5. கிணற்று தவளை

0
116

என்ன தான் அந்த புதிய நபரை பற்றி யோசிக்க கூடாது என்று மூளை சண்டையிட்டாலும், மனமோ அவன் யார் என்பதிலேயே சுற்றி சுற்றி வந்தது. அவன் எங்கிருப்பான், அவன் பெயர் என்னவாக இருக்கும், அவளுக்கு தெரிந்த ஒரு விசியம் அவனும் வக்கீல் என்பது தான். ஆனால் அது உண்மையாக இருக்குமா என்று ஒரு பக்கம் யோசித்தது. அவள் எதற்காக இவ்வளவு யோசிக்கிறாள் அவனை காதலிக்கவா இல்லையே, அவன் கையில் கிடைத்தால் நைய புடைய தான். பின்ன ஏமாற்றுவது அவளின் அகராதியில் கெட்ட வார்த்தை. அப்படி இருக்க இரண்டு நாட்களாக கண்ணாபூச்சி ஆடிக்கொண்டிருப்பவனை சும்மா விடுவாளா என்ன.

நிர்பயா, ” அவன் மட்டும் என் கையில கிடைக்கட்டும் அன்னைக்கு இருக்கு. பேபியா நானு முகத்துக்கு நேரா பேச தைரியமில்லாதவன் இவன பத்தி நீ யோசிக்காத நிர்பயா என்று தனக்குதானே பேசி கொண்டு இருப்பவளை மிரட்சியோடு பார்த்து கொண்டு இருந்தாள் நிரஞ்சனா.

நிரஞ்சனா பார்ப்பதை கண்டு கொண்டவள் என்னக்கா என்றாள்.

நிரஞ்சனா,” உனக்கு என்னடி ஆச்சு தனியா பேசுற? வீட்ல இருக்கவங்க பார்த்தா அவ்வளவு தான் இந்த கேஸ்னால தான் நீ இப்படி தனியாக பேசிகிட்டு இருக்கனு சொல்லிடுவாங்க. அதுவும் இல்லாம உனக்கு ஏதோ காத்து கருப்பு புடிச்சி இருக்குன்னு மந்திரம் போட ஆரம்பிச்சிடுவாங்க பாத்துக்கோ. தயவு செஞ்சு வீட்ல இந்த மாதிரி பேசிகிட்டு இருக்காத.

நிர்பயா,” அக்கா எல்லாம் தெரிஞ்சும் நீயே இப்படிப் பேசினால் எப்படி? யார்னு தெரியல ரெண்டு நாளா ரொம்ப பழக்கப்பட்டவன் மாதிரி பேசிகிட்டு இருக்கான். இதனால இந்தக் கேஸ பற்றி யோசிக்கவே முடியல. இப்ப எனக்கு என்ன சந்தேகம்னா எனக்கு கால் பண்ணி கேஸ் நடத்தக்கூடாது என சொன்னவனோட வேலையா இருக்குமோ அப்படின்னு தோணுது. இது அவன் பேச ஆரம்பிச்ச அன்னைக்கே தோன்றியது தான். சரி பேசினால் அவனிடமிருந்து ஏதாவது நமக்கு சாதகமாக சிக்கலாம் என்று பார்த்தால் அவன் என்னடான்னா இதுவரைக்கும் இந்த கேஸ் பத்தி ஒரு வார்த்தை பேசல. அது தான் குழப்பமா இருக்கு.

நிரஞ்சனா, ” இங்க பாரு நிர்பயா நான் சொல்லி நீ புரிஞ்சிக்குற அளவுக்கு நீ இல்ல. நீ எப்பவும் தெளிவா இருக்கவ ஆனா உன்னையே குழப்பிக்கிட்டு இருக்குன்னா நீ ஏன் அத பத்தி இவ்வளவு யோசிக்கிற. அவன் எண்ணை பால்க் பண்ணு. அவன் எண்ணை உனக்கு தெரிஞ்சவர்களிடம் குடுத்து டிராக் பண்ண சொல்லு. அப்ப அவன் யாருன்னு தெரிஞ்சிடும் இல்லையா.

நிர்பயா, ” அக்கா, அவன் நம்பரிலிருந்து மெசேஜ் வந்ததும் நான் டிராக் பண்ண சொல்லிட்டேன். அவனோட நம்பர் இங்க இல்ல, இன்பேக்ட் ஒரு இடமா இருக்க மாட்டேன்து. அவன் என்ன சொல்றான்னா, என் கண் முன்னால் இருந்து பார்த்துக்கிட்டு இருக்கறதா சொல்றான் அதான் பெரிய குழப்பம். நான் என்ன செய்றேன், எங்க போறேன், குழப்பத்துல இருக்கேனா, இல்ல கோபத்துல இருக்கேனானு பக்கத்துல இருந்து பாக்குறா மாதிரி சொல்லிட்டு இருக்கான். எனக்கு தெரிஞ்சி நம்ம கூட இருக்கவங்க தான் யாரோ ஒருத்தர் இந்த மாதிரி பண்ணிட்டு இருக்காங்கன்னு தோணுது.இன்னொரு விசியம் தெரியுமா? அந்த நம்பர் நான் எங்க இருக்கனோ அதே இடத்துல தான் டிராவல் பண்ணுது. ஆனா அது யாருன்னு என்னால இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியல. ஏன்னா என் கூட இருக்க என் நண்பர்களுக்கு என்ன பத்தி நல்லா தெரியும். அதனால அவங்க என்ன ஏமாத்தமாட்டாங்க. நான் அவங்கள பார்த்தேன் ஒருத்தர் முகத்தையிலும் பொய் இல்ல. சோ அவன் என் கண் முன்னாடி தான் இருக்கான். அது யாருன்னு தெரியட்டும் அப்ப தெரியும் இந்த நிர்பயா யாருன்னு.

நிரஞ்சனா, “சரி இப்ப இந்த கதைய விடு, நம்ம இன்னைக்கு தான் கூல்டிரிங்ஸ் கம்பெனி ஓனர் மிஸ்டர். தசரதன மீட் பண்ணணும் போகலாமா? நித்யனுக்கு கால் பண்ணி வர சொல்லு.

நிர்பயா,” ஆமா கரெக்ட், அந்த இடியட் யாருன்னு அப்பறம் பாத்துக்கலாம். ஆமா நான் ஏன் நித்யனுக்கு கால் பண்ணணும், நீங்களே கால் பண்ணி வர சொல்லலாமே?

நிரஞ்சனா,” சிரித்து கொண்டே, ஏன்னா உன்கிட்ட பேச தானே ஆசைப்படுறாரு, பேசு என்றாள் கண்சிமிட்டியப்படி.

நிர்பயா நொந்தப்படியே நித்யனுக்கு கால் செய்து பார்த்தாள், அவன் எடுக்கவில்லை மறுபடியும் டிரை செய்தாள் அப்பவும் எடுக்கவில்லை.

நிரஞ்சனா,” என்ன ஆச்சு, ஏன் முகம் மாறுது?

நிர்பயா,” அவர் கால் அட்டெண்ட் பண்ண மாட்டேன்றாரு. அதன் கோபமா வருது. டைம் ஆகுதுல சரி வாங்க அக்கா நாம போகலாம். போகும் போது கால் பண்ணி பாக்குறேன்.

சரி என்று இருவரும் தசரதன் வீட்டை நோக்கி பயணமானார்கள். போகும் வழியில் அவள் எவ்வளவு முயன்றும் கால் எடுஉகப்படவே இல்லை. அவளுக்கு வந்த கோபத்தில் தன் கைபேசியை தூக்கியெறிய முற்பட்டாள், நிரஞ்சனா தடுக்கவும் ஐய்யயோ என் போனை நான் ஏன் உடைக்கனும், அவர் அங்க வரட்டும் நித்யன் போனை பிடிங்கி உடைக்கிறேன் என்று கடுகடுத்தாள்.

ஒரு மணிநேரம் கழித்து தசரதன் வீட்டை அடைந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்ததது. அங்கே வாயிலில் நின்று அழகாக சிரித்தபடி
வரவேற்றான் நித்யன்.

அவனை பார்த்தவளுக்கு கோபமா இல்லை சந்தோஷமா என்று தெரியவில்லை. நேராக அவனிடம் சென்றவள், ஹலோ சர் நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? எவ்வளவு முறை கால் பண்ணேன்? அட்டென்ட் பண்ணி இருக்கலாம் இல்லையா? அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் நான் இங்க தான் வந்துகிட்டு இருக்கேன்னு நீங்களாம் எப்படி இப்படி இருக்கீங்களா? என்று அவனிடம் பொறிந்து விட்டாள் நிர்பயா.

நித்யன் அவள் பேசியதற்கு சிரிப்பையே பதிலாக தந்தான். அவளிடம் ஏன் நிர்பயா நான் கால் அட்டெண்ட் பண்ணலன்னு இவ்வளவு கோப்படுற? இது என் மேல இருக்க பாசமா? இல்ல வேற ஏதாவதா?

நிர்பயா, “ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. என் கிட்ட வரேன்னு சொல்லிட்டு கால் அட்டெண்ட் பண்ணாம எங்கயாவது டூர் போயிட்டீங்களோன்னு பார்த்தேன். மத்தப்படி உங்க மேல பாசம் வைக்க நான் யாரு?

இவ்வாறு இவர்கள் பேச்சுவார்த்தை நிண்டு கொண்டே போக,

நிரஞ்சனா,” இரண்டு பேரும் அமைதியா இருங்க. உங்கள பார்த்தா யாராவது வக்கீல்னு நினைப்பாங்களா? சின்ன பசங்க மாதிரி ரோடுல நின்னுகிட்டு சண்டை போடுறீங்க. நாம வந்த வேலைய பார்க்கலாம் வாங்க என்று அவர்களை அழைத்து கொண்டு சென்றாள்.

உள்ளே சென்றவர்களை அந்த வீட்டின் பிரமாண்டம் சற்று மலைக்க தான் செய்தது. அவர்கள் வீடும் பெரியது தான். ஆனால், இது மிக நேர்த்தியாக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து கலைத்திறனுடன் இருந்தது. அதை பார்த்து மலைத்து கொண்டிருந்தவர்களை கலைத்தது ஒரு வெண்கல குரல்.

தசரதன், “வாங்க வாங்க என்ன பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் என்ன பார்க்க வந்து இருக்கீங்க என்ன விசியம்? வந்து இப்படி உட்காருங்க என்றார்.

அவர்களும் சிரித்தபடி அவர் கைகாட்டிய இடத்தில் அமர்ந்தனர்.

தசரதன்,” என்ன சாப்பிடிறீங்க?

நித்யன், ” சர் நாங்க இங்க விருந்தாளியா வரல. உங்ககிட்ட ஓரு முக்கியமான விஷயம் பத்தி பேச வந்து இருக்கோம்.

தசரதன், “சொல்லுங்க எதப்பத்தி பேச போறீங்க?

நிர்பயா,” சர், நான் நிர்பயா, என்று தன்னை பற்றி சொல்லியவள். தாங்கள் இங்கு எதற்காக வந்து இருக்கிறார்கள் என்றும் சொல்லி முடித்தாள்.

அனைத்தையும் பொறுமையாக கேட்ட தசரதன், இப்ப நான் என்ன பண்ணணும்னு நீங்க நினைக்கிறீங்க?

இதை கேட்ட நிர்பயாவுக்கு கோபம் வந்தாலும் பொறுமையை இழுத்து பிடித்தபடி, சர் எங்க ஊர்ல உங்க கம்பெனி வர கூடாதுன்னு சொல்றோம் என்றாள்.

அதைக்கேட்டு பலமாக சிரித்தவர்,

தசரதன், “என்ன பாப்பா? புரியாத குழந்தையா இருக்கீயே. உங்க ஊர்ல இருக்க பெரிய மனுசங்க எல்லாரும் கையெழுத்து போட்டு கொடுத்து இருக்காங்க உங்க அப்பா உட்பட. நான் முறையா எல்லார்கிட்டயும் கேட்டு தானே இதை செய்தேன்?நீ என்னடான்னா நான் ஏதோ ஏமாத்தி கையெழுத்து வாங்கினா மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க இதெல்லாம் தப்புமா.

நிரஞ்சனா, “ஆமாம் சர் நீங்க அவங்கள ஏமாத்தி தான் கையெழுத்து வாங்கி இருக்கீங்க. அப்படி இல்லன்னா எதுக்காக கையெழுத்து வாங்கின பத்திரத்தை அவசர அவசரமாக உங்க ஆளுங்க வாங்கிட்டு வந்துட்டாங்க?

நித்யன்,” சர் அந்த பத்திரத்தோட காப்பி நாங்க பாக்கனும்.

அவனை ஒருமுறை முறைத்து பார்த்து விட்டு பத்திரத்தை எடுத்து வர உத்தரவிட்டார். சில நிமிடங்களுக்கு பிறகு பத்திரத்தை அவருடைய உதவியாளர் எடுத்து வந்தார்.

அதை வாங்கிய நிர்பயா முழுதாக படிக்க ஆரம்பித்தாள். அதில் இருந்த விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் படித்தாள். அதில் அங்கு வேலை செய்பவர்கள் கண்டிப்பாக இரண்டு வருட அக்ரீமெண்ட்படி இருக்க வேண்டும். விடுமுறைகள் கிடையாது. அதையும் மீறி விடுமுறை எடுத்தால் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் என்றும் இருந்தது. இதில் முக்கியமானது அந்த ஊர் ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்கப்படும் என்பதும் அது இனிமேல் தங்கள் கம்பெனிக்கு மட்டும் சொந்தம் என்றிருந்தது. அதைப்பார்தவளுக்கு கோபம் தலைக்கேற தசரதனை ஏறிட்டாள்.

நிர்பயா, “இது என்ன? ஊருக்கு பொதுவான ஏரி உங்க கம்பெனிக்கு மட்டும் சொந்தம்னு குறிப்பிட்டு இருக்கீங்க? யார கேட்டு இந்த மாதிரி பண்ணீங்க? ஊர்ல இருக்கவங்க விவரம் தெரியாம இருந்தா எப்படி வேணும்னாலும் ஏமாத்தலாமா? உங்களுக்கு மனசாட்சி இல்ல கிட்டதட்ட எங்க ஊரை சுற்றி இருக்க இன்னும் பத்து ஊருக்கு அந்த ஏரி தான் ஆதாரமே. அதை எங்களாள விட்டு கொடுக்க முடியாது.

தசரதன், ” இங்க பாருமா நான் முறையா தான் எல்லாம் செஞ்சி இருக்கேன். என்னால நீ சொல்றா மாதிரி நியாயலாம் பாக்க முடியாது. என் பையனுக்காக தான் வெயிட்டிங். அவன் வந்துடான்னா நான் அங்க வேலைய ஆரம்பிச்சிடுவேன்.

நிர்பயா,” இப்ப முடிவா நீங்க என்ன சொல்றீங்க?

தசரதன், “நீ சொல்றத நான் கேட்க முடியாது, கண்டிப்பா உங்க ஊருக்கு எங்களுடைய கூல்டிரிங்ஸ் கம்பெனி வரும். திறப்பு விழாவுக்கு நீ தான் தலைமை தாங்க போற.

நிர்பயா, “அப்படியா அப்ப கோர்ட்ல இருந்து உங்களுக்கு நோட்டீஸ் வரும் ரெடியா இருங்க மிஸ்டர். தசரதன் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றாலும் அதில் இருந்த கோபத்தை தசரதன் மட்டுமின்றி அங்கிருந்த அனைவராலும் உணரமுடிந்தது.

வெளியே வந்தவள் நேரே நித்யனிடம், நித்யன் கேஸ் பைல் பண்ணுங்க. எப்பாடுபட்டாவது இந்த கம்பெனிய என் ஊருக்குள்ள வர விட மாட்டேன் ஏன் சுத்தி இருக்க ஊருக்குள்ள கூட என்று அவனுக்கு ஆணையிட்டு செல்பவளை கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான் நித்யன்.

நித்யன், “மைண்ட் வாயிஸ், என்ன மாதிரியான பொண்ணு இவ? இவங்கள எதிர்த்தா எவ்வளவு பிரச்சனை வரும்னு தெரிஞ்சும் இப்படி எனக்கே ஆர்டர் பண்ணிட்டு போயிட்டு இருக்கா? அழகு, ஆளுமை கூடவே கொஞ்சம் திமிரு எல்லாம் சேர்ந்த செல்ல ராட்சசி. உன்ன யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்.

(அடேய் அவ உன்கிட்ட கோபமா தான் பேசிட்டு போறா. என்னவோ உன்ன கொஞ்சிட்டு போறா மாதிரி அவள சைட் அடிச்சிட்டு நிக்கிற, இது மட்டும் அவளுக்கு தெரிஞ்சிது அப்பறம் இருக்கு)

இவர்கள் ஒன்று சேர்வார்களா? கேஸ் என்ன ஆகும்? பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்.

தொடரும்…

images|690x353
Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here