4.கண்ணாளனின் கண்மணியே!!!

0
411

முதல் நாள் வேலை கொஞ்சம் நல்லா போனதுனால ஒரு உற்சாகத்தோடே அடுத்த நாள் ஆபீஸ் கிளம்பிகொண்டிருந்தாள் மகி..
காலைலயே உற்சாகத்தோடே கிளம்பிகொண்டிருந்த மகியை பாத்து முத்து(மகியோட அப்பா),
“என்னமா…காலைலயே இவ்ளோ சீக்கிரமா கெளம்பிட்டே.. வேலை அதிகமா கொடுக்கறாங்களா” என்றார் தந்தைக்கே உண்டான பாசத்துடன்..

தன் தந்தையின் மனம் அறிந்த மகியோ தன் அப்பாவிடம் நெருங்கி செல்லமா அவரோட மீசையை முறுக்கிவிட்டுட்டு,” அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ” என்று கூறினாள்…
இருந்தும் தன் தந்தை முகத்தில் உள்ள பயத்தை போக்கும் பொருட்டு தன் அன்னையிடம்,”என்ன அன்பு காலைலயே உன் வீட்டுக்காரர கவனிக்காம என்ன பண்ணிட்டு இருக்க…” என்றாள்…

அன்பு(மகி அம்மா),”ஹேய் வாலு காலைலயே சேட்டையை ஆரம்பிச்சுட்டயா… சாப்பிட்டு ஒழுங்கா கிளம்பு”னு அதட்ட..

அவள் தன் அன்னையிடம் வக்கனைத்துவிட்டு தந்தையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.. மகள் செய்யும் சேட்டைகளை ரசித்து கொண்டிருந்தார் முத்து.. என்ன தான் பெண் பிள்ளைகள் பெரியவர்களாயினும் அப்பாகளுக்கு மகள்கள் என்றுமே தேவதைகள் தான்…

தந்தையும் மகளும் உணவருந்திவிட்டு கிளம்பினர்.. முத்துவே இன்று மகியை அழைத்து சென்றார்…தன் மகளை அலுவலகத்தில் இறக்கிவிட்டுட்டு அவரும் கிளம்விவிட்டார்..

அதே உற்சாகத்துடன் அலுவலகத்தில் நுழைந்தவள் அபய் சொன்ன அந்த எஸ்போர்ட் ஆர்டர் வேலையை முடிச்சுட்டு, அவனுக்கான மீட்டிங் எல்லாத்தயும் அரேன்ஞ்
பண்ணிக்கொண்டிருந்தாள்..

அங்கோ அபய் குடியுடன் உறவாடிவிட்டு வழக்கம் போல் கிளம்பிக்கொண்டிருக்க அவன் வீட்டுக்கு அவனை தேடி ஒரு நவ நாகரிக மங்கை வந்திருந்தாள்.. அவள் அணிந்திருந்த வெஸ்டர்ன் உடையே அவளின் மேலைநாட்டு கலாச்சாரத்தை பறைசாற்றியது..

அவள் வீட்டிற்குள் நுழையும் போதே பாட்டி,”யாருமா நீ…னு கேட்டாங்க..

அவளோ மிடுக்காக என் பேரு கீர்த்தி அபயோட பிரண்ட்… அபய பாக்கணும் என்று அவனது அறைக்கு செல்ல முற்பட அவளை தடுத்த பாட்டியோ அவளின் முகம் பாராமல் நீ இங்கேயே வெய்ட் பண்ணு நான் அவனை வர சொல்றேன் என்றுரைத்து விட்டு மாடிக்கு விரைந்தார்…

கீர்த்திக்கோ பாட்டியின் செயல் எரிச்சலை தந்தது…இருந்தும் தான் வந்த வேலையை நினைத்து அமைதியாய் இருந்தாள்….

அபயின் ரூமிற்குள் நுழைந்த பாட்டியை பாத்தவுடன்,’என்ன என்பதாய் புருவம் உயர்த்தி வினவ’ பாட்டியோ உன்ன பாக்க யாரோ ஒரு பொண்ணு வந்திருக்கு என்றவர் மேலும் அவனிடம் பேச தொடங்கினார்…

பாட்டி,” அபய் இதெல்லாம் என்ன புது பழக்கம்… நானும் உன் தாத்தாவும் இதுக்காகவா உன்ன கஷ்டப்பட்டு வளத்தோம்… எங்க வளர்ப்பு தப்பாயிடும் போலயே… அப்டி மட்டும் ஆச்சு என்னையும் நீ உயிரோடு பாக்க மாட்ட..”

அபய்,”இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி பேசறீங்க”

பாட்டி,”உன் மனசுல ஏதும் இல்லனா ஏன் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டிங்கிற…அப்போ நீ ஏதோ தப்பு பண்ற” என கேட்டுக்கொண்டிருந்தார்..

அபய் பாட்டியை சமாளிக்கும் பொருட்டு,”இப்போ என்ன உங்களுக்கு நான் கல்யாணம் தானே பண்ணிக்கணும் சரி நீங்க பொண்ண பாருங்க” என்றான் நடக்க இருக்கும் விபரீதம் அறியாமல்……

அபய் எவ்ளோ பொண்ணுங்க கூட இருந்தாலும் யாருமே அவனை தேடி வீட்டுக்கு வந்ததில்லை… இன்னும் சொல்ல போனா அவனே எல்லாத்தயும் ஹோட்டல் இல்ல கெஸ்ட் ஹவுஸ்லயே முடிச்சுக்குவான்… அப்டி இருக்கப்ப,’யாரு நம்மள தேடி வந்தாங்க’ என்ற யோசனையுடனே கீழே இறங்கி வர ….

கீர்த்தியை பாத்த அதிர்ச்சியில் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான் அபய்… பாட்டியும் ஒரு பொண்ணு என்றே சொன்னார் பெயரை குறிப்பிடவில்லை… பேரை சொல்லி இருந்தா
பிரச்சனையை சமாளிக்க தயாராகி வந்திருப்பானோ?? இருக்காதா பின்னே அவள் பிரச்சனையின் மறுஉருவம் ஆயிற்றே…

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here