26.என்னவள் நீதானே

0
470

ஆரா எதையும் கவனிக்காமல் சிவாவை பின் தொடர அதே சமயத்தில் சுமோவும் அவளை நெருங்கி கொண்டிருந்தது..

காரினுள் இருந்த சிவா எதர்ச்சையாய் சைட் மிர்ரரை நோக்க அதில் தெரிந்த ஆராவின் முகத்தை கண்டு புன்னகைக்க அந்த புன்னகை ஒரு நிமிடம் கூட நிலைக்கவில்லை அதற்குள் சுமோ அவளை தூக்கி எறிந்துவிட்டு புயல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது..

சிவா பெருங்குரலெடுத்து தனு என்று கத்தியவன் காரை நிறுத்திவிட்டு ஓடி சென்று அவளை பார்க்க அவளோ ரத்த வெள்ளத்தில் கிடந்தாள் ..

அவளை மடியில் கிடத்தியவன்..”தனு இங்க பாருடி உனக்கொன்னும் ஆகாது ஆகவும் விடமாட்டேன்..நான் இருக்கேன் நான் இருக்கேன்டி உனக்காக” என்றான் அவன் உள்ளத்தை மறையாது உடனே அவளை தூக்கிகொண்டு ஓட அவளோ அத்தனை வலியிலும் தன்னவனின் காதல் மொழியை கேட்டவள் காதல் கொண்ட பார்வை ஒன்றை அவன் மீது வீசிவிட்டே மயங்கி சரிந்தாள்..

ஆராவை தூக்கிக்கொண்டு ஓடிய சிவா தனது காரில் பின் இருக்கையில் அவளை கிடத்திவிட்டு முன்னிருக்கையில் அமர்ந்து காரை புயல் வேகத்தில் கிளப்பிகொண்டு சென்றவன் அடுத்து நின்ற இடம் புகழ் பெற்ற பெரிய மருத்துவமனையே யாரையும் எதிர்பார்க்காமல் அவளை தூக்கி சென்றவன் எமெர்ஜென்சி யூனிட்டில் அவளை அட்மிட் செய்து விட்டே நின்றான்.. அங்கிருந்தவர்களுக்கு அவனைப் பற்றி முன்பே அறியுமாதலால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அவளை அட்மிட் செய்திருந்தான்..

சிவா என்னும் இளம் தொழிலதிபர் அவளை அட்மிட் செய்திருந்ததால் அந்த மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர் அனைவரும் அவளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்..

அவளுக்கு உள்ளே சிகிச்சை நடந்து கொண்டிருக்க இவனோ வெளியே இருந்த இருக்கையில் இதயம் நிறைந்த வலியுடன் அமர்ந்திருந்தான் அவன் மனம் முழுவதும் அவளை சுமோ தூக்கி வீசி சென்ற காட்சியே ஓடிக்கொண்டிருந்தது…

சிறு சொல்லை கூட தாங்க முடியாதவளுக்கு இத்தனை கொடுமையான வலியா?? எப்படியாவது அவளை திருப்பி கொடுத்துவிடு என்று கடவுளிடமும் நம்ம காதலுக்காக திரும்பி வாடி என்று மனதிற்குள் அவளிடமும் பேசிக்கொண்டிருந்தான்…

பட்டுப்போன மனமும்

துளிர்விடும் உன்

கடைக்கண் பார்வையிலே..

என்னவளே எத்தனை

கர்வமாய் இருந்தேனடி

அத்தனையும் உன் காதலால்

சுழற்றிச்சென்றாயடி பெண்ணே…

உன்னைவிட்டு விலகியபோதும்

மெழுகாய் உருகினாயே

என்பால் காதல் கொண்டு

இச்சனம் முதல் உனக்காக துடித்துக் கொண்டிருக்கிறேன்

எழுந்துவா என் தேவதையே…

உன் கடைக்கண் பார்வைக்காக

ஏங்குகிறேன் உன் மேல்

தீராக் காதல் கொண்டு !!!!

ஆழ்ந்த மூச்சு எடுத்து தன்னை நிதானித்தவன் போனை எடுத்து ஆதவிற்கு கால் செய்து சூழலை விளக்கியவன் அப்டியே ஆராவின் பெற்றோரையும் அழைத்துவர பணித்தான்..

சட்டையின் மீது படித்திருந்த தன்னவளின் ரத்தம் அவனுக்கு வலியை தர ஒரு தொழிலதிரபாய் அந்த வலியை வெறியாய் மாற்றி அந்த சுமோவினை பற்றின தகவல் அறியும் முனைப்பில் செயல்பட தொடங்கியிருந்தான்…

சிவா, ‘நிஷாந்த் என் உயிரையே உரசி பாத்துட்ட உன்னை விடமாட்டேன்’ என்றவன் ஆறடி ஆண்மகனாய் தன்னவளை இந்நிலைக்கு ஆளாக்கியவனை சுட்டெரிக்கும் வெறிகொண்டு தனது தேடுதல் வேட்டையை தொடங்கினான்..

அங்கு ஆராவின் வீட்டில் ஆதவ் உள்ளே நுழைந்த போதே அவளின் தந்தை ராஜா கார்மெண்ட்ஸ்க்கு செல்வதற்காக கிளம்பி கொண்டிருந்தார்..

ஆதவை பார்த்தவர்,’வாப்பா.. உட்காரு’ என்று சோபாவை காண்பித்தவர் பாரு தம்பிக்கு ஒரு காபி கொண்டுவா என்று தன் மனைவியை அழைத்தவர் அவன் புறம் திரும்பி ‘ சொல்லுப்பா என்ன இவ்வளவு தூரம் ஏதும் தொழில் விஷயமாவா??

ஆதவ் அவர் அருகில் அமர்ந்து,” அங்கிள் கொஞ்சம் பதட்டப்படாம கேளுங்க.. ஆராவுக்கு சின்ன ஆக்சிடெண்ட் சிவா தான் அவளை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கான் ஒன்னும் பெருசா பிரச்சனை இல்லை என்று அவன் சொல்லும்போதே அதைக்கேட்டுக்கொண்டே வந்த அவளது அன்னை பார்வதி ‘என்ன தம்பி என்ன ஆச்சு’ என்று பதட்டத்துடன் வினவ அவனோ இல்ல ஆண்டி கொஞ்சம் தான் அடி..இப்போ தான் சிவா கால் பண்ணான்,நான் வேலை விஷயமா இந்த வழியா தான் வந்தேன் அதான் உங்களையும் கூப்ட்டு போலாமேனு நேர்ல வந்தேன் என்று நாசூக்காய் சூழ்நிலையை கையாண்டான்..

பெற்றோர் இருவரும் ஒரு வித பதட்டத்துடன் இருக்க அவர்களை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றான் ஆதவ்..

ராஜா மற்றும் பார்வதி மருத்துவமனை வந்தவுடன் தன் மகளை காண செல்ல அவள் ஐசியூ வில் அனுமதிக்க பட்டிருக்கிறாள் என்று தெரிந்தவுடனே அவர்களது பயம் அதிகரிக்க ஐசியூ நோக்கி விரைந்தனர்..

ஐசியூ வின் வெளிபக்க கண்ணாடியின் வழியே தன் மகள் இருந்த கோலத்தை கண்ட அவளது அன்னை பார்வதி தன் கணவனை கரத்தை பற்றிக்கொண்டு என்னங்க நம்ம பொண்ண பாருங்க அவளுக்கு ஒன்னும் ஆயிருக்காதுல்ல அழுது வெடித்துகொண்டிருந்தார்..

ராஜாவின் மனதிலும் பதட்டம் அதிகரிக்க தன் மனைவியை எண்ணி அவளுக்கு ஒன்னும் ஆகாது பாரு.. டாக்டர்ஸ் பாத்துட்டு இருக்காங்க நீ அமைதியா இரு இல்ல உனக்கு ஏதாவது ஆகிடப்போகுது என்று அவரை சாந்தப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்..

அவரை அழைத்துக்கொண்டு சிவாவின் அருகில் அமர வைத்தவர் சிவாவை நோக்கி எப்படி பா ஆச்சு… என்று கேட்க அவன் நடந்ததை சுருக்கமாக கூறினான்.. எந்த இடத்திலும் தன்னால் தான் ஆராவுக்கு இந்த நிலைமை என்று அவன் குறிப்பிடவில்லை மேலும் அவர்களை துயரத்தில் ஆழ்த்த அவன் விரும்பவில்லை..

சிவா ராஜாவுடம்,”அங்கிள் பெரிய டாக்டர்ஸ் எல்லாம் பாத்துட்டு இருக்காங்க தனுவுக்கு ஒன்னும் ஆகாது.. நீங்க கொஞ்சம் இருங்க நான் வரேன்” என்றவன் ஆதவை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்..

சிவாவின் சட்டையில் இருந்த ரத்தகறையை பார்த்த ஆதவ்,”சிவா ஆராவுக்கு ரொம்ப அடிப்பட்டருக்கா?? அவ உயிருக்கு??” என்று கேட்கும் போதே அவன் குரல் கம்மியது..

சிவா,”என் கண்ணு முன்னாடி ரத்த வெள்ளத்துல இருந்தாடா..அவளுக்கு ஒன்னும் ஆக கூடாதுடா.. என் தனு எனக்காக திரும்பி வருவாடா”என்றான் மனதை மறையாமல்..

ஆதவ் அவன் போனில் சொன்ன தகவலை வைத்து,” எப்படி டா என்ன இடிக்க வந்த அதே சுமோன்னு சொல்ற”

சிவா,”அன்னைக்கு நீ சொன்ன அடையாளமும் நான் பாத்த சுமோவோட அடையாளமும் ஒன்னு அண்ட் மோரோவர் அவன் எனக்காக தான் இதை பன்றான்.. நமக்கே தெரியாமல் எங்கேயோ நம்மள வாட்ச் பண்ணிருக்கான்.. சென்சிட்டிவ்வா நம்மளை அட்டாக் பன்றான்..”

ஆதவ்,”யூ மீன் அவன் நம்மளை அடியோட அழிக்கணும்னு பிளான் பண்ணறானா??”

சிவா,”எஸ் எக்ஸாக்ட்லி.. பட் அவனுக்கு முன்னாடி நான் அவனுக்கு நரகத்தை காட்டறேன் என் உயிரை உரசி பாத்ததுக்காக”

சிவாவின் காதலை உணர்ந்த ஆதவ்,” மச்சி நீ ஆராவை அந்த அளவுக்கு நேசிக்கரையா??”

சிவா,”அவள் ரத்த கறையை தடவி பாத்துக்கொண்டே ஆமாண்டா இன்னிக்கு தான் எனக்கே தெரிஞ்சுது அவளுக்கு ஒண்ணுன உடனே மனசு ரொம்ப துடிச்சு போயிருச்சு.. ஆனா அந்த வலியிலும் அவளோட கண்ணு என் கிட்ட காதலை யாசிக்கிது.. இனிமே அவ என்னோட பாதி டா”

ஆதவ்,”ரொம்ப சந்தோசம்டா இப்போவாது அவளை புரிஞ்சுகிட்டயே உன் காதலுக்காக அவ திரும்பி வருவா” என்று நம்பிக்கை அளித்தான்..

சிவா,”இப்போ அந்த நிஷாந்த்தை கண்டுபுடிக்கணும் ராம்மை கூப்பிட்டு அந்த சிக்னல்ல இருக்க சிசிடிவி கேமரா பூட்டேஜ் அனுப்ப சொல்லு” என்றவன் மேலும் சில கட்டளைகளை தொலைபேசியினூடே பிறப்பித்தவன் சினம் கொண்ட வேங்கையாய் செயலில் இறங்கியிருந்தான்..

நிஷாந்த் தன்னைறையில் மது கோப்பையுடன் சிவா தனு என்று கத்திகொண்டே ஓடிய விடியோவை ரிப்பீட் மோடில் பார்த்து கொண்டே ‘சிவா தி கிரேட் பிசனஸ்மேன்.. ஹா ஹா உன் நிலைமையை பாத்தயா??’உன் தலையெழுத்தை எழுதற ப்ரம்மாடா நான்.. இனி உன்னோட ஒவ்வொரு செயலும் நான் நிர்ணயிச்சது தான்….

ஆராவிற்கு சிகிச்சை முடிந்து சில மணி நேரங்களுக்கு பின் வெளி வந்த டாக்டரை பார்த்து சிவா அவர்களிடம் அவளின் நிலைய கேட்க அவர் சொன்ன செய்தியை கேட்டு உடனிருந்த அவளது அன்னை மயங்கி சரிந்தார்….

ஆராவின் நிலை என்ன????

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here