34.என்னவள் நீதானே

0
643

ஓடமீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு .. அது போலவே குருமூர்த்தி நெடுநாளாக காத்திருந்த ஒற்றை தருணம்.. சிவா குடும்பத்தினர் மீதான நிஷாந்த் கோபம் கூட, சிறுவயதிலிருந்தே அவன் தந்தை தான் புறமுதுகிட்டு ஓடி வந்த கதையை அனுபவ பாடமாக மகனுக்கு ஊட்டி வளர்த்ததால் தான்.., எல்லாருக்குமே தன்னுடைய முதல் ஹீரோ தந்தை தான், அப்படிப்பட்ட அவன் ஹீரோ அன்றைய தோல்வியை பற்றி பேசும் போதெல்லாம் அவருக்குள் தோன்றும் வலி தான் இவனை மிருகமாக்கி இந்த அளவிற்கு கொண்டு வந்தது.

ஆனால் குருமூர்த்திக்கு, சிவாவின் குடும்பத்தை பழி வாங்கும் எண்ணம் அன்று தொட்டு இன்று வரை எப்போதுமே இருந்ததில்லை, அன்று அவர்களுடன் தொழிலில் தோல்வியை தழுவியதாலோ என்னவோ இன்று இவர்களை அடக்கி ஆள ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவர்க்கு ருத்ராவின் மூலம் கிட்டிய ஓர் அறிய வாய்ப்பு.. என்ன தான் தொழில் துறையில் கோலோச்சியிருந்தாலும் அவர்கள் வீட்டில் பெண் எடுத்தால் நமக்கு தேவையான போது ஆட்டிவைக்கலாம் என்ற எண்ணமே அவரின் இந்த பெண் பார்க்கும் படலம்..

சிவாவின் வீட்டில் மோகன்ராஜ் லட்சுமியிடம் கெஸ்ட் வருவதாக மாலை சிற்றுண்டி வகைகளை தயார் செய்ய சொல்ல அவரோ,”யாருங்க வரா”

“ம்ம்.. குருமூர்த்தி” என சொல்ல இவர்களுக்குள் உள்ள தொழில் முறையான பிணக்குகள் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது என்றாலும் நமக்கு வேண்டாதவர் எண்ணுமளவுக்கு தெரிந்து வைத்திருந்தார் அதனாலேயே ” அவரா?? எதுக்கு?? என்ன விஷயம்??” என்று பதிலளிக்க கூட வாய்ப்பளிக்காமல் கேள்வியை அடுக்கினார் லட்சுமி…

“அட இருமா.., எனக்கே அவங்க ஏன் வரேன்னு சொல்லல.. முக்கியமான விஷயம் பேசணும்னு வீட்டுக்கு வரேன்னு சொன்னாரு அவ்ளோ தான், எங்க அப்பா காலத்துல நாங்க அவர் கிட்ட தொழில் காத்துக்கிட்டவங்க தான்.. இன்னிக்கு நாம எந்த நிலையில இருந்தாலும் விசுவாசத்தை மறக்க கூடாது இல்லையா?? அதான் அவங்க மரியாதையா இன்னிக்கு ரெண்டு பேமிலிக்கு நடுவுல ஒரு கெட் டூ கெதர் வச்சுக்கலாம்னு சொல்லும் போது நானும் சரினு சொல்லிட்டேன்” என விளக்கினார்.

லட்சுமி இன்னும் குழப்ப முகத்துடனே,” ஆனா அவங்க பையனுக்கும் சிவாவுக்கும் தான் ஆகாதே” என்றார்.

“அவங்க சிவா கிட்டயும் சொல்லிட்டாங்க..,சரி வரட்டும் இதோட எல்லா பிரச்னையும் முடிஞ்சுருச்சுனா அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பாக்கட்டும்..நாமளும் நம்ம வேலையை நிம்மதியா பாக்கலாம்ல..,அதுக்காகவாது இந்த மீட்டிங் அமைஞ்சா சரிதான்” என பெருமூச்சை வெளிப்படுத்தினார்.

சிவாவும் வெளிவேலை எல்லாம் முடித்துவிட்டு ஆதவ்வை அவன் வீட்டில் விட்டுவிட்டு அத்தை மாமாவிடம் கெட் டூ கெதர்க்கு வருமாறு அழைப்பை விடுத்துவிட்டு ஆதவிடம் அவன் குடும்பத்தை அழைத்து வருமாறு பணித்துவிட்டு சென்றான்..

மாலை ஐந்து மணியளவில் குருமூர்த்தி தன் மனைவி மற்றும் மகனுடன் சிவாவின் வீட்டிற்கு வந்திறங்கினர்,அதற்கு சற்று நேரம் முன்பே ஆதவ் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

இனியனும் (ஆதவ் தம்பி) ஜானுவும் நண்பர்கள் என்பதாலேயே நார்மலாக சிரித்து பேசி கொண்டிருந்தார்கள்.,ஜானு அவ்வப்போது ஆதவ்வை தன் விழிவீச்சினால் விழுங்கி கொண்டிருக்க அது அறிந்தும் அறியாதது போலே கேசுவல் உடையில் படு கூலாக அமர்ந்திருந்தான் அந்த கள்வன்.

ஜானுவுக்கு இது புதிதில்லை என்பதாலோ என்னவோ நீ எப்படி இருந்தா என்ன? நான் என் வேலையை தான் பார்ப்பேன்.., உனக்கு சற்றும் சளைத்தவள் நான் அல்ல என்று தன் விழி வேட்கையை தொடர்ந்தாள்.

வீட்டிற்கு வந்தவர்களை முதியவர்கள் வரவேற்க நிஷாந்த் அமைதியாக பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு வீட்டைச்சுற்றி நோக்குவது போல் தான் புகைப்படத்தில் கண்ட அந்த எழிலோவிய பதுமையை தேடிக்கொண்டிருந்தான்..

அவன் கண்ணில் ஜானு அகப்பட அவளுடன் அளவளாவ துடிக்கும் மனதை இழுத்து பிடித்து கடிவாளாமிட்டான் நிஷாந்த்..,அவனின் தேடல் அவளுக்கு தெரிந்ததோ இல்லையோ.. நொடியில் அவனை கண்டுகொண்ட ஆதவ்க்கு இதயம் ஒரு கணம் நின்று துடித்தது..

நிஷாந்த் எதுவுமே நடக்காதது போல் சிவாவுடன் நட்பாக கை குலுக்க ஆதவ்க்கு அவனின் இந்த புதிய பரிமாணம் உள்ளூர ஒரு விதமான திகிலை கிளப்பியது என்றால் அது மிகையல்ல.

சிவா கரம் குலுக்கி பரஸ்பரம் விசாரிக்க இதற்கு மேல் அமைதியாகி இருந்தால் அது நல்லா இருக்காது என்றெண்ணி வரவழைத்த புன்னகையுடன் கடமைக்கே என்று கை குலுக்கினான் ஆதவ்.

அனைத்து அறிமுகப்படலமும் செவ்வெனே முடிய ஹாலில் மூன்று குடும்பத்தினரும் இருந்தனர்.. மூன்று ஆள் உட்காரக்கூடிய சோபாவில் குரு மூர்த்தி , குணவதி, நிஷாந்த் மூவரும் குடும்ப சகிதமாக அமர்ந்திருக்க அவர்களுக்கு நேர் எதிரில் நாலு பேர் அமர கூடிய சோபாவில் இரு குடும்பத்தினரின் மூத்தவர்கள் அமர்ந்திருக்க அதனை ஓட்டி உள்ள இரண்டு ஒற்றை சோபாவில் ஆதவ்வும் சிவாவும் அமர்ந்திருக்க, ஆதவ் சோபாவின் ஹேண்ட் ரெஸ்ட் மீது சாய்ந்தவாறு அமர்ந்திருக்க ஜானுவும் அவள் பெற்றோர் அமர்ந்திருந்த சோபாவில் அதே மாதிரி அமர்ந்திருந்தாள்..

இந்த சந்திப்பு எதற்கு என்று அறியாத ஜானுவோ லாங் ஸ்கர்ட் அந்த அண்ட் டாப்ஸில் கழுத்தில் இருந்த செயினை வாயில் வைத்தபடி அமர்ந்திருந்தாள்.

அவளின் குழந்தைத்தனமான இந்த செய்கையில் நிஷாந்த் கிறங்கி போய் அமர்ந்திருக்க அவளின் நாயகனுக்கு பத்திக்கொண்டு வந்தது..

முதலில் குரு மூர்த்தி தான் பேச தொடங்கினார்…, ” என்னடா எதிரி வீட்டு ஆளுங்க நம்மளை தேடி வந்து இருக்காங்களேனு நினைக்கறீங்களா??”

மோகன்,” நாங்க அப்படி எல்லாம் ஏதும் நினைக்கலங்க.., அதுவும் இல்லாம நீங்க தகவல் சொல்லிட்டு தானே வந்தீங்க.., சொல்லுங்க என்ன பேசணும்” என நேரடியாக விசயத்திற்கு வந்தார்.

“ம்ம்.. என்ன தான் நமக்குள்ள சில கசப்பான சம்பவங்கள் நடந்து இருந்தாலும் இப்போ நான் பேச வந்து இருக்க விஷயம் நல்ல விஷய தான் ” என்றார் குருமூர்த்தி.

அவரது மனைவி குணவதி கூட,”ஆமாங்க என் பையன் நிஷாந்த்க்கு உங்க மகளை பொண்ணு கேட்டு வந்திருக்கோம்.., எங் பையனுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சுருக்கு” என்றார் மகனின் முகத்தை பார்த்தவாரே…தாய் அறியாத சூழ் உண்டோ?? அதான் அவரது மகனை அத்தனை எளிதில் கண்டுகொண்டார்.

மோகன் குடும்பத்தினருக்கு இது அதிர்ச்சி தான்.., ஜானுவுக்கு உலகம் தட்டாமாலையாக சுற்றியது.., ஆதவ்வின் உள்ளமோ உலைகலனென கொதித்து கொண்டிருந்தது..

சிவா தான் சற்றே தேர்ந்தவனாய் அந்த சூழலை இலகுவாக்க ம்ம்க்கும் என தொண்டையை செறுமியவன்,”பெரியவங்க இருக்கும் போது நான் பேசறதுக்கு மன்னிக்கணும்”என்றவன் பார்வையால் குறிப்பை தன் குடும்பத்தினருக்கு உணர்த்திவிட்டு மேலும் பேச ஆரம்பித்தான்.

“நீங்க பேச வரும் போதே எல்லாம் தெரிஞ்சு தான் வந்துருப்பீங்க அதனால புதுசா ஒன்னும் சொல்றதுக்கில்ல.., ஜானு படிப்பை முடிக்க இன்னும் ஆறு மாசம் இருக்கு அதனால எதுவா இருந்தாலும் அதுக்கு அப்பறம் பேசிக்கலாம்..,”

“என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க.., எங்க மருமகளை நாங்க ராணி மாதிரி பார்த்துக்குவோம் அவளுக்கு வேணும்னா இதுக்கு மேல வேணும்னாலும் படிக்கவைப்போம் அவளோட ஆசை என்னவோ அதுக்கு எங்க பையனோ நாங்களோ எந்த தடையும் சொல்லமாட்டோம் இன்னும் சொல்ல போனா அவளை எங்க மக மாதிரி பார்த்துக்குவோம்” என்றதில் பேரில் மட்டுமல்ல செயலிலும் அவர் குணவதி தான் என்று நிரூபித்தார்.

அதற்கு மேல் அவரிட வாதம் புரிய மனமில்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் சிவா..

தன் ஒற்றை மகனின் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்ற துடிப்பு அவருக்கு..,”இங்க வாடா ஜானுமா என ஜானுவை அழைக்க.., அவளோ இந்த விஷயம் பேச ஆரம்பித்தபோதே இறுக்கமான மன நிலைக்கு மாறி இருந்தாள்..

இந்நேரம் ஆதவ் தன் காதலை ஏற்று இருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்காது என்னும் போது ஆற்றாமையில் மனம் இறுகிப்போனது அவளுக்கு, அவர் அழைக்கும் போதே ஆதவ்வை பார்க்க அவன் உணர்வற்ற நிலையில் அமர்ந்திருக்க எப்படியும் இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் அருகில் ஜானு அவளின் கரம்பற்றி உரிமையாக அமரவைத்த குணவதி வாஞ்சையாக தலையை தடவி குடுத்தார்..

குணவதியின் செயலில் பெற்றவர்களுக்கு மனம் நெகிழ்ந்து போனது.. அவளின் சில்லிட்ட கரங்களை பற்றிய உடனே ஜானுவின் பதட்டம் தெரிந்தது குணவதிக்கு.., “பதட்டப்படாதமா உன் அம்மாவா என்னை நினைச்சுக்கோ நல்ல முடிவா சொல்லு” என்றார்..

அனைத்திற்கும் பதிலாக தன் மௌனத்தையே‌ தந்தாள் ஜானு.. அது விரக்தியின் வெளிப்பாடு என மற்றவர்கள் அறிவது எப்போது???

மோகன்,” இல்லங்க தப்பா எடுத்துக்க வேணாம் இப்போதைக்கு எங்களுக்கு அந்த மாதிரி ஐடியா எல்லாம் இல்லை”என நாசூக்காக மறுக்க.., அதுவரை மனைவியின் செயலை மெச்சுதலாக பார்த்து கொண்டிருந்த குருமூர்த்தி பேச ஆரம்பித்தார்..

நிஷாந்த்க்கு இதில் வருத்தம் தான் ஆனால் படிப்பை வைத்து அவர்கள் மறுக்கும் போது இன்னும் கொஞ்சநாள் காத்திருப்பு தான் என மனதை தேற்றிக்கொண்டான்.

குரு,”படிப்பு தான் பிரச்சனை அப்படினா..நாங்க வெயிட் பண்றோம் மத்த ஏதாவது அப்படினா நீங்க இப்போவே சொல்லிரலாம், இல்லனா தேவையில்லாத மன கஷ்டம் தான் ரெண்டு குடும்பத்துக்கும்.., உங்களுக்கு என் பையன் மேல நல்ல அபிப்ராயம் இல்லைனு நினைக்கறேன் அதான் இந்த தயக்கத்துக்கு காரணம்..” பட்டென தன் எண்ணத்தை உடைத்தார்.

நிஷாந்த் தன் தந்தை வாயால் இந்த வார்த்தை கேட்ட போதே தன் செயலில் வெட்கி தலை குனிந்தவன் ஆள்மூச்செடுத்து பேச ஆரம்பித்தான்.

நிஷாந்த்,”அங்கிள் நான் கொஞ்சம் பேசிக்கறேன்.., அப்பா ப்ளீஸ்” என அவரை தடுத்து,”நான் நல்லவன்னு உங்க கிட்ட சொல்லப்போறது இல்லை.., அதே சமயம் ஒரு விஷயத்தை தவிர உங்க கூட நான் மோதுனது எல்லாம் பிஸினஸுக்காக மட்டும் தான் உங்களுக்கே நல்லா தெரியும்..,எஸ் ஐ ரியலி சாரி பார் தட் அந்த இன்சிடென்ட் தான் எனக்கு நிறைய கத்துக்குடுத்துச்சு.. பை காட்ஸ் கிரேஸ் அவங்களுக்கு ஒன்னும் ஆகல தேங்க் காட்..”என ஆரா ஆக்சிடென்ட் விஷயத்தை ஒப்புக்கொண்டவனாக பேசினான்…

“அதை மட்டும் வச்சு நீங்க என்ன ஜட்ஜ் பண்ணி இருந்தீங்க அப்படினா ஜானு படிச்சு முடிக்கற வரை உங்களுக்கு டைம் இருக்கு என்ன பத்தி தெரிஞ்சுக்க அதுக்கப்பறம் பேசிக்கலாம்..” என பேசி முடித்தான்..

மோகன்,”சரிங்க தம்பி அதை அப்போ பேசிக்கலாம்.. குரு சார் உங்களுக்கு இது ஓகே தானே”

“சரிதான்.. அப்போ நாங்க கிளம்பறோம் என நட்பாக கை குலுக்கி விடைபெற.. நிஷாந்த் கூட ஆடவர் இருவரையும் தழுவி விடைபெற்று வந்து.., பிரெண்ட்ஸ் என்று புன்னகையுடன் ஜானுவுக்கு கை குடுக்க அவளும் இவன் இங்கிருந்து போனால் போதும் என்ற எண்ணத்தில் கை குடுத்தாள்..

நிஷாந்த் கூட ஜானுவிடம் விரைவாக காதலை சொல்ல வேண்டும் என முடிவெடுத்துவிட்டான்.

அவள் அவனுடன் கரம் குடுக்க அதை பார்த்த ஆதவ் எதுவும்‌ மற்றவர்கள் முன் காமிக்க முடியாமல் போனை பார்த்தவாறே வெளியே சென்றுவிட்டான்..

அவன் வெளியே போனவுடன் ஜானுவுக்கு‌ மெசேஜ் வர அதை பார்த்தவளுக்கு‌ களுக்கென கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது..

இன்னொருவனுடன் சாதாரண கை குலுக்குகளுக்கே பொங்கி தான் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.. அதில் அவன் கோபம் ஜானுவுக்கு நன்றாகவே புரிந்து இருந்து…

இதற்கே பொங்குபவன் நிஷாந்த் தன் காதலை சொல்லும் போது என்ன செய்வான்???

காதலை வெளிகொணரும் காதல் போராட்டம் முடிவது எப்போது???

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here