சஹாரா சாரல் பூத்ததோ 8

0
272

அத்தியாயம் 8

மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் வந்து நிற்கும் வரையிலும் மிகவும் தைரியமாகத் தான் இருந்தாள் தாமரை. ஆனால் நேரம் கூடக்கூட தனியே இருந்த அறைக்குள் அவளது சிந்தனைகள் எங்கோ சென்று அவளை பயம் கொள்ள வைத்தன. பயத்தில் முகமெல்லாம் முத்து முத்தாக வேர்க்கத் தொடங்கியது அவளுக்கு.

கதவை இறுக்கமாக பூட்டி தாளிடும் ஓசையில் நினைவு கலைந்து திரும்பிப் பார்த்தவள் அங்கே நின்ற கணவனின் தாபம் நிறைந்த பார்வையில் அவசரமாக தலையை குனிந்து கொண்டாள். அழுத்தமான காலடி ஓசை தன்னை அவன் நெருங்குவதை சொல்ல… மனம் படபடக்க அருகில் இருந்த ஜன்னல் கம்பிகளை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

தெரியாததை அவளுக்கு தெரிய வைத்து விடும் ஆர்வம்…. புரியாததை அவளுக்கு புரிய வைத்து விடும் வேகம் இரண்டும் கணவனின் கண்களில் தெரிவதைப் பார்த்தவள் பேச்சிழந்தாள்.

“எங்கேடி ஓடப் பார்க்கிற?” கண்களில் தாபத்துடன் நெருங்குபவனைக் கண்டு மிரண்டு விழித்தவாறே அவள் பின்னால் நகர… கண்களில் சிரிப்புடன் அவளை நெருங்கியவன் கண் இமைக்கும் நேரத்தில் அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.

என்ன ஏது என்று உணரும் முன்னரே அவளை படுக்கையில் கிடத்தி அவளுக்கு அருகே அவனும் சரிந்திருந்தான்.

“கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு ஆட்டம் காட்டின நீ…. உன்னை” என்று அவன் குரலில் இருந்த கோபத்தை உணர்ந்தவள் தன்னுடைய விலகலுக்கான காரணத்தை அவனிடம் சொல்லி விடலாம் என்று எண்ணி அவள் வாய் திறக்கையில் அவளால் அது முடியாமல் போனது.

இதுநாள் வரை உதடுகள் சிரிப்பதற்காக மட்டுமே என்று எண்ணி இருந்தவளின் நினைப்பை அந்த நொடியில் தகர்த்து எறிந்தான் சங்கர பாண்டியன். அவளுக்கும் சேர்த்து அவன் சுவாசித்தான்.

அவளது உடலில் எந்த பாகமும் அவளுக்கு சொந்தமில்லாமல் போனது. பிய்த்து தின்று விடுவானோ என்று அவள் பயம் கொள்ளும் அளவுக்கு அவளிடம் தாபத்தை கொட்டித் தீர்த்தான் சங்கரபாண்டியன்.

அவள் தடுக்க தடுக்க அவனது வேகம் கூடிக்கொண்டே போனது. உதடுகளால் முத்த ஊர்வலம் நடத்தியவன் கைகளால் அவளது வெட்கத்தை தள்ளி நிறுத்த முனைய… அவனை எதிர்த்து ஒற்றைச் சொல்லைக் கூட உதிர்க்க முடியாதவளாக திணறிப் போனாள் தாமரை.

“ஏன்டி இத்தனை நாளாய் என்னை தவிக்க விட்ட?” என்று தாபத்துடன் கேள்வி கேட்டவன் அந்த கேள்விக்கு பதில் சொல்லும் சந்தர்ப்பத்தை மட்டும் அவளுக்கு கொடுக்கவே இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட இசைக் கலைஞனின் லாவகத்துடன் அவனது விரல்கள் அவள் மேனியில் விளையாட…. பெண்மைக்கே உண்டான தவிப்புடன் அவனை விலக்கி நிறுத்தப் போராடினாள் தாமரை.

 “ம்ச்” அவளது விலகலை பொறுத்துக் கொள்ள முடியாத மெல்லிய அதிருப்தி அவனிடம் இருந்து வெளிப்பட்டது.

“வருஷக்கணக்கா காத்துக்கிட்டு இருந்து இருக்கேன்டி உனக்காக.. என்னை தள்ளி வைக்க நினைக்காதே.. என்னால தாங்க முடியாது” என்று அவளின் காதோரம் கதை பேசியவன் அவளின் மீது தன்னுடைய ஆதிக்கத்தை மேலும் தீவிரப்படுத்த திணறிப் போனாள் தாமரை.

அவளின் கெஞ்சல்களும், மறுப்புகளும் அவன் காதில் விழுந்தது போலவே இல்லை.அவன் ஒரு மாய உலகத்தில்  இருந்தான். அந்த உலகிற்குள் தாமரையையும் சேர்த்துக் கொண்டான். அங்கே அவன் அவர்களுக்கான புது உலகை சிருஷ்டிக்க… அவன் காட்டிய காதலில் அவளது இளமை திண்டாடியது.

அவனுடைய வேகம் நொடிக்கு நொடி கூடியதே தவிர கொஞ்சமும் குறையவில்லை. இதழ் கடித்து தன்னுடைய உணர்வுகளை மறைக்கப் போராடியவளை கலைத்து வெற்றிகரமாக தாம்பத்திய வாழ்க்கையில் நுழைந்து விட்டான் சங்கர பாண்டியன்.

கூடலின் பொழுது அவன் புரிந்த அத்துமீறல்களால் களைத்துப் போய் அருகில் இருந்தவளை அள்ளி நெஞ்சில் போட்டுக் கொண்டவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு பேசிக் கொண்டே இருந்தான்.

“எனக்கு உன்னை அவ்வளவு பிடிக்கும்டி ராசாத்தி …. பார்த்த உடனே பிடிச்சு போச்சு… நீ தான் என்னோட பொண்டாட்டின்னு அந்த நிமிசமே முடிவு பண்ணிட்டேன்”

“அதுக்காக இப்படியா? வந்ததும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்து அப்புறம்…. பொறுமையா இல்லாம.. இப்படியா காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் பாயுற மாதிரி பாயுறது” அலுப்புடன் கேட்டாள் தாமரை

அவளது பேச்சை வெகுவாக ரசித்து சிரித்தான் சங்கர பாண்டியன்.

“என்னடி செய்ய சொல்லுற…. விளைஞ்சு நிற்கிற பயிராட்டம் நீ இருந்தா நான் காஞ்ச மாடாத் தான் ஆகிடறேன்… மன்னிச்சுக்கடி” என்றான் சட்டென்று….

புரியாமல் அவன் முகத்தை அவள் ஊடுருவி பார்க்க…

“உன்னை ரொம்ப படுத்தி எடுத்துட்டேனா?” என்றான் ஆதரவாக அவளது தலையை கோதியபடி…

அவள் ஒன்றுமே பேசாமல் அவன் நெஞ்சில் மௌனமாக சாய்ந்து கொள்ள கைகளால் அவளை இறுக்கிக் கொண்டான்.

“ஹப்பா… வலிக்குது.. விடுங்க… இவ்வளவு முரட்டுத்தனம் எல்லாம் கூடாது”

“என்னடி செய்ய… சின்ன வயசில் இருந்தே கொஞ்சம் முரட்டுத்தனமாவே வளர்ந்துட்டேன்… கல்லோடவும், மண்ணோடவும் பழகினவனுக்கு பூவை எப்படி கையாளணும்ன்னு தெரியலை.. நீ தான் சொல்லிக் கொடேன் ராசாத்தி” என்றான் சரசமாக…

“அது என்ன ராசாத்தின்னு கூப்பிடறீங்க? யார் அவ?” என்று பொய்யாய் கோபப்பட சங்கரபாண்டியனோ மெய்யாகவே அலறினான்.

“அடியே நான் ராமன் வம்சம்டி… என்னோட வாழ்க்கையில் நீ மட்டும் தான்… ராசாத்தின்னு உன்னைத் தான் செல்லமா கூப்பிட்டேன்” என்று பேசியபடி மனைவியை சமாதானம் செய்ய முயல…

அவன் கைகள் அத்துமீறி மீண்டும் முதலில் இருந்து அவன் தொடங்கப் போவதை அறிவிக்க ஆன மட்டும் கோபத்துடன் முறைத்துப் பார்த்தாள் தாமரை.

“மறுபடியும் முதல்ல இருந்தா…”

“பர்ஸ்ட் நைட் ரூமில் வேற என்னடி செய்யுறது… நீயே சொல்லு… அறை முழுக்க பூவு… அதை விட மென்மையா…. எல்லாப் பூவையும் தூக்கி சாப்பிடும் அழகோட ஒரு பொண்டாட்டி.. ஒரு மனுஷனுக்கு நினைப்பு எங்கே போகுமாம்?” அவன் நியாயம் கேட்ட விதத்தில் அவள் முகம் சிவந்து போனது.

“பேச்சை குறைங்க.. இப்படியா பேசி வைக்கிறது?”

“சரி சரி… நமக்கு பேச்சே வேண்டாம்” என்று சொன்னவன் அடுத்த நொடியில் இருந்து அவளைக் கைப்பற்றி தன்னுடைய தேடலைத் தொடர…. விடியலின் பொழுது அவனிடம் கெஞ்சி …. திட்டி … கோபம் கொண்டு உறங்கத் தொடங்கினாள் தாமரை.

காலையில் அவளுக்கு முன்பே எழுந்தவன் மீண்டும் அவளை எழ விடாமல் செய்த குறும்புகளில் மெல்ல மெல்ல தன்னை அவனிடம் ஒப்புக் கொடுத்தாள் தாமரை. அவனை ஒரு வழியாக ஏமாற்றி விட்டு கீழே வந்தவளை செங்கமலம் பிடித்துக் கொண்டார்.

முதலிரவு முடிந்து வெளியே வந்த பேரனின் மனைவியை அவர் மேலிருந்து கீழாக பார்வையிட்ட விதம் அவர் எதற்காக அப்படிப் பார்க்கிறார் என்று சொல்லாமல் சொல்ல முதல் நாள் இரவில் முகம் சிவந்தவள் அவரின் முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு நில்லாமல் ஓடி விட செங்கமலத்திற்கு நிம்மதியாக இருந்தது.

ஒற்றைப் பார்வையில் மனிதர்களை எடைப் போட்டு விடும் அவரால்  அவளின் நாணசிகப்பின் காரணத்தை அறிய முடியாதா என்ன? வாழ்ந்து முடித்த அந்த பெண்மணிக்கு எளிதில் புரிந்து விட்டது.

“இதெல்லாம் விவரம் தான் ஆனா வாய் தான் கொஞ்சம் அதிகமா இருக்கு” என்று முனகிக்கொண்டே சென்றவரின் முகத்தில் புன்னகையின் கீற்றுகள் அவரது மகிழ்ச்சியை சொல்லியது.

 

 

 

 

 

 

 

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here