17 உயிரே என் உலகமே

0
1059

அத்தியாயம் 17

இனியனும் தேவாவும் மருத்துவர் அறையிலிருந்து வெளியே வர தமிழ் மகி அகி மூவரும்
அண்ணா டார்லிக்கு என்ன ஆச்சு
அம்முக்கு என்னாச்சு
Good ஸ்வீட்டிக்கு என்ன ஆச்சு என்று கேட்க

ஒரு பிரச்சனையும் இல்ல பயப்படாதீங்க என்று ஆறுதல் சொன்னான் தேவா

மலரும் கமலமும் விஷயம் அறிந்து மருத்துவமனைக்கு வந்தனர்
இனியா என் பேத்திக்கு என்னடா ஆச்சு என்று கமலம் அழுதுகொண்டே இருக்க
அப்பத்தா உன் பேத்திக்கு ஒன்னும் இல்ல அவ நல்லா இருக்கா என்று தேவா சொன்னான்

மலர் என்னால தான் அக்காவுக்கு இப்படி ஆயிடுச்சு என்று தேம்பி தேம்பி அழுதாள்
மாமா அக்கா எப்படி இருக்காங்க
மலர் திடிர்னு குடிசை எப்படி தீப்பிடித்து எரிஞ்சுச்சு என்று இனியன் கேட்க

எனக்கு தெரியல மாமா நான் கட்டிலில் படுத்து இருந்தேன் அப்போ திடீர்னு நெருப்பு பத்திக்கிச்சு

அக்கா வந்து என்னைய எழுப்புனாங்க அதனால தான் எழுந்தேன்.. என்ன காப்பாத்துனாதால அக்காக்கு இப்படி ஆயிடுச்சு ..அக்காக்கு பதிலே எனக்கு ஏதாவது ஆயிருக்கலாம் என்று மலர் அழ

மலர் அழாத மா .. என்று இனியன் ஆறுதல் சொல்ல

அகிலன் இந்த அனைத்து பிரச்சனைக்கும் தான்தான் காரணம் என்று மனம் வருந்தி ஒரு ஓரமாக போய் நின்று கொண்டான்

இதை கவனித்த இனியன் அவனிடம் சென்று காதலிக்கிறது தப்புஇல்ல அகிஅந்த பொண்ணுக்கு ஒன்னுனா மொத நம்ம தான் நிக்கணும்.. அண்ணா நான் தண்ணி எடுத்துட்டு வரதுக்குள்ள அண்ணி உள்ள போய்ட்டாங்க .. சாரி அண்ணா .. என்று மன்னிப்பு கேட்டான் அகிலன் ….அவ சின்ன பொண்ணு போகப்போக புரிஞ்சுப்பா இனிமே அவளை தொந்தரவு பண்ணாத படிச்ச முடிக்கட்டும் நானே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. சரியா ..அண்ணா என்று அவனை பாசத்துடன் பார்த்தான் ..

தேவாவும் இனியனும் இசையை யார் கொடுமை செய்தது என்று யோசிக்க ஆரம்பித்தனர்

மாப்புள உன்கிட்ட முன்னாடியே சொல்லனும் நினைச்சு தான் அன்னைக்கு உன்னை பார்க்க வந்தேன் யாரோ இந்திக்காரன் பசங்க நம்ப இசையை தேடி ஊருக்குள்ள நாளு பேர் வந்தானுங்க என்று சொல்ல

ஏன் மச்சான் இத நீ முதலில் சொல்லி இருக்கக் கூடாதா

சொல்லுவடா சொல்லுவடா நான் உன் கிட்ட சொல்லனும்னு அவ்வளவு தூரம் வந்தா நீ தான் முறுக்கிட்டு போன

யார்டா அவன்.. அவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும் கொள்ளாம விட மாட்டன் டா.. என்று கோவத்தில் இனியன் கத்த
எனக்கு தெரியலடா ..நான் இதப்பத்தி தங்கச்சி கிட்ட கேட்டேன் டா.. அண்ணா ஒரு சின்ன பிரச்சனை நான் பார்த்துப்பேன் நீங்க அவரையும் அவரோட தம்பிகளையும் பத்திரமா பார்த்துக்கோங்கன்னு சொன்னா

இதுதான் டா அவ யாருக்கும் துரோகம் நினைத்தது கிடையாது அவள போய் இப்படி பண்ணிட்டானுங்களே

இனியா மனோகர் சித்தப்பா கிட்ட கேட்கலாம்னு தோணுதுடா .அவருக்கு ஏதாவது தெரியுதா பாப்போம்..

ஏன்டா கல்யாணம் பண்ணதுல இருந்து இப்போவாரைக்கும் பொண்ணு எப்படி இருக்கானு அக்கறை இல்லாத அந்த மனுஷனுக்கு எப்படி தெரியும்னு நீ நினைக்குற …

மாப்ள நீ நினைக்கிற மாதிரி உன் மாமா உங்க அம்மாவ கொலை பண்ணல டா

என்ன சொல்ற மச்சான்

ஆமாண்டா உங்க அம்மாவை கொன்னது உங்க அத்தை மரகதம் தான்
உனக்கு எப்படிடா தெரியும்

உங்க மாமா இந்த ஊரைவிட்டு போனதுக்கு அப்புறம் ஒருநாள் உங்க அப்பா துரை சொத்து பிரிக்க சொல்லி உங்க தாத்தா கிட்ட கேட்டபோது.. உங்க மாமா அந்த சொத்தில் எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்லி பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டார்.. உங்கப்பாஉங்க அதை வார்த்தை மேலே உள்ள பாசத்துல உன் மாமா சொத்து எல்லாத்தையும் அவங்க பேர்ல எழுதி வச்சுட்டாங்க … அதுமட்டும் இல்லாம உன் அத்தை உங்க அம்மாவையும் அப்பாவையும் ஏமாத்தி எல்லா சொத்தையும் அவங்க பேர்ல மாத்தி அது எல்லாத்தையுமே வித்துட்டாங்க … இது உங்க அப்பாக்கு தெரிஞ்சிடுச்சு அதுனாலதான் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு ..அதுக்கப்புறம் அன்னைக்கு கோயில்ல உங்க மாமா எல்லா உண்மையும் உங்க அம்மாகிட்ட சொல்லியும் உங்க அம்மா நம்பல.. கோவில்ல உங்க அத்தை யார்கிட்டயோ மாமாவுக்கு ஒரு விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து அனுப்பினாங்க அதை பார்த்து உங்க அம்மா அவுங்கள அடிச்சுட்டாங்க அந்த கோபத்தில் தான் அம்மா சாப்பிட்ட சாப்பாட்டில் விஷத்தை கலந்து தாங்க அதனாலதான் உங்க அம்மா இருந்தாங்க டா இனியா ..

அதுமட்டுமில்லை நீ நினைக்குற நான் கயல் கையை பிடித்து அவன் மேலும் சொல்ல வருவதற்குள் எனக்கு கயல் பத்தி இப்பதாண்டா தெரிஞ்சது என்ன மன்னிச்சிடு தேவா என்று இனியன் மனமார தேவாவிடம் மன்னிப்பு கேட்டான்

எப்படிடா அத்தைக்கு மனசு வந்துச்சு… அவுங்கள நான் சும்மா விட மாட்டேன் டா என்றான் ..கோபமாக அவர்களை கொல்வதற்கு செல்ல

இனியா கொஞ்சம் பொறுமையா இருடா

மொத நம்ப இசையை பாரு அவளை காப்பாத்தனும் அதுக்கு அப்புறம் சட்டப்படி அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கலாம்

சரிடா இசையோடு அப்பாக்கு கால் பண்ணு நா அவர்கிட்ட பேசணும் என்றான் இனியன்

என்கிட்ட அவர் நம்பர் இல்ல டா என்று தேவா மறுக்க

டேய் என்னடா சொல்ற உன்கிட்ட மாமா நம்பர் இல்லையா.. இனியா என்கிட்ட மனோகர் சித்தப்பா நம்பர் இருக்கு ஆனா இசையோடு அப்பா நம்பர் இல்ல

டேய் மச்சான் குழப்பாம ஒழுங்கா என்னன்னு சொல்லுடா
அப்போதுதான் தேவாவுக்கு புரிந்தது தான் உளறிக் கொட்டியது

அது வந்த மாப்பிள்ளை என்று அவன் இழுக்க …..ஒழுங்கா சொல்லுடா

இசை மனோ சித்தப்பா பொண்ணு இல்லடா

மச்சான் …. என்னடா சொல்லுற
ஆமாண்டா இசை லதா சித்தியோட அக்கா பொண்ணு.. இனியன் பதறிப்போய் அப்போ அம்மா சொன்ன என்று அவன் தடுமாற

13 வருஷத்துக்கு முன்னாடி இங்கே வந்தது இசைதான்.. அத்தை உனக்கு பார்த்த பொண்ணு இசை தாண்டா என்று சொன்ன மறுகணம் தேவாவை கட்டிக்கொண்டான் இனியன் …எத்தன நாளா நான் உன்கூட பேசாம இருந்தேன் நீ மட்டும் எப்படிடா என்ன பத்தி யோசிச்சிட்டு இருந்திருக்கா .. உன்னமாதிரி ஒரு நன்பன் கிடைக்க நா கொடுத்து வச்சியிருக்கணும் என்று இனியன் சொல்ல

இனியா உன்ன மாதிரி ஒரு நண்பன் கிடைக்க நானும் தாண்டா கொடுத்து வச்சிருக்கணும் யாருக்கு கிடைப்பாங்க எனக்காக இரண்டு தடவை உயிரைக் கொடுக்கத் துணிந்து உன்ன மாதிரி ஒரு நன்பன் யாருக்கு கிடைப்பாங்க சொல்லு.. நான் போன ஜென்மத்துல என்ன புண்ணியம் பண்ணேன்னு தெரியல டா மாப்ள

மச்சான் என்று அவனை இனியன் பார்க்க

எனக்கு தெரியும் டா அன்னைக்கு எனக்கு வச்ச ட்ராப் ல நீ எனக்கு பதிலாக போனது என்று சொல்ல.. நீயும் நானும் ஒன்னு தாண்டா உனக்கு ஒன்னுனா நான் வருவேன் அதே மாதிரி எனக்கு ஒன்னுனா நீ வருவேன்னு தெரியும் என்று தேவா சொன்னான்

இனியன் தேவாவின் போனில் இருந்து மனோகருக்கு கால் செய்தான்.. தேவாவின் அழைப்பை கண்டவுடன் போனை எடுத்து தேவா இசைக்கு என்ன ஆச்சு என்று கேட்க

நான் தேவ இல்ல இனியன் பேசுறேன் மாமா.. மனோகர் இனியனின் மாமா என்ற அழைப்பில் மகிழ்ந்தாலும் .. இனியா இசைக்கு என்ன ஆச்சு .. மாமா இசைக்கு ஒடம்பு முடில்ல ஹாஸ்பிடல் சேர்த்துஇருக்கேன் நீங்க ஒடனே வரமுடியுமா .

சரிப்பா வரேன்

மனோகர் லதாவையும் தென்றலையும் அழைத்து கொண்டு புதுக்கோட்டைக்கு தன் காரில் பறந்தார் அந்த பாசமுள்ள அப்பா.. அரவிந்துக்கு போன் செய்து விவரத்தை கூற அவரும் வருவதாக சொன்னார் ..

அங்கு மருத்துவமனையில் நர்ஸ் யாராவது ஒருத்தங்க மட்டும் வந்து பாருங்க என்று சொல்ல இனியன் உள்ளே செல்ல மறுத்து விட்டான்

இனியா ஏண்டா இப்படி பண்ற என்ற தேவ கேட்க. இல்லடா அவளைஇப்படி பண்ணவனை நா கொள்ளாம அவளை பார்க்க மாட்டேன்
தமிழ் அழுதுகொண்டே இருப்பதை பார்த்த இனியன்
டேய் தம்பி நீ போய் பாருடா என்று சொல்ல

அகியும் மகியும் அவன் அண்ணன் அருகில் அமர்ந்து அண்ணா டார்லிங் என்ன ஆச்சு என்று கேட்க. இனியன் உங்க அண்ணி உங்க கிட்ட ஏதாவது சொல்லியிருக்கலா என்று கேட்க இருவரும் இல்லை என்று தலையாட்டி எங்க கிட்ட அவங்க எதுவும் சொன்னதில்லை அண்ணா ..உங்க அண்ணிக்கு யாரோ பிரைன் பிரீஸ் சாகுற மாதிரி இன்ஜெக்ஷன் போட்டு இருகாங்க உங்க அண்ணி டாக்டர் நாளா நம்ம வீட்டிலேயே அதற்கான மாற்று இன்ஜெக்ஷன் போட்டு இருக்கா கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் என்றான் இனியன்

யாரு அண்ணா நம்ப டார்லிய இப்படி பண்ணது

தெரில டா

உள்ளே சென்ற தமிழ் இசையின் கைகளை பிடித்து கொண்டு அம்மு என்ன பாரு அம்மு …எழுந்து பாரு.. வா நம்ம வீட்டுக்கு போலாம் என்று அழ அவனின் குரல்கேட்டு இசையின் பல்ஸ் ரேட் அதிகரித்தது.. அதைக் கண்ட நர்ஸ் உடனடியாக தமிழை வெளியே போகச் சொல்ல தமிழ் அதைக் கேட்காமல் நான் போகமாட்டேன் நான் போக மாட்டாங்க என் அம்முவை கூப்பிடாமல் நா இங்கு இருந்து போக மாட்டேன்என்று கத்த

கத்தும் சத்தம் கேட்டு மகியும் அகியும் உள்ளே சென்று தமிழை இழுத்துக் கொண்டு வந்தனர்… அம்மு அம்மு என்று அவன் கதற அந்த மருத்துவமனையில் அனைவரும் வேடிக்கை பார்க்க இனியன் தமிழை கட்டிப்பிடித்து அவளுக்கு ஒன்றும் ஆகாது உன் அம்மு உனக்காக கண்டிப்பா வருவாஎன்று ஆறுதல் சொன்னான்

அப்போது மனோகர் லதா தென்றல் மூவரும் மருத்துவமனைக்குள் நுழைந்தனர் மனோகர் இனியனிடம் இனியா என் பொண்ணுக்கு என்ன ஆச்சு.. மாமா இதை நான் உங்க கிட்ட கேக்கணும் .. உண்மையை சொல்லுங்க மாமா அவளுக்கு என்ன ஆச்சு

இனியா என்ன மன்னிச்சிடு நீ அன்னைக்கு இசைக்கு தாலி கட்டும் போதே நான் உன்கிட்ட உண்மையை சொல்லி இருக்கனும் ஆனா என் பொண்ணு தான் உன்ன வேண்டான்னு சொன்ன பிறகு எனக்கு என்ன பண்றதுனே தெரியல

மாமா அப்படின்னா அன்னைக்கு உங்க வீட்ல பேசுனது இசை இல்லையா.. இல்லை அன்னைக்கு உன்ன அப்படி பேசுனது என் பொண்ணு தென்றல் என்று அவளை சுட்டிக்காட்டி சொன்னார்

இனியன் மேலும் அதிர்ந்து .. தன்னவளை தானும் வார்த்தையால் கொடுமை செய்ததை எண்ணி அவன் மனம் வேதனையில் இருக்க

மனோகர் மேலும் தொடர்ந்த உன்னால உங்க அம்மாவோட சத்தியத்தை காப்பாற்ற முடியல என்ன மன்னிச்சிடு இனியா ..மாமா அம்மா கல்யாணம் பண்ணிக்க சொன்னது நம்ம இசைய தான் நான் விரும்புன பொன்னும் இசைதான் என்று நடந்த அனைத்தையும் கூறினான்

மாமா ஏன் நீங்க இசையை கூட்டிட்டு இங்க வந்தீங்க என்ன பிரச்சினை அவளுக்கு என்று கேட்க

மனோகர் இசையை பற்றி கூற ஆரம்பித்தார் ..இசை சிறுவயதிலேயே தாயை இழந்து தந்தையின் பாசமும் கிடைக்காத இசைக்கு ஒரே சொந்தம் அவள் தோழி ஷாலினி இருவரின் சந்திப்பும் கொஞ்சம் வித்தியாசமானது

ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை இருவரும் இரண்டு துருவங்கள் என்றே சொல்லலாம் இருவருக்கும் எல்லாத்தையும் போட்டி ஒருமுறை இசை வகுப்பில் 1 ராங்க் எடுத்தால் அடுத்தமுறை ஷாலினி எடுப்பாள் ..ஓவியம் நடனம் விளையாட்டு என்று இருவரும் அனைத்திலும் நம்பர் ஒன் இடத்தை தங்களைத் தவிர யாருக்கும் தரமாட்டார்கள் போட்டி இருந்தாலும் இருவருக்கும் பொறாமை உணர்வு கிடையாது

அதனால் இவர்களை சுற்றி இருக்கும் நட்பு வட்டாரம்.. இவர்கள் மட்டும் நம்பர்-ஒன் வருவதை கண்டு பொறாமையில்
இசை நீதான் கஷ்டப்பட்டு படிச்சு எழுதுற ஆனா ஷாலினி அப்படி இல்ல ..அவரகாப்பி அடிக்கிறா என்று சொல்ல

இசையால் அதை நம்ப முடியவில்லை.. கால் ஆண்டு தேர்வு ஷாலினி அருகில் ஒரு காகிதம் இருக்க அதை பார்த்த இசை நம்பாமல் அவளை எச்சரிக்கை ஆனால் அதற்கு முன் ஷாலினி அந்த வகுப்பாசிரியரிடம் மாட்டி கொண்டாள்

அந்த ஆசிரியை அவளை மேலும் எழுத விடாது தடுக்க…இசை எழுந்து மேடம் எனக்கு ஷாலினியை பற்றி தெரியும் அவ கண்டிப்பா அப்படி பண்ண மாட்ட.. நீங்க அவளை தனியா கூட்டிட்டு போய் மறுபடியும் எழுத வைங்கஎன்று சொல்ல .. ஆசிரியரும் இசை சொன்னதை ஒத்துக்கொண்டனர்

இந்த முறை ஷாலினியை முதல் ரேங்க் எடுக்க..தனக்கு போட்டி என்று தெரிந்தும் தனக்கு உதவி செய்த இசையை ஷாலினிக்கு மிகவும் பிடித்துப் போனது அவளிடம் நட்புக்கரம் நீட்டி ஹாய் இசை ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்ல

எதுக்கு என்று கேட்டாள் இசை

அன்னைக்கு என்ன காப்பாத்துனதுக்கு

இட்ஸ் ஓகே என்று இசை நகர போக

அவளின் கையை பிடித்து லேட்ஸ் வீ பிரண்ட்ஸ் என்று கேட்க
இசையும் அதை ஏற்று கொண்டால்
அன்றிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள் இசை இல்லாமல் எங்கும் செல்ல மாட்டாள் ஷாலினி ..ஷாலினி இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்டவள் அன்பான பெற்றோர்களுக்கு ஒரே மகள் இருவரும் பன்னிரெண்டாம் வகுப்பில் மாநிலத்தில் ஷாலினி முதலிடமும் இசை இரண்டாவது இடமும் பிடித்தனர் ஷாலினி கார்டியாலஜி படிக்க விரும்பினால்
இசை சைகியாட்டரிஸ்ட் படிக்க விரும்பினால் .. வேறு கல்லூரியில் படித்த போதும் இருவரும் சந்தித்து பேசுவதை நிறுத்தவில்லை வாரம் இரண்டு முறையாவது சந்தித்து பேசுவார்கள்

நேரம் கிடைக்கும்போது இருவரும் வெளியில் சுற்றுவார்கள் அன்று ஒரு நாள் இருவரும் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்க அவர்களை ஒருவன் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் இசை அவனின் பார்வைக்கான அர்த்தம் புரிந்து தன் தோழி அங்கிருந்து அழைத்துச் செல்ல முற்பட ஆனால் ஷாலினி வரமாட்டேன் என்று அடம் பிடித்தாள்

ஏய் ஷாலு வாடி போகலாம் என்று சொல்ல ஏண்டி என்னைக்காவது ஒருநாள் தான் நம்ப மீட் பண்றோம் கொஞ்ச நேரம் விளையாடலாம்..என்று சொல்லி மீண்டும் விளையாட.. அடியே அங்க பாரு ஒருத்தன் நம்பள தான் பாத்துட்டு இருக்கா ன் அவன் பார்வையே சரி இல்ல வாடி என்று சொல்ல ஷாலினியும் அவனை பார்த்தால் பார்த்த உடனே அவனை எங்கோ பார்த்து இருப்பது போன்று தோன்ற அவனை மெய்மறந்து பார்த்துக் கொண்டு இருக்க ஆனால் அவனோ இசையை ரசித்து பார்த்துக் கொண்டுதான் எதார்த்தமாக ஷாலினியை பார்க்க அவள் தன்னை பார்ப்பதை அறிந்து அவளை பார்த்து கண்ணடித்தான்

இதையறியாத இசை அடி ஏண்டி அவனை இப்படி பார்த்துட்டு இருக்க.இசை அவங்க அவங்க…ஏவுங்க அதாண்டி அங்கே நிக்குறாரு அவர்தான்

சொல்லுடி அவனுக்கு என்ன அவன்என்னோட காலேஜ் சீனியர் அதுக்கு என்ன இல்லடி அவன் பாம்பேல பெரிய மியூசிக் டைரக்டர்…அதுக்கு என்னஎன்று இசை மீண்டும் அவள் அலட்சியமாக கூறியதை கண்டு அவன் முகம் கோவத்தில் சிவந்தது

இசையை அவன் அதன்பின் பின் தொடர ஆரம்பித்தான் ஒருமுறைகூட இசை அவனை ஏறிட்டு பார்த்ததில்லை ஆனால் ஷாலினி அவன் தனக்காக வருவதாக நினைத்து அவனை காதலுடன் பார்த்தாள்..அவளிடம் தன் காதலை கூற வருவதற்கு முன் வேறு ஒருவன காதலை கூறுவதை கண்டான்

வேல் மிஸ்டர் உங்க பெயர் என்ன என்று இசை கேட்க..என்ன உங்களுக்கு தெரியலையா என்றான் .. தெரியல என்று அலட்சியமாக பதில் சொன்னாள் நான் சுரேஷ் உங்க பின்னாடி ரெண்டு மாசமா சுத்துறேன் எனக்கு உங்கள பார்த்த ஒடனே ரொம்ப புடிச்சிபோச்சு . உங்கள உயிருக்கு உயிரா நான் காதலிக்குறேன் நீங்கதான் என்னோட மனைவி என்று அவன் வசனங்களை பேச

இசை அவன் காதில் ஏதோ கூற உண்மையாவா என்று அவன் கேட்க ஆமா ஆனா நீங்கதான் என்ன ரொம்ப காதலிக்குறிங்களே நானும் முடிவு பண்ணிட்டேன் நீங்க தான் என் கணவன் என்று அவள் சொன்ன அடுத்த நொடி அவன் ஓடிவிட்டான்

இசையும் தோளைக் குலுக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் சுரேஷை பிடித்து என்ன நடந்தது என்று கேட்க அவ பொண்ணு இல்ல பையன் என்று சொல்ல அவனும் அதை நம்பி ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டான்

இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு சமீரா என்று பெயரிட்டனர்.திருமணம் ஆனாலும் அவனால் இசையை பார்க்கும்போது ஏற்படும் உணர்வை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.அவள் பெண்தான் என்று சந்தேகம் வர தான் செய்தது ஆனால் இசை உடுத்தும் உடை எல்லாமே ஆண்களைப் போலவே இருக்கும் எப்போதும் ஷர்ட்டும் பாண்டும் அணிவதே அவளது பழக்கம் ஆனால் ஒருநாள் சமீராவுக்காக அவளது பிறந்தநாள் அன்று புடவை கட்டிக் கொண்டு வந்தாள் அந்த சிறு பெண்ணின் மனம் வருந்தக் கூடாது என்பதற்காகவே இசை புடவை கட்டி தேவதை போல இருந்தாள்

அவளையே இமைக்காமல் பார்த்தான் அவன் அவனின் பார்வையின் அர்த்தம் புரிய தன்னால் தன் தோழி வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் பிரச்சினை வரக்கூடாது என்று அவளை விட்டு ஒரேயடியாக பிரிந்து சென்றுவிட்டாள்

மூன்று வருடம் கழித்து ஷாலினி ஒரு கார் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் வர அவள் இறந்த அதிர்ச்சியில் சமீராவுக்கு பிரமை பிடித்தது போல இருப்பதாக கூற இசை பம்பாய்க்கு மறுபடியும் வர .. அவள் வந்ததை அவன் அறிந்து அவளை பார்க்க வந்தான்

இசை ஷாலினி ஷாலினி என்று அழுவது போல்அவன் நடிக்க அதை கண்டு கொண்ட இசை அவனை போல அவளும் நடிக்க ஆரம்பித்தாள் முதல் செமிய கூட்டு வாங்க நம்ப அவள குணப்படுத்திடலாம் என்று சொல்ல அதன்பிறகு இசை மூன்று மாதங்கள் செமியை பழைய நிலைமைக்கு கொண்டு வர அவள் செமியை மட்டும் கவனிக்க அவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் இருக்க ஒரு நாள் இசைக்கும் அவனுக்கு திருமணம் செய்து வைக்குமாறு அரவிந்தரிடம் கேட்க இசை அதை மறுத்து விட்டாள்..

அதன்பிறகு ஒருநாள் இசை மனோகர் க்கு போன் செய்து அப்பா எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்ன கொஞ்சம் காப்பாத்துங்க நான் எங்கேயாவது தனியா போய் இருக்கலாம் நினைக்கிறேன். உங்களுக்கு தெரிஞ்சவங்க யார் விட்டுலயாவது தங்க வைங்கப்பா.என்ன பிரச்சனை

ஷாலினியுடன் ஹாஸ்பண்ட்தான் பிரச்சனை பா.. என்று நடந்த அனைத்தையும் கூறினால் சரி மா நான் இந்த வாரம் கும்பாபிஷேகத்துக்கு போறேன்அங்க போகலாம்

இனியன் மாமா அவன் யாருனு சொல்லுங்க அவனை கொள்ளாம விடமாட்டேன் .. இனியா அவன் செத்து 3 நாளாச்சு .. சலீம் பிரபல மியூசிக் டைரக்டர் …

சரிப்பா நா போய் இசையை பாக்குறேன் என்று அவர் உள்ளே செல்ல

அங்கு இசை இல்லை இசை வேறு ஒருவனால் கடத்தப்பட்டு இருக்கிறாள்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here