35.என்னவள் நீதானே

0
1627

குருமூர்த்தி தன் குடும்ப சகிதம் விடைபெற்று தங்களது காரில் கிளம்பினர்..நிஷாந்த் மனம் முழுதும் தன் காதல் தேவதையை நிரப்பி உல்லாசமாக காரை ஓட்டி கொண்டிருக்க..

குணவதியோ, ” என்ன கண்ணா உன் முகத்துல பல்ப் எரியுதே?? ” என்றார்..

“போங்க மாம்.. நீங்க ரொம்ப கிண்டல் பண்றீங்க”

“அட என் பையனுக்கு வெக்கம் எல்லாம் வேற வருதே.. என்னங்க இதை கவனிச்சிங்களா?? ” என குருவை அழைத்தார்..

குரு, “ஆமா குணா.. நானும் பாக்கறேன் இவன் எப்போ அந்த பொண்ணு போட்டோ பாத்தானோ அப்போ இருந்து இப்படி தான் இருக்கான்.

“பெற்றோர் தன்னை கண்டு கொண்டதில் நாணமுற்றவன் வெட்க சிரிப்பொன்றை உதிர்த்து, ” மாம் அண்ட் டாட் போதும் இதுக்கு மேல உங்க பையன் தாங்க மாட்டான்.. வேணாம் அப்பறம் அழுதுருவேன் ” என கேலியாகவே சொல்ல பெற்றோர்களுக்கோ முகம் கொள்ளா சிரிப்பு..

நிஷாந்த்தின் சிறுவயதில் அவர்கள் குடும்பமாக இது போல் மகிழ்ச்சியாக இருந்தது, அதன் பின் தந்தையும் மகனும் தொழிலில் மூழ்கி இருக்க குணவதிக்கு இல்லற பொறுப்பு என்றாகி போனது பெரும்பாலும் காலை இரவு தவிர அவர்கள் மூவரும் சேர்ந்து இருப்பதே அரிதாகி போயிருந்தது..

வெகு நாள் கழித்து மகனை இத்தனை சந்தோசமாக கண்டதில் குணவதிக்கு மிகுந்த சந்தோசம் மகன் எப்போதும் இதே போல் சந்தோசமாக இருக்கவேண்டும் என்ற வேண்டுதலையும் அவர் வைக்க தவறவில்லை..

அதே நேரம் சிவாவின் வீட்டில் இயல்புநிலை திரும்பி இருந்தது.. குருவின் குடும்பத்தினரே அனைத்தும் பேசி இருக்க இவர்கள் மேற்கொண்டு எதையும் பேச விரும்பவில்லை.

இரு குடும்பத்தினரும் அளவாளவி கொண்டிருக்க சிவா காலையில் இருந்து தொடர்ந்து வந்த அலைச்சலினால் டயர்ட் ஆக இருக்க அனைவரிடமும் சொல்லிவிட்டு தன்னறையில் நுழைந்தான்..

இனியன் டான்ஸ் கிளாஸ் இருப்பதால் அவனும் கிளம்பிவி்ட ஜானு தனித்துவிடப்பட்டாள்…

இது தான் சமயம் என ஆதவ்வை பார்ப்பதற்கு அவள் செல்ல வெளியே லானில் போட்டிருந்த இருக்கையில் கண் மூடி அமர்ந்திருந்தான்..

உன்னை தள்ளிவைக்க
தெரிந்த எனக்கு
உன்னை விட்டுக்கொடுக்க
துணிவில்லை இது தான்
உன் நேசத்தின் வலிமையோ!!

இந்த காதல் எனும்
ஆட்கொல்லி நோய்
நித்தமும் என்னை கொல்கிறது
என் நோயும் நீ என் மருந்தும் நீ…

ஆதவ்வின் தற்போதைய நிலை இது தான்..

அவனின் தளர்ந்த தோற்றமே அவனது மனதை காட்ட ஜானு அவன் தோளை தொட அது அவள் தான் என்று தெரிந்த உடனே வெடுக்கென தட்டிவிட்டான்…

“இதுக்கென்ன அர்த்தம் ” என குறுஞ்செய்தி யை காட்ட அதற்கு பதிலாக அவன் கோப பார்வையையே பதிலாக தந்தான்..

ஜானு, “இப்படி முறைச்சுகிட்டே இருந்தா எனக்கு எப்படி தெரியும்”

“ஏன் உனக்கு தான நினைக்கிற எல்லாமே தெரியுமே இது தெரியலையா என்ன?? ” அவன் குரலில் உள்ள அழுத்தம் என்னை தெரிந்தும் நீ ஏன் அவ்வாறு செய்தாய் என கேட்டது..

”சும்மா சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோவாபடாதீங்க ஆதி.., இப்போ அவன் கிட்ட கை கொடுத்ததுல என்ன கெட்டு போச்சு.. ” என அவள் எரிச்சலுடன் கேட்க.. “நான் தான் அவன் கிட்ட எதுவும் பேசாதனு மெசேஜ் பண்ணேன்ல அப்போ அதை மீறி நீ பண்ணி இருக்க அப்படினா என் வார்த்தைக்கு மதிப்பு குடுக்கலனு தானே அர்த்தம் ” என பதிலுக்கு அவனும் எகிறினான்..

மேலும் ஆதவ்வே, ”அவன் விட்டா உன்ன கண்ணுலயே முழுங்கிறுவான் போல இருக்கு அப்படி பாத்துட்டு இருக்கான்…, நீயும் அவன் ரசிக்கரதுக்கு தகுந்த மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு அவன் கண்ணு முன்னாடியே உக்காந்துட்டு இருக்க?? ” என்ற மனதில் உள்ள அத்தனை குமுறலையும் அவளிடம் கொட்டிக்கொண்டிருந்தான்..

ஜானுவோ வாடி மாப்பிள்ளை உன்னோட இந்த பொஸசிவ் தான் நீ என் மேல வச்சு இருக்க லவ்வை வெளிய கொண்டுவர போகுது என நினைத்தவள் அதற்கான வேலையை செய்ய ஆரம்பித்தாள்..

“சரி யார் என்ன பார்த்தா சாருக்கு என்ன?? ஏன் எங்க அப்பா அம்மா அங்க தான் இருந்தாங்க, அவ்வளவு ஏன் என் அண்ணன் அத்தை மாமா எல்லாருமே அங்க தான் இருந்தாங்க யாருமே ஏன் இந்த காஸ்ட்டியூம்ல இருக்கனு என்ன கேட்கலையே?? உங்களுக்கு மட்டும் என்ன வந்துச்சு..?? “

ஆதவ் கோபத்துடன் அவள் கையை அழுந்தப் பற்றியவன், ” இன்னொரு தடவ சொல்லு.. என்ன சொன்ன யாரு பாத்தா என்னவா..?? இனி எவனாச்சும் உன்ன பாக்கட்டும் அப்போ இருக்கு உனக்கு.. மாடு மாதிரி வளர்ந்து இருக்கியே அறிவில்லை உனக்கு.., வீட்டு ஆளுங்க பாக்குறதுக்கும் மத்தவங்க பாக்குறதுக்கும் வித்தியாசம் தெரியல உனக்கு?? அவன் உன்ன பாக்க பாக்க அப்படியே அவனை அடிச்சு கொல்லனும் வெறி வருது நீ என்னடான்னா எனக்கு என்னனு அமைதியா உட்கார்ந்து இருக்க அதுவும் என் முன்னாடியே ” என அவள் கரத்தை அழுத்த வலியில் ஷ்.. ஆ.. ஆ… என்றாள்..

உண்மையில் அவனின் இந்த செயலில் கோபப்பட வேண்டியவளோ கோபப்படாமல் நெகிழ்ந்து போயிருந்தாள்.. ஆமாம் எத்தனை நாட்களுக்குப் பிறகு அவனாகவே அவளிடம் இவ்வளவு உரிமையாக காதலை கூட சண்டை மூலம் வெளிப்படுத்தி கொண்டிருந்தான்..

அவள் வலியில் முனக அவள் கரத்தை முழுமையாக விடாமல் தன் பிடியை சற்றே தளர்த்தியிருந்தான் ஆதவ்..

ஜானுவோ ஆதி என அவன் முகத்தை தன் விரல் கொண்டு வருடி, ” இப்போ இப்படி குதிக்கறீங்களே இதுக்கு பேரு என்ன தெரியுமா..சும்மா கூட என்னை இன்னொருத்தன் பார்க்க கூடாதுனு நினைக்கறீங்க.. அதே சமயம் நீங்களும் என்னை பாக்க மாட்டேங்கிறீங்க.., இதுக்கு எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்க தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்காமாட்டான்னு ” என குறும்பாய் கண்ணடித்து சொல்ல..

அவளது பேச்சில் சற்றே சமன்பட்டவனாய் அவனது காதல் கொண்ட மனம் தலைதூக்க அவளுக்கு பதிலளிக்கும் வண்ணம், ” யாருக்கும் இடம் கொடுக்கற ஐடியா இல்லை வேணும்னா..மொத்தத்தையும் நானே எடுத்துக்கிறேன் ” என்றான்..

“ஆதி ” என அவன் தோள் பற்றி விழியோடு விழி உரசி உறவாடி கொண்டிருக்க சட்டென்று அந்த மோன நிலையை கலைத்தது ஆதவ் தான், “என்ன டெம்ப்ட் பண்ணாத பேபி நான் கிளம்பறேன் அம்மா கிட்ட சொல்லிரு ” என அவளை விலக்கிவிட்டு கிளம்பினான்..

அவனுக்கு தெரியும் இன்னும் சற்று நேரம் அங்கிருந்தாலும் ஜானு தன் காதலை தன் வாயாலே சொல்ல வைத்திருப்பாள் என்று அதனால் தான் இந்த ஓட்டம்..

எப்படியும் இன்னிக்கு அவன் வாயால் உண்மையை வாங்குவது என நினைத்து இருந்த ஜானுவோ இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி நீ ஓடரனு பாக்கறேன் எப்போ இருந்தாலும் நீ என் கிட்ட தான் வரணும்..,என மனதினுள் அவனை வறுத்தெடுத்து கொண்டிருந்தாள்..

இவர்களின் சம்பாசனையை தனது பால்கனியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த சிவாவிற்கு இது பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை வழக்கம் போல உரையாடல் தான் என நினைத்துக்கொண்டான்..

அவளிடம் இருந்து தப்பி ஓடிய ஆதவ் காரை கிளப்பி கொண்டு நின்ற இடம் கடற்கரை தான்..அவன் மனம் எப்போதோ அவள் பால் சாய தொடங்கி இருந்தது இப்போது அது அவனையும் அறியாமல் வெளியே வந்துவிட்டது..இது லவ்வா அக்கறையா என யோசித்து யோசித்து கடைசியில் அவனுக்கு ஏற்றார் போல் ‘நிஷாந்த் கெட்டவன் அவன் கிட்ட இருந்து இவளை புரோடெக்ட் பண்ண தான் நான் அப்படி பேசினேன் சோ இது அக்கறை தான்’ என தன் மனதை பூசி மொழுகிகொண்டு கிளம்பினான்..

சிவாவின் வீட்டிலேயே ஆதவ் பெற்றோர் டின்னர் முடித்துவிட்டு கிளம்பினர்..இரவு உணவு முடித்துவிட்டு தன் ரூமில் நுழைந்த உடனேயே சிவா ஆராதனாவிற்கு தான் அழைத்தான்..

அவன் அழைப்பிற்காகவே காத்திருந்தது போல் முதல் ரிங்கில் அவள் போன் எடுக்க.. “ஹே வாண்டு என்ன டக்குனு எடுத்துட்ட “

”பின்ன என்ன காலைல இருந்து நீங்க எப்போ போன் பண்ணுவீங்கனு‌ வெயிட் பண்ணிட்டு‌ இருந்தேன் தெரியுமா?? ” என ஏக்கமாக சொல்ல..

அவள் குரலில் இழையோடிய தவிப்பை உணர்ந்தவன் அவளை சகஜமாக்கும் பொருட்டு, “ஏன் அம்மணி நாங்க கால் பண்ணா மட்டும் தான் பேசுவீங்களோ.. நீங்களா பண்ண மாட்டிங்க அப்படி தானே?? ”

ஆரா, “மாமா.. உங்களுக்கு எதும் ஆயிடுச்சா.. ஏன் இப்படி அம்பி மாதிரியும் அந்நியன் மாதிரியும் மாத்தி மாத்தி பேசறீங்க “

”என்ன மாத்தி மாத்தி பேசறாங்க.. “

”போன வாரம் என்னடான்னா நானா கால் பண்ற வரை பண்ணாதனு சொல்லிட்டு இப்போ நான் கால் பண்ணலனு சிலுத்துக்கறீங்க.. “

”ஆமாடி உங்க கிட்ட சிலுத்துக்கவும் சினுங்கவும் இந்த மாமாவுக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு தெரியும்ல ” என சரசமாக கேட்க..

“மாமா எப்படி இப்படி?? நீங்க எப்பவும் விட்டா குடுமி அடிச்சா மொட்டை தானா?? ” என தன் சந்தேகத்தை மறைக்காமல் கேட்டாள்..

சிவா, “அது அப்படி தான் பேபி.. எதுக்குள்ளையும் இறங்குறவரை யோசிக்கமாட்டன் இறங்கிட்டா மூழ்கிருவேன் ” என்றான்..

அதனை தொடர்ந்து இருவரும் தன் காதல் கடலையை மெதுவாக வறுத்துகொண்டிருக்க அப்போது தான் நினைவு வந்தவனாய்.. சிவா ஜானுவை பெண் கேட்டு நிஷாந்த் குடும்பத்தினர் வந்தது பேசியது தொடர்பான அனைத்து விசயங்களையும் தெரிவித்தான்..உண்மையில் இதில் ஜானுவை விட அதிகம் அதிர்ந்து ஆராதனா தான்..

அனைத்தையும் கேட்டு அவள் அமைதியாக இருக்க, “தனு…. ” என சிவா அழைக்க.. “ஹ்ம்ம்.. சொல்லுங்க ” என்றாள்..

அவள் குரலில் தென்பட்ட மாற்றத்தை உணர்ந்தவன், “என்ன ஆச்சுடா ” என்றான்..

ஆரா தயங்கியவாறே, ” உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் ஆனா சொல்லலாமா வேணாமான்னு தெரியலை ” என்றாள்..

சிவா, “தனு.. நமக்குள்ள என்ன தயக்கம் என்ன சொல்றதா இருந்தாலும் சொல்லு.. நம்ம ரிலேசன்ஷிப்குள்ள நம்பிக்கையும் உண்மையும் எப்பவும் இருக்கணும் ” அவன் வெகு நிதானமாக உரைத்தாலும் அதில் இருந்த அழுத்தம் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.

ஆரா அவனுடன் பேசும் முன்பாகவே என்ன பேச வேண்டும் என மனதிற்குள் ஓட்டி பார்த்தவள்..

“இது எனக்கு இருக்க சந்தேகம் தான் உண்மை என்னனு எனக்கு தெரியாது நீங்க தான் தெரிஞ்சுக்கணும் இப்பவும் எனக்கு நெருடலாக படறதுனால சொல்றேன் ” என பீடிகையாக ஆரம்பித்தவள் அன்று இருவருக்குள்ளாக நடந்த அத்தனை விஷயங்களையும் அதில் தான் கண்டுகொண்டதையும் கூறலானாள்..

மேற்கொண்டு தான் பட்ட கஷ்டம் ஜானு படகூடாது என்பதற்காகவே இப்போது கூறுவதாகவும் கூறினாள்…

இவை அனைத்தையும் கேட்ட சிவாவின் முகம் வெளிறி போயிருந்தது, அவள் கூறியதை கூர்மையாக உள்வாங்கி கொண்டவன், “சரி நான் பாத்துக்கறேன்.. அப்பறம் நான் சொல்லாம இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது காட் இட் ” என தொழிலதிபனாய் மாறி கட்டளை இட்டவன் அழைப்பை துண்டித்தான்..

அவனது மனமோ சற்று முன் அவன் கண்ட ஆதவுக்கும் ஜானுவுக்குமான உரையாடல் எதை பற்றி என சிந்தனையில் ஆழ்ந்தது.

அவன் பேச்சில் அவன் மன நிலை என்னவென்று அறிய முடியாமல் குழம்பி போனாள் ஆராதனா…

சிவாவின் முடிவு என்ன??“

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here