இருவரும் தங்களை மறந்து மோன நிலையில் இருக்க அதை கலைக்கும் வண்ணம் மகி மகி என்று குரல் கொண்டே வந்தார் அன்பு… அவரின் குரல் கேட்டு இருவரும் விலகி நின்றனர்.. அன்பு வந்து லைட்டை ஆன் பண்ண.. அக்கா தம்பி இருவரும் செய்த சேட்டை தெரிய மகியை கடிந்து கொண்டார் ஒரு பொறுப்பான தாயாக.
அன்பு,”ஏண்டி மாப்பிள்ளை வந்து எவ்ளோ நேரம் ஆகுது… அவரை கண்டுக்காம நீ பாட்டுக்கு சின்ன புள்ளையாட்டம் விளையாடிட்டு இருக்க.. அவருக்கு என்ன வேணும்னு கவனி.. இதல்லாம் சுத்தம் பண்ணிட்டு இன்னும் 10 நிமிஷத்துல நீ வரணும” என்று கட்டளையிட்டு சென்றார்….
மகி,” நீங்க எப்போ உள்ளே வந்திங்கே…”
அபய்,”ஹ்ம்ம் நீ தூங்கிட்டு இருக்கும் போதே வந்தேன் அப்டியே இங்க இருக்க பெயின்டிங்ஸ், ஆல்பம் எல்லாம் பாத்துட்டு இருந்தேன்…”
மகி,”நீங்க வந்த உடனே என்ன எழுப்பி இருக்கலாம்ல”
அபய்,”எழுப்பி இருந்தா உன்னோட சேட்டை எல்லாம் தெரிஞ்சிருக்காதே அப்பறம் இந்த ஆல்பம்ல உங்க அம்மா கையில இருக்க குழந்தை நீயா??? ரெண்டு குடும்பமும் ப்ரண்ட்ஸ்னு உனக்கு முன்னாடியே தெரியுமா”
மகி,”ஆமா அந்த குழந்தை நான் தான்… இல்ல ரெண்டு குடும்பமும் ப்ரண்ட்ஸ்னு இந்த கல்யாணத்துக்கு அப்பறம் தான் தெரியும்… அதுக்கு முன்னாடி அப்பாவுக்கு சின்ன வயசுல ஒரு பணக்காரவங்க பிரண்ட்டா இருந்தாங்கனும் அவர் இறந்ததும் அவரோட சொந்தங்கள் நாங்க மிடில் கிளாஸ்னு வாய்க்கு வந்ததெல்லாம் பேசுனதுனால அன்னிக்கு இருந்து அப்பா அந்த வீட்டு பக்கமே போராதில்லனு அம்மா சொல்லி கேள்விபட்டிருக்கேன் அப்பவும் அது நீங்க தான்னு தெரியாது… உங்க கிட்ட வேலைக்கு வரும் போது கூட தெரியாது… என்றாள் அப்பாவியாக..
அபய்,”சரி ஓகே… ஓ உனக்கிந்த சுய மரியாதை வைராக்கியம் இதெல்லாம் உங்க அப்பா கிட்ட இருந்து தான் வந்துருக்கு போலவே என்றான் நக்கலாக…
மகி,”ஆமாங்க எனக்கு எங்க அப்பா தான் ரோல் மாடல் உங்களுக்கு எப்படி உங்க தாத்தா ரோல் மாடலோ அது போல… சரி 2 மினிட்ஸ் இதெல்லாம் எடுத்து வச்சுட்டு வந்தரேன் என அவள் கீழே இருந்ததை எடுக்க அப்போது தான் கீழே இருந்த அபயின் ஆபீஸ் அட்ரஸ் போட்ட கவர் அவன் கண்ணில் பட்டது… அதை எடுத்தவன் இது என்ன என கேட்க…
அவளோ கேஸுயுவளாக ஓ இதுவா உங்களோட டீடெயில்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடி கொடுத்தது நான் பாக்காம வாங்கி கபோர்டில் போட்டு வச்சது… இப்போ அந்த குரங்கு எல்லாத்தயும் தூக்கி போடும் போது கீழ விழுந்துருச்சு போல… என்றாள்…
அந்த கவரை வாங்கி பார்த்த அபய்க்கு ஷாக்.. அந்த கவர் இப்போது வரையிலும் சீல் பிரிக்க படாமல் அப்டியே இருந்தது… எதை வைத்து அவன் இத்தனை நாளும் அவளை டார்ச்சர் செய்தானோ அது பொய்யானது… அவனோ சங்கடத்தின் உச்சியில் இருந்தான்…
அவளும் ரூமை ஒழுங்கு படுத்திவிட்டு வாங்க என்று தன் கணவனையும் அழைத்து கொண்டு சென்றாள்…
அனைவரும் கீழே டைனிங்கில் அமர்ந்திருக்க இவர்களும் அந்த ஜோதியில் ஐக்கியமயினர்.. புதுமண தம்பதிகளை அமர வைத்து அன்பு பரிமாற அபய் தான் அங்கிளையும் பிரபுவையும் தங்களுடனே அமர வைத்து சாப்பிட வைத்தான்..
அனைவரும் பேசிய படியே சாப்பிட்டு கொண்டிருக்க முத்து தான் சேகருடனான பால்ய காலத்தை பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு இடையேயான நட்பை பற்றி அறிந்து கொண்டான் அபய்…
அவர்களை இடைமறித்த பிரபு.. போதும்பா இவ்ளோ நாள் இதே புராணத்தை தான் எங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருந்திங்க இன்னிக்கு மாமா கிட்டயும் ஆரம்பிச்சுட்டீங்களா..
பின்பு பிரபுவே மகியின் குறும்புகளையும் சேட்டைகளையும் சொல்ல அந்த இடத்தில் இருந்த அனைவருக்குமே சிரிப்பு..சிரித்துக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்த அபய்க்கு புரையேற மகியோ அவன் தலையில் தட்டி குடிக்க தண்ணீர் ஊற்றி குடுக்க அவனுக்குள் என்றுமில்லாத அளவுக்கு மகிழ்ச்சி…
பின்னே அவன் நினைவு தெரிந்த நாளிலேயே இந்த சின்ன சின்ன சந்தோஷங்கள் கூட அனுபவிக்காதவன் ஆயிற்றே…. இன்றே அவன் உணர்ந்து கொண்டான் பணத்தை விட பாசத்திற்கு மதிப்பு அதிகம் என்று..
அன்றைய பொழுதுகள் அனைத்தும் இன்பமாய் கழிய பிரபு எப்போதும் மாமா மாமா என்று அவன் பின்னால் சுற்ற அபய்க்கும் இவனுடன் இருப்பது மகியை பற்றி தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது..
இரவு உணவு முடித்து தூங்குவதற்க்கு தங்களது அறைக்குள் நுழைந்தனர் புதுமண தம்பதியினர்… அறைக்குள் நுழைந்தவுடன் மகி தான் பேச ஆரம்பித்தாள்..,” ஏங்க உங்களுக்கு இங்க கொஞ்சம் வசதி கம்மியா தான் இருக்கும் பரவால்லையா இல்ல நம்ம வீட்டுக்கு போயிரலாமா என கேட்டாள்..
அபயே அவளை இடைமறித்து நானும் இந்த மாதிரி சூழ்நிலையில்லாம் தாண்டி தான் வந்தேன்.. இது எனக்கொன்னும் புதுசில்ல இன்னிக்கு மட்டும் தானே தங்கிக்கலாம் என்றான்..
அபயின் அமைதியான முகமும் தோரனையும் பார்த்து இவங்க ஏன் இன்னிக்கு இவ்ளோ நல்லவங்களா இருக்காங்க… ஒருவேளை மனசு மாறிட்டாரோ என்று மகி நினைக்க..அவளது மனமோ ஏண்டி நீ வேற உன் மனசுல ஆசைய வளத்துக்காத என்று அவளுடைய எண்ணத்திற்கு தடை போட்டது…
அவள் அபயிடம் சரிங்க அப்போ நீங்க மேல படுத்துக்கோங்க நான் கீழ படுத்துக்கிறேன் என்றாள்..
அவனோ நீயும் மேலேயே படுத்துக்கோ அதுல எனக்கொன்னும் பிரச்சனை இல்லை என்க அவளோ இடைமறித்து எனக்கு அதுல பிரச்சனை இருக்கு என்று கூறிவிட்டு கீழே படுத்துகொண்டாள்…
அபய்க்கோ ஒரு புறம் கோபம் இவள் உதாசீனப்படுத்திவிட்டாள் என்று… மறுபுறம் இந்த அளவிற்கு இவளை காயப்படுத்திவிட்டேனா என்ற எண்ணம் எழுந்த போது கூனிக்குறுகி போனான்… அதற்கு மேல் எதுவும் பேசாமல் தூங்கி போனான்…
காலையில் கண்விழித்தவன் மகியை தேட அவள் அறையில் இல்லை.. எழுந்து அவன் கிளம்பிக்கொண்டிருக்க
அவள் காபியுடன் வந்து நின்றாள்..
எதுவும் பேசாமல் காபியை வாங்கி கொள்ள அவள் சென்றுவிட்டாள்.. காபியை அருந்தியபடியே பாத்துக்கொண்டிருந்தவனுக்கு அந்த புகைப்படம் கண்ணில்பட்டது…..அது மகியின் புகைப்படம் மெரூன் கலர் தாவணி பாவாடையில் சிரித்தவண்ணம் ஊஞ்சலில் ஆடுவது போல் இருந்தது…
அவனும் காபி குடித்துவிட்டு கிளம்பி வர மகி அவனுக்கு முன்னமே தயாராகி கீழே இருந்தாள்.. அவர்களை காலை உணவு உண்ண வைத்து உடன் தான் செய்த அனைத்து பட்சனங்களையும் பாட்டிக்கும் சேர்த்து கொடுத்தனுப்பினாள் அன்பு…. பிரபுவிடம் அபய் உனக்கு எப்போ தோணுனாலும் நம்ம வீட்டுக்கு வா.. உனக்கு தேவைனா சொல்லு கார் அனுப்பறேன் இது என் கார்ட் இதுல மொபைல் நம்பர் இருக்கு சரியா… அதோடு அனைவரிடமும் விடைபெற்று
சென்றனர்…
அவளை வீட்டில் இறக்கி விட்டு ஆபீஸ் கிளம்பிச்சென்றான் அபய்.. அவன் சென்ற அடுத்த 20 ஆவது நிமிடத்தில் மகியின் போன் அலற அதை எடுத்தவளுக்கு மறுபுறம் சொன்ன செய்தியை கேட்டு இதயம் அப்டியே நொறுங்கிபோனது.. போனில் ஹே மகி உன் புருசனுக்கு அடிபட்டு உசுருக்கு போராடிட்டு இருக்கான்.. என் வாழ்க்கையை பறிச்ச உனக்கு இது தான் தண்டனை.. காலம் புல்லா அவனை மொடமா பாத்து அழு…
என்று சொல்லிவிட்டு கால் கட் ஆனது..
தன் கணவனுக்கு ஒன்னு என்றவுடன் உண்மையா பொய்யா என்று விசாரிக்க கூட தோணாமல் புறப்பட்டாள்..
இதயத்தை கையில் பிடித்துக்கொண்டு பாட்டியிடம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றாள்… அவளுக்கு யாரை துணைக்கு அழைப்பது என்று புரியவில்லை… பாலாவின் நம்பரும் அவளிடம் இல்லை.. வீட்டிற்கு அழைத்தால் அவர்கள் பயந்து விடுவார்கள் என எண்ணியவள் சங்கருக்கு அழைத்து இந்த மாதிரி அபய் சாருக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுனு போன் வந்துச்சுனு சொல்ல… சங்கரோ இப்போ 5 நிமிஷத்துக்கு முன்னாடி தான் அபய் சார் என்ன கால் பண்ணி குமரன் ஹாஸ்பிட்டலுக்கு கார் எடுத்துட்டு வர சொன்னார்.. நீயும் அங்க வா என்று போனை அணைத்துவிட்டான்..
மகியும் ஆட்டோ பிடித்து அவசர அவசரமாக வந்து சேர்த்தாள்..சங்கரும் கொஞ்ச நேரத்திலேயே வந்துவிட்டான்..
அபய் கையில் லேசான காயத்துடன் டாக்டரை பாத்து விட்டு வர … அவனை கண்ட மகி என்னங்க என்று ஓடி சென்று அவனை கட்டியணைத்து அழுதுகொண்டிருந்தாள்.. அவர்கள் இருவரையும் பார்த்த சங்கருக்கு ஒன்றும் விளங்கவில்லை…
அபயோ,”ஹே இங்க பாருடி எனக்கு ஒன்னுமில்ல… நான் நல்லா இருக்கேன்.. என்ன பாருடி..”
மகி நிமிர்ந்து அவனை பார்த்தவள்… என்னங்க உங்களுக்கு ஒன்னும் இல்லையே என்று அவனை கை கால்களை தடவி பார்த்து தெரிந்துகொண்ட பின்பே அவள் மனம் நிம்மதியாகியது…
அபய்,”சரி இப்போ சொல்லு… நீ எப்படி இங்க வந்த… யார் என்ன சொன்னா என்று கேட்க.. கால் வந்ததிலிருந்து நடந்த அத்தனையும் சொல்லி முடித்தாள்…
சங்கரின் குழப்ப முகத்தை பார்த்து அபய் தான் தன்னுடைய திருமண விஷயத்தை அவனிடம் கூறினான்… அபயின் திருமணத்தன்று சங்கர் வேலை விஷயமாக டெல்லி சென்றிருந்ததால் மணப்பெண் குறித்த தகவல் அவன் அறிந்திருக்ககவில்லை…
சங்கருக்கும் இருவேறு துருவங்கள் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்திருந்தாலும் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது..
மகியிடம் மொபைலை வாங்கி பார்த்தவனுக்கு அது கீர்த்தியின் நம்பர் என தெரியவர ஓ அப்போ ஆக்சிடெண்ட் பண்ணது இவ தானா?? ஆம் அபய்க்கு ஆக்சிடெண்ட் தான் அவன் அவளை இறக்கிவிட்டு வந்துகொண்டிருக்கும் போது ஒரு லாரி அவனையே பாலோ செய்து வருவதை கண்டவன் கொஞ்சம் வேகம் எடுக்க அந்த லாரியும் அதே வேகத்தில் அவனை பின் தொடர்ந்து கொண்டிருந்தது… அப்போது தான் அபய்க்கு தெரிந்தது.. இது மலைப்ரதேசம் என்பதால் அவர்கள் அவனை காரோடு கீழே தள்ளிவிட திட்டம் போடுகிறார்கள் என்று… சட்டென்று சுதாரித்தவன் சிறிய பள்ளத்திற்கு அருகில் வண்டியை ஸ்லோ செய்து இறங்கினான்.. அவன் இறங்கியது பின்தொடந்த லாரிக்கு தெரியாமல் போக.. லாரி வேகமாக வந்து கார் மீது மோத கார் குப்புறகவிழ்ந்தது.. ஓடும் காரில் இருந்து இறங்கியதாலே அபய்க்கு லேசான அடி… அதனால்அவனே ஹாஸ்பிட்டலுக்கு வந்து சங்கருக்கு அழைத்திருந்தான்…. இவை அனைத்தும் கேட்டவன் இதற்கு மேலும் கீர்த்தியை சும்மா விட்டு வைக்கக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டான்..
போன் பண்ணி பாலாவிற்கு தகவலை தெரிவித்தவன் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறினான்.. பின்பு சங்கரிடமிருந்து காரை வாங்கி கொண்டு மகியை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்…அவனைப் பார்த்து பாட்டி பதற, பாட்டியிடம் அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி சும்மா லேசான காயம்தான் நீ ஒன்னும் பயப்படாத…அதான் உன் பேத்தி இருக்காளே என்னை பாத்துக்க என்றான்… என்னதான் பாட்டியிடம் லேசான அடி என்று சொல்லிவிட்டாலும் எலும்பில் சற்று கூடுதலாகவே அடிபட்டு இருந்தது…
அவன் முகம் பார்த்தே அதை உணர்ந்த மகி.. அவனுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் கூடவே இருந்து செய்தாள்..இப்போது தான் அவனுக்குப் புரிந்தது கணவன் மனைவி உறவு என்பது எவ்வளவு உன்னதமானது என்று பெண்கள் ஒரு ஆண்மகன் கட்டிய மஞ்சள் கயிருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவனை வியக்கச் செய்தது…
அதற்கு அடுத்தடுத்து வந்த தினங்களில் அவன் ஆபீஸ் செல்லாமல் வீட்டிலேயே இருந்து அனைத்து வேலைகளையும் மகியின் உதவியுடன் செய்து கொண்டிருந்தான்…
வீட்டில் இருந்தபடியே பாலாவின் உதவியுடன் கீர்த்திக்கு அடுத்தடுத்த நெருக்கடிகளை கொடுத்துக்கொண்டிருந்தான் அபய்.. கீர்த்தியின் மாடலிங் துறையில் அவள் இருக்க முடியாத அளவுக்கு செக் வைத்திருந்தான்…. கீர்த்தியோ இதற்குமேல் இவனுடன் போராடி ஜெயிக்க முடியாது என்று மும்பையை நோக்கி ஒடிவிட்டாள்…
மகியும் அபய்க்கு பக்கபலமாக இருந்து உதவியதில் அவன் சீக்கிரமே உடல்நலம் தேறி ஆபீஸ் சென்று கொண்டிருந்தான் இருந்தான்.. இப்போதெல்லாம் அவன் மகியை ஒன்றும் சொல்வதில்லை அவளும் ஒரு கணவனாக அவனுக்கு அத்தனை பணிவிடைகளையும் செய்து கொண்டிருந்தாள்.. இதற்கிடையில் அவர்கள் படுக்கையும் மாறாமல் தான் இருந்தது…
ஒருநாள் அபய் ஆபீஸில் இருக்கும்போது பிரபு போன் செய்து மாமா நாளைக்கு என்ன சர்ப்ரைஸ் பண்ண போறீங்க அக்காவுக்கு என்றான் ..
இவனும் ஏன் என்ன விசேஷம் என்றான்.. போங்க மாமா அக்காவுக்கு நாளைக்கு பர்த்டேனு தெரிஞ்சிட்டே கிண்டல் பண்றீங்க என்னயை உங்க அளவுக்கு நான் எதுவும் பெருசா கிப்ட் பண்ண மாட்டேன்… ஆனா நீங்க என்ன பண்ண போறீங்கன்னு என்கிட்ட சொல்லுங்க என்றான்…
அபயோ பிரபுவிடம் அவளுக்கு பர்த்டேனே எனக்கு தெரியாது என்றான்… பிரபுவோ போங்க மாமா நீங்க பெருசா சர்ப்ரைஸ் பண்ண போறீங்க அதானே என்கிட்ட மறைக்கிறீங்க சரி அது என்னனு நாளைக்கு நான் அவ கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குறேன் என்று போனை வைத்து விட்டான்…
அவளுக்காக சில ஏற்பாடுகளை செய்தவன்.. அது அத்தனையும் முடித்துக்கொண்டு வீட்டுக்கு வருவதற்கு மணி 11.30 ஆனது… வரும்போதே பாலாவையும் உடன் அழைத்து வந்திருந்தான்..
அபய் மகிக்கு கால் பண்ணி நான் லேட்டா தான் வீட்டுக்கு வருவேன் எனக்காக நீ வெயிட் பண்ணிட்டு இருக்க வேண்டாம் போய் தூங்கு என்று சொல்லிவிட்டான்…
அவளும் படுத்து உறங்கிவிட்டாள்.. சரியாக 12 மணியளவில் அவளை எழுப்பி அவளது நெத்தியில் முத்தமிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்மணி…. ஐ லவ் யூ என்று மீண்டும் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்……அவளோ இன்ப அதிர்ச்சியில் திளைக்க அவளை தன் கைகளில் ஏந்தியவன் ஏற்கனவே அவளுக்காக அரேஞ்சு பண்ணி இருந்த கேக்கை வெட்ட அவளை தூக்கிகொண்டே சென்றான்… மகிக்கோ வெக்கத்தில் முகம் சிவக்க அவள் கண்களை மூடியவாறே அழைத்து சென்றான்.. அவளோ விடுங்க.. எங்க என்ன கூட்டிட்டு போயிட்டு இருக்கீங்க என கேட்க அவனோ அமைதியா வா கண்மணி என்றான்…சற்று நேரத்தில் அவளை கீழே இறக்கி விட்டு அவளது கண்களை திறந்தான்..
அங்கே மகியின் அப்பா அம்மா தம்பியும் மற்றும் பாட்டியும் பாலாவும் இருந்தனர்…. ஒவ்வொருவரும் அவளை வாழ்த்தி பரிசுகளைக் கொடுத்து கொண்டிருந்தனர் பிரபுவும் சரி வாங்க எல்லாரும் கேக் கட் பண்ணலாம் என்று தன் அக்காவை கேக்குக்கு அருகில் எடுத்துச் சென்றான்… பிறந்தநாள் வாழ்த்துப் பாட கேக்கை வெட்டி தன் கண்ணாளனுக்கு ஊட்டினாள் அந்த கண்மணி…அதன் பின்பே அனைவருக்கும் கேக்கை தந்தாள்..
பாலாவும் ஏம்மா உன் புருஷனுக்கு மட்டும் தான் பஸ்ட் கொடுப்பயா?…
எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு கண்ணு தெரியலையானு கேக்க.. வேணா நீங்களும் கல்யாணம் பண்ணிக்கோங்க அண்ணா அண்ணி வந்து பர்ஸ்ட் உங்களுக்கு ஊட்டுவாங்க
என்றாள்.. அபயும் ஆமா மச்சான் நீ வேணா கல்யாணம் பண்ணிக்கோனு சொல்ல…
பாலாவும் மகிழ்ச்சியுடன்,”சரிடா மாப்ள என் தங்கச்சி மாதிரியே ஒரு பொண்ண பாரு நான் இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான்…
அபய்,”என் கண்மணி மாதிரி கிடைக்கறது கொஞ்சம் கஷ்டம் தான் வேணா.. மகியோட அப்பா அம்மாவையே தேட சொல்லுவோம்”என்று அவர்களை பாக்க… அவர்களோ நாளைக்கு இருந்தே தேடுதல் வேட்டையை தொடங்கிருவோம் என்றனர்…
பிறந்தநாள் விழா கொண்டாட்டம் முடிந்து அனைவரும் அவர்கள் அவர்களது ரூமுக்கு சென்றனர்…
தன் கை அணைப்பிலேயே மகியை ரூமுக்குள் கூட்டிவந்த அபய் கதவை சாத்திவிட்டு அவளை பின்புறம் இருந்து அணைத்து அவளது கழுத்துவளைவில்
முகம் புதைத்து ஹஸ்கி வாய்ஸில் காதின் அருகில் சென்று கண்மணி என்றான்….அவளும் சொல்லுங்க என்றாள்…
அபய்,”என் மேல உனக்கு கோபமே இல்லையா கண்மணி”என்று கேட்டான் அதற்கு மகியோ சாதாரணமாக நான் ஏன் உங்கமேல கோபப்படனும் என்றாள்..
அபய்,”நான் உன்ன ரொம்பவே கஷ்டப்படுத்திட்டனேடி அதனால தான் கேட்கிறேன்… “
மகி,”கோபம் எல்லாம் எதுவும் இல்லை ஆனா கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு… என்ன என்னோட தரப்பிலிருந்து நீங்க புரிஞ்சுக்கலயோனு… அப்புறம் உங்களோட மனச பத்தி புரிஞ்சுகிட்டு நீங்களா மனசை மாத்திக்கிட்டு வருவீங்கன்னு காத்துகிட்டு இருந்தேன்….” நான் காத்திருந்தது வீண் போகல…
அபய்,” அப்புறம் ஏன் நான் உங்க வீட்டில உன்னை என் கூட பெட்ல படுத்துக்கொன்னு சொன்னப்ப நீ செய்யல… நான் உன்கிட்ட தப்பா நடந்துக்குவேனு நினைச்சுட்டியா”
மகி,”ச்ச ச்ச அப்படியெல்லாம் இல்ல என்னைக்கு நீங்க என்ன மனசார ஏத்துக்குரிங்களோ அப்பதான் உங்க கூட ஒண்ணா இருக்கணும்னு நினைச்சேன்”
அபய்,” ஆனாலும் உனக்கு இவ்வளவு வைராக்கியம் இருக்கக் கூடாதுடி என் பொண்டாட்டி”
மகி,” சரி அதெல்லாம் விடுங்க எப்படி திடீர்னு என் மேல உங்களுக்கு இவ்வளவு லவ் வந்துச்சு.. கரெக்டா அதுவும் என் பிறந்தநாள் அதுவுமா” என கேட்டாள்…
அபய்,” நம்ம மறு வீட்டுக்கு போய் இருந்தப்பவே உன்மேல எந்த தப்பும் இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்… அதுக்கப்புறம் உன் கிட்ட நெருங்கி வர தயங்கினேன்… அப்பறம் எனக்கு ஆக்சிடன்ட் ஆனப்ப நீ துடிச்சது என் மனசையே உலுக்கிருச்சு…
நான் உனக்காக எதுவும் பண்ணாதப்பவே நீ என் மேல எவ்வளவு உயிரா இருக்கேனு புரிஞ்சுக்கிட்டேன்….
உனக்காக ஒரு நல்ல நாள்ல சர்ப்ரைஸாக உன்கிட்ட வரனும்னு நினைச்சேன்… அது இன்னிக்கு தான் நடந்துருக்கு….” என்றான்…
மேலும் அபயே சரி நீ எப்படி என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சும் என் மேல இவ்ளோ உயிரா இருக்க… உனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா என்றான்..
மகி,” எனக்கு உங்களோட கடந்த காலத்தை பத்தி அக்கறை இல்லை…. இவ்வளவு நாள் நான் உங்க கூட ஒரே ரூம்ல இருந்திருக்கேன்… ஒரு நாள் கூட நீங்க என் கிட்ட தப்பா நடந்துக்கவோ,இல்ல தப்பா பார்க்கவோ இல்ல… இதெல்லாம் விட கல்யாணத்துக்கு அப்புறம் என்ன தவிர நீங்க வேற யாரையும் பார்க்கல ஒரு பெண்ணுக்கு இதைவிட வேற என்ன வேணும்…”
அபய்,” அப்போ நிஜமாவே என்ன உனக்கு புடிச்சுருக்கா???”
மகி,”ஆமா, இந்த கண்மணிக்கு இந்த கண்ணாளனை தான் புடிச்சுருக்கு…. என்று உரைத்தவள் வெட்கத்தில்
தலைகுனிய… சிவந்த அவளது முகத்தை கையில் ஏந்தியவன் தன் இதழ் கொண்டு அவளது இதழை சிறைசெய்திருந்தான்… இந்த இதழ் போராட்டம் எவ்வளவு நேரம் நீண்டது என்றே தெரியவில்லை அவள் மூச்சைவிட தடுமாற அப்போது தான் அவளை விடுவித்தான் அபய்…
அவளை தூக்கி சென்று கட்டிலில் கிடத்தியவன் அவளை அணைத்து கொண்டு மீண்டும் முத்தத்தால் அவள் மீது கவி பாட தொடங்கினான்…இந்த முறை தான் செவ்விதழ் கொண்டு தன்னவனின் இதழை சிறை செய்தாள் மகி… இந்த இதழ் போராட்டத்தை சற்றே வன்மையாக முடித்தான் அபய்…
இருவரும் தங்களது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறினர்.. இருவரும் தங்களது காதலின் ஆழத்தை ஒருவருக்குள் ஒருவர் தேடிக்கொண்டிருந்தனர்…
காலை 7 மணிக்கு கண்விழித்த அபய் மகியை பார்க்க அவளோ கூடலின் களைப்பில் அவனது நெஞ்சம் எனும் மஞ்சத்தில் அழகாக துயில் கொண்டிருந்தாள்.. அவளை முத்தமிட்டு அவன் எழுப்ப…
அவள் சிணுங்களோடு அத்தான் இன்னும் கொஞ்ச நேரம் என்க… இந்த அத்தான் என்ற அழைப்பே அவனை மயக்க போதுமாக இருந்தது… மீண்டும் தன் ஆட்டத்தை அவன் ஆரம்பிக்க துள்ளி எழுந்தாள் மகி…
அபய்,” என்ன கண்மணி இப்போ தான் இன்னும் கொஞ்ச நேரம்னு சொன்ன அதுக்குள்ள எழுந்துட்ட..” என்றான்..
மகி,”போங்க அத்தான் அதான் அதுக்குள்ள நீங்க வேற வேலையை ஆரம்பிச்சுட்டீங்களே…”என்றாள் சிணுங்களுடன்…
அபயும் அவளை இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டு அவளை விடுவித்தான்…
குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த அபய் ஏற்கனவே ரெடி ஆகிகொண்டிருந்த மகியை பின்னாலிருத்து அணைத்தவாறு ஒரு கவரை நீட்டினான்… அந்த கவரை பிரித்து பார்த்தவளுக்கு இன்பதிர்ச்சி எந்த ஆபிசில் அவள் வேலை பார்த்தாலோ அந்த ஆபிசிலேயே அவளை MD ஆக்கி இருந்தான் அபய் அதற்கான அப்பாயின்மெண்ட் லெட்டர் தான் அது…. தன் கண்ணாளனை கட்டி பிடித்து எம்பி நெற்றியில் முத்தம் வைத்தாள்…
அதன் பின் அவளே அந்த ஆபீஸ் நிர்வாகம் முழுவதையும் பார்தாள்…
பாட்டியும் தான் போட்ட நாடகம் அனைத்தையும் அபயிடம் கூற அவனோ பாட்டியை அணைத்து நீங்க இப்படி நாடகம் போட்டதால் தான் எனக்கு என் கண்மணி கிடச்சுருக்கா என சொல்ல அவரோ இருவரையும் அனைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்…
இப்படியே இருவரும் காதலுடனும் கூடலுடனும் அழகான இல்லற வாழ்வில் திளைத்து கொண்டிருக்க…. ஒரு நாள் ஆபிசில் இருந்தபடியே மகி அபயை கால் பண்ணி வர சொல்ல அவனோ தொழில் ரீதியான சந்தேகத்தை தீர்க்கவே கூப்பிடுகிறாள் என நினைத்தவன்… அவளது அறையில் நுழைய… கண்ணாளனுக்கு என்று எழுதிய ஒரு கிப்ட் பாக்ஸ் இருந்தது அதை பிரித்து உள்ளே என்ன என்று பார்க்க அதில் சிறுவயது அபயின் மெழுகு பொம்மை இருந்தது… அதை எடுத்துகொண்டு அவன் அவளை தேட பின்னாலிருந்து அபயின் கண்ணை கட்டி அவன் கையை எடுத்து தன் வயிற்றின் மீது வைத்து அவன் கண்ணை திறக்க … கண்ணை திறந்தவன் கண்ணாலேயே அவளிடம் அப்படியா என கேக்க…அவளும் ஆம் நீங்க அப்பா ஆக போறீங்க என்றாள்…அவளை மென்மையாக அணைத்து விடுத்தவன்..மண்டியிட்டு அவள் வயிற்றில் முத்தமிட்டு கண்ணா அப்பா உனக்காக காத்திருக்கேன் என்றான்…அவளும் அபயின் தலையை வருடியவாறே அவனை ரசித்து கொண்டிருந்தாள்…
இருவரும் ஒரு சேர வீட்டிற்கு இனிப்புடன் செல்ல.. அபய் முன்பாகவே அனைவருக்கும் தகவலை தெரிவித்திருந்தான்… இருவரும் வீட்டிற்கு சென்று பாட்டியின் காலிலும் முத்து தம்பதியினரின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்..
பாலவோ,”காங்கிராட்ஸ் மச்சான் அண்ட் காங்கிராட்ஸ் தங்கச்சி” என வாழ்த்தினான்…
மகியின் 10 மாதம் வரை அபயே உடன் இருந்து பாத்து கொண்டான்… வளைகாப்பு முடித்து வீட்டுக்கு அழைத்து செல்ல முத்து தம்பதியினருக்கு மறுப்பு தெரிவித்து அவர்களையும் தங்களோடே வைத்து கொண்டான்… டாக்டர் குறித்த நாளுக்கு இரண்டு நாள் முன்பாகவே வலி எடுக்க அவளை மருத்துவமனையில் சேர்த்தவன் வெளியில் பதட்டத்துடன் நின்றிருக்க அரைமணி நேரத்தில் குட்டி
அபயை ஈன்றெடுத்தாள் தன்னவளை பார்த்த பின்பே மகனை பார்த்தான் அபய்.. மகியிடம் அமர்ந்தவன் அவளை பார்த்து என் கண்மணி எனக்கொரு கண்ணாளனையே குடுத்திருக்கா என்றான் சந்தோசத்துடன்… மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் திளைத்திருந்தது…
அவர்களின் சந்தோசம் நிலைபெற நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்…
முற்றும்…