5 உயிரே என் உலகமே

0
1088

மகியும் இசையும் வண்டியில் புதுக்கோட்டையிலிருந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிரில் டாட்டா சுமோவில்
தேவன் இவர்களை வழிமறித்து தன் வண்டியை நிறுத்தினான்

டேய் அகி எப்படிடா இருக்க

தேவா அண்ணா நான் மகி அண்ணா. நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க

நானும் நல்லா தான் இருக்கேன். வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க

நாங்க எல்லாரும் நல்ல இருக்கோம்

இவங்க யார் ல

இவங்க இனியன் அண்ணாவோட பொண்டாட்டி

ஓ என்று சிறிது நேர யோசனைக்கு பிறகு எப்படிமா இருக்க என்று இசையிடம் கேட்டான் தேவா..

நான் நல்லா இருக்கேன் என்று தயங்கித் தயங்கிக் கூறினாள் இசை

நான் உனக்கு அண்ணன் முறைமா நீ என்ன அண்ணன் கூப்பிடலாம் சரியா.. சரி என்று தலையாட்டினாள் இசை

சரி தேவா அண்ணா நாங்க கிளம்புறோம்

ஏண்டா உங்க அண்ணனுக்கு பயப்படுறியா

அப்படிலாம் இல்லன்னா

வீட்ல நிறைய வேலை இருக்கு அதான் என்று அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்

மகி யாரு இவங்க. நம்ப எதுக்கு பயப்படனும்

அவரு இனியன் அண்ணாவோட ஃப்ரெண்டு அண்ணி.. அவருக்கும் அண்ணாவுக்கும் சண்டை ஏழு வருஷமா பேசுறது இல்ல. இப்போ நம்ப பேசினது கூட அண்ணனுக்கு தெரிஞ்சா கொன்னே போட்டுடும்

அப்படி என்னதான் அவுங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை…. மகி

அது வந்து அண்ணி ஏழு வருஷத்துக்கு முன்னாடி நம்ப கயலும் தேவா அண்ணாவும் விரும்பினாங்க. ஆனா அது இனியன் அண்ணனுக்கு தெரியாது ஒரு நாள் இனிய அண்ணன் வசூலுக்கு போயிட்டு வரும்போது தேவா அண்ணா கயலோட கை புடிச்சி இழுத்துட்டு இருந்திருக்காங்க அதைப்பார்த்த அண்ண கயல் கிட்ட என்ன நடக்குது இங்கே கேட்டு இருக்காரு போல

அதுக்கு அந்த கயல் இவரு நான் ரோட்ல தனியா நடந்து போகும்போது என் கிட்ட தப்பா நடந்துக்க பாக்குறாரு என்று சொல்லி அழுது ஊரைக் கூட்டி பஞ்சாயத்து வச்சிடுச்சு..

நானே நிறைய தடவை அவங்க ரெண்டு பேரும் ஒன்னா சுத்துறது பார்த்திருக்கேன் அண்ணி நம்ம அண்ணனுக்கு முன் கோவம் ஜாஸ்தி தேவா அண்ணா சொல்ல வராது கொஞ்ச கூட கேக்காம நடுரோட்டில் அடிச்சிருச்சு..

இந்த சண்டைக்கு அப்புறம் தொழில் ரீதியா ரெண்டு பேருக்குள்ள போட்டி அதிகமாயிடுச்சு… தேவா அண்ணா இந்த ஊரோட எம்எல்ஏ அண்ணி அவர் அண்ணனுக்கு தெரியாமல் பல விஷயத்துல அண்ணனுக்கு உதவி செஞ்சிட்டு தான் இருக்காரு .ஆனால் அது தெரிஞ்சா கூட அண்ணனோட கோவம் குறைஞ்சது இல்லை. ரெண்டு மூணு தடவ அண்ணா ஓட உயிரே தேவா அண்ணா காப்பாத்தி இருக்கு.. அண்ணா தொழில்முறையில் நிறைய எதிரிகள் இருக்காங்க அண்ணி.. அண்ணன் கஷ்டப்பட்டு முன்னேறி இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கு அதுக்கு மறைமுகமாக தேவா அண்ணனும் காரணம்

மகி அப்போ கயல் இப்ப உங்க அண்ணன லவ் பண்றதா சொல்லுதே அது உண்மையா

எனக்கு தெரியல அண்ணி

சரி இதெல்லாம் நடக்கும்போது கவி எங்க இருந்தான்

அப்போ கவி அண்ணன் ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டு இருந்தாரு .

ஏன் அண்ணி திடீர்னு கவி அண்ணன
பத்தி கேக்குறீங்க

ஒன்னும் இல்ல சும்மாதான்

இசைக்கு நடக்கிற அனைத்தையும் வைத்து கயிலைப் பற்றி புரிந்துகொள்ள முடிந்தது

ஆமா அண்ணி நானே உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சேன்.. எப்படி இன்னைக்கு காலைல என்னையும் அகியையும் கரெக்டா கண்டுபிடிச்சீங்க
எங்க அண்ணனுங்க கூட ஒரு சில டைம் கண்டுபிடிக்க முடியாது நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க

அதுவா உங்க கண்ணை பார்த்து தான் கண்டுபிடிச்சேன்

எப்படி அண்ணி கண்ணை பார்த்து எல்லாரும் பத்தி சொல்ல முடியுமா என்ன

நீங்க அஞ்சு பேரும் அஞ்சு ரகம் டா.

உன் முத அண்ணன் அய்யனார் மாதிரி முறுக்கிக்கிட்டு திரிஞ்சாலும் பச்ச மண்ணு

அண்ணி நீங்க என் அண்ணனை ரொம்ப டேமேஜ் பண்றீங்க..

ஏன்டா உண்மையை தானேசொன்னேன்..

உன் கவி அண்ணா தனக்குத்தான் எல்லாம் தெரியும் மாதிரி சுத்து வேண்டியது பட் மிஸ்டர் பர்பாக்ட்

அப்புறம் நீ அறுந்த வாலு உன் கண்ணை பார்த்தாலே எப்போதும் ஒரு குறும்புத்தனம் இருந்துகிட்டே இருக்கும்

அகி உன்கூட இருந்தா மட்டும் கொஞ்சம் வாலு மத்த டைம் எல்லாம் என் கண்ணை பார்த்து பேச மாட்டான் ரொம்ப வெட்கப்படுவான்

அப்புறம் தமிழ் அவன் பேசுறதுக்கு காசு கேட்பான் எப்படிடா அவன் கூட இருக்கீங்க

நீங்க வேற அண்ணி நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் அவன் கொஞ்சம் மாவது பேசறான். இல்லைன்னா எதுவும் பேச மாட்டான்… நானும் அகியும் ஒரு செட் அண்ணி.. கவி அண்ணனும் மூணு வருஷம் ஹாஸ்டல்ல படிச்சாரு அப்புறம் ஒரு ரெண்டு வருஷம் மேலே ஏதோ படிக்கணும்னு சொல்லி சென்னைக்கு போய்ட்டாரு.. இனியன் அண்ணா பிசினஸ் தான் கதினு சுத்துவார்… இவன் மட்டும் வீட்ல யார்கிட்டயும் பேசாம சின்ன வயசுல இருந்தே தனியாவே இருந்துட்டான்

அதற்குள் வீடு வர இருவரும் வீட்டிற்கு சென்றனர் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து நியூஸ் சேனலை பார்த்துக்கொண்டிருந்தால் இசை.

எப்போதும் மதியம் வீட்டுக்கு வராத இனியன் இன்று கயலின் நடவடிக்கையால் கோபமுற்று வீட்டிற்கு ஓய்வெடுக்க வந்தான்… அந்த நேரம் பார்த்து இசை அவன் கண்ணில் பட

ஏய் என்னடி இது உன் அப்பன் வீடு நினைப்பா சும்மா உட்கார்ந்துட்டு ஓசி சோறு சாப்பிட நினைக்கிறியா போடி போய் வேலையை பாரு என்று கத்த இசையும் ஒன்றும் பேசாமல் அடுப்படியே சுத்தம் செய்தாள்

இசை சுத்தம் செய்வதை பார்த்த மகிழன் அண்ணி நீங்க எதுக்கு இதை செய்றீங்க

அதை ஹாலில் இருந்து கேட்ட இனியன் அவ செய்யாம வேற யார் செய்வா என்று கத்த

அது இல்ல அண்ணா அண்ணி கையில் தீக்காயம் மேல தண்ணி பட்டா சீக்கிரம் ஆறாது என்று காலையில் நடந்த அனைத்தையும் கூறினான்,,

அப்போதுதான் அவள் கைகளை கவனித்தான். தீக்காயம் கொப்புளங்களாக மாரி இருந்தது

இத கூட கவனிக்காமல் இருந்து விட்டேனே. அவங்க அப்பா பண்ணதுக்கு இவ்வள நிறைய தண்டிக்குறேன்.

இவளை இங்கே கொடுமைப் பண்ணா அவுங்க அப்பாக்கு போன் பண்ணி சொல்லுவான்னு பார்த்தா. இவ என்னடான்னா போனை தூக்கி கிணத்துல போட்டுட்டா.. இவதான் இப்படின்னு பார்த்தா.. அவளோட அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் கூட அக்கறை இல்லாம அம்போன்னு விட்டுட்டு போய்ட்டாங்க.எப்படித்தான் இப்படி இருக்காங்களோ என்று தலையிலடித்துக் கொண்ட அறையை நோக்கி சென்றான்

இசைக்கு இனியனின் குடும்பத்தை மிகவும் பிடித்துவிட்டது அவர்களின் அன்பு அனைத்தும் அவளின் கடந்த காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க செய்தது ஒரு விஷயத்தை மட்டும் அவளால் மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். நான் யார் என்று தெரிந்தால் இவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா யோசனையில் இருந்தாள் இசை

சென்னையில் மனோகர் இல்லத்தில் மனோகர் அவருடைய சகலையிடம் அதாவது அவனின் மனைவி லதாவின் அக்கா வீட்டுக்காரரிடம் போனில் உரையாடிக் கொண்டிருந்தான்

ஹலோ சொல்லு அரவிந்த்

எப்படி இருக்க மனோ இசை, தென்றல்,
லதா எல்லாரும் எப்படி இருக்காங்க

அரவிந்த் நானும் இசையும் ஊருக்கு போய் இருக்கும்போது என்று ஆரம்பித்து நடந்த அனைத்தையும் கூறினார்

என்ன சொல்ற மனோ அவ அங்க இருக்கிறது சேப்டி தான

கண்டிப்பா அரவிந்த் இனியன் இருக்குறவரைக்கும் யாராலயும் அவளை நெருங்க முடியாது.

ஆனா மனோ அவ கல்யாணம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்திருக்கக் கூடாது..

நம்பனால எதுவும் பண்ண முடியாது அரவிந்த்

இதெல்லாம் கடவுள் போட்ட முடிச்சு

சரி மனோ நான் அப்புறம் பேசுறேன்

இங்கு மாலையில் அனைவரும் கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.. கமலம் இசையிடம் ஒரு பட்டுப்புடவையை நீட்டி அதைகட்ட சொல்ல இசை வேண்டாமென்று மறுத்துக் கொண்டு இருந்தாள் அதை பார்த்த இனியன்

என்ன ஆச்சி இவகிட்ட போய் பேசிட்டு இருக்கீங்க.. கட்டிட்டு வர சொல்லுங்க

அப்பத்தா இதுக்கு மேட்ச் பிளவுஸ் என்கிட்ட இல்ல அதான் என்ற தயங்கி தயங்கி கூற

நான் ஏற்கனவே உனக்காக தச்சு வச்சுட்டேன் அது போட்டுட்டு கட்டிட்டு வா… என்றான் இனியன்

ஐயோ அப்பத்தா நான் அற கை பிளவுஸ் எல்லாம் போட மாட்டேன்..

நான் என்கிட்ட இருக்கிற ஏதாவது பிளவுஸ் அட்ஜஸ்ட் பண்ணி போட்டுட்டு வரேன்

,(அடியே அது பிளவுஸ் இல்லடி நீ போடுவதெல்லாம் சட்டை என்று மனசுக்குள் திட்டி தீர்த்தான் இனியன்)

ஆச்சி கொஞ்சம் நிக்க சொல்லுங்க
இந்த நகையை போட்டுட்டு வர சொல்லுங்க

அப்பத்தா இந்த ஊருல வேலைக்காரிங்கலாம் நகை போடுறங்களா என்ன

ஆட்சி இவ இந்த வீட்லதான் வேலைக்காரி ஊர் உலகத்தை பொருத்தவரைக்கும் அவ என்னோட பொண்டாட்டி ஒழுங்கா போட்டு வர சொல்லுங்க

மறுபேச்சு எதுவும் பேசாமல் இனியன் ரூமுக்கு சென்று பத்தே நிமிடத்தில் கிளம்பி வந்தால் இசை

அவளைப் பார்த்த இனியன் மெய்மறந்து பகை மறந்து விழுங்கும் பார்வையோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அதை கவனித்த இசை இது எப்படி என்று குழம்பி போனாள் . நான் கணித்தது சரியா தவறா என்று மறுபடியும் உற்றுநோக்கினால் அப்போதும் இனியன் தலை முதல் பாதம் வரை அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இது எப்படி சாத்தியம் பழிவாங்குவதற்காக திருமணம் செய்துகொண்ட இவர் என்னை காதலிக்கும் பார்வை பார்ப்பது .அப்படி என்றால் இவன் என்னை காதலிக்கிறானா அப்போ நான் இவனை எப்படி காதலிக்க முடியும் என் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள் என்னை நிம்மதியாக வாழ விட்டுடுமா
என்று யோசித்தாள்

முதல்ல இவனுக்கும் அப்பாகும் இருக்கிற பிரச்சனைய அப்பத்தாகிட்ட கேட்க வேண்டும்.

அனைவரும் காரில் ஏறிக்கொள்ள இசைக்கு மட்டும் காரில் இடமில்லை முன்னிருக்கையில் கமலம் அமர பின்சீட்டில் மகி அகி தமிழ் உட்கார்ந்திருக்க கவி டிரைவர் சீட்டில் அமர்ந்து கார் ஓட்ட தயாராக இருக்க

டேய் என்னங்கடா என்ன விட்டுட்டு போக பிளான் ஆஹ் நான் எங்க உட்கார சொல்லு

மகி அண்ணி அங்க பாருங்க அண்ணா வெயிட்டிங் என்று முன்னாடி கைகாட்ட

அங்கு புல்லட்டில் கம்பீரமாக இனியன் பைக்கை ஸ்டார்ட் செய்து அவளைப் பார்த்தான்

மகி ப்ளீஸ் நீ போடா உங்க அண்ணன் கூட நான் கார்ல வரேன்

கவி: ஏன் அண்ணி அண்ணாவை பார்த்தா அவ்ளோ பயமா

நீ வேற கவி உங்க அண்ணன் கூட போறதுக்கு நடந்தே போலாம் வண்டி பத்தை கூட தண்டல..

டேய் தமிழ் ப்ளீஸ் நீயாவது உங்க அண்ணன் கூட வாடா நான் எல்லற்குடையும் ஜாலியா வரேன் ப்ளீஸ்டா

அகி கிட்ட சொல்லுங்க அவன் வருவான்

அகி ப்ளீஸ் என்று கெஞ்ச அவள் செய்யும் அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்தான் இனியன்

இவளா அப்படி பேசியது.. இவளால் எப்படி தம்பிகளிடமிருந்து என்னை பிரிக்க முடியும் என்று குழம்பிப் போனான் இனியன்

ஹாரனை அடித்தான் இனியன்

ஐயோ அண்ணி அய்யனாருக்கு கோவம் வந்துருச்சு ஓடுங்க சீக்கிரம்

அதற்கு கமலம் டேய் யார பார்த்துடா அய்யனார் சொல்ற
எல்லாம் நம்ம அண்ணி வச்ச பேருதான் ஆச்சி என்றான் மகி

ஐயோ போட்டுக் கொடுத்துட்டானே… என நினைத்துக் கொண்டு பைக்கில் ஏறினாள் இசை

அவள் பைக்கில் ஏறியவுடன் பைக் நுரை தொட்டது கையில் உள்ள காயம் காரணமாக இசையால் கம்பிகளை பிடிக்கமுடியவில்லை அதனால் இனியனின் இடுப்பை பிடித்துக்கொண்டாள்

அவளைப் பொறுத்த வரைக்கும் இதெல்லாம் சாதாரண விஷயம் ஏனென்றால் அவர் பிறந்து வளர்ந்த இடம் அப்படி. ஆனால் இனியன்னால்அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை

முப்பத்தி ரெண்டு வருஷத்தில் எந்தப் பெண்ணையும் அருகில் பார்க்காதவன் தன் மனைவி தன்னைகட்டிப்பிடித்துக் கொண்டு வருவது சொர்க்கத்தில் மிதப்பது போல இருந்தான்.. அவள் வசம் செல்லும் தன் மனதை அவனால் கட்டுபடுத்த முடியவில்லை

(ஐயோ கொள்ராலே இப்படியே போச்சுன்னா கஷ்டம் இனியா கன்ட்ரோல் பண்ணுடா) ஆனால் காதலும் தாபமும் சேர்ந்து அவனை ஒரு வழி பண்ண

அவனால் இதற்கு மேல முடியாது என்று கோயிலுக்கு இன்னும் வேகமாக வண்டியை செலுத்தினான்.

கோயில் வந்தவுடன் இசை இனியன் தம்பிகளின் பட்டாளத்துக்குள் ஐக்கியமானாள்

மகி: அண்ணி நீங்க இப்படியே எங்க கூட சுத்திட்டு இருந்தா நாங்க எப்படி தான் சைட் அடிக்க முடியும் சொல்லுங்க.

டேய் ரொம்ப ஓவரா பண்ணாத நீயாவது சைட் அடிக்கிறதாவது

அப்படி சொல்லுங்க அண்ணி என்று அகியும் இசையும் hi fi போட்டுக்கொண்டனர்..

இது எப்போ

அதற்கு இசை அதான் கேக்குரான்ல நீங்க சொல்றது

ஏன் உங்க கிட்டயும் தானே கேட்கிறான் நீங்க சொல்றது

ஐயோ போதும்டா சாமி ஐ அம் எஸ்கேப் என்று ஓடினான் மகி

இவர்களின் சேட்டையை பார்த்து தமிழ் குலுங்கி குலுங்கி சிரிக்க..

முதல்முறையாக தமிழ் சிரித்த அங்கிருக்க அனைவரும் பார்த்தனர்

எங்கடா உங்க ரெண்டு பசமலரையும் காணோம்

அண்ணி யாரைகேக்குறீங்க

அதான்டா நம்ப ஐயனாரும் மிஸ்டர் பர்ஃபெக்டையும் தான்

ரெண்டு பேரும் கும்பாபிஷேகத்திற்காக அன்னதான ஏற்பாடு பண்ண போயிருக்காங்க

அப்போது கோயிலுக்கு நுழைந்த தேவாவை பார்த்து அவன் அருகில் சென்றால் இசை

அண்ணி என்ன பண்றீங்க போகாதீங்க அண்ணன் பார்த்தா கொன்னுடுவான்

ஹாய் அண்ணா

எப்படி நீங்க யாரெல்லாம் வந்திருக்காங்க என்று சுற்றுமுற்றும் பார்த்தான் தேவா

நாங்க எல்லாரும் தான் வந்திருக்கொம் அண்ணா..அவ பேசுவதை தூரத்திலிருந்து பார்த்த இனியன்இவர்களை நோக்கி வர.

ஐயையோ அண்ணா அய்யனார் பார்த்துட்டாரு மீ எஸ்கேப் பாய் பாய் இன்னொரு நாள் நம்ம கண்டிப்பா பேசலாம் என்று ஓடினால் இசை

எங்கடி போவ வீட்டுக்கு தானே வருவ அப்ப கவனிச்சிக்குறேன்

அப்பத்தா மனோ அப்பாக்கும் அத்தைக்கும் நடுவுல என்ன பிரச்சனை கொஞ்சம் எனக்கு சொல்றீங்களா

எனக்கும் உங்க தாத்தா ஆறுமுகத்துக்கும் மொத பொறந்தது தான் இனியனோட அம்மா அதாவது உன்னோட அத்தை சிவகாமி அடுத்து உங்க அப்பா மனோகர் பொறந்தான்.

உங்க அப்பாவும் உங்க அத்தையும் ரொம்ப பாசக்காரங்க உங்க அத்தை உங்கப்பாவை எதுக்குமே விட்டுக் கொடுக்க மாட்டாள்.
சிவகாமிக்கு உன் தாத்தா துரைப்பாண்டடிக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு ரொம்ப நல்ல மாப்பிள்ளை ஊர் உலகத்துல எங்க தேடினாலும் அந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்காது… அவரோட தங்கச்சிக்கு நம்ப மனோகர்
கேட்டாங்க.. ஆனா அவனுக்கு அதுல சுத்தமா விருப்பம் இல்லை போல.. உங்க அம்மாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு சென்னையில் போய் செட்டில் ஆயிட்டான்…. இனியனுக்கு 15 வயசு இருக்கும்போது துரைப்பாண்டி செத்து போயிட்டாரு அப்போ தமிழ் ஆறு மாச குழந்தை… என்ன பண்றது உங்க அத்தைக்கு தெரியல.. ஒரு நாள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் போது உங்க அப்பா அவனோட சொத்து மட்டும் விக்காம இவளோட சொத்தையும் சேர்த்து வித்திட்டான். ரொம்ப நாளைக்கப்புறம் கோவில் திருவிழாவுக்காக உங்கப்பா இந்த ஊருக்கு வரும்போது உங்க அத்தை அவன் கிட்ட கேட்டுட்டு இருந்திருக்கா.
அப்ப என்ன நடந்துச்சுன்னு தெரியல உங்க அப்பாவும் நீயும் போனதுக்கப்புறம் திடீர்னு உங்க அத்தை மயக்கம் போட்டு விழுந்துட்டா கடைசியா அவ சொன்னது உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி இனியன் கிட்ட சத்தியம் வாங்கிட்டு செத்துட்டா..

அப்றம் என்ன ஆச்சு அப்பத்தா..

அதுக்குமேல எனக்கு தெரில்ல தாயி..

அப்போது திருவிழாகாக கட்டப்பட்டிருந்த ஸ்பீக்கர் செட்டில் பாட்டு ஒலிக்க திடீர் சத்தத்தில் இசைக்கு கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வர முன்னால் இருக்கும் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்க நெஞ்சு படபடக்க மயங்கி

சரிந்தாள்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here