25.என்னவள் நீதானே

0
378

ருத்ரா நிஷாந்த்க்கு ஆராவை பத்தின தகவலை தர வந்திருந்தாள் அந்த நேரத்தில்

நிஷாந்த்,”சிவா நான் யாருன்னு தெரியாம குழம்புரியா?? ஹா ஹா நல்லா குழம்புடா… அந்த குழம்பின குட்டைல மீன் பிடிக்க தானே நான் இங்கே இருக்கேன்”

ருத்ரா,”நிஷாந்த் நான் உனக்கு சிவாவை பத்தி ஒரு தகவல் சொல்லணும் பட் இது உனக்கு முன்னாடி தெரியுமானு தெர்ல”

நிஷாந்த்,”சொல்லு அவனை பத்தி எனக்கு எல்லா தகவலும் ஒன்னு விடாம தெரியணும்”

ருத்ரா ஆராவை பத்தின அத்தனை தகவலையும் தர அதை கேட்டுக்கொண்ட நிஷாந்த்தோ இன்ட்டரஸ்டிங்.. காவியக்காதல் போல என்றான்..

ருத்ரா,”எனக்கென்னமோ அவன் லவ் பண்ற மாதிரி தெர்லயே”

நிஷாந்த் ருத்ராவை பார்த்து புருவத்தை உயர்த்தி,’கண்டுபுடிச்சுறுவோம்… அதுவும் நாளைக்கே’ என்று ஆட்டத்தை தொடங்கினான்…

அதே நேரத்தில் சிவாவிற்கு நிஷாந்த் என்பவன் தான் பிரச்சனை என்றாலும் அவனைப்பற்றிய எந்த தகவலும் இல்லாமல் அவனை கண்டுபிடிப்பது எளிதல்ல என்பது அவனுக்கு தெரிந்தே தான் இருந்தது..

அவனின் அலுவலக அறையில் கடும் யோசனையினூடே தனது மடிக்கணியை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.

ஆதவ் உள்ளே நுழைந்து அவனெதிரில் அமர்ந்த எதுவும் அறியாமல் சிந்தனை வசப்பட்டிருந்தான்.

ஆதவ்,”டேய் மச்சான்..” என்று அழைத்தான்.

சிவா,”ஹான் சொல்லுடா..”

ஆதவ்,”என்னடா ஆள் வந்து உக்காந்து இருக்கிறது கூட தெரியாம என்ன யோசனை”

சிவா,”வேற எதபத்தி எல்லாம் அந்த நிஷாந்த் தான்.. அவன் பேர தவிர எதுவும் தெரியல அவங்க குடும்பத்தை பத்தியும் தெரியல”

ஆதவ்,”ஆனாலும் நம்மலும் எல்லா பக்கமும் தேடிட்டு தானே இருக்கோம்”

சிவா,” அவனுக்கு பெரிய பலமே அவன் யாருன்னு நமக்கு தெரியாததும்.. நம்மளை பத்தி தெரிஞ்சு இருக்கறதும் தான்.. எனக்கொரு யோசனைடா..”

ஆதவ்,”என்ன ருத்ராவை பாலோ பண்ண சொல்ல போறியா?”

சிவா,”எஸ்.. அவ மட்டும் இல்ல.. நமக்கு எதிரிங்க வட்டம் கொஞ்சம் பெருசு தான் அதுல டாப் 5 லிஸ்ட்ல இருக்கவங்களையும் சேத்து தான் கவனிக்கணும் அவங்களோட ஒவ்வொரு அசைவும் நமக்கு தெரியணும்”

ஆதவ்,”ஆனாலும் மச்சான்.. எதிரிங்களையே டாப் 5 னு செலக்ட் பண்ணி எடுக்கிற ஒரே ஆளுங்க நாம தான்டா.. இதிலிருந்து என்ன தெரியுது நம்ம பிசினஸ்ஸ வளர்த்து இருக்கமோ இல்லையோ எதிரிங்களை நல்லா வளர்த்து வச்சுருக்கோம் டா”

சிவா,” என்னடா செய்ய.. நமக்குனே வரானுங்களே.. ராம் கிட்ட டீடெயில்ஸ் குடுத்துடு.. அப்புறம் நம்ம செய்ற வேலையில ரொம்ப கவனமா இருக்கணும்”

ஆதவ்,” வீட்டு ஆளுங்கள கவனமாக இருக்க சொல்லனுமா??”

சிவா,” அவங்ககிட்ட நேரா சொல்ல முடியாத கொஞ்சம் சேப்பா இருந்துக்க சொல்லிக்கலாம்”

ஆதவ்,”சரிடா நான் இப்போவே ராம்க்கு கால் பன்றேன்”னு சொல்லிட்டு போனை ஸ்பீக்கரில் போட்டான்..

மறுமுனையில் ராம் போனை அட்டன் செய்து சொல்லுங்கடா இப்ப என்ன பிரச்சனை?? அதற்கு ஆதவ்,”ஏன்டா நாங்க கால் பண்ணாவே பிரச்சனைக்கு தான்னு எப்படி முடிவு பண்ற”

ராம்,” என்னடா பண்ண என்னை உங்க கூட சேர்ந்து எப்பயும் திக்கு திக்குனு தானே வெச்சிருக்கீங்க” அதற்குள் சிவா,’டேய் எங்க கூட சேர்ந்துட்டு நீ மட்டும் எப்படிடா ஜாலியா இருக்க முடியும்..’

ஆதவ் சிரிப்புடன் இருக்க ராம்,”சரிடா கூட்டு களவானிங்களா.. நான் கவர்ன்மென்டுக்கு வேலை பாக்கறதை விட உங்களுக்கு தான்டா அதிகமா பாக்குறேன்.. சரி சொல்லுங்கடா இப்போ என்ன பிரச்சனை” என்று கேட்டான்.

சிவா அவனிடம் அனைத்து தகவலையும் குடுக்க ராம் நெற்றியை நீவிக்கொண்டே யோசனையில் ஆழ்ந்தான்..மறுமுனையில் சிவா ,’இப்போ என்னடா நம்ம பண்ண??’ ராமோ சரிடா நீ குடுத்த லிஸ்ட்ல உள்ள ஆளுங்களை நான் பாலோ பன்றேன்.. அதே சமயத்துல உன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு வாட்ச் பண்ணிக்கோ.. என்றுரைத்துவிட்டு கால் கட் செய்தான்.

நிஷாந்த்,”சிவா என்ன இந்த நிலைமைக்கு ஆளாக்குன உன்ன சும்மா விட மாட்டேன்டா.. எப்படி என் சாம்ராஜ்ஜியம் அழிஞ்சதோ அதே மாதிரி உன் சாம்ராஜ்ஜியத்தையும் அழிப்பேன்டா உன் பின்னாடி ஒரு பொண்ணு சுத்தரால அவளை வச்சு தான் என்னோட அடுத்த மூவ் ‘இட்ஸ் ஏ டைம் டூ சே செக்மெட்’.

அனைத்தும் கவனித்த சிவா ஆராவை அறியாமல் போனது அவன் பிழையோ??

இவை எதுவும் அறியாமல் காதல் மீது நம்பிக்கை கொண்டு சிறுபிள்ளை போல் துள்ளித்திரிந்த அந்த பட்டாம்பூச்சி அக் கள்வனின் கையில் பிடிபடுமோ???

ஆரா வழக்கம் போல் சிவாவை மறைமுகமாக பார்த்துக்கொண்டு கண்களில் நிரப்பிக்கொண்டு பொழுதை களித்துக்கொண்டிருந்தாள்..

சிவா அந்த டெண்டர் முடியும் தருவாயில் இருக்க அதை மேற்பார்வையிடுவதற்காக காலையிலேயே சென்று கொண்டிருந்தான்..
காலேஜுக்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த ஆரா சிக்னலளில் அவன் காரை கண்டு கொண்டாள் ஆனால் அவனுடைய காருக்கும் இவளுக்கும் இடையில் இன்னும் சில வாகனங்கள் அணிவகுக்க உள்ளே இருந்த அவன் அவள் கண்ணுக்கு தெரியவில்லை… அவளும் எம்பி எம்பி காரின் உள்ளே இருந்த தன்னவனை நோக்க முயற்சிக்க சிக்னல் விழுந்து கார் செல்ல தொடங்கியது…

தன்னவனை காணும் முனைப்பில் இவளும் காரை பின்தொடர.. அவளின் பின்புறம் அதே சுமோ(ஆதவை இடிக்க வந்த சுமோ) இவளை நோக்கி சீறிக்கொண்டு வந்து கொண்டிருந்தது…

சிவாவின் கண்ணில் ஆரா அகப்படுவாளா???

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here