29. என்னவள் நீதானே

0
375

வார்த்தைகள் பரிமாரப்படாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு இருக்க
சீறும் சிறுத்தையாய் சுழன்றவன் இப்போது பூந்தளிர் கரங்களுக்குள் அடங்கியவனாய் அமர்ந்திருந்தான்..

எப்போதும் வளவளத்துகொண்டிருக்கும் ஆராவிற்கு அவனுடன் பேச ஆயிரம் இருந்தும் பேச இயலாத நிலையை எண்ணி மனதில் குமைந்துகொண்டு உதட்டை சுழிக்க அதை பாத்துகொண்டிருந்வனுக்கோ இதழ்கடையோரம் புன்னகை அரும்பியது..

அதற்குள் நர்ஸ் மறுபடியும் செக்கப் செய்ய வர சிவாவும் அவளை ஓய்வெடுக்க சொல்லி அவள் கரத்தை விளக்க அவளோ விடமால் பற்றியிறுந்தாள்..

சிவா,”கண்ணம்மா.. கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பியாமா… நான் அப்பறம் வரேன்..”

ஆரா முகத்தை பாவமாக வைத்துகொண்டு அவனை பாக்க அவனோ,”நாளைக்கு உன்ன ஸ்பெசல் வார்டுக்கு மாத்தரேனு சொன்னாங்க நீ இப்போ அடம் புடிச்சனா இன்னும் 2 டேஸ் இங்கேயே வச்சுக்க சொல்லிருவேன் எப்படி வசதி” என்றான்..

ஆரா உதட்டை சுழித்து பழித்து காட்டிவிட்டு அவன் கரத்தை விடுவிக்க அவன் அதில் மென்மையாக இதழ் பதித்து, அவள் தலைகோதி ‘ரெஸ்ட் எடுடா எனக்கு கொஞ்சம் முடிக்க வேண்டிய வேலை இருக்கு’ என உரைத்துவிட்டு வெளியே வந்தவன் அவளின் பெற்றோரிடம் அவளை பார்துகொள்ளுமாறு கூறிவிட்டு தன் குடும்பத்தினரை நோக்கி வந்தான்..

இரு குடும்பத்தினரும் அடுத்தடுத்து அமர்ந்திருக்க சிவா,”ஆதவ் வீட்டுக்கு கிளம்பலாம் கொஞ்சம் பேச வேண்டி இருக்கு” என்றான்..

ஆதவ்,” ‌சரிடா கிளம்பலாம்”

அனைவரும் ஆராவின் பெற்றோரிடம் விடைபெற்று கிளம்ப சிவா மட்டும் தான் திரும்பி வருவதாக சொல்லி சென்றான்..

இரு குடும்பத்தையும் தன் வீட்டிற்கு அழைத்து சென்றவன் முதலில் தானாகவே பேச ஆரம்பித்தான்..

சிவா தொண்டையை செருமிக்கொண்டு,”உங்க கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.. ஆராதனா எனக்கு வெறும் பிரண்ட் மட்டும் இல்ல.. என் வாழ்க்கை துணையா அவ வந்தா நல்லா இருக்கும்னு ஒரு விருப்பம்” என்றவன் தனக்கும் ஆராவிற்கும் இடையில் நடந்த சம்பவங்களை கூறி இறுதியில் பெற்றோரிடம் அனுமதி என்னும் யாசகம் வேண்டி நின்றான்.

மோகன் லட்சுமி தம்பதியினர் அர்த்தமாய் புன்னகைத்து கொண்டனர்..

லட்சுமி,”நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதே போதும் கண்ணா.. ஆரா ரொம்ப நல்ல பொண்ணுடா எனக்கு இதுல சம்மதம் தான் கண்ணா” என்றார்..

மோகன்ராஜ்,”உன் வாழ்க்கையில நீ முடிவெடுக்கிற எல்லா விஷயத்துலயும் ஜெயிச்சு காமிச்சுருக்க கண்டிப்பா குடும்ப வாழ்க்கையும் உனக்கு சந்தோசமா தான் இருக்கும் ‘ காட் ப்ளஸ் யூ மை சன் ‘ என ஆசீர்வதித்தார்.

ஆதவின் பெற்றோரும்,”ரொம்ப சந்தோசம் பா.
நீ பெத்தவங்க சம்மதத்த எதிர்பார்த்து நிக்கரத பாக்கும் போதே பெருமையா இருக்கு..”

ராமச்சந்திரன்,” மோகா பசங்களை ரொம்ப நல்லா வளத்துருக்க டா..எவ்ளோ தான் சொந்தகால்ல நின்னாலும் நம்மள தேடி வந்துருக்கங்கால அதுவே பெருமை தான்”என்று சிலாகித்து கொண்டார்..

அதே சமயத்தில் அன்னையர் இருவரும் ஒருவரை ஒருவர் கைபற்றிகொண்டு மகன்களை பார்திருந்தனர்..

அனைவரின் சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியில் சிவா இருக்க ஜானுவோ அவன் முன் சொடக்கிட்டு,” ஹலோ ப்ரோ இன்னும் நான் சம்மதிக்கல தெரியும்ல” என்றால் இல்லாத சுடிதாரின் காலரை உயர்த்தியபடி…

சிவா,”அடிங்க” என்று அவள் மண்டையில் கொட்ட அவளோ அங்கிருந்து ஓட ஆரம்பிக்க
அதற்குள் சிவா,”டேய் அவள புடிடா என்க”ஆதவ் அவள் கையை பிடித்து நிறுத்தி இருந்தான்..

சிவா அவள் அருகில் வந்து அவள் தோளை பற்றி,”ஹேய் வாண்டு என்ன சேட்டை அதிகமாயிடுச்சு ம்..ம்..”

ஆதவ் சிரிப்புடனே,”அது ஒண்ணும் இல்ல மச்சான் உன்ன பத்தி பெருமையா பேசுனதுல இங்க சில பேருக்கு ஸ்டமக் பர்ணிங்.. அதான்”

ஜானு,”ஹலோ என்ன கலாய்க்குறிங்களா?? பிச்சு பிச்சு என்றாள்” மிரட்டும் தொனியில்
அதற்கே ஆதவ் சிரிப்புடன்,”சரிங்க அம்மணி நீங்களாச்சும் உங்க அண்ணன்னாச்சும்”என்றான்..

ஜானு,” ம்ம் அந்த பயம் இருக்கணும்” என்றாள் அவனை பார்த்து வக்கனைத்துவிட்டு..

ஜானு சிவாவிடம், “அண்ணா நீ கல்யாணத்துக்கு ஓகே சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம் அதிலேயும் பொண்ணு ஆரானும்போது எனக்கு வேற என்ன வேணும்”என்று சலுகையாக தன் அண்ணன் தோள் சாய்ந்தாள்..

சிவா,”எனக்குத் தெரியும்டா நீ இதுக்கு கண்டிப்பா ஒத்துக்குவனு”

சிவாவும் ஆதவும் தத்தமது தந்தையரை அழைத்து இன்றைக்கு நடந்த சம்பவங்களை விளக்கம் கொடுத்துவிட்டு தாங்கள் இப்போதே கிளம்பவேண்டும் எனவும் கூறினர்..

அதே நேரத்தில் அங்கு லண்டனிலிருந்து சென்னை நோக்கி வந்த ஃப்லைட் தரையிறங்கி கொண்டிருந்தது அதில்
சற்றே வயது முதிர்ந்த தோற்றத்தில் கண்ணில் கோபம் கொப்பளிக்க ஒருவரும் அவருடன் சாந்த சொருபினியாய் அவரது துணைவியாரும் வந்திறங்கினர்..

செக் அவுட் முடித்து வெளியே வந்தவர்கள் அவர்களுக்காக காத்து கொண்டிருந்த காரில் ஏறினர்,சீறிசென்ற அந்த கார் நின்றது நிஷாந்த் தங்கி இருந்த வீட்டின் முன்பு தான்..

உள்ளே நிஷாந்த் அந்த பிளாஷ் நியூஸை ரீவைண்ட் மோடில் பார்த்துக்கொண்டே ரம்மை விழுங்கிகொண்டிருந்தான் நிறைய குடித்திருந்தபோதும் ஓரளவு நிதானத்துடனே இருந்தான்..

உள்ளே கோபக்கணலுடன் வந்த குருமூர்த்தி, ருத்ரமூர்தியாய் மாறி நிஷாந்த் சட்டையை பற்றி அவனை நிமிர்த்தியவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்..

என்னங்க…என்று தடுக்கவந்த அவரது மனைவி குணவதியையும் கோபமுகம் கொண்டே தடுத்து நிறுத்தினார்..

குருமூர்த்தி,” ஏன் உன் புள்ள என்ன பண்ணிவச்சிருக்கானு உனக்கு தெரியாதா??”

குணவதி,”இல்லங்க அவன் ஏதோ அவசரபுத்தில இப்படி பண்ணிட்டான் விட்ருங்க” என்றார் தன்மையாக.. தாய்மையின் குணம் அது தானே அதற்கு அவர் மட்டும் விதிவிலக்கா என்ன??

இது அத்தனைக்கு பிறகும் நிஷாந்த் வாய் திறந்தானில்லை தன் தந்தையின் முகத்தை பார்த்தவாறே இருக்க..குரு,”டேய் முட்டாள் எத்தன தடவ சொன்னேன் நீ இந்த விஷயத்தில் தலையிடாதே நான் பார்த்துக்கிறேன்னு கேட்டியா? பாரு இப்ப எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கன்னு பாரு”

நிஷாந்த்,”அப்போ நான் எதுக்கும் லாயக்கில்லைனு சொல்றீங்களா?”

குரு,” அப்போ நீ இப்ப பண்ணி வச்சிருக்க காரியத்துக்கு என்ன சொல்ல? நீ அமைதியா இருந்தாலே நானே பார்த்து இருப்பேன் ஈஸியா முடிக்க வேண்டிய வேலையே நீ இப்ப கஷ்டமாக்கிட்ட.. அவங்கப்பன் காலத்துல இருந்தே நமக்கும் அவங்களுக்கும் பகை எவ்வளோ முயற்சி பண்ணி முடியாத நிலைமைல தான் நான் ஊர விட்டு போனேன் அப்போ அவங்கப்பங்கிட்ட தோத்தேன் இன்னிக்கு அவன் பையன் கிட்ட தோத்து போயிருக்கேன் அதுவும் உன்னால இனிமே நான் சொல்றத மட்டும் நீ செய் எனக்கு தெரியாம எதுவும் செய்யகூடாது” என்று கட்டளைகளை கோபத்துடனே பிறப்பித்தார்..

குணவதி,”என்னங்க நீங்க போங்க அவன் இனிமே எதுவும் பண்ண மாட்டான் நான் அவன்கிட்ட பேசறேன்” என்றார்.

கணவனை அவ்விடமிருந்து அகற்றிய பின் மகனை பார்த்து,”நிஷாந்த் எப்போ இருந்து இப்படி வீட்டுலயே” என்று டீபாயில் வைத்திருந்த ரம் பாட்டிலை காட்டி கேட்டார்..

நிஷாந்த் லண்டனில் வளர்ந்ததினாலே மேலைநாட்டு கலாச்சாரங்கள் அவனின் பழக்க வழக்கத்தில் இருக்கும்,இருந்தும்கூட அவனின் அன்னைக்காகவே அனைத்தையும் வீட்டிற்கு வெளியேவே‌ வைத்துக்கொள்வான்..ஆனால் இன்று அவர்களின் வரவு அவன் அறியாததால் அன்னையின் முன் தலைகவிழ்ந்து நின்றான்…

குணவதி,”உன் பிசினஸ் பத்தி எல்லாம் எனக்கு தெரியாது ஆனா அந்த சுப்ரமணியம் டெக்ஸ் உங்க தாத்தாவோடது நம்ம பரம்பரையின் முதல் தொழில் சாம்ராஜ்ஜியம் இன்னிக்கு வரை அதுல உங்க தாத்தா பேரு நிலைச்சு இருந்துச்சு நீ அதை கலங்கபடுத்திட்ட.. இனிமே அப்பா பேச்ச கேட்டு நடந்துக்கோ அவர கோவப்படுத்ததே” என்றார்..

குருமூர்த்திக்கும்‌ குணவதிக்கும் ஒற்றை மகனாய் பிறந்ததினாலே நிஷாந்த்க்கு அதிக பாசமும் செல்லமும் குடுத்து வளர்த்திருந்தனர் அத்தம்பதியனர் அவனும் இதுவரை அவர்களை மீறாதவன் தான்..

இச்சம்பவம் நடக்கும் வரை தன் தந்தையின் இந்த மாதிரியான முகத்தை அவன் கண்டதில்லை அவனுக்கும் இது புதிது தான் அதனாலே அவன் தந்தையை எதிர்க்காமல் மௌனமாய் இருந்தான்..

இங்கே சிவா வீட்டில் ஆடவர் நால்வரும் பேசிக்கொண்டிருக்க சிவாவின் மொபைல் மீண்டும் ஒரு வீடியோ தாங்கி ஒலித்தது…

வீடியோவை பார்த்திருந்தவர்களின் முகத்தில் அப்பட்டமான ஒரு அதிர்வு……..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here