கனவுகளும் ஆசைகளும் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் பல பேரின் உயிரை விதி அவர்களின் வாழ்க்கையை மரணம் என்ற பேரில் அழித்துவிடுகிறது…
எந்த கனவுகளும் இன்றி அந்த விதியை தேடி செல்வது தான் தற்கொலை..
தற்கொலைக்கு மிக முக்கியமான காரணம் ஒன்றின் மேல் கொண்ட ஈடுபாடோ அல்லது ஆசையோ அது நிறைவேறாத சமயம் ஏற்படும் மன அழுத்தம் தான் காரணம்.. சாதிக்க வேண்டும் என்பதற்காக இரவு பகல் என்று பாராமல் உழைக்கும் பலருக்கு தூக்கம் குறைவாக இருக்கிறது .அவர்களால் அந்த சாதனையை அடைய முடியவில்லை என்றால் அவர்களின் மனஅழுத்தம் அதிகமாகி அவர்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றுகிறது..
தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாக திகழ்வது தனிமை.. நம் நண்பர்கள் யாராவது தனிமையாக இருந்தாலோ அவர்களை தனிமையாக இருக்க அனுமதிக்காதீர்கள்… தனிமையில் மட்டுமே தற்கொலையின் சிந்தனை மேலோங்கும்.. முடிந்தவரை அவர்களின் சிந்தனையை கவனத்தை வேறு ஏதாவது ஒன்றில் ஈடு படுத்துவதால் தற்கொலை எண்ணத்தை குறைக்க முடியும்.
இனியன் இசையின் மீது உள்ள கோபத்தை அவன் வண்டியின் மீது காட்டினான் . வண்டி நூறை தாண்டியது திடீரென்று அவன் மொபைல் அடிக்க அதில் எண் மட்டும் வர முதலில் கட் செய்தான் மீண்டும் மீண்டும் போன் அடித்துக்கொண்டே இருக்க அதை எடுத்து காதில் வைத்தான்
ஹலோ அத்தான் என்றால் கயல்விழி
ஹான் சொல்லு
அத்தான் என்னால உங்களை மறக்க முடியல . சின்ன வயசுல இருந்தே நீங்க தான் என் புருஷன் நான் நிறைய கனவு கண்டுஇருக்கேன்.
ப்ளீஸ் அத்தான் அவ வேண்டாம் உங்களுக்கு என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே
ஏய் நிறுத்துக் கயல் விட்டா நீ பாட்டுன்னு பேசிட்டே போற.
இதுவரைக்கும் என் எதிரில் நின்னு பேசி இருப்பியா நீ. உனக்கு தெரியாதா அவ எனக்காக என் அம்மா பார்த்த பொண்ணு. 13 வருஷத்துக்கு முன்னாடியே இவதான் என் பொண்டாட்டின்னு அந்த சாமி உத்தரவு கொடுத்தாச்சு சும்மா ஏதாவது உலராம போனவை.
அத்தான் நீங்க இல்லனா நான் செத்துருவேன் அததான்
செத்துப் போ …..
போ போய் சாவு .யார் வேணாம்னு சொன்னது என் உயிரை வாங்காதே இனி போன் பண்ண நானே உன்ன கொன்னுடுவேன்
கயல்விழியின் காதுகளில்இனியனின் வார்த்தைகளே கேட்டுக்கொண்டிருந்தது .
தோட்டத்தில் வயலுக்கா வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தால் . அதை குடித்த சில நொடிகளிலேயே மயங்கி சரிந்தாள்… சந்தைக்கு சென்ற மரகதம் ஹாலில் மயங்கிய மகளைக் கண்டு பதறிப்போய் கவிக்கு போன் செய்தார்..
ஏன் மலர் இங்க என்ன பண்ணிட்டு இருக்க ஸ்கூலுக்குப் போகலையா நீ என்று கேட்டால் இசை
இல்லக்கா எனக்கு படிப்பு ஏறல அதனால எட்டாங்கிளாஸ் ஒட நின்னுட்டேன்.
ஏன் மலர் என்ன ஆச்சு என்று கேட்டால் இசை
மலருக்கு பதிலாக தமிழ் பதிலளித்தான்
ஸ்கூல்ல ஒரு பையன் இவள கிண்டல் பண்ணிட்டான். அதுக்காக இவ ஸ்கூல விட்டு நின்னுட்டா.
ஏன் மலர் நீ கவி கிட்ட சொல்லியிருந்தா அவரு அவங்க அண்ணன் கிட்ட சொல்லி அந்தப் பையனை நாலு சாத்து சாத்தி இருப்பாங்களே.
சரி அவன் என்ன பன்னான்னு சொல்லு .
அது வந்து அக்கா.. எனக்கு அப்பா கிடையாது அம்மாவும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி செத்துப்போச்சு..
இனியன் மாமா தான் என்னை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்து என்ன அவரோட பொண்ணு போல பாத்துகிட்டாரு… ஆனா அந்த பயலுங்க என்னையும் மாமாவையும் சேர்த்து வச்சு தப்பு தப்பா பேசு ரானுங்க அதான் எனக்கு ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல நின்னுட்டேன்
இங்கே பார் மலர் ஊரு உலகம் ஆயிரம் சொல்லும். அதுக்காக அவங்க சொல்றதெல்லாம் உண்மைனுஆகிடுமா அதெல்லாம் இந்த காதுல வாங்கிட்டு அந்த காதுல விட்டுடணும் . மத்தவங்க எல்லாம் பேசிட்டு போயிட்டே இருப்பாங்க அவுங்களுக்கு பேச மட்டும் தான் தெரியும். அதோட இழப்பு யாருக்கு உனக்கு தானே சொல்லு.
அதுக்காக உன்னோட படிப்பு எதிர்காலம் எல்லாத்தையும்இழந்துட்டு நிக்கிறியே உன்னோட முட்டாள்தனத்தை நான் என்னன்னு சொல்றது .யாரோ ஒருத்தரோட வார்த்தைக்கு பயந்து நீ இந்த முடிவை எடுத்தது ரொம்ப தப்பு . நீ மறுபடியும் படிக்கணும் மலர் படிச்சு அவங்க முன்னாடி பெரிய ஆளா இருக்கணும்.
சரி அக்கா ஆனால் நான் வீட்ல இருந்து படிக்கிறேன் பள்ளிக்கூடம் போகல ப்ளீஸ்க்கா.
நானும் உன் கிளாஸ் தான மலர் நீ என்கூட வா நான் உன்ன பாத்துக்குறேன்.
மலர்க்கு அதிர்ச்சியாக இருந்தது தமிழின் வார்த்தைகளை கேட்டு யாரிடமும் பேசாதவன் இன்று என்னிடமா பேசினான் என்று தன் கையை கிள்ளி பார்த்தால் மலர்
நீ சொல்றது கரெக்டு தான் தமிழ் நாளைக்கே கவி கிட்ட சொல்லி இவளையும் அழைச்சிட்டு ஸ்கூலுக்கு போ
அப்போது கேஸ் டியூப் ஓட்டையாக இருப்பதை கவனிக்காமல் மலர் ஸ்டவ்வை ஆன் செய்ய அது பற்றிக்கொண்டு எரிந்தது டியூப் பாதி வரையும் எரிந்து கொண்டிருக்கும்போதே இசை அங்குள்ள துணியை எடுத்து கொஞ்சம் கூட பயப்படாமல் கைகளாலேயே அணைத்தாள்.அவளின் கை முழுவதும் சிவந்து புண்ணாக மாறியது.
ஐயோ அக்கா உங்க கையெல்லாம் தீக்காயம் பாருங்க வாங்க ஹாஸ்பிடல் போலாம்.
மலர் எனக்கு ஒன்னும் இல்ல ஜஸ்ட் சின்ன காயம் தான்.
நான் போய் கவி அண்ணனை கூட்டிட்டு வரேன்
அதெல்லாம் வேண்டாம் தமிழ் கொஞ்ச நேரத்தில் அதுவே சரியாயிடும்
இல்ல உங்க கை ஃபுல்லா காயமா இருக்கு இப்படியே விட்டா எரியும் வாங்க ஆஸ்பிட்டல் போலாம்
ஆமாக்கா இவங்க சொல்றது தான் கரெக்ட் நீங்க அவங்க கூட ஆஸ்பிட்டல் போங்க
கவி அண்ணாவ வீட்டு புல்லா தேடிட்டேன் எங்கேனு தெரியல நான் வேணா இனியன் அண்ணன கூட்டிட்டு வரட்டுமா
ஐயோ தமிழ் வேணா நீ அகி மகி யாராவது இருந்தா கூட்டிட்டு வா
நான் இப்போ ஹாஸ்பிடல் போனா கண்டிப்பா என்ன கண்டுபிடித்து விடுவான். இப்ப நான் என்ன பண்றது . அவனோட நெட்வொர்க் ரொம்ப பெருசு கண்டிப்பா என்ன இசியா கண்டுபிடித்துவிடுவான்.
மகிழன் தோட்டத்தில் அவன் வண்டியை நூறாவது முறையாக துடைத்துக் கொண்டிருந்தான்
மகி மாமா அக்காக்கு கையில் சூடு பட்டுடுச்சு உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும். கூட்டிட்டு போயிட்டு வாங்க
ஐயோ அண்ணிக்கு என்ன ஆச்சு
ஒன்னும் இல்ல மகி இவங்க எல்லாரும் தான் சின்ன காயத்துக்கு இப்படி பயப்படுறாங்க
அதைக் கேட்டு பதறி வந்த கமலம் இது உனக்கு சின்ன காயமா ராசாத்தி எவ்வளோ பெருசா இருக்கு . ரெண்டு கையும் எப்படி செவந்து இருக்கு பாரு உடனே ஹாஸ்பிடல் கிளம்பி போ..( இதை விட பெரிய தீக்காயத்தை நான் அனுபவித்திருக்கேன் அப்பத்தா என்று மனதில் நினைத்துக்கொண்டு)ஹாஸ்பிடல் கிளம்பினாள்
தமிழ் மகியிடம் நீ தொடச்சது போதும் முதல்ல ஹாஸ்பிடல்
கூட்டிட்டு போ
மகி அதற்கு நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது என்று கிண்டலாக பாடினான்
ஓவரா ஓட்டாத அப்புறம் பெரிய அண்ணன்கிட்ட உன் வண்டவாளத்தை போட்டு கொடுத்துடுவேன்.
ஐயோ பயமா இருக்கு என்று பயப்படுவது போல் நடித்தான் மகி
ஏன் தமிழ் அப்படி என்ன அவன் பண்ணி வச்சியிருக்கான்
அது ஒன்னுமில்ல இவனுக்கு பைக் ஆல்ட்ரேஷன் பண்றது ரொம்ப பிடிக்கும். இந்த பைக் தான்அவனுக்கு உயிர் அதுக்காக 1 லட்சம் செலவு பண்ணி இருக்கான்.
வாவ் சூப்பர் மகி இது என்ன மாடல்
அண்ணி இது ஓல்ட் யமஹா ஆர் எக்ஸ் 100 பைக்.
இந்த வண்டியை வாங்குறதுக்கு அண்ணா ரொம்ப கஷ்டப்பட்டுச் அண்ணி. அதுக்கு 20 வயசு இருக்கும்போது இத வாங்கி எப்ப பாத்தாலும் தொடச்சு கிட்டே இருக்கும் .. ஒரு தடவை எனக்கு ஆக்சிடென்ட் ஆன அப்ப எங்க கையில காசு இல்ல எனக்காக அண்ணா இந்த பைக் வித்துடுச்சு.. எங்க அண்ணா எது ஆசைப்பட்டாலும் அதுகூட அந்தப் பொருள் நிரந்தரமாய் இருக்காது
இப்பதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி. இந்த பைக்க ஸ்கிராப் போட கொடுத்தாங்க எதேச்சையா நான் அதைப் பாத்து வாங்கி ரெடி பண்ணேன். அடுத்த வாரம் அண்ணனுக்கு பிறந்தநாள் வருது அப்போ இத அவனுக்கு கிப்ட்டா கொடுக்கலாம்னு இருக்கேன் அண்ணி
அன்னைக்கு என் உயிரை காப்பாத்துன இந்த வண்டி தான் எனக்கு உயிர் அண்ணி
ஸ்கிராப் போடப் போன வண்டி மாதிரி இல்ல மகி .இது புதுசு மாறி இருக்கு. பல்சர் ஓட டூம் லைட் போட்டு இருக்க சஸ்பென்சர் சீட் பெட்ரோல் டேங்க்
எல்லாமே சூப்பர்..
அது மட்டும் இல்லண்ணி இந்த வண்டில சீக்ரெட்டா லாக்கர் வச்சிருக்கேன் அண்ணன் டவுன்ல நிறைய பேர்கிட்ட பணத்துக்கு பதிலா நகையை வாங்கும் அதை வைக்க பெட்ரோல் டேங்க் ல ஒரு சைடு கட் பண்ணி அதுல ஒரு சின்ன பாக்ஸ் வெச்சிருக்கேன். அதுல நகைய பத்திரமா கொண்டு வரலாம்..
சான்சே இல்ல மகி உன்னோட கிரியேஷன்ஸ் ரொம்ப சூப்பர். உனக்கு கண்டிப்பா பிரைட் ஃப்யூச்சர் இருக்கு..
ஆல் த பெஸ்ட்
தேங்க்யூ அண்ணி ..
சீக்கிரம் வாங்க அண்ணி ஒன் மினிட் மகி என்று தன் துப்பட்டாவை எடுத்து முக்காடு போல் கட்டிக்கொண்டாள்
அண்ணி இந்தாங்க இந்த ஹெல்மெட்டை போட்டுக்கோங்க மகி இந்த பைக் ஓட பிக்கப் சூப்பரா இருக்கு.
அண்ணி உங்களுக்கு எப்படி பைக் பத்தி இவ்வளவு தெரியுது.
நான் எனக்கு டைம் கிடைக்கும் போதெல்லாம் பைக் தான் ஓட்டுவேன். என்னோட ஒரே ரிலாக்சேஷன் பைக் ஓட்டுவது தான்.வரும்போது நான் வண்டி ஓட்டிட்டு வரட்டும் மா
உங்க கை இருக்கிற நிலைமைய பார்த்தீங்களா. இப்ப எப்படி ஓட்டு முடியும் இன்னொரு நாள் கண்டிப்பா ஓட்டுங்க
புதுக்கோட்டையில் உள்ள பெரிய மருத்துவமனையில் அந்த வண்டி நின்றது
இசைக்கு தீக்காயத்திற்கான ட்ரீட்மென்ட் முடிந்து வெளியே வரும்போது கவி அங்கு தலையில் கையை வைத்து கொண்டு உட்காந்து இருந்தான்
ஹே மகி அங்க பாரு கவி .இங்க என்ன பண்றான்.
கவி இங்க யார் இருக்கா.. யாருக்கு என்ன ஆச்சு.
அது வந்து அண்ணி கயல் பூச்சி மருந்து குடிச்சிட்டா
.வாட் கம் அகைன்
பூச்சி மருந்து குடித்து சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டா அண்ணி என்றான் கவி
அதற்குள் அங்கு வந்த மரகதம் எல்லாம் உன்னால தான். உன்னால தான் என் பொண்ணு இந்த நிலைமைல இருக்கா
போடி மொத அந்த வீட்டை விட்டு போ .
அத்தை சும்மா இருங்க அவ பூச்சி மருந்து குடிச்சதுக்கு அண்ணி என்ன பண்ண முடியும்
என் பொண்ணு இருக்க வேண்டிய இடத்துல இவ இருக்கா .இவனால தான் என் பொண்ணு இன்னைக்கு இந்த நிலைமையில படுத்துட்டு கிடக்கிறா
கவி நான் கயல் ல பார்க்கலாமா
சரி வாங்க அண்ணி நம்ப போய் பார்க்கலாம்
கயல் இசையை பார்த்து
ஏய் நீ எதுக்கு இங்க வந்த நான் உயிரோட இருக்கிறேனா இல்ல செத்துடேன பார்க்க வந்தியா
லிசன் மி கயல். நீ தற்கொலை பண்ணிட்டா எல்லாம் சரி ஆகிடுமா சொல்லு. நீயே உன் வாழ்க்கையை வீணாக்கிக் கிற. கடவுள் இந்த வாழ்க்கையை நமக்கு கொடுத்தது சந்தோஷமா வாழ்றதுக்கு தான் இப்படி பாதில சாகறதுக்கு இல்ல.. இன்பம் மட்டும் வந்துக்கிட்டே இருந்தா அது போதும்னு யாருமே சொல்றது இல்லை அத எவ்வளோ சந்தோஷமா அனுபவிக்கிறோம் ஆனால் துன்பத்தை மட்டும் போதும் என்னால தாங்கவே முடியல அப்படின்னு சொல்றது ரொம்ப முட்டாள்தனமான ஒன்று.இந்த உலகத்துல எல்லாருக்கும் இன்பமும் துன்பமும் கலந்து தான் வரும்.. எல்லார் ஆசைப்பட்டு பொருளும் எல்லாருக்கும் கெடச்சது இல்ல.
ஏன் நம்மளோட அப்துல் கலாம் ஐயா இருக்காரே அவரே சின்ன வயசுல இருந்து ஆசைப்பட்டு பைலட் ஆகணும் என்ற குறிக்கோளுடன் படிச்சி அவரோட முதல் இன்டர்வியூல அவர் ரிஜக்ட் ஆகிட்டார். அப்போ அந்த வழியே போன ஒரு குரு இவரைப் பார்த்து சொன்னாராம் நீ நினைச்சது கெடைக்கல என்பதற்காக தளர்ந்து விடாத கண்டிப்பா ஒரு எதிர்காலம் உனக்காக காத்துகிட்டு இருக்குனு சொன்னாராம்
கண்டிப்பா உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கைத் துணை அமைவாங்க கயல். அப்படி தான கவி என்று கவியை பார்த்து கண்ணடித்து கேட்டால் இசை
ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய் நின்றான் கவி..
கண்டிப்பா அண்ணி..
காலையில் பிரமை பிடித்துது போல இருந்தவங்களா இது
யார் இவுங்க ....
பார்ப்போம்