன் யாழ் நான் உன் கூட வரது உனக்கு பிடிக்கலையா.. என்ன மாதிரி ஹஸ்பண்ட உன்னால் இந்த உலகத்துக்கு இன்டர்டுயூஸ் பண்ண முடியாது இல்ல நான் வேணும்னா உனக்கு ஏற்றமாதிரி வரட்டுமா.. இனியனின் அன்பு இசைக்கு கண்ணீர் வர..

அவளை நெருங்கி அவள் கண்ணீரை துடைத்து விட்டு

யாழ்இங்க இருக்குறது உனக்கு புடிக்கலையா என்று கேட்ட மறுநொடி இசை இனியனை கட்டிக்கொண்டு அவன் மார்பில் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்

இதுவரை எதற்காகவும் அழுகாத இசை முதன்முறையாக தன் மனதில் உள்ள பாரத்தை கொட்டி தீர்க்கும் வழி இதுவே என்று அறிந்து அவன் நெஞ்சில் தஞ்சமடைந்தாள் ..

ஓய் முத எதுக்கு அழுகுறனு சொல்லிட்டடு அழு டி என்று இனியன் இசையை மிரட்ட

என்ன உனக்கு பிடிக்கலையா இசை

அவள் அவனை விட்டுப் பிரிந்து ஒரு அடி பின்னால் கால்வைத்து கையைக் கட்டிக்கொண்டு மறுபடியும் கேளுங்க என்று கேட்க

இனியன் சோகமாக என்ன உனக்கு பிடிக்கலையா இசை என்று தரையை பார்த்து கொண்டு கேட்க … அவள் அவன் கன்னத்தில் முத்தத்தை பதித்து அங்கிருந்து ஓட.. இனியன் அதிர்ச்சியில் ஒய் குல்ஃபி சொல்லிட்டு போடி ..

கதவை லைட் ஆக திறந்து அவனை திரும்பி பார்த்து

ஐ லவ் யூ அய்யனார் என்று சொல்ல

அடிங் வந்தனா பாரு

குடுகுடுவென்று தோட்டத்தை நோக்கி ஓடினாள் இசை

அகி மரத்தடியில் சோகமாக அமர்ந்து இருந்தான்
அகி ஏண்டா சோகமா இருக்க

ஸ்வீட்டி நா மலரை லவ் பண்றது அவளுக்கு தெரிஞ்சிருச்சு ..அவ ஏதாவது பண்ணி பாலோன்னு பயமா இருக்கு

டேய் என்னடா சொல்ற அவளுக்கு எப்படி தெரிஞ்சுது
இனியன் அண்ணா உன்ன அடிச்சாரு இல்ல அப்போ அங்க நடந்த எல்லாத்தையும் அவ பார்த்துட்டா

அவ அழுது கிட்டே அவ வீட்டுக்கு போய்ட்டா நானும் ரொம்ப நேரமா பாக்குற கதவு சாத்தியிருக்க உள்ளே என்ன பண்றன்னு தெரியலை ஸ்வீட்டி

இதுக்கெல்லாம் போய் டென்ஷன் ஆகலாமா .என்னைக்கோ ஒருநாள் தெரியதான போகுது ..

போ ஸ்வீட்டி சும்மாவே அவ எல்லாத்துக்கும் பயப்படுவா.. நான் லவ் பண்றது தெரியாத வரைக்கும் தான் என்கிட்ட ஓரளவுக்கு பேசுவா

இதுக்கப்புறம் என்கூட கண்டிப்பா பேசமாட்ட .. பேசலைன்னா கூட பரவால்ல பட் அவ என்ன விட்டுட்டு போய்டுவாளோனு பயமாயிருக்கு

டேய் நீ அய்யனார் ஓட தம்பி தான

ஏன் அப்படி கேக்குற ஸ்வீட்டி

உங்க அண்ணனை பார்த்து மா நீ இப்படி பேசுற நான் யாருன்னு தெரியாம லவ் பண்ணி என்கிட்ட சம்மதம் கூட கேட்காமல் தாலிகட்டி எவ்வளவு தைரியமா இதெல்லாம் பண்ணியிருக்காரு .

நீ என்னடானா நம்ப மலர்ற நெனைச்சு பயப்படுற .. நீ நெனைக்குற மாதிரி அவ எங்கயும் போகமாட்டா .. பயப்படாத

திடீரென்று மலர் தங்கியிருந்த குடிசை தீப்பற்றி எரிய இசையும் அகிலனும் அந்த குடிசையை நோக்கி ஓடினர்

இவர்களின் சத்தம் கேட்டு இனியன் மகி தமிழ் என்று அனைவரும் தோட்டத்திற்கு வர

அகிலன் தண்ணி எடுத்து அந்த குடிசையில் ஊற்றுவதற்கு முன் இசை குடிசைக்குள் சென்று விட்டாள் அவள் சென்றதைப் பார்த்த இனியனும் உள்ளே செல்ல முயல அதற்குமுன் மலரை இழுத்துக்கொண்டு இசை அந்த வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள்

அகிலன் மலருக்கு ஏதாவது காயம் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்ய..

இனியன் இசையை கோபமாக முறைத்து கொண்டு நின்றான்

இசைக்கு அந்த புகை இருமலை கொண்டுவர இசை விடாதே இருமிக்கொண்டே இருக்க இனியன் பதறிப்போய்

டேய் தமிழ் சீக்கிரம் தண்ணி எடுத்துட்டு வாடா என்று சொல்வதற்குள் இசையின் வாயிலிருந்து ரத்தம் வர ஆரம்பிக்க இனியன் மீதே மயங்கி சரிந்தாள்

இனியன் யாழ் இங்க பாரு.. என்ன பாரு டி என்று அவள் கண்ணங்களை தட்ட அசைவின்றி இருந்த இசையை பார்த்து இனியனுக்கு பயம் வர ஆரம்பித்தது

தமிழ் வந்து தண்ணீரை இசையின் மீது தெளித்து அவளை எழுப்ப அதற்கும் இசை இடம் அசைவில்லை பயந்துபோய் நால்வரும் இசையை காரில் ஏற்றி மருத்துவமனை நோக்கி பயணித்தனர்

புதுக்கோட்டையில் உள்ள புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இசை அனுமதிக்கப்பட்டாரள் இனியன் ஐ சி யூ வில் வெளியில் தலையில் கை வைத்து உட்கார்ந்து இருக்க

தமிழ் அம்மு அம்மு என்று தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தான்

டேய் அழாதடா டார்லிக்கு ஒன்னும் ஆகாது ..
ஆமாம் தமிழ் ஸ்வீட்டிக்கு ஒன்னும் இல்ல

இனியனும தமிழை கட்டிப்பிடித்து அழாதடா உன்னோட அம்மு வந்துடுவா கண்டிப்பா வருவா என்று ஆறுதல் சொல்ல … ஆனால் இனியனுக்கு உள்ளுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது

அதற்கு காரணம் அவள் வாயிலிருந்து வந்த ரத்தமே அவனுக்கு அவள் இருக்கும் நிலைமையின் தீவிரம் புரிய அவனுக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்தது

இசை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரிந்து தேவா மருத்துவமனைக்கு வர இனியனின் நிலையை கண்டு பதறிப் போய் டேய் மாப்பிள்ளை என்று அவன் தோள்களில் கை வைக்க மச்சான் என்று கத்திக்கொண்டு தேவாவை கட்டிபுடித்து அழ ஆரம்பித்தான் இனியன்

டேய் உன் தங்கச்சியை பாருடா அவள என்னால இப்படி பார்க்க முடில்ல மச்சான்

மாப்பிள்ள அவளுக்கு ஒன்னும் ஆகாது பயப்படாதே ..அப்போது அங்கிருந்த சீஃப் டாக்டர் இனியனிடம் தனியாக பேச அழைக்க தேவாவும் அவனுடன் சென்றான்.

சார் உங்க வொய்ப் தான யாழிசை .. ஆமாம் டாக்டர்

அவுங்களுக்கு யாரோ பிரைன் பிரீஸ் ஆகுற மாதிரி இன்ஜெக்ஷன் போட்டுஇருக்காங்க .. அதுமட்டும் இல்லாம ரொம்ப வயோலெண்ட் ஆஹ் அவுங்கள கொடுமை பண்ணிருக்காங்க …என்ன சொல்றிங்கனு புரில்ல என்று இனியன் பதற

நாங்களே இன்னும் முழுசா செக்கப்பண்ணலா

அவுங்க டாக்டர் நாளா இதுக்கான பிரஸ்ட் எயிட் பண்ணிட்டு இருந்துருக்காங்க …
அவுங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்ச மேலும் ட்ரீட் மென்ட் கொடுக்க ஈசி ஆஹ் இருக்கும் …

எனக்கு தெரில்ல டாக்டர்

என்னசொல்றிங்க சார் அவுங்க உங்க மனைவி தான 15 நாளா அவுங்க இன்ஜெக்ஷன் போட்டுட்டு இருக்குறது கூட உங்களுக்கு தெரியாதா…

இனியன் என்ன சொல்வது என்று புரியாமல் இருக்க

தேவா டாக்டர் இப்போ அவுங்க எப்படி இருகாங்க

தேவா சார் இசை மேடம் 3 ஹர்ஸ் ல கண்ணு முழிச்சிடுவாங்க பட் அவுங்க ஒரு 10 டேஸ் இங்க இருந்தாதான் கம்ப்ளீட் ரெக்கவர் ஆகமுடியும்

ஓகே என்று இருவரும் வெளியே வந்தனர்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here