சிவாவின் அலைப்பேசி ஒலிக்க அதை எடுத்து பார்த்தவனுக்கு சொல்லொணா கோபம் எழும்பியது அப்படி யாருனு யோசிக்கறீங்களா???
இது வில்லனுனுங்க இல்ல கரடிங்க.. அதுவும் சிவ பூஜை கரடிங்க…
அழைப்பை ஏற்ற சிவா,”ப்ப்ப்ச்…என்னடா சொல்லு..”
மறுமுனை கலகலவென சிரித்தது அதை கேட்டு கடுப்பின் உச்சிக்கே சென்றான் சிவா..
ஆரா அவனின் கையணைப்பில் இருந்தவாறே யாரு என சைகையில் கேட்க அவன் தொலைபேசியின் தொடுதிரையை செவியில் இருந்து விலக்கி காண்பித்தான்…
அதில் ஒளிர்ந்த பெயரை கண்டு கலுக்கென சிரித்தாள்..
சிவா,”டேய் மச்சான்.. உன் தங்கச்சி கூட சிரிக்கிறா டா.. ஒரு கால் மணி நேரம் சேந்த மாதிரி உன் தங்கச்சி கூட இருந்தது உனக்கு பொறுக்கலையா??” என்றான்..
எதிர்முனையில் ஆதவ்,” மென் சிரிப்புடனே… மச்சி எனக்கும் உன் பீலிங் புரியுது ஆனா பாரேன் டெண்டர் ஒர்க் எந்த ஸ்டேஜில் இருக்குனு பாக்கரதுக்காக கவர்ன்மென்ட் அபீஷியல் வராங்க நீ இல்லாம என்னால போக முடியாதே ..” என்றான் கேலி குறையாமல்…
சிவா,”ச்ச.. அதெப்படி மறந்தேன் சரி வரேன்..”
ஆரா அவன் அலைபேசி உரையாடலை கேட்டவள் அவன் இங்கிருந்து கிளம்ப போகிறான் என்பதை உணர்ந்த உடனே முகம் வாடி போனாள்..
அவளின் முகமாற்றத்தை கண்ட சிவா அவளை நெருங்கி தோள் மீது கை போட்டு அணைத்தவன்…,”அதெப்படி டி உன் பக்கத்துல இருக்கும் போது என்ன அப்டியே கட்டி போட்டு வச்சுக்கர போகவே மனசில்லை “என்று கண்ணக்குழி விழ இதழ்கடையோரம் புன்னகை அரும்ப கண்ணடித்து புருவம் உயர்த்தி குறும்புடன் பார்த்தான் அந்த மாயவன்..
அவனழகில் சொக்கிய பெண்ணவளும் அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து அவள் சொக்கி விழுந்த அந்த கண்ணக்குழியில் மென்மையாக முத்தமிட்டாள்.. அந்த காதல் தருணம் ஆறடி ஆடவனையும் வெட்கப்பட வைத்தது..
ஆரா விழியெடுக்காமல் சிவாவை பார்த்திருக்க, சிவாவோ அவள் முன்னுச்சியில் முத்தமிட்டு அவளை விலக்கியவன்,’ செல்லம் ஒரு மூணு மணி நேரம் மீட்டிங் ஒன்னு இருக்குடி போயிட்டு சீக்கிரம் வந்துடரேன்’ என்று கெஞ்சலாய் கேட்க அவளும் தலையசைத்து சம்மதித்தாள்..
எத்தனை கர்வமாய் திரிந்தவன் இன்று பாவையவளின் கண்ணசைவிற்கும் அடிபணிவதேனோ.. ஆம் இவையனைத்தும் ஆத்மாத்தமான காதலின் வெளிப்பாடுகள் தானே ..
அவளிடம் இருந்து வெளியே வந்தவனை இழுத்துக்கொண்டு காரில் தள்ளிய ஆதவ் அவன் வயிற்றில் செல்லமாய் குத்தி அவனை கேலி செய்தான்..,நண்பனின் கேலியை கண்டுகொள்ளாது தன் காரை கிளப்பினான் சிவா..
மீட்டிங்கும் குறித்த நேரத்தில் ஆரம்பிக்க பாலம் கட்டும் பணி எந்த நிலையில் உள்ளது அதற்கு அடுத்து செய்ய வேண்டிய பணியின் கால அட்டவணை அனைத்தையும் விளக்கி கூறி கொண்டிருந்தனர் சிவாவும் ஆதவ்வும்..
அந்த கூட்டத்தில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவர்,”தம்பி அதெல்லாம் சரி எங்களுக்கு இன்னும் 20 நாள் ல வேலை முடியணும் அதுக்கப்பறம் எங்க தலைவர் வராரு அவரு வர அன்னிக்கே திறப்பு விழா வச்சிரலாம்னு இருக்கோம் இதை சொல்றதுக்கு தான் இந்த அவசர மீட்டிங் வச்சதே” என்று அசராமல் குண்டை தூக்கி போட்டார்.
இதற்கிடையில் ஆதவ் போன் அலற எக்ஸ்கியூஸ்மி என்று சற்று தள்ளி அழைப்பை உயிர்பித்தலில் மறுமுனையில்,”என்ன தம்பி சௌக்கியமா??” என்ற கம்பீர குரல் ஒலித்தது.
சில நொடி புருவம் நீவி குரலை உள்வாங்கி கிரகித்தவனுக்கு அந்த கம்பீரகுரலுக்கு சொந்தக்காரன் யாரென்று புரிந்தது..
ஆதவ் ,”எங்களை வாழவைக்க நீங்க இருக்கும் போது எங்க சௌக்கியத்துக்கு என்ன குறை மிஸ்டர் குருமூர்த்தி சார்” என்றான் அவரழைத்த அதே கர்வ தொனியில்..,
குரு,”இன்டர்ஸ்டிங் என்னோட குரலை வச்சே என்ன கண்டுபிடிச்சு இருக்கீங்க குட்.., அட இப்போ நான் ஏன் கால் பண்ணிருக்கேனு சொல்ல மறந்துட்டனே அதான் தம்பி அந்த பிராஜெக்ட் சொன்ன நேரத்துல உங்களால முடிக்க முடியும்ல .., ஏன் கேக்கறேன் அப்டின்னா போன வாரம் மினிஸ்டர் கூட பேசினேன் அப்போ தான் அவரு சொன்னாரு பாலம் திறப்புவிழாவுக்கு தான் வருவேன் அப்படினாரு அதான் விழாவை எப்படி சீக்கிரம் வைக்கணும்னு வழி சொன்னேன் பின்ன ரைட் பிரதர்ஸ் மாதிரி இருக்கும் போது முடிக்க முடியாதா என்ன??” என்று கொஞ்சமும் சளைக்காமல் வன்மம் தெரியாவண்ணம் பேசிக்கொண்டிருந்தார்.
ஆதவுக்கு அவரின் நோக்கம் நன்றாக புரிந்து போனது மேலும் அவருக்கு பேச வாய்ப்பளிக்காமல்,” சூப்பர் சார் எங்க மேல எங்களைவிட அதிகமா நம்பிக்கை வச்சதுக்கு.., அண்ட் தேங்க்ஸ் பார் காலிங் பை” என்று அழைப்பை துண்டித்தான்.
இதற்கிடையில் அந்த பிரமுகர்க்கு எந்த பதிலும் சொல்லாமல் சிவா யோசனையில் இருந்தான்., அவனருகில் வந்த ஆதவ் நண்பனின் கரம் கோர்த்து அவனுக்கு தன் எண்ணத்தை குறிப்பால் உணர்த்த அவர் சொன்ன தேதிக்கு முடித்து தருவதாக ஒப்புக்கொண்டனர் நண்பர்கள்.
மீட்டிங் முடிந்து டையை தளர்த்திவிட்டு இருக்கையில் அமர்ந்து பலத்த யோசனையில் ஆழ்ந்து இருந்தான் சிவா.
அவனுக்கு எதிரில் டேபிளில் சாய்ந்து கைகட்டிக்கொண்டு சிவாவை கூர்ந்து பார்த்தவன் அந்த அமைதியை சற்றே தொண்டைய செறுமி கலைத்து,”சிவா நான் அவசரபட்டுடேனு உனக்கு தோனுதா?” என்றான்.
சிவா டேபிளில் கை ஊன்றி நின்றிருந்த ஆதவ் கரம் பற்றி,” இல்லை மச்சான் எப்படி அந்த டைமுக்குள்ள முடிக்கரதுனு சீரியஸ் திங்கிங் என்றான்” அவனுக்கே உண்டான புருவம் உயர்த்தி இதழ்கடையில் புன்னகையுடன்.,
ஆதவ்,” சிவா ஐ நோ இது கஷ்டமான விஷயம் தான்.., மே பி இந்த டைம்க்குள்ள முடிக்க சாப்பாடு தூக்கம் எல்லாம் இல்லாம வெறியோடு உழைக்கணும்.., இதெல்லாம் நமக்கு புதுசு இல்லைனாலும் ஆராவை நீ ரொம்ப மிஸ் பண்ண வேண்டி வருமே அதுக்கு என்னடா பண்ணுவ இன்னும் சொல்ல போனா பாக்க மட்டும் இல்லை பேச கூட டைம் இருக்காது” என்று கவலை தோய்ந்த குரலில் உரைத்தான்.
சிவா,”ம்ம்.. ஒத்துக்கிறேன் டா ஏதோ கொஞ்சமா கொஞ்சமே கொஞ்சமா காதல் மன்னனா மாறிட்டேன்னு, ஆனாலும் இந்த சிவா எப்பவுமே பிசினஸ்மேன் தான்டா..,அவ புரிஞ்சுப்பாடா.., சரி வா வேலையை பாப்போம் இனி நம்ம டைம் நமக்கே இல்லை”
ஆதவ்,”எப்பவும் அவங்க ஸ்கெட்ச் போடுவாங்க,இப்போ ஸ்கெட்ச் நாம போட போறோம்., யூ நோ வாட் ஐ மீன்.,”
சிவா,” ஹ்ம்ம் …,லெட்ஸ் பிகின் மேன்..” என்று பணியில் மூழ்க ஆரம்பித்தனர்.
நண்பர்கள் இருவரும் தொழில் நிமித்தமாக கிளம்பிய சற்று நேரத்திலேயே சிவாவின் பெற்றோரும் கிளம்பி சென்றிருந்தனர்..
ஜானுவுக்கும் கல்லூரி சீக்கிரம் முடிந்து இருந்தபடியால் ஆராவை பார்க்க வந்திருந்தாள் பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு இருவரும் காதல் கதையை பேச தொடங்கினர் ஜானுவுக்கோ தன் அண்ணனின் காதலை எண்ணி உளம் மகிழ்ந்தாலும் தன் காதலை நினைத்து பார்க்க விழியோரம் நீர் துளிர்த்தது.
ஜானுவை ஆரம்பத்தில் இருந்தே கவனித்த ஆராவிற்கு ஆதவ் பற்றி பேசும்போது அவள் கண்களில் தென்பட்ட மாறுதல் ஏதோ உணர்த்த அதை எவ்வாறு துப்பறிவது என்று யோசித்த நொடியே ஆதவ் வேலையில் பிசியாகி உள்ளதால் சிவா அடிக்கடி வரமாட்டா என்பதை தங்கைக்கு சொல்வதற்கு கால் செய்திருந்தான்.
அதை கவனித்துவிட்ட ஆரா அவளை சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்த ஜானுவிடம் அண்ணா கூட நான் கோவிச்சிக்கிட்டேன் பேசமாட்டேன் நீயே பேசி என்னனு கேட்டு சொல்லு என கால் அட்டண்ட் பண்ணி ஜானுவின் கையில் திணித்தாள்.
ஆதவ் குரல் கேட்ட நொடியே மடை திறந்த வெள்ளம் போல் அவள் கண்ணில் வெள்ளம் ஊற்றெடுத்தது ஆராவின் முன்னால் எதுவும் காண்பிக்க இயலாமல் வெளியே செல்ல முனைய ஆரா அவள் கையை பற்றி இழுத்து நிறுத்தினாள் அவளை செய்கையில் இப்போது எனக்கு அனைத்தும் தெரிந்தாக வேண்டும் என்ற உறுதி இருந்தது..
மறுமுனையில் குரல் எதுவும் வராமல் இருக்க ஆரா லைன்ல இருக்கியா?? எனும் போதே விசும்பல் ஒலி கேட்க ஆதவ்க்கு புரிந்தது எதிர்முனையில் தன்னவள் என்று .
ஆதவ் சம்பிரதாயமாக ,”ஆரா இல்லை ” என கேட்டான்
ஜானு,”ம்ம் உங்க கூட பேசமாட்டங்களாமா அதான் என்கிட்ட குடுத்து பேச சொன்னாங்க” என்றாள்.
ம்ம் இது என்ன புதுசா என யோசிக்கும் போதே ஆரா தங்களை சந்தேகிக்கிறாள் என்று ஆதவ்விற்கு புரிந்தது..
இந்த காதல் நட்புக்கு எதிரானது என அவன் நினைத்து கொண்டிருக்க இப்போது ஜானுவின் நடவடிக்கையில் ஆராவிற்கு விஷயம் தெரிய வந்தால் கண்டிப்பாக சிவாவுக்கும் தெரியவரும் அப்போது நட்பில் விரிசல் வரலாம் என்னும் போதே ஜானுவின் மீது கோபம் துளிர்த்தது ..
ஆதவ்,”ம்ம் சோ இப்போ நமக்குள்ள நடக்குறதை மத்தவங்களுக்கு படம் போட்டு காட்ட ஆரம்பிச்சிட்டாயா என்ன?? கடைசிவரை நான் சொல்ற எதையும் கேக்க கூடாதுனு முடிவு எடுத்த இருக்கியா? என்று அவன் கேட்கும் போதே அந்த குரலில் தொனித்த கடுமை அவளுக்கு நன்றாகவே விளங்கியது.
அதற்குள் டவர் இல்லை என ஆராவுக்கு சைகை காட்டிவிட்டு போன் பேசியபடியே வெளியே வந்த ஜானு,”வெளிச்சம் போட்டு காட்டுற அளவுக்கு நமக்குள்ளஅப்படிஎன்ன நடந்து இருக்குனு தெரிஞ்சுக்கலாமா? அப்பறம் இன்னொரு விஷயம் உங்க பேச்சை கேக்கறதுனாலதான் அமைதியா இருக்கேனு உங்களுக்கே தெரியும் இனிமே கோவமா இருந்தாலும் என் கிட்ட கடுப்படிக்காதீங்க??”என பொரிந்தாள்.
ஆதவ்,”சரி நம்ம பிரச்னையை விடு நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன் என சிவா பற்றி சொல்ல வேண்டிய தகவலை குடுத்துவிட்டு,ம்ம் ஒன்மோர்திங் நம்மளை ஆரா சந்தேகப்படறா.., நமக்குள்ள ஏதோ இருக்குனு, நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்னு நினைக்கறேன் “
ஜானு,” எனக்கு நீங்க நினைக்கற எல்லாமே புரியறது தான் என் பிரச்சனையே” என அவனிடம் சிடுசிடுத்துவிட்டு அவன் பதில் எதிர்பாராமல் அழைப்பை துண்டித்தாள்.
ஆதவ்விற்கோ,’நாம இவ கிட்ட கோவப்பட்டமா இவ நம்ம கிட்ட கோவப்பட்டாளா தெரியலையே?? ஆக மொத்தம் கடைசிவரை நமக்கு எதுவும் விளங்க போவதில்லை’என நினைத்து கொண்டிருந்தான்.
ஆதவிடம் பேசிவிட்டு உள்ளே வந்த ஜானு ஆதவ் உரைத்த விஷயத்தை மட்டும் கூறிவிட்டு அவசர வேலை இருப்பதாக கூறிவிட்டு உடனடியாக கிளம்பினாள் அவளுக்கு தெரியும் மேலும் அங்கே நின்றால் தன் வாயாலேயே விஷயத்தை ஆரா கறக்க முயல்வாள் என்று அதனாலேயே இந்த ஓட்டம்.
பாவம் ஜானு காதலுக்காக காதலனுடனே போராடிக்கொண்டிருக்க இனி மற்றவர்களுடனும் போராடவேண்டும்…
அதன் பின்னே நண்பர்கள் இருவரும் வேலையில் திட்டமிட்டு செயல்பட தொடங்கினர்.., இங்கே ஒருவன் சாணக்கியன் என்றால் இன்னொருவன் சத்திரியன் இனி இவர்களின் ஆட்டம் போர்க்களம் போன்றதே..
களம் காண போகும் இவர்களுக்கு வெற்றி கிட்டுமா??