33. என்னவள் நீதானே

0
516

என்ன தான் நண்பர்கள் சவால் விட்டு களத்தில் குதித்து இருந்தாலும் குருமூர்த்தியின் சவாலை எதிர்கொள்வது அத்தனை சுலபமாய் இல்லை இந்த நண்பர்களுக்கு..

அன்று பாரத போர் எவ்வாறு நடந்ததோ அதே போல இவர்களுக்குள்ளும் ஒரு பாரதபோர் நடந்து கொண்டிருக்கிறது இதில் ஒருவர் பாண்டவர் என்றால் மற்றவர் கௌரவர் யுத்த களத்தில் இருவரும் எவருக்கும் சளைத்தவர் அல்ல..

இரவு பகல் பாராது நண்பர்கள் உழைக்க அவர்களின் வியூகத்தை உடைக்க எதிரணியும் தூக்கம் மறந்து உழைத்து கொண்டிருந்தது..

இதற்கிடையில் டெண்டர் வேலையும் முழு மூச்சாக நடந்து கொண்டிருந்தது அதுவும் பல தடங்கல் தாண்டியே..

ஒவ்வொரு நாளின் விடியலும் இன்று என்ன புது பிரச்சினை என்ற எதிர்பார்ப்புடன் தான் நண்பர்களுக்கு விடிந்தது..

ஒரு நாள் பணியாளர் ஒரு நாள் மெசின் ஒரு நாள் மெட்டீரியல் என்று நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் பிரச்சினைகளை எதிர்கொண்டு சாதனை களம் படைக்க துவங்கிவிட்டனர் நண்பர்கள்..

இதற்கிடையில் ஆராதனாவும் ஓரளவு உடல்நலம் தேறி வீட்டிற்கு வந்துவிட்டாள்..
இத்தனை நாளில் சிவா அவளை தொடர்பு கொண்டு பேசியது ஒரு நாள் மட்டுமே அதுவும் அவள் டிஸ்சார்ஜ் ஆகும் போது நலம் விசாரிக்கவும் அவன் சொல்லும் வரை வெளியில் எங்கும் செல்ல கூடாது என்று அறிவுறுத்த மட்டுமே..

சிவா நினைத்தது போல் குருமூர்த்தி இல்லை, அதனாலேயே இத்தனை முன்னெச்சரிக்கை, அவர் எந்த இடத்திலும் பெண்களை இழுப்பதில்லை இருந்தாலும் எதிரிக்கு நூலளவு வாய்ப்பு கொடுத்தால் நாம் கடலளவு சரியும் அபாயம் உள்ளது அதனால் தான் இந்த அளவு எச்சரிக்கை..

சிவா மேற்கொண்டு ராஜாவிடம் (ஆரா அப்பா) அவளை பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தவும் மறக்கவில்லை..

நிஷாந்த் கூட தந்தை சொல்லுக்கு ஏற்ற மாதிரி நடக்க ஆரம்பித்தான்..இருந்தும் எதிரிகளை தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கம் அவனுள் நெருப்பாய் கனன்றது..

அன்று அலுவல் வேலையாக நிஷாந்த் பைலில் மூழ்கியிருக்க கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் ருத்ரா..

ருத்ரா,” என்ன நிஷாந்த் எப்படி இருக்க??..”

” ம்ம்..குட் நீ எப்படி இருக்க”

“எனக்கென்ன நான் நல்லா இருக்கேன்.. நீயும் இந்த சிவாவையும் ஆதவையும் எதாச்சும் பண்ணுவனு பாத்துட்டு இருக்கேன்”

நிஷாந்த்,”அதான் டாட் எல்லாம் பாத்துட்டு இருக்காரே அப்பறம் என்ன”

“நீங்க எந்த பக்கம் பால் போட்டாலும் அவன் அடிக்கரானே அங்க ரெண்டு பேட்ஸ் மேன் பூந்து விளையாடரானுங்க ஆனா இங்க பவுலர் ஃபீல்டர் எல்லாமே ஒருத்தர் தான் அப்போ நமக்கு வெற்றி எந்த அளவுல இருக்குனு நான் சொல்லி நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை” என்று அவன் நெஞ்சில் நஞ்சை விதைத்து கொண்டிருந்தாள் ருத்ரா.

நிஷாந்த்,”அதான் டாட் அவரே பாத்துக்கறேனு சொல்லிட்டாரே அப்பறம் நாம என்ன பண்ண முடியும்?”

“என்ன நிஷாந்த் இப்படி சொல்ற..? அப்போ நீ இதுலயும் டம்மி தானா?” என அவனுள் கணன்ற நெருப்பிற்கு தூபம் போட்டு கொண்டிருந்தாள் ருத்ரா.

“ப்ப்ச்ச் என்ன ருத்ரா பண்ணனும்ங்கிற”

“சிம்பிள் அவனை நீ ஜெயிக்கணும் அப்படினா நேருக்கு நேர் மோதறதை விட உறவாடி தான் ஜெயிக்கணும்.. சோ எதிரிங்க ரெண்டு பேரும் மாமா மச்சான் ஆகுங்க..”

நிஷாந்த்,”வாட் யூ மீன்??”

“எஸ்.. நீ ஏன் சிவா ஓட தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க கூடாது..”

” சோ நான் கோழைனு முடிவு பண்ணிட்ட போல.. அதான் பொண்ணை வச்சு மிரட்ட சொல்றியா.. இதுவரை நான் எத்தனையோ தப்பு செஞ்சு இருக்கலாம் இனிமே எதிரிங்களை நேருக்கு நேர் தான் அடிக்க போறேன் காட் இட்..” என கர்ஜித்தான்..

அவன் கோபத்தை கண்டுகொண்ட ருத்ரா”ஹே சில் மேன் நான் என்ன அவளை கடத்த சொன்னேனா? இல்லை கொல்ல சொன்னேனா? அவளை பாரு புடிச்சு இருந்தா உங்க மாம் அண்ட் டாட் கிட்ட சொல்லி பொண்ணு பாக்க சொல்லு” என ஜானுவின் புகைப்படத்தை காண்பித்தாள்..

அந்த புகை படத்தில் ரவிவர்மன் செதுக்கிய தூரிகை சிற்பம் போல் எழிலோவியமாய் இருந்தாள் ஜானு.. அவளழகில் சொக்கி விழியால் வருடிக்கொண்டிருந்தான் நிஷாந்த்..

அந்த நேரம் அவனறைக்குள் குருமூர்த்தி நுழைய ருத்ரா சிநேகமாக புன்னகைத்தாள்..

குரு தொண்டையை கணைத்து,” என்னமா எப்படி இருக்க?.. என்ன திடீர்னு இந்த பக்கம்” என்றார்..

“இல்லை அங்கிள் ரொம்ப நாள் ஆச்சு இல்லையா உங்களை பார்த்து அதான் பாத்துட்டு போலாமேனு வந்தேன்” என்றாள் போலி சிரிப்பை வரவழைத்து கொண்டு..

மேலும் அவளே”அப்பறம் அங்கிள் டாட் சொன்னாரு நாம என்ன பண்ணாலும் அவனுங்க எதிர்நீச்சல் போட்டு மேல வந்திடறானுங்கனு இப்போ என்ன பண்ண போறோம் அங்கிள்”

ம்ம் என்று யோசனையினூடே‌ டேபிளில் இருந்த ஜானு போட்டோவை பார்த்தார் குருமூர்த்தி.. அதை அவர் புருவம் சுருக்கி பார்த்திட சிவா ஓட சிஸ்டர் அங்கிள்‌ என்றாள் ருத்ரா..

நிஷாந்த் அந்த போட்டோவை ரசனையாய் பார்க்க அவனின் செய்கையை நொடியில் கண்டு கொண்டார் குருமூர்த்தி..

அந்த நேரம் அவரின் தொழில் மூளை ஒன்னும் ஒன்னும் ரெண்டு என கணக்கு பார்க்க தொடங்கிவிட்டது..

குரு,”இனிமே நாம ஆட போற ஆட்டத்துல இந்த மோகனோட குடும்பம் நம்ம கையில.. அதானல இப்போ கொஞ்சம் விட்டு பிடிப்போம்” அந்த விட்டு பிடிப்போம் என்ற வார்த்தையில்‌ மட்டும் அழுத்தம் இருந்தது..

தொழிலில் சிவாவின் நேர்மையையும் உழைப்பையும் கண்டவர் அவனை தோற்கடிக்க இப்போது சாணக்கியானாய் திட்டம் தீட்ட தொடங்கினார்..

அவரின் திட்டம் என்னவென்று தெரியாமலேயே இந்த ருத்ரா ஒரு புறம் அவளின் சதி திட்டத்தை ஆரம்பித்தாள்..

இதற்கிடையில் குரு மூர்த்தியின் வேகம் குறைந்ததை அறிந்த சிவா, தன் அலுவலக அறையில் அடுத்த நடவடிக்கை என்னவென்று தெரியாமல் தலைமீது கை வைத்து குழப்பத்தில் ஆழ்ந்தான்..

ஆதவ்‌ மற்ற அனைத்து வேலைகளையும் திட்டமிட்டபடி செய்து முடித்துவிட்டு திறப்பு விழாவிற்கு இன்னும் ஐந்து நாள் இருக்க சோதனை ஓட்டம் நாளை துவங்குகிறது என்று சொல்ல சிவாவை தேடி வந்தான்..

ஆதவ்,” சிவா”.. என அழைக்க அவன் குழப்பமாகவே இருக்க அவனை தட்டி சுய நினைவுக்கு கொண்டுவந்து “என்னடா ஆச்சு கூப்பிடறது கூட தெரியாம உட்காந்து இருக்க.. டெஸ்ட் டிரைவ் நாளைக்கு ஸ்டார்ட் பண்ணனும் டா” என்றான்.

சிவா,”ஹ்ம்ம் தெரியும்..”

“அப்படி என்ன குழப்பமான மனநிலை உனக்கு”

சிவா,”இல்லைடா கொஞ்சநாளாகவே குருமூர்த்தியோட ஆட்டம் குறைஞ்ச மாதிரி இருக்கே அதான் அவனோட அடுத்த திட்டம் என்னவா இருக்கும்னு யோசனையா இருக்கு”

ஆதவ்,”ஏண்டா இந்த பிராஜெக்ட் முடியரதுக்குள்ள நம்ம ரெண்டு பேருல ஒருத்தன் அவன் பின்னாடியே சுத்திட்டு இருந்தோம் இதுல அவன் அமைதியா இருக்கானு சந்தோசபடாம வருத்தபடற” என்றான்.

சிவா,”ஒருவேளை நாம யோசிக்காத எடத்துல அடிக்க பிளான் பண்ணுராங்களோ?”

ஆதவ்,”அவன் பிரச்சினையை அப்பறம் பாப்போம் இப்போ சைட்டுக்கு போலாம் வா” என அவனை அழைத்துகொண்டு சென்றான்.

இருவரும் சைட்டை மேற்பார்வையிட அதனுடன் அங்கு சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிய, தடைகளை தாண்டி வென்ற உணர்வு சிவாவிற்கும்,ஆதவிற்கும்…
மேலும் விழாவுக்கான வேலைகளை தமது ஆட்களுக்கு பணித்து கொண்டிருந்தனர்..

இதோ விழா நாளும் வர போக்குவரத்து துறை அமைச்சர் வந்து பாலத்தை திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு பாலம் விடபட்டது.

அமைச்சருக்கு தொழில் ரீதியாக குருமூர்த்தி நல்ல பழக்கம் என்பதால் அவரும் வந்து இருந்தார்.. அவரும் அமைச்சருடன் சிறிது நேரம் செலவழித்துவிட்டு கிளம்பி சென்றார்.

குருவை எதிர்கொண்ட சிவாவிற்கு அவரின் நிர்தாட்சண்யமான முகத்தில் அவரை கண்டுகொள்ள முடியவில்லை..

அதன் பின்பு சற்று நேரத்தில் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட பார்த்தால் ருத்ராவும் அவளது தந்தை வரதராஜனும் அங்கு வந்திருந்தனர்..

ருத்ரா குரூர புன்னகையுடன் சிவாவை நோக்கி வர ஆதவ் அவளின் புன்னகையில் தங்களுக்கு ஏதோ செய்தி புதைந்து உள்ளது என்பதை கண்டுகொண்டான்..

அவர்களை நெருங்கி வந்த ருத்ரா,”குட் ஜாப் டியர் எனிமீஸ்… வில் மீட் யூ சூன் ஃபார் அவர் நெக்ஸ்ட் வார்” என்று உரைத்துவிட்டு நகர எத்தனிக்க..

சிவா ஆதவ் கரம் பற்றிக்கொண்டு,”எஸ் ஆல்வேஸ் மிஸ் ருத்ரா” என்றான் வழக்கம் போல்..

ஆதவ் அவனுக்கு சற்றும் குறையாத தொனியில் ,”வித் பிளசர் மை டியர் எனிமி..” என்றான் அந்த மை டியர் எனிமியில் நக்கல் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது..

ருத்ராவோ அவளின் ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருப்பதை எண்ணி
வஞ்சமாய் புன்னகைத்து கொண்டாள்..

பொதுவெளியில் திறப்பு விழாவிற்காக அமைக்கப்பட்ட இடத்தில் தொழில் வட்ட நண்பர்கள் சிலர் வந்திருந்தனர் அவர்களுடன் ருத்ரா வரதராஜன் இருவரும் பொதுவாக அளவளாகிவிட்டு கிளம்பி சென்றனர்..

ஆக மொத்தம் தொழில் வட்டம் அனைவருக்கும் தெரியும் அவர்கள் இருவரும் எதிரிகள் என்று இருந்தும் அவர்களின் வருகை நட்பு ரீதியான செய்கைகள் மற்றவர்களுக்கு புரியாத புதிர் ஆகி போனது..

உண்மையில் குருமூர்த்தியைவிட இவர்களை தான் சிவாவின் எதிரிகள் என்றே கணித்து இருந்தது அந்த தொழில் வட்டம்.

திறப்பு விழா முடிந்து அனைவருக்கும் லஞ்ச் ஸ்டார் ஹோட்டலில் தயார் செய்து இருக்க சிவா ஆதவ் மற்றும் அவர்களின் தந்தைகள், மினிஸ்டர் அவருடன் சில அரசியல் பிரமுகர்கள்,
அதிகாரிகள் சகிதம் விருந்து இனிதே நடந்தேறியது…

நண்பர்கள் முகத்தில் ஆசுவாசம் படற அவர்களை கண்ட பெற்றோர்களுக்கும் பூரிப்பு..
தன் மகன்கள் இந்த நிலையை அடைய பட்ட கஷ்டம் அதிலும் இந்த இருபது நாட்கள் இருவரின் அயராத உழைப்பு அவர்கள் அறிந்ததே..

வீடு மறந்து தூக்கம் துளைத்து பட்ட கஷ்டங்கள் தான் எத்தனை.. அதிலும் இந்த இருபது தினங்களில் அவர்கள் வீட்டிற்கு வந்து சென்றது வெகு சொற்ப நாட்களே..

உண்மையில் ஒரு தாய் குழந்தையை பெற்றெடுக்கும் போது தோன்றும் உணர்வு தான் ஆதவ்வுக்கும் சிவாவுக்கும்…

பெற்றோர் உட்பட அனைவரையும் அனுப்பிவிட்டு சிவா ஆதவ் தோள் மீது கை போட்டு,”அவர் டிரீம் பிராஜெக்ட்” என்றான் நெகிழ்ச்சியுடன் ஆதவ்வும் அவன் முதுகுடன் கரம் கோர்த்து அவனை பிடித்தவாறே,”ஹ்ம்ம்…” என்றான் ஆத்மாத்தமாக..

ஆதவ் தான் சிவாவை பிரித்து அவன் மொபைலை எடுத்து கையில் குடுத்து,”இப்போ நீங்க ரெமோவா மாற வேண்டிய டைம் போடா போய் எப்பவும் போல தீயர வாசனை வர வரைக்கும் உங்க கடலையை நல்லா வறுக்கலாம்” என்றான் சிரிப்புடன்..

அதற்குள் சிவாவிற்கு கால் செய்த குருமூர்த்தி அவன் தொடர்பை இனைத்தவுடன்,”என்ன தம்பி ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல இந்த சந்தோசத்தை இரட்டிப்பா ஆக்க நான் ஈவெனிங் உங்க வீட்டுக்கு வரேன்..அப்போ தெளிவா பேசிக்கலாம்.. உங்க அப்பா கிட்டயும் தகவல் குடுத்திட்டேன்” என்றார்.

சிவா,” அப்படி என்ன முக்கியமான விஷயம் சார்”

குரு பீடிகையுடன்,”நீங்க சாதிச்சதுக்கு என்னோட வெகுமதினு வச்சுக்கலாம்” என்றார்.

சிவாக்கு தெரியும் இனிமேல் என்ன கேட்டாலும் அவர் எதுவும் சொல்ல போவதில்லை என்று அதனாலேயே,”சரிங்க சார் அப்போ ஈவ்னிங் பாக்கலாம்”என்றுரைத்துவிட்டு‌ தொடர்பை துண்டித்தான்.

அதன் பின் அந்த உரையாடலை ஆதவிற்கு சிவா சொல்ல இருவரும் அடுத்து அவரின் திட்டம் என்ன என்று அறியாமல் குழம்பி போயினர்…

அடுத்த திட்டம் யாருக்கு…….???? ஜானு யார் வலையில் சிக்குவாள்???

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here