யுத்தகளத்தில் எதிரியின் பலத்தை அழித்துவிட்டு அவனை வென்று வாகை சூடும் தருணத்தில் எதிரி ஒற்றை வாள் கொண்டு உயித்தெழுந்து மீண்டு வரும்போது அவனை கையாள புது யூகம் அமைக்க பெருமளவு போராடவேண்டும்..
அப்படிப்பட்ட நிலையில் தான் இருந்தனர் சிவா, ஆதவ் மற்றும் அவனின் பெற்றோர் அந்த காணொளியில் “சுப்ரமணியம் டெக்ஸில் போதை பொருள் வைத்த இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர் உயர் அதிகாிகளுடன் ஏற்பட்ட மோதலில் அவரை பழிவாங்க செய்ததாக வாக்குமூலத்தில் பதிவாகியுள்ளது” என்ற தலைப்பு செய்தி ஓடிக்கொண்டிருந்தது..
சுப்ரமணியம் டெக்ஸின் முன் நிருபர்கள் பேட்டிக்காக காத்திருக்க கர்ம சிரத்தையாக அவர்கள் முன் வந்து நின்றார் குருமூர்த்தி அவருடன் நிஷாந்த்தையும் அழைத்து வந்திருந்தார்..
அவர்கள் வந்து நிற்க நிருபர்கள் கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்திருந்தனர்..
நிருபர் 1,” உங்க நிறுவனத்தில் இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்திருக்கு அதுக்கு என்ன சொல்ல போறீங்க நீங்க”
குரு,” எங்களோட இந்த நிறுவனத்தில் இந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்ததுக்கு நான் ரொம்ப வருத்தபடரேன் அதுக்காக எங்களோட சிரம் தாழ்ந்த மன்னிப்பையும் கேட்டுக்கிறோம்”
தனக்கு பேச பாயிண்ட் கிடைச்ச மகிழ்ச்சியில் அடுத்த நிருபர்,”நீங்க செய்யாத தப்புக்கு ஏன் மன்னிப்பு கேக்கறீங்க ஒருவேளை உங்களுக்கு அதுல தொடர்பு எதாச்சும் இருக்கா” என்றார் எள்ளலுடன்..
குருமூர்த்தி,”நான் மன்னிப்பு கேட்டதால நீங்க அப்படி நினைச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்லை.. இந்த விஷயத்தில் என் நிர்வாகத்தில் இருக்கரவங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் என் மக்களை நான் சரியா கவனிக்காததுக்கும் தான் என்னோட மன்னிப்பு” என்றார்.
இந்த பதிலிலேயே நீ எத்தன் என்றால் நான் எத்தனுக்கு எத்தன் என்று நிரூபித்து இருந்தார் குருமூர்த்தி..
அடுத்த நிருபர்,”இவ்ளோ நாள் இந்தியா வராம நீங்க இப்போ வந்து இருக்கரதுக்கு என்ன காரணம்.. இந்தப் பிரச்சனைக்காக தான் வந்து இருக்கீங்களா???”
குருமூர்த்தி,”வெல் நானே இன்னும் கொஞ்சநாள்ல இங்க வரணும்னு நினச்சிருந்தேன் அண்ட் இனிமே இங்க இருந்து தான் எங்களோட மத்த தொழிலையும் பாக்கபோறோம் அதுக்குள்ள இப்படி நடந்துருச்சு” என்றார் களம் தேர்ந்த தொழிலதிபராக..
அதனை தொடர்ந்து குருமூர்த்தி நானே உங்களை கூப்பிடலாம்னு நினைச்சேன் இப்போ நீங்களே எங்களை தேடி வந்திருக்கீங்க சோ உங்க கிட்ட இந்த அறிவிப்பை சொல்லாம்னு இருக்கேன் என்றவர்,” இனிமே இந்த சுப்ரமணியம் டெக்ஸோட புது நிர்வாகி என் பையன் நிஷாந்த் தான்” என்றவர் தன் மகனை ஓரிரு வார்ததைகள் பேசுமாறு பணித்தார்..
அனைவருக்கும் முன் வந்த நிஷாந்த்,” குட் ஈவெனிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்று பேச தொடங்கியவன் தான் பொறுப்பேற்று இருக்கும் இந்த நிறுவனத்தில் இதற்கு மேல் எந்த அசம்பாவிதமும் நடக்காது என்றும் தன் மேற்பார்வையில் பரம்பரை தொழிலுக்கு எந்த கலங்கமும் வராது”என்றும் ஒரு கர்வ புன்னகையுடன் பேட்டியை நிறைவு செய்தான்..
நிஷாந்த் உள்ளே தன் அறைக்குள் நுழைந்தவுடன்,”அப்பா என்ன திடீர்னு இந்த அணெளன்ஸ்மெண்ட்”
குருமூர்த்தி ஆளுமை தொனியில்,”என்னைக்கா இருந்தாலும் நீ தான் பாக்க போற அதான் இப்போவே அநௌன்ஸ்மெண்ட், இனிமே நீ வச்சு விளையாட இந்த சுப்ரமணியம் டெக்ஸ் ஒன்னும் கைபொம்மை இல்லை”என்றார்..
அவரின் அந்த தொனியே சொல்லாமல் சொல்லியது அவரின் எண்ணத்தை அதற்கேற்றாற்போல் அவனும் தலையசைத்து அதை ஆமோதித்திருந்தான்..
இது தான் குருமூர்த்தியின் ஸ்டைல் எதிரி வகுக்கும் யூகத்தை அவர்களுக்கு தெரியாமலேயே உடைப்பது அதே சமயத்தில் தன் மகனுக்கு அந்த நிர்வாக பொறுப்பை குடுத்து அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தியிறுந்தார்..
குருமூர்த்தியோ, இத்தனை கைதேர்ந்த தொழிலதிபராக அன்று இல்லாமல் போனதே அன்றைய தோல்விக்கு காரணம் இதை அறிய முற்படாமல் தன் பூர்வீக தொழிலை இங்கிருந்து நடத்த முடியாமல் போனதுக்கு சிவாவின் குடும்பம் தான் காரணம் என நினைத்து வஞ்சம்
வளர்த்துக்கொண்டிருக்கிறார்..
அங்கோ இந்த பேட்டியை பார்த்திருந்தவர்களுக்கு ஒன்று தெள்ள தெளிவாக புரிந்தது அவர்கள் இனி ஓயப்போவதில்லை என்று மற்றவர்களின் முகத்தில் இருந்த குழப்ப ரேகையை பார்த்தவன் ஆழ்மூச்செடுத்து பேச ஆரம்பித்தான்..
சிவா,” ஆளு செமையா பேட்டி குடுத்து இருக்கார்ல டா” என்றான் ஆதவை பார்த்து
ஆதவ் கடுப்புடன்,”அவர் அதுல சொல்ற இண்டிரெக்ட் மெசேஜ் யாருக்குனு தெரியுமா?” என்றான்..
சிவா,” ஏன் தெரியாம எல்லாம் நமக்கு தான் என்ன ஒன்னு அவர் பையன் மாதிரி இல்லாம எல்லாத்தையும் சொல்லிட்டே செய்யராரு.. பட் அவரோட நேர்மை எனக்கு புடிச்சு இருக்கு” என்றான்..
அப்போது தான் மோகன்ராஜ்,”இப்போ தான் சிவா நீ கவனமாக இருக்கனும்..இவ்வளோ நாள் இல்லாம இப்போ திரும்பி வந்திருக்காங்கனா அவங்களுக்கும் நம்மளை பத்தி தெரிஞ்சிருக்கும் அதுவும் இல்லாம இந்த அநௌன்ஸ்மெண்ட் கொஞ்சம் நெருடலாக படுது பாத்துக்கோ”
ராமச்சந்திரன்,” ஆமாம்பா அன்னைக்கு நாங்க பாத்த குருமூர்த்திக்கும் இப்போ பாக்கர குருமூர்த்திக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு” என்ற கூடுதல் தகவலை தந்தார்..
சிவா,”நான் தப்பு செய்யாதவரை யாருக்கும் பயப்படமாட்டேன் அதே சமயத்துல எனக்கு நேருக்கு நேர் மோதரவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. சோ இனிமே இதை நான் பாத்துக்கிறேன் நீங்க கவலைப்படாதீங்க”
ஆதவுக்கு அவனோடு தனியே பேச வேண்டியிருப்பதால் அவன் அப்பாவிடம்,”அப்பா நீங்க அம்மாவை கூப்பிட்டு கிளம்புங்க நானும் சிவாவும் கொஞ்சம் வெளிய போறோம்” என்றான்.
அதற்குள் உள்ளே வந்த லட்சுமி அனைவரையும் சாப்பிட அழைத்தார்..
அனைவரும் பேசிக்கொண்டே உண்டு முடித்துவிட்டு ஆதவ் பெற்றோர் முதலில் கிளம்ப பின் தொடர்ந்து சிவா,”அம்மா நான் நைட்டு வர மாட்டேன் சோ நீங்க வெயிட் பண்ணாதீங்க” என்க ஆதவ்வும் சரி கிளம்பரோம் மாமா அத்தை வரேன் என்றவன் ஜானுவிடம் வாண்டு வரட்டா என்று தலையில் செல்லமாக தட்டிவிட்டு விடைபெற்றான்..
வெளியே வந்த சிவாவை பி.எம்.டபிள்யூ வில் உள்ளே தள்ளி காரை எடுத்தான் ஆதவ்..
உள்ளே இருந்த சிவா,”டேய் என்னடா பொண்ண கடத்தர மாதிரி கூப்பிடுட்டு போயிட்டு இருக்க” என்றான் சிரியாமல்..
ஆதவ்,” டேய் என்னடா லவ் பண்ண ஆரம்பிச்சதும் ரோமியோ மாதிரி ஆயிட்டயா.. சின்ன விசயத்த கூட சீரியஸா பாக்கணும்னு சொல்லிட்டு இப்போ அந்த ஆளு பேட்டி குடுத்தததுக்கு அப்பறம் தான் நீ ரொம்ப ரிலாக்ஸா இருக்கடா.. அந்த நிஷாந்த் பேச்சிலே ஒரு கர்வம் இருக்கேடா”
சிவா,”காம் டவுன் மச்சி… அவங்களோட இந்த பேட்டியே நம்மள தூண்டிவிட தான் அப்பறம் நாம என்ன பண்ணனும்னு நாம தான் முடிவு பண்ணனும்னு மத்தவங்க இல்ல புரியுதா” என்றான் கண்ணடித்தபடி..
ஆதவ்,” என்ன நிதானமா அடிக்க போறியா??”
சிவா,”டேய் எனக்கென்ன வேலையே இல்லையா? எப்போ பாரு இவனுங்க பின்னாடி சுத்தறதுக்கு..”
ஆதவ்,”என்னடா அந்நியன் மாதிரியும் அம்பி மாதிரியும் மாறி மாறி பேசற” என்றான் நெஞ்சில் ஒற்றை கையை வைத்தபடி..
சிவா,”ஹா ஹா… ஐயா இப்போ ரெமோ டா…” என்றான் காதல் தளும்ப..
ஆதவ்,”மச்சான் ஒரே நேரத்துல அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி தராத பாடி தாங்காது”
சிவா,”சரி சரி.. ஜோக்ஸ் அபார்ட் அந்த குருமூர்த்தி அவர் பையன் மாதிரி இல்லை நேருக்கு நேர் மோதர மாதிரி தான் தெரியுது சோ எது வந்தாலும் பாத்துக்கலாம்.. அப்பறம் நம்மளா யார் கூடவும் சண்ட போட போறதில்ல அதேசமயம் நம்மள அழிக்க நினைக்கறவங்களையும் நம்ம சும்மா விட போறதில்ல”
மேலும் சிவா,”இப்போதைக்கு ஹாஸ்பிடல் போ உன் தங்கச்சியை பாக்கணும்”
ஆதவ்,” உண்மையாவே நீ ரெமோ தான்டா”
சிவா,”ஆனா நீ உண்மையில டியூப் லைட் டா.. இப்படி இருந்தா என் தங்கச்சி எப்படி உங்கிட்ட குப்பை கொட்ட போறாளோ” என்று ஆதவின் நாடியை சரியாக பிடித்தான்..
ஆதவ்,”வாட்..” என காரை ப்ரேக் அடித்து நிறுத்தியிருந்தான்..
அவனின் ஷாக்கை கவனித்த சிவா தான்,”உன்ன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு எனக்கு தங்கச்சி தானே அதான் சொன்னேன் ஆமா நீயேன் ஷாக் ஆன??” என பாயின்டை பிடித்தான்..
ஆதவ்,”நத்திங்” என்றவன் அதற்கு மேல் தாமதிக்காமல் காரை கிளப்பிக்கொண்டு வந்து ஹாஸ்பிடலில் நிறுத்தினான்..
ஆதவ் காரை பார்க் பண்ணிவிட்டு வருவதற்குள் உள்ளே நுழைந்த சிவா ஆராதனாவின் பெற்றோரிடம் விசாரித்துவிட்டு அவர்கள் தங்குவதற்கு ஹாஸ்பிடல் நிர்வாகத்திடம் பேசி ஒரு ரூம் அரேஞ்ச் செய்துவிட்டு வந்து அவர்களை அங்கே சென்று ரெஸ்ட் எடுக்க சொன்னான்..
ராஜா,”இல்ல தம்பி.. பாப்பாவை பாத்துக்கணும்ல நாங்க இங்கேயே இருக்கோம்” என்றார்.
சிவா,” நீங்க காலைல இருந்து இங்க தான் இருக்கீங்க நீங்க போயி ரெஸ்ட் எடுங்க நான் பாத்துக்கிறேன்”
பார்வதி தான் சங்கடமாக,” இல்லை தம்பி நாங்களே பாத்துக்கறோம்” என்றார்..
சிவா,” எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் இப்படி தான் சொல்லுவீங்களா அத்தை”
அவன் கேள்வியில் அவன் மனம் அவர்களுக்கு தெளிவாக புரிய பதில் கூறாமல் அமைதியாக இருந்தனர் காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்த ஆதவ்வும் அனைத்து சம்பாசனைகளையும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான்…
மேலும் சிவா,’ எனக்கு துணைக்கு ஆதவ் இருக்கான்’ நீங்க போயி நாலு மணி நேரமாவது ரெஸ்ட் எடுங்க என்று அவர்களை கட்டாயப்படுத்தி அனுப்பினான்..
அவர்கள் சென்றதும் ஆதவ் சீரியசாக முகத்தை வைத்துகொண்டு சிவாவின் தோள் மீது கை போட்டுகொண்டு,” மச்சான் எலி ஏன் டிரஸ் இல்லாம ஓடுதுனு இப்போ தான் தெரியுது என்றான்” அவனை கண்டுகொண்டவனாய்..
சிவா,”சரி சரி ரகசியம் நமக்குள்ளேயே இருக்கட்டும்…நீ இங்கேயே இரு நான் உள்ள போயி தனுவை பாத்துட்டு வரேன்”
ஆதவ்,”சீக்கிரம் வாடா அங்கேயே டேரா போட்டறாத..”
சிவா,” வயித்தெரிச்சல்.. ம்ம்.. இரு உன்ன வந்து வச்சுக்கிறேன்” என்றவன் காதல் மன்னனாக நொடியில் உள்ளே ஓட. ஆதவ்வும் சிவா தன்னை கண்டுகொண்டானோ என்ற சிந்தனையில் ஆழ்ந்தான்..
உள்ளே சென்ற சிவா அங்கே இருந்த சேரில் அமர்ந்து ஆராவின் தலையை வருடிகொண்டிருந்தான்..
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தான் என தெரியாது திடீரென்று ஆரா கண்விழிக்க அவளையே இமைக்காது பார்த்தவன் அவளது பிறை போன்ற நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்..
பெண்ணவள் முகத்தில் வெட்கம் கலந்த சிரிப்பை படரவிட அதை காதலோடு பார்த்திருந்தான் அந்த கள்வன்…