ஆடவர்கள் இருவரும் தொழிலில் மூழ்கி இருக்க பெண்கள் இருவரும் படிப்பில் தங்களது கவனத்தை செலுத்தியிருந்தனர்..
சிவா முன்பே தன் தந்தையிடம் உரைத்தது போல் டெக்ஸ்டைல் பிஸினசிலும் புதுபுது முயற்சியை தொடங்கியிருந்தான்..
ஆராவின் நினைவு தன்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய கூடாது என்பதற்காகவே தன்னை முழு நேர தொழிலதிபராக மாற்றிக்கொண்டான், இத்தனை தொழில் சாம்ராஜ்யத்தையும் பார்பவனுக்கு மனதை ஒருமுகப்படுத்துவது எளிது தான் என்றாலும் அதையும் சிறு சிரமப்பட்டே கொண்டுவந்திருந்தான் சிவா.. அப்போதே அவனுக்கு தெரிந்திருந்தது ஆரா தன் மனதில் எந்த அளவு வேரூன்றியிருக்கிறாள் என்பது…
அதே நேரத்தில் ருத்ரா அவளது இல்லத்தில்,”நம்மளோட அடுத்த பிளான் என்ன பா.. உன் திட்டப்படி இது வரைக்கும் நம்ம செஞ்சதெல்லாம் சக்ஸஸ் தான்”
அவன்,” இல்ல ருத்ரா.. இதெல்லாம் ஜஸ்ட் ட்ரையல் தான், மெயின் பிக்சர் இனிமே தான்”
ருத்ரா,”அப்படி என்ன பண்ண போற”
அவன்,”அதை உன் கிட்ட சொல்லிட்டு செய்யற அளவுக்கு நான் முட்டாள் இல்லை.. உன் அவசர புத்தியால எல்லாத்தையும் அவனுக்கு காட்டி குடுத்துருவ.. சோ வெயிட் அண்ட் வாட்ச்”
ருத்ரா கோபமாக,”அப்போ நான் முட்டாள் எதுக்கும் லாயக்கு இல்லன்னு சொல்றியா.. நீ இல்லனாலும் நான் அவனை எதிர்த்து நின்னுருப்பேன்”
மறுபுறம் பலத்த சிரிப்பொலி,”நீ எதிர்த்து இருப்ப.. ஆனா ஜெயிச்சு இருக்க மாட்ட.. எப்போ பாரு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாம நான் சொல்றத மட்டும் கேளு..’டூ யூ நோ ஒண்திங் குரைக்கற நாய் கடிக்காது டார்லிங்’ சோ வாயை கொரச்சிட்டு இதை தீட்டு” என்று மூளையை சுட்டி காட்டியவன் தனக்கான அறைக்குள் சென்று தான் வகுத்த திட்டத்தை சரிபார்த்துக்கொண்டான்..
ஆரா அங்கு கல்லூரியில் மரத்தின் அடியில் உள்ள பெஞ்சில் தலை கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தவளுக்கு எண்ணம் முழுதும் சிவாவே..
அவனை பார்க்க துடிக்கும் விழிகளுக்கும் அவனிடம் தஞ்சம் அடைய துடிக்கும் மனதிற்கும் ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்தாள் பேதையவள்..
ஆதவின் மூலம் சிவாவிற்கும் ஆராவிற்கும் நடந்தவைகளை கேட்டறிந்த ஜானு ஆராவிடம் பேச நினைத்தவள் தன் சொந்த பிரச்சனையில் அதை மறந்து இப்போது எதேச்சையாக ஆராவிற்கு கால் செய்ய அதை எடுத்து பேசியவள் குரலில் இழையோடிய சோகம் ஜானுவுக்கும் தெரிந்தது…
அவளை சகஜமாக்க நினைத்த ஜானு,”ஆரா இப்போ நீ ஃப்ரீயா நம்ம மீட் பண்ணலாமா??”என்றாள்…
ஆரா,”எனக்கு மூட் இல்ல ஜானு நான் க்ளாஸ்க்கும் போகல ஜஸ்ட் கேம்பஸுக்குள் தான் உக்காந்து இருக்கேன்”
ஜானு,”சரி இப்போ மணி 4 ஆகுது.. நாம ஈவினிங் ஸ்னாக்ஸ்க்கு வெளிய போகலாம் நான் உங்க அண்ணா கூட வரேன் வெயிட் பண்ணு”என்றாள்..
ஆதவ்வை பார்க்கும் எண்ணம் கொண்டே உங்க அண்ணாவை அழைத்து வருவேன் என்று சொல்லிவிட்டாலும் ஆதவ்விடம் சொன்னால் ஒப்புக்கொள்ளமாட்டான் என்று அறிந்தவள் சடுதியில் தன் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியிருந்தாள்..
சிவாவின் மொபைல் ரிங் ஆக அதை எடுத்து குடுத்த ஆதவ் டிஸ்பிளேயில் தெரிந்த பேரை பார்த்து புன்னகைத்து கொண்டே அவனிடம் கொடுத்தான்..
சிவா,”சொல்லுடா, என்ன இந்த நேரத்துல காலேஜ் அதுக்குள்ள முடிஞ்சுதா”
ஜானு,”அண்ணா ஆரா ரொம்ப ஒரு மாதிரி இருக்கா அவளை பாக்க போகணும் நீ கூட வரியா??”
சிவா,”ஏன்டா என்ன ஆச்சு அவளுக்கு.. மறுபடியும் ஏதாச்சும் ப்ராப்ளேமா யாராச்சும் ஏதாச்சும் வம்பு பண்ணாங்களா”
ஜானு,”அதெல்லாம் ஒன்னும் இல்லன்னா.. அந்த லூசு மூட் அப்செட்னு க்ளாஸ்க்கு போகாம காலேஜ் கேம்பஸுக்குள்ளேயே உக்காந்து இருக்கா.. அவ குரல் வேர ஒரு மாதிரியா இருக்கு அதான்”
சிவா சற்று யோசித்துவிட்டு,”சரிடா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் ஆதவ்வை அனுப்பறேன் நீ போயி பாத்துட்டு எனக்கு கால் பண்ணு நான் வீட்டுக்கு போகும் போது ஜாயின் பண்ணிக்கிறேன்..”
ஜானு வெற்றிக்குரியுடன் சரின்னா நான் காலேஜில இருக்கேன் பை என்றாள்..அவளின் திட்டபடியே ஆதவ்வை அனுப்பியிருக்கிறானே அதுவே அவளுக்கு மகிழ்ச்சி..
ஜானுவிடம் பேசிவிட்டு சிவா மூச்சிழுத்துவிட்டு,”மச்சான் காலேஜில உன் தங்கச்சி சோகம் கீதம் வாசிக்கராலாமா நீ ஜானுவை கூப்பிட்டு போயி என்னனு பாரு” என்று ஜானு உரைத்த அனைத்தையும் ஆதவ்விடம் கூறியிருந்தான் சிவா…
ஆதவ்,”சரி என் தங்கச்சியை நான் பாக்கறது இருக்கட்டும்.. உனக்கென்ன என்னைக்கும் இல்லாம என் தங்கச்சி மேல பாசம் பொங்குது என்ன ஹ்ம்ம்”என்று புருவம் உயர்த்தி வினவ ஆதவ்வையே கூர்ந்து பாத்திருந்தான் சிவா..
சிவாவை புரிந்த ஆதவ் அவன் தோளை அழுத்தி கொடுக்க..
சிவா,”என் மனசு என்னனு எனக்கு புரியல ஆதவ்..ஒரு பக்கம் அவளுக்கு ஒண்ணுனா மனசு துடிக்குது இன்னொரு மனசு அவளை பாக்க வேணாம்னு சொல்லுது.. இதுவரைக்கும் நான் பட்டதே போதும்டா..” என்று கூறும்போதே அவன் குரல் கமரியிரிந்தது..
ஆதவ்,”உனக்கு நான் சொல்ல வேண்டியது ஏதும் இல்லை எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்.. என்ன நடந்தாலும் இந்த ஆதவ் உன் கூட இருப்பான் டா..சரி நான் அவளை பாத்துட்டு உனக்கு கால் பண்றேன்.. வந்து சேரு”
சிவா,”சரிடா நீ ஜானுவை கூப்ட்டு பத்திரமா போ..”
ஆதவ்,” அவ கூட நான் தாண்டா பத்திரமா போகணும் நீ அவளை பத்திரமா பாத்துக்க சொல்ற ஓ மை காட்” என்று தலையில் கை வைக்க சிவா சிரித்து விட்டு ஒழுங்கா அவ கிட்ட அடிவாங்காம டைம்க்குக்கு போயி சேரு.. என்றான்..
நண்பனின் முகத்தில் சிரிப்பை வரவைத்துவிட்டு சிவா சொன்னதை நினைத்து பார்த்துக்கொண்டே அது என்னவோ சரி தான் அவ கிட்ட நாம அடிவாங்காம இருந்தா சரி தான் என்று நினைத்து கொண்டே காரை கிளப்பிக்கொண்டு ஜானுவின் கல்லூரியின் முன் நிறுத்தினான்…
ஆதவ் காரை விட்டு ஜானுவை அழைக்க கைபேசியை எடுத்து காரில் சாய்ந்திருக்க ஜானுவின் கண்கள் அதை காதலோடு படம் பிடித்து கொண்டது..
ஆம் கண்களில் கூலர்ஷுடன் அழகான ப்ளூ அண்ட் வைட் பார்மலில் சர்டில் ஒரு பட்டன் திறந்திருக்க தனது கேசங்களை ஒரு கை வருடிக்கொண்டு காரில் ஒரு கால் வைத்து கையில் அலைபேசியுடன் அவன் நின்ற தோரணையில் அத்தனை அழகும் ஆளுமையும் நிறைந்திருக்க பார்ப்பவர் அத்தனை பேரும் அவனை ஒரு நிமிடம் ரசித்து செல்லுமளவிற்கு இருந்தது…
அவன் ஜானுவிற்கு கால் செய்ய அவனை கடந்த கல்லூரி பெண்கள் அவனை ரசித்து கொண்டே செல்ல அதை பார்த்துகொண்டே வந்த ஜானுவிற்கோ பொறாமை பொங்கிக்கொண்டு வர.. “ஆமா இவர் பெரிய ரோமியோனு நினைப்பு… இப்படி ஸ்டைலா நின்னு பொண்ணுங்களை சைட் வேற அடிக்கற நீ இருடி உன்ன வந்து வச்சிக்கிறேன்” என்று கருவிக்கொண்டே அவன் அருகில் சென்று நிற்க அப்போது தான் அவளின் மொபைலில் ரிங் அடிக்க எடுத்து பார்த்தால் ஆதவ்வின் பெயர் வர அதை கட் செய்துவிட்டு ‘ஹ்ம்க்கும்’ என்று செருமினாள்..
ஆதவ்,”என்ன போலாமா” என்று புருவம் தூக்கி வினவ அவள் ஒன்றும் பேசாமல் முன்புறம் ஏறி அமர்ந்தாள்..
அவள் அமர்ந்தவுடன் ஆதவ்வும் ஏதும் பேசாமல் காரை கிளப்பி கொஞ்ச தூரம் செல்ல..
ஜானு,”என்ன மனசுக்குள்ளே பெரிய ஹீரோனு நினைப்பா”
ஆதவ் அவளை சீண்டும் பொருட்டே,”ஏன் நாங்கெல்லாம் ஹீரோ ஆகக்கூடாதா” என்றான்..
ஜானு,”அதான் பாத்தேனே சார் அப்டியே சாஞ்சிக்கிட்டு போஸ் குடுக்கறேதென்ன.. அங்க போற வரவளுங்களெல்லாம் நீ பெரிய ஹ்ரித்திக் ரோஷன்னு நினைச்சு பாத்துட்டு இருக்காளுங்க”என்று தன் கோபத்தை காட்ட அவனோ சிரித்துக்கொண்டே தன்னவளின் கோபத்தை ரசித்து கொண்டிருந்தான்..
ஆதவ்,”இதென்னடி வம்பா போச்சி நான் யாரையாச்சும் பாத்தனா என்ன?? மத்தவங்க பாத்தா கூட நான் என்ன பண்ண” என்று பாவமாக கேட்க அவன் கேட்ட தொனியில் அவளுமே சிரித்திருந்தாள்..
ஜானு,”என்ன தவிர வேற யாரையாச்சும் பாரு மகனே நீ காலி.. நீ ஏன் அழகா நிக்கிற அதான் எல்லாரும் உன்னையே பாத்தாங்க” என்றாள் சிணுங்கிக்கொண்டே
ஆதவ் கண்ணடித்துவிட்டு,” அப்போ நீயும் என்னை சைட் அடிச்சுருக்க”
ஜானு,”ஆமா இது எனக்கு சொந்தமானது நாம் என்ன வேணாம் பண்ணுவேன்”என்க
அவனோ இவ விட்டா இப்படியே பேசிட்டு இருப்பா என்றெண்ணி சரி சரி அதை அப்பரமா பாக்கலாம் என்று அவர்களின் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சிவா அவனிடம் பேசியதை ஜானுவிடம் சொல்லி கொண்டிருந்தான்..
ஜானு,”ஷ்ஷ்சப்பா…இவங்க லவ்வை சேத்து வச்சிட்டு நம்ம லவ் டெவலப் ஆகரத்துக்குள்ள ஒரு வழியாயிடுவோம் போலயே” என்றாள்..
அதற்குள் ஆராவின் காலேஜ் வர காரை பார்க் செய்துவிட்டு அவளை தேடி உள்ளே செல்ல கொஞ்ச தூரத்திலேயே ஆரா பெஞ்சில் கை வைத்து படுத்திருப்பது தெரிய ஜானு தான் வேகமாக சென்று ஆராவை எழுப்ப ஜானுவை பார்த்த வேகத்தில் ஜானுவின் இடையை கட்டிக்கொண்டு ஓவென அழ ஆரம்பித்தாள்..
ஜானுவும் சிறிது நேரம் அழவிட்டிருந்தாள் அவளின் மன பாரம் இறங்குவதற்காக, அவள் அழுகை சற்று மட்டுப்பட்டவுடன் ஜானு தான் ஆராவிடம் பேச தொடங்கினாள்.. ‘ஆமா உன் பிரண்ட்ஸ்லாம் எங்க? நீ மட்டும் ஏன் தனியா இருக்க..’
ஆரா,”அவங்கக்கிட்ட நான் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் ஆனா போக மனசு வரல”
ஜானு,”சரி என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்க”
ஆரா,”மனசு முழுக்க உங்க அண்ணா நியாபகம் தான்.. ஆனா ஏதோ உங்க அண்ணன் என்னை விட்டு விலகி போயிட்டே இருக்க மாதிரி இருக்கு.. மனசு ரொம்ப வலிக்குது ஜானு” என்க ஜானு தான் அவளை அணைத்து சமாதான படுத்தியிருந்தாள்..
ஜானு,”அண்ணாக்கு கொஞ்சம் ப்ராப்லம் இருக்கு தான்.. ஆனா அவனுக்குள்ளயும் நீதான் இருக்க.. அவன் கிட்ட பெரிய இவளாட்டாம் வாக்கு குடுத்துட்டு இங்க வந்து ஏண்டி அழுதுட்டு இருக்க.. உன்னை அவன் பாக்காம இருந்தாலும் அவன் நியபகத்துலயும் நீதான் இருப்ப.. புரிஞ்சுக்கோ ஆரா” என்றாள்..
ஆதவ்,”என்னடா ஆரா நீ எவ்ளோ தைரியமான பொண்ணு நீ அழலாமா உனக்கு எப்ப எல்லாம் அவனை பத்தி தெரிஞ்சுக்கணுமோ அண்ணாக்கு கால் பண்ணு நான் சொல்றேன்.. அவனை பத்தி நல்லா தெரிஞ்சதுனால சொல்றேன்.. நீ அவன் சொன்ன மாதிரியே எல்லாத்தையும் கடந்து வா அவன் உனக்காக கண்டிப்பா காத்திருப்பான்” என்றான்..
அவர்கள் இருவரின் பேச்சையும் கேட்டே சற்று தெளிந்திருந்தாள் ஆரா.. சரி வா டீ குடிக்கலாம் என்று அவளை அழைத்து கேன்டீன் சென்றவன் அவளை முகம் கழுவி டீ குடிக்க வைத்து விட்டு அவளுக்கு ஆயிரம் பத்திரம் சொல்லி வழியனுப்பிவிட்டு ஜானுவுடன் காரில் புறப்பட்டான்..
ஜானு ஆதவ்விடம்,”அவளுக்கு படிப்பு முடிய இன்னும் எவ்ளோ நாள் இருக்கு..”
ஆதவ்,”அல்மோஸ்ட் ஒன் அண்ட் ஹால்ப் இயர்”
ஜானு அவங்க ரெண்டு பேரும் எப்படியும் சேரனும் எங்க அண்ணன் எப்பவும் நல்லா இருக்கணும்னு சொல்ல.. ஆதவ் எல்லாம் நல்ல படியா நடக்கும் நிம்மதியா இரு.. என்றான்..
ஆபீஸ் வந்து சிவாவையும் அழைத்துக்கொண்டு செல்ல சிவாவிடம் ஆதவ் நடந்ததை கூற அவன் முகம் சலனமற்று இருக்க…அப்போது சிவாவின் மொபைல் ஒலிக்க அதை எடுத்து அதில் கூறிய செய்தி கேட்டு “வாட்ட்ட்….”என்று அதிர்ந்தான்……..