4. கிணற்று தவளை

0
110

பிரைவேட் நம்பரிலிருந்து அழைப்பு வந்ததும் எடுத்துப் பேசிய நிர்பயா, எதிர்ப்புறம் பேசியதைக் கேட்டு கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தாள்.

இதைப் பார்த்த நிரஞ்சனா என்ன நிர்பயா இப்படி நிக்குற ஏதாவது பிரச்சினையா? என்றாள்.

நிர்பயா,” பிரச்சனை இல்லை, ஆனா மிரட்டுறாங்க இந்த கேஸ் எடுத்து நடத்த கூடாது அப்படின்னு சொல்றாங்க.

நிரஞ்சனா,” அதுக்கு நீ என்ன சொன்னே?

நிர்பயா,” தைரியமா இருந்தா என்னோட பர்சனல் நம்பரிலிருந்து கால் பண்ணு அப்புறமா என்ன மிரட்டலாம் அப்படினு கால கட் பண்ணிட்டேன்.

நிரஞ்சனா,” அப்ப பிரைவேட் நம்பர்னு கால் வந்ததுதா?

நிர்பயா,” ஆமா எவனோ ஒருத்தன் கால் பண்ணி இந்தக் கூல் ட்ரிங்ஸ் கம்பெனி விஷயத்திலிருந்து பின் வாங்குமாறு சொல்றான். நம்மளே அதப்பத்தி இன்னும் கிளியரா டிசைட் பண்ணல அதுக்குள்ள எப்படி?

நிரஞ்சனா,” இந்த ஊர்ல யாரையாவது உளவு பார்க்க வச்சிருப்பாங்க.

நிர்பயா,” அஃப்கோர்ஸ் அக்கா, யாரோ பக்கத்துல இருந்து நம்மள வாட்ஸ் பண்ற மாதிரி எனக்கு தோணுது பட் யாருன்னு இன்னும் தெரியல.

அந்த நேரம் நித்யன் போன் பேசி விட்டு வரவும் இவள் முகம் பார்க்க,

நித்யன்,” என்ன மேடம் முகம் கோபத்தில் சிவந்து போயிருக்கு? ஏதாவது பிரச்சனையா? அப்புறம் இந்த கேஸ் கோர்ட்ல எடுத்துக்கிட்டு போலாமா டிசைட் பண்ணிட்டீங்களா?

நிர்பயா,” இந்த கேச நான் கோர்ட் க்கு எடுத்துக்கிட்டு போகக்கூடாதுன்னு மிரட்டல் வருது.

நித்யன்,” ஓஓ, சோ நீங்க என்ன டிசைட் பண்ணி இருக்கீங்க? கேஸ் போட வேண்டாமா?

நிர்பயா,” சிட், நோ வே, எவனோ ஒருத்தன் அவன் நம்பரில் இருந்து பேசவே தைரியம் இல்லாதவன் அவனுக்காக நான் ஏன் கேஸ் போடாம இருக்கணும்? இது என்னோட ஊர் சம்பந்தப்பட்ட விஷயம் கண்டிப்பா இதுல நான் பின்வாங்க மாட்டேன்.

நித்யன்,” கிரேட், பட் நீங்க அந்த ஓனர் பார்த்து பேசணும்னு சொன்னீங்களே அது எப்ப?

நிரஞ்சனா,” கால் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியாச்சு இரண்டு நாள் கழிச்சு மீட்டிங் பிக்ஸ் இருக்காங்க.

நித்யன்,” ஓகே பைன், நீங்க பேசிட்டு சொல்லுங்க நெக்ஸ்ட் ஸ்டெப் என்னனு வில் டிசைட்.

நிர்பயா,” ஹலோ சார் உங்களை யாரும் போகச் சொன்னது நீங்களும் தான் எங்க கூட வரீங்க.

நித்யன்,” வாட்? பட் ஓய்?

நிர்பயா,” என்ன ஓய்? உங்களைத் தானே இந்த கேஸுக்காக பிக்ஸ் பண்ணி இருக்கோம். நாங்க போயி எல்லா டீட்டைலையும் கலெக்ட் பண்ணனுமா இவர் மட்டும் கலக்கட் பண்ண டீடைல வச்சிக்கிட்டு ஹாயா கேஸ் நடத்துவாராம். இந்த கதையெல்லாம் இங்க நடக்காது.

நித்யன்,” சிரித்து கொண்டே, நீங்க கன்வீன்ஸ் பண்ண தானே போகப்போறேன் சொன்னீங்க அப்புறம் நான் எதுக்கு அங்க?

நிர்பயா,” நாங்க போய் பேச தான் போறேன் பட் அங்க என்ன நடக்குதுன்னு நான் சொல்லி புரிஞ்சுக்கிறது விட நீங்களே நேரம் வந்து தெரிஞ்சிக்கிறது எவ்வளவோ நல்லது. அவர் ஒத்துக்கலனா நெக்ஸ்ட் பிராசஸ்ச ஸ்டார்ட் பண்ணிடுவோம்.

நித்யன்,” தென் ஓகே வில் கேட்ச் யூ லேட்டர் என்று நிரஞ்சனாவிடம் சொல்லிவிட்டு, நிர்பயா வை நெருங்கியவன், நிர்பயா கொஞ்சம் சிரி, சிரிச்சா அழகா இருக்க என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லி கண்ணடித்து விட்டு சென்றான்.

அவன் செய்கை அவளுக்குள் ஏதோ செய்ய, அவன் செல்வதையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

நிரஞ்சனா, ” என்ன அங்கேயே பார்த்துகிட்டு நிக்குற?

நிர்பயா,” ஒண்ணுமில்லை அக்கா, சும்மா தான்.

நிரஞ்சனா, ” உன்ன ஒண்ணு கேக்கவா?

நிர்பயா,” கேளுங்க அக்கா, உங்களுக்கில்லாத உரிமையா.

நிரஞ்சனா, ” உனக்கு நித்யன புடிச்சு இருக்க? ஏன் கேக்குறேன்னா நீ அவர் கிட்ட பேசுற விதம், பார்க்குற பார்வை இதெல்லாம் வேறுபடுது அதானால தான் கேக்குறேன்.

நிர்பயா,” தெரியல அக்கா, அவரோட திறமைய பத்தி கேள்விப்பட்டு இருக்கேன். மே பீ அதனால வந்த ஈர்ப்பா இருக்கலாம். மத்தபடி வேற ஒண்ணும் இல்லை.

நிரஞ்சனா,” சரி வா, போகலாம் என்று இருவரும் வீட்டை அடைந்தனர்.

எப்பொழுதும் வீட்டிற்கு வந்தாள் சிரித்த முகத்துடன் வரவேற்கும் அப்பாக்கள் இன்று முகத்தை திருப்பி கொண்டு உள்ளே சென்றார்கள். தாய்மார்களை பற்றி சொல்லவே வேண்டாம், தங்கள் மீதிருந்த கோபத்தை அடுக்களையில் பாத்திரத்தின் மீது காண்பித்துக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த நிரஞ்சனாவுக்கு மனது வலித்தாலும் ஏதும் செய்ய இயலாமல் தன் கணவனின் அழைப்பு வரவே, அவருடன் பேச சென்றுவிட்டாள். நிர்பயாவுக்கு இதெல்லாம் பெரியதாக தெரியவில்லை. எதாவது ஒரு சூழ்நிலையில் இந்த மாதிரி கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று மனதை திடப்படுத்தி கொண்டிருந்தாள். அது இப்பொழுது உதவுகிறது என்று தன் அறைக்கு உறங்க சென்றாள்.

அப்பாடா என்று கட்டிலில் படுத்தவளுக்கு கைபேசியில் ஹாய் பேபி என்ற குறுஞ்செய்தி வரவே அதை எடுத்து யார் என்று பார்த்தாள். நம்பர் தெரியாமல் போகவே ட்ரூ காலரில் செக் செய்தாள், அதிலும் வெறும் லாயர் என்று மட்டும் இருக்கவே யார் என்று குழம்பினால், சரி யார் என்று கேட்போம் என்று அந்த எண்ணிற்கு இவளும் குறுஞ்செய்தி அனுப்பினாள்

நிர்பயா, “மே ஐ நோ ஊ இஸ் திஸ்?

புதிய நபர்,” நீதான் ரொம்ப அறிவாளி ஆச்சே கண்டுபிடி.

நிர்பயா,” நான் அறிவாளியா எல்லாம் முட்டாளா என்றது இருக்கட்டும் எனக்கு இருக்கிற பிரச்சனைல்ல நீ யாருன்னு கண்டு பிடிக்கிறது தான் வேலையா? முடிஞ்சா நீ யாருன்னு சொல்லு இல்ல இந்த மெசேஜ் பண்ற வேலையெல்லாம் வேண்டாம் அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன் கண்டபடி பேசிடுவேன்.

புதிய நபர்,” டென்ஷனாகாத பேபி நீ கோவமா இருந்தா அழகாக இல்லை கொஞ்சம் சிரிச்ச முகமா இரு.

நிர்பயா,” மவனே நீ மட்டும் என் கைல கெடச்ச அன்னைக்கு தெரியும் நான் யாருன்னு.

புதிய நபர்,” நீ யார் என்று தான் எனக்கு தெரியுமே பட் நான் யாருன்னு உனக்கு தெரியாது இல்ல? நீ எவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்கிறியோ உனக்கு அவ்வளவு நல்லது.

நிர்பயா,” உன்னை கண்டு பிடிக்கிறதுல எனக்கு என்ன நல்லது இருக்கு?

புதிய நபர்,” நீ என்னதான் என்ன பத்தி நினைக்க கூடாதுன்னு யோசிச்சாலும் என்னுடைய நினைப்பு மூளையை சுத்தி சுத்தி வரப்போகுது. அதுவே நீ என்ன கண்டு பிடிச்சுட்டன்னா இந்தப் பிரச்சினை உனக்கு இருக்காது இல்ல அதனால தான் சொன்னேன். நான் உன்னை ரொம்ப நாளா வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கேன் உன்னோட அழகு, தைரியம், கோர்ட்ல வாதாடும்போது எதிரில் இருக்கவங்கள நிலைகுலையச் செய்யும் உன்னோட பேச்சுத் திறமை இதெல்லாம் என்ன ரொம்ப ஈர்த்தது. ரொம்ப நாளா உன்கிட்ட பேச நினைச்சேன் பட் ஏதோ ஒன்று என்னைத் தடுத்துக் கொண்டே இருந்தது இன்னிக்கி எப்படியாவது பேசிய ஆகணும்னுதான் மெசேஜ் பண்ணேன். என் குரலை கேட்டா நீ நான் யாருன்னு உடனே கண்டுபிடித்து விடுவ.அதனால, இப்ப நான் உன் கிட்ட பேசமாட்டேன். நான் யாருன்னு உன்கிட்ட சொல்ல மாட்டேன். நீ எப்படி கண்டு பிடிக்கிறன்னு உன் கண்ணு எதிரிலிருந்து பார்ப்பேன். நீ என்னைக்கு கண்டுபிடிக்கிறியோ அன்னைக்கு நீ ரொம்ப சர்ப்ரைஸ் ஆக போற.

நிர்பயா,” நீ என்ன லூசா? எனக்கு இருக்க பிரச்சனையே தலைக்கு மேல இருக்கு உன்னை நான் தேடிகிட்டு இருக்க போறானா? சான்சே இல்ல. பத்தோடு பதினொன்னா நீயும் இருக்கப் போற அவ்வளவுதானே நோ ஒர்ரீஸ்.

புதிய நபர்,’ எது பத்தோடு பதினொன்னா? அவ்வளவு பேரும் உன் பின்னாடி சுத்துறாங்க? இதெல்லாம் நம்பற மாதிரி இல்லையே?

நிர்பயா,” நீ நம்புனா நம்பு, நம்மள நாளும் பரவாயில்லை இங்க எனக்கு உன்ன பத்தி யோசிக்க டைம் இல்ல பாய் என்று கைபேசியை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.

மறுநாள் காலை, நிரஞ்சனா வந்து எழுப்பியதும் தான் காலேஜுக்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பு வந்தது. அடித்து பிடித்து அவசர அவசரமாக கிளம்பி சென்றவள் கைபேசியை உயிர்ப்பிக்க கூட நேரமின்றி வகுப்பறையை அடைந்தாள்.

அவள் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் உடையவள். அப்படியிருக்க நேற்று மெசேஜ் செய்தவன் யாராக இருக்கும். ஒருவேளை அது நம் தோழியாக கூட இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்க அனைவரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்தாள். அனைவருக்குமே இவளைப் பற்றி நன்றாக தெரியும் ஏமாற்றுவது என்பது இவளுக்கு பிடிக்காத ஒன்று என்று. அப்படி இருக்க தன் நண்பர்கள் இதை செய்ய வாய்ப்பு இல்லை என்று ஒரு முடிவுக்கு வந்தாள். இவளின் கலக்கமான முகத்தைப் பார்த்த அவள் உயிர்த்தோழி பிரியங்கா அங்கு வந்தாள்‌.

பிரியங்கா,” நிர்பயா என்ன ஆச்சு உனக்கு ஏன் உன் முகம் இவ்வளவு வாட்டமா இருக்கு? வந்ததிலிருந்து எல்லாரையும் ஒருமாதிரி பாக்குற உனக்குள்ளே பேசுற என்ன விஷயம் எதைப்பற்றி யோசிச்சிட்டு இருக்க?

நிர்பயா,” எனக்கு நேற்று இரவு தெரியாத நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது ட்ரூகாலர்ல யாருன்னு செக் பண்ணேன் அதுல லாயர் மட்டும் இருந்தது சரின்னு யாருன்னு கேட்டேன் என்று அவர்களுக்குள் நடந்த சம்பாஷணைகளை முழுவதும் சொன்னாள்.

பிரியங்கா,” யாரோ உன்கிட்ட விளையாட நினைச்சிருக்காங்க நீ ஏன் இத இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிற?

நிர்பயா,” முதல்ல நானும் ஈசியா தான் எடுத்துக்கிட்டேன் பட் அவன் என்ன பத்தி தெளிவா சொல்றான். கூடவே இருந்து வாட்ச் பண்றதாகவும் சொல்றான், கண்ணெதிரே தான் இருக்கேன்னு சொல்றான். என்ன பொருத்த வரைக்கும் பின்னாடி இருந்து பேசுவதோ இல்ல என்னை ஏமாத்துறது சுத்தமா பிடிக்காது என்று எங்க இருக்க எல்லாருக்குமே தெரியும் அப்படி இருக்கும்போது இங்க என் கண்ணு எதிர்ல அவன் இல்லை அது மட்டும் எனக்கு நல்லா புரியுது. இது சமீபத்துல என்கூட பழக ஆரம்பித்த ஒருத்தர தான் இருக்கனும் என்று ஒரு தெளிவான முடிவுக்கு வந்தாள்.

பிரியங்கா,” அப்ப அது யாருன்னு கண்டுபிடிச்சிட்டியா?

நிர்பயா,” கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவேன் என்று சொன்னவள் தன்னையே நொந்து கொண்டாள் அவனைப் பற்றி நினைக்க மாட்டேன் யார் என்று அறிய முற்பட மாட்டேன் என்று நினைத்து வந்தவள், பாதி நேரம் அவனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிவிட்டாள், இது எதற்கான ஆரம்பம் என்று யோசிக்க ஆரம்பித்தவள், அப்பொழுதுதான் தன் கைபேசி அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது ஞாபகம் வந்தது. அதை உயிர்ப்பிக்க அதில் நூற்றுக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் வந்தவண்ணமிருந்தன அதுவும் ஒரே எண்ணில் இருந்து.

அந்த புதிய நபர் யார் எதற்காக இவ்வளவு நாள் இல்லாமல் இப்பொழுது பேச ஆரம்பித்து இருக்கிறான் இது காதலா? இல்லை சதியா?பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடரும்…frog-in-a-well|480x360

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here