3 உயிரே என் உலகமே

0
1178

சுயநலம்

நான் எப்போதிலிருந்து சுயநலமாக சிந்திக்க ஆரம்பித்தேன். இதுவரை நான் எனக்காக என் வாழ்க்கையை வாழ்ந்தது இல்லையே மற்றவர்களுக்காக தானே வாழ்ந்தேன் ஏன் இன்று அவனுக்காக நான் சுயநலமாக முடிவு எடுத்தேன்.

என் வாழ்க்கை என் குடும்பம் என்று நானும் சராசரி பெண்ணாக எப்பொழுது மாறினேன் .15 நாள் வாழ்க்கை ஒருவரை இப்படி மாற்ற முடியுமா இப்பொழுது நான் என்ன செய்வது மற்றவர்கள் மாதிரி சுயநலமாக என் அடையாளத்தை மாற்றி சாதாரண பெண்ணாக இந்த குடும்பத்தில் வாழ வா இல்லை அவனை எதிர்த்துப் போராட வா என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்தால் இசை

ஆச்சி நா சொல்றத கேளு இந்த சடங்குலாம் வேணாம் .. அவள பாத்தாலே எனக்கு கடுப்பு ஆகுது.

டேய் அவுங்க அப்பா செஞ்சத்துக்கு இவ என்ன பண்ணுவா சொல்லு. ஆச்சி நீ என்னதான் பாம்புக்கு பால் உத்தினாலும் அது விஷத்தை தான் கக்கும் அதுமாதிரிதான் இவளும்

வேண்டா இனியா நீ பேசுறது ரொம்ப தப்பு பா
நான் எல்லா கரெக்டா தான் பேசுறேன் உங்களுக்கு அவளப் பத்தி தெரியாது ஆச்சி என்று அழுத்தமாக கூறிவிட்டு தன் அறையை நோக்கி சென்றான் இனியன்

அம்மாடி ராசாத்தி ரெடி ஆயிட்டியா என்று கேட்டுக்கொண்டே இசை இடம் சென்றார் கமலம்
அவளின் உடையை பார்த்த கமலம் ஏன்மா உன்கிட்ட வேற புடவை இல்லையா.

என் அப்பத்தா இதற்கு என்ன நல்லாதானே இருக்கு..

சரிதான் அந்த பூவ வச்சிக்கோ

எதுக்கு இப்போ பூ வைக்கணும்

கல்யாணத்தைப் பத்தி எந்த எண்ணமும் இல்லாத இசைக்கு இது எல்லாம் புதுசு… ஐயோ என் பேராண்டி வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படனும் போலிருக்கே என்று நினைத்துக்கொண்டார் கமலம்

சரி மா இந்த பால் சொம்பை யாவது எடுத்துட்டு போ. ஓகே என்று கட்ட விரலை தூக்கி காட்டினாள் இசை

அங்கு இனியனின் மனநிலையோ வேறு மாதிரி இருந்தது .. எல்லாருக்கும் இருக்கிற ஆசை தானே தன் மனைவி அறைக்குள் எப்படி எந்தக் கலர்ல புடவை கட்டிட்டு வருவா தலை குனிஞ்சி வருவாளா வெட்கப்படுவாள என்று நினைத்துக் கொண்டிருந்தான்..

அவன் ஆசையில் மண்ணை அல்லி கொட்டியது போல வந்து கதவைத் தாளிட்டாள் இசை….. தலை உச்சி முதல் பாதம் வரை பார்த்தான் லைட் சாம்பல் வண்ண புடவையும் கருப்பு கலர் பிளவுஸ் இல்லை இல்லை அது ப்ளவுஸ் இல்லை முழுக்கை சட்டை அணிந்திருந்தாள் இசை நெற்றியில் சிறிய பொட்டு காதில் சின்ன சில்வர் தோடு கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் தாலி வேறு எந்த ஒப்பனையும் இன்றி இருந்தாள் இசை

அவளைப் பார்த்தவனின் கோவம் தலைக்கேறியது இந்த உலகத்திலேயே ஃபர்ஸ்ட் நைட்டுக்கு இந்த மாதிரி புடவை கட்டிட்டு வந்தது நீயா தான் இருக்கும்…
என்னடி நெனச்சிட்டு இருக்க உன் மனசுல…

அப்படியே உன்னை பார்த்து மயங்கி விடுவேன்னு நெனப்பா அது இந்த ஜென்மத்துல நடக்காது.( டேய் அவ உன்னை மயக்குற மாதிரியா டிரஸ் பண்ணி இருக்கா என்று அவன் மனசாட்சி கேலி செய்தது)

அதுவரை அவன் என்ன சொல்கிறான் என்று ஒன்றுமே புரியவில்லை அவன் கண்களை கூர்ந்து கவனித்தாள்…
ஏய் என்னை என் தம்பிங்க கிட்ட இருந்து பிரிக்கணும் நினைக்காதே அவ்வளவு தான் உன்னை கொண்ணு போட்டுருவேன் போடி இங்க இருந்து வெளிய போ என்று கத்தினான்

எதற்கும் அசராமல் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தால் இசை… கொஞ்சமாவது பயப்படுறலா பாரு… திமிர் புடிச்சவ என்று நினைத்துக்கொண்டான் இனியன்

ஏய் உன் கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன் வெளியே போடி இந்த ரூம்ல யும் என் வாழ்க்கையில் உனக்கு எந்த இடமும் இல்லை… போ வெளிய.. இசை கொஞ்சம் கூட பயப்படாமல் அந்த ரூமில் உள்ள அவரது நம்பர் லாக் சூட்கேசை எடுத்து அதிலுள்ள வெள்ளை நைட்ரஸ் ஐ எடுத்துக்கொண்டு குளியல் அறை நோக்கி சென்றாள்

உடை மாற்றிவிட்டு வெளியே உள்ள ஹாலில் சோஃபாவில் அமர்ந்தாள்… பல இன்னல்களை தாண்டி வந்த இசைக்கு இனியனின் கோவம் அவளை பாதிக்கவில்லை அதை விட அதிகமாக துன்பங்களை அவள் வாழ்க்கையில் கடந்து வந்து இருக்கிறாள்….

அவன் கூட இருந்த அந்த 15 நாட்கள் நரகம் என்றால் என்ன என்பதை இசை அறிந்திருந்தாள். சிறு வயது முதல் எதற்கும் கஷ்டப்படாத இசை அந்த 15 நாட்களில் தூக்கம் என்பதை மறந்து விட்டாள்… விடிய விடிய தூங்காமல் காலை நாலு மணிவரை கண்களைத் திறந்து ஏதோ ஒரு பொருளை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள்…

தமிழ் அரையாண்டு தேர்வுக்கு படிப்பதற்காக ஹாலில் லைட்டை போட்டான்.. அங்க அவன் இசையை எதிர்பார்க்கவில்லை அவளின் நிலையை கண்டு வேகமாக கவி இருக்கும் அறைக்கு சென்றான்

அந்த வீட்டில் தமிழ் அதிகம் பேசுவது கவியிடம் மட்டுமே… கவி அண்ணா கவி அண்ணா கொஞ்சம் எழுந்து வாயேன் அங்க வெளில கொஞ்சம் சீக்கிரம் வா அண்ணா. இவன் என்ன சொல்கிறான் என்று எதுவும் புரியாமல் தூக்கக்கலக்கத்தில் வெளியே வந்தான் கவி

அங்கு சோபாவில் இசையை கண்டவுடன் என்ன செய்வது என்று புரியாமல் மெதுவாக அண்ணி என்று அழைத்தான்.

அதற்கும் இசையிடம் எந்த அசைவும் தெரியவில்லை சத்தமாக அண்ணி அண்ணி என்று மூன்று முறை அழைத்து பார்த்தான்.. இவனின் சத்தம்கேட்டு அனைவரும் எழுந்து ஹாலுக்கு வர ஆனால் இசையிடம் எந்த அசைவும் இல்லை

இனியனும் அவளின் நிலையை கண்டு அவளை அழைத்து பார்த்தான். ஏய் இங்க பாரு அதற்கும் அவளிடத்தில் அசைவில்லை..கவி தண்ணி எடுத்துட்டு வந்து ஓங்கி அவள் முகத்தில் தெளித்தான்.. அதில் சுயநினைவு பெற்றவள் அங்கிருக்கும் அனைவரையும் பார்த்து எல்லாரும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்றால்

அண்ணி அதை நாங்க கேக்கணும் உங்ககிட்ட என்றான் மகி

எல்லாரும் பேய் அடிச்ச மாதிரி இருக்கீங்க..
அண்ணி நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க…. அகி

ஓ நானா தியானம் பண்ணிட்டு இருந்தேன்
அது எப்படி அண்ணி நீங்க மட்டும் முழிச்சுக்கிட்டே தியானம் பண்ணுவீங்க அகிலன் கேட்டான்.

அதுவந்து அதுவந்து இன்று வார்த்தைகள் தத்தெடுக்க இனியனின் முகத்தை பார்த்தால் இசை

அகி அதான்அவ தியானம் பண்றதா சொல்றாளே போடா போய் வேலையை பாரு என்றான் இனியன்

சரி நான் போய் எல்லாருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வரேன்

அய்யோ எங்களுக்கு வேணாம் அண்ணி என்று இருவரும் ஒருசேர கத்தினார்கள்

ஏன் ரெண்டு பேரும் காபி குடிக்க மாட்டீங்களா

அதெல்லாம் குடிப்போம் அண்ணி ஆனா அத நாங்க காலையில தான் குடிப்போம்…

அதான் விடிஞ்சு நாலுமணி ஆகுதே….
அதற்கு அகியும் மகிழும் அண்ணி இது நட்ட நடு ராத்திரி இப்ப போய் எங்களை குடிக்க சொன்னா எப்படி…

நாங்க போய் தூங்க போறேன் பாய் பாய் என்று ஓடினார்கள் இருவரும்

கவியும் பண்ணைக்கு பால் வாங்க சென்றான் ..

இனியன் தமிழுக்கு அருகில் உள்ள சோபாவில் அமர்ந்தான்
தமிழ் காப்பிய எடுத்துக்கோ அப்படியே உங்க அண்ணனையும் எடுத்துக்க சொல்லு

இனியன் மறுபேச்சு ஏதும் பேசாமல் காப்பியை எடுத்துக் கொண்டான்

அவனின் சிந்தனை முழுவதும் சற்றுமுன் இசை இருந்த கோலத்திற்கு அவன் தான் காரணமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தது நேற்று இரவு நான் ரொம்ப ஓவரா பேசிட்டேன் அதனாலதான் அவ அப்படி இருந்தாலோ தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்

ரொம்ப நேரமாக தமிழ் ஒரே கணக்கை வைத்துக்கொண்டு இருப்பதை கண்ட இசை அவனருகில் சென்று

அதக்குடு தமிழ் நான் சொல்லி தரேன்

இல்ல அது வந்து வேணா

இங்கே பாரு தமிழ் எப்போதும் நமக்கு தெரியாததை மத்தவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும் அத விட்டுட்டு டைம் வேஸ்ட் பண்ணாத…

இப்படியே நீ தயங்கி தயங்கி இருந்தா உன்னால இந்த உலகத்தில எதையும் முழுசா கத்துக்க முடியாது.. உன்னோட உரிமையை நீதான் எடுத்துக்கணும் புரிஞ்சுதா

ஓகே அதை குடு என்று இசை அவனுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள் மிகவும் எளிமையாக அவனுக்கு பாடத்தை கற்றுக் கொடுத்தாள்..

நீங்க மேக்ஸ் டீச்சரா இவ்வளவு ஈசியா சொல்லித் தர்றீங்க என்று கேட்டான் தமிழ்

ஏன் மேக்ஸ் டீச்சரா இருந்தாதான் சொல்லித் தரணுமா என்ன

அப்படி எல்லாம் இல்ல சும்மாதான் கேட்டேன்

இவர்கள் இருவரின் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த இனியன் அதிர்ச்சி அடைந்தான்

இதுவரை தமிழ் அவனிடமே ஓரிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசி இருந்தான். இவ்வளவு நீளமாக அவன் பேசி அவன் பார்த்ததே இல்லை அவனுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கேட்பான் மத்தபடி எதுவும் யாரிடமும் பேச மாட்டான் இன்று அவன் மிக நீளமாக பேசியது ஆச்சரியமே

ஓகே தமிழ் நீ அடுத்த சம் பாரு உனக்கு மதிய சாப்பாட்டுக்கு என்ன வேணும்னு சொல்லு நான் செஞ்சு தரேன்

தமிழ் அவளை பாசமான கண்ணோட்டத்தோடு பார்த்தான் . இதுவரை யாருமே அவனிடம் இவ்வாறு கேட்டதில்லை.. அவனின் இரண்டு வயதில் தாயை இழந்ததால் தாய்ப்பாசம் பற்றி தெரிந்திருக்க அவனுக்கு வாய்ப்பில்லையே..

எனக்கு நீங்களே ஏதாவது செய்யுங்கள் என்று சொன்னான் தமிழ்

நீ சொல்லு தமிழ் இங்கே எல்லாருக்கும் என்ன புடிக்குமோ நீயே ஏதாவது சொல்லு

கொஞ்ச நேரம் யோசிப்பது போல் பாவனை செய்து
பெரிய அண்ணனுக்கு நாட்டுக்கோழி குழம்பு பிடிக்கும் சின்ன அண்ணனுக்கு நண்டு ரசம் பிடிக்கும் அகியும் மகியும் எது போட்டாலும் சாப்பிடுவாங்க நானும் அப்படிதான் சோ நீங்க எது வேணாலும் செய்யுங்க

எப்படி இவனுக்கு இதெல்லாம் தெரியுது என்று சிந்தித்தான் இனியன்,

எப்படி எல்லாருக்கும் பிடிச்சது இவனுக்கு தெரியுது இவனுக்கு என்ன பிடிக்கும் கூட எனக்கு தெரியாது இத்தனை நாளா இது கூட தெரிஞ்சுக்காமா நானிருந்து இருக்கனே..

எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி சமைச்சுட்டு மணியை பார்த்தால் அது 7 என்று காட்டியது தமிழ் போய் உன்னோட ரெண்டு அண்ணனை எழுப்பு மணி ஆயிடுச்சு பாரு

ஐயோ அவனுங்கள என்னால எழுப்ப முடியாது .. நீங்களே போய் எழுப்பி விடுங்க ..

கவி அண்ணி வேண்டாம் தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க ..

ஏன் அப்படி என்ன பண்ணுவாங்க என்று சொல்லிக்கொண்டு அவர்கள் அறையை நோக்கி சென்றாள்..

டேய் மகி. அகி எந்திரிங்க டா டைம் ஆச்சு சீக்கிரம் ஃபாஸ்ட் எழுந்திரிங்க… எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கனவுலகத்தில் இருந்தனர் இருவரும்

இப்படியே விட்டா சரிவராது என்று எண்ணிக்கொண்டு ஒரு பெரிய வாளியில் தண்ணியை தூக்க முடியாமல் தூக்கி வந்து அவர்கள் மேலே ஊற்றினாள்..
இருவரும் ஒரு சேர எழுந்து எவ அவ என்று வடிவேல் பாணியில் கூறினர்…

டேய் வரவர உங்க ரெண்டு பேருக்கும் மரியாதை ரொம்ப குறையுது பாத்துக்கோங்க சொல்லிட்டேன் என்றால் இசை

அய்யோ சாரி அண்ணி எங்களை தப்பா நினைச்சுக்காதீங்க..

இட்ஸ் ஓகே காலேஜுக்கு டைம் ஆகலையா சீக்கிரம் கிளம்புங்க

அண்ணி இன்னைக்கு எங்களுக்கு லீவு. சோ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் ப்ளீஸ்

நோ வே பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடணும் சீக்கிரம் வாங்க.. கிச்சனில் சமைத்துக் கொண்டே ஹிந்தி பாடலை முணுமுணுத்துக் கொண்டு இருந்தாள் இசை..

என்ன அண்ணி இந்தி சேனல் ஓடுது. தமிழ் சேனல் வராதா… இல்ல மகி நான் சின்ன வயசுல இருந்து பாம்பேல இருந்தேன் . சோ எனக்கு நிறைய ஹிந்தி பாட்டு தான் தெரியும்

இதைக்கேட்ட இனியன் அதிர்ச்சியடைந்தான் என்ன சொல்றா இவ அப்போ அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சென்னைல பார்த்தது இவ தானே…

வெளியில் கேட்டு திறக்கும் சத்தம் கேட்டது, அங்கே சென்றான் இனியன்

ஒருவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் . அவன் அறைந்த சத்தம்கேட்டு வெளியே வந்தால் இசை
டேய் கவி அவன அந்த மரத்தில் கட்டி போடுங்கடா

ஏண்டா செல்வா என்கிட்ட கைநீட்டி காசு வாங்கிட்டு என்னை ஏமாத்திட்டு தப்பிச் சுடலாம் நெனைச்சியா

என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது , ஒழுங்கா வாங்கின காசு வட்டியும் முதலுமா எடுத்து வை
இசை அங்க நிற்பதை திரும்பிப் பார்த்த செல்வாவை மேலும் இரண்டு அடி அடித்தான் இனியன்.

டேய் கவி முதல்ல அவள உள்ள போக சொல்லுடா

அண்ணி நீங்க கொஞ்சம் உள்ள போங்க அண்ணி..

அண்ணி இதெல்லாம் நீங்க பாத்தீங்கனா ரொம்ப பயப்படுவீங்க
ப்ளீஸ் அண்ணி கொஞ்சம் உள்ள போங்க

இதை விட நா அதிகமாக பார்த்துட்டேன் என்று மனதில் நினைத்து கொண்டாள்
கவி நீயும் உங்க அண்ணனும் என்ன தொழில் பண்றீங்க..
அது வந்து அண்ணி என்று இழுத்து தட்டுத்தடுமாறி பைனான்ஸ் அதாவது கந்து வட்டி என்று சொல்லுவாங்கள அந்த பிசினஸ் பண்றோம்

அப்புறம் அண்ணனுக்கு எங்களுக்கு நிறைய தோப்பு துறவு இருக்கு அண்ணி அங்க விவசாயம் பண்ணுவோம் தென்னை லோடு ஏற்றுவோம் … அஞ்சாறு ரைஸ்மில் இருக்க அண்ணி.. அப்புறம் புதுக்கோட்டையில் பெரிய காய்கறி சந்தை இருக்கு அண்ணி..

அதற்குள் மேலும் இரண்டு சாத்து சாத்தினான் செல்வாவை..

அண்ணி நாங்க சொல்றதை கொஞ்சம் கேளுங்க உள்ள போங்க.. அப்போதுதான் இனியனை முதல்முறையாக பார்த்தாள். கம்பீரமாக வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டு மீசையை முறுக்கி விட்டு இவளை திரும்பி கோபமாக முறைத்தான்

அதையெல்லாம் அவள் கண்டு கொள்ளவே இல்லை என்பதை அறிந்து பெரிய கட்டை ஒன்றை எடுத்து அவனை அடிக்க தொடங்கினான்

செல்வா வேண்டாம் தம்பி நான் எப்படியாவது காசு திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கெஞ்சத் தொடங்கினான்

இங்கே பாரு நீ மட்டும் காசு கொடுக்கல ஒரு வருஷத்துக்கு இங்கதான் வேலை செஞ்சா வேணும் புரிஞ்சுதா
போ போய் காசு தர வழியை பாரு

ஏன்டா இவளுக்கு வேற வேலையே இல்லையா ஒழுங்கா பொம்பள புள்ள மாதிரி அடக்க ஒடுக்கமா இருக்க சொல்லு.. என்று கத்தினான்

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இசை அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அதற்குமேலும் கோவமான இனியன் இசையை அடிப்பதற்கு கையை ஓங்கினான் அவன் ஓங்கிய கையை தடுத்து நிறுத்திய கவி

அண்ணி ப்ளீஸ் கொஞ்சம் உள்ள போங்க

அண்ணா எதுக்கு இவ்ளோ கோவப்படுற கொஞ்சம் கோவத்த குறை .அவனுக்கு இவன் எவ்ளோ மேல் என்று நின்னதால் இசை …

     யார் அவன் பார்ப்போம்
   கள்வனோ

   காதலனோ   

   கனவனோ

    கயவனோ

பார்ப்போம்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here